Wednesday, June 26, 2013

தொல்லைகாட்சி- அகரம் சூர்யா- ஆபிஸ் சீரியல் -ஹரிதாஸ்


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் பிளாப் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் போதும். முன்பெல்லாம் சினிமா நடிகர்கள் எப்போதோ ஒரு முறை தான் நிகழ்ச்சிக்கு வருவர். இப்போது வாரம் ஒரு சினிமா நடிகர் வருகிறார். அதுவும் அந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று சொல்லாமல் " இந்த வாரம் 8 மணிக்கு " என்று அரை மணிக்கொரு முறை விளம்பரம் போட்டு - கெஞ்சுகிறார்கள். நடிகர் சூர்யாவிற்கு அடுத்து வர உள்ள சினிமா பிரபலம் ஹன்சிகா !

சூப்பர்ப்... எக்சலண்ட்.. வொண்டர்புல்.. அப்படின்னு பிரகாஷ் ராஜ் அடிக்கடி சொன்னாலும் நிகழ்ச்சி பத்தி அப்படி சொல்ல முடியலை. கொட்டாவி வர வைக்கும் தரத்தில் தான் இருக்கு !

சூர்யாவின் அகரம் செயல்பாடுகள் மற்றும் அதனால் பயனடைந்தோர் பற்றிய பகுதி மட்டும் நெகிழ்ச்சி !

ஐ. சி. சி பைனல்

இங்கிலாந்தில் இம்முறை டோர்னமென்ட் வைத்தது அநியாயம் ! மழையால் பல மேட்ச்கள் பாதிக்கப்பட்டு விட்டன. பைனலை முடித்தே ஆகணும் என எதோ ஒரு விதமாய் முடித்து வைத்தனர்.அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டதால் வெறுத்து போய் ஆப் செய்து விட்டு தூங்க போயாச்சு. மறுநாள் ஹை லைட்ஸ் பார்த்து தான் தகவல்கள் அறிய முடிந்தது . இனி இங்கிலாந்தில் உலக கோப்பை - அது இதுன்னு பேசட்டும் - ராஸ்கோல்களா !!

சீரியல் பக்கம் - ஆபிஸ்

அண்மையில் ஓரளவு பிரபலமான சீரியல் இது தான் போலிருக்கு. ஆபிசில் வேலை செய்வோர் பலர் நிகழ்ச்சி பார்த்து ஜொள்ளு விடுவதாக நம்பமுடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றனநான் பார்த்த நிகழ்ச்சியின் சாராம்சம் இது - " ஆபிஸ் டே " கொண்டாடுறாங்க. அதுக்கு ஆண்கள் வேஷ்டியிலும் பெண்கள் புடவையிலும் வர்றாங்க. ஹீரோவோட பெண் மேனேஜர் புடவை கட்டாம வர,  ஹீரோ போயி " ஏன் புடவை கட்டலை?" என கேட்கிறார். " ஒரு பிரச்சனை; அதான் கட்டலை " என்கிறார் பெண் மேனேஜர். பெண்கள் இப்படி சொன்னால் நாம அத்தோட பெண்கள் சமாசாரம் என அதிகம் கேட்காமல் விலகிடுவோம். ஆனா ஹீரோ " என்ன பிரச்சனை என தோண்டி துருவி கேட்கிறார். " அயன் செய்த போது புடவை கிழிஞ்சுடுச்சு என மேனேஜர் சொன்னபோதும் நம்பாமல் " எங்கே புடவையை காட்டு " என்று சொல்ல, அவரும் எடுத்து காட்டுகிறார்

அடுத்து ஹீரோவையே அந்த பெண் " எனக்கு ஒரு புடவை வாங்கி வா " என்று கேட்க, ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கும் ஹீரோ - இந்த அம்மணிக்கு புடவை வாங்கி வர ஓடுகிறார் (" நீயே போகலாமே; ஆபிசில் இருக்கும் பெண்களை போக சொல்லலாமே" என்று கேள்விகள் கேட்க மறக்க வில்லை)

இன்னோர் பக்கம் சேல்ஸ் டீமில் இருப்போர் - கோடு போட்ட அண்ட்ராயர் தெரிகிற மாதிரி வேஷ்டியை தூக்கி கட்டிய படி ஆபிசினுள் நடந்து வர..

ஹலோ.... ஹலோ.. எங்க சார் ஓடுறீங்க !

சூப்பர் சிங்கர் கார்னர்

கிராமத்து திருவிழா என சென்ற வாரம் முழுதும் - நாட்டுபுற பாடல்கள் பாடினர்.

நண்பர் சௌம்யன் கூகிள் பிளஸ்சில் இப்படி சொல்லியிருந்தார் :

" நல்லா பாடுற பசங்களை எல்லாம் குத்தம் சொல்றாங்க. மலையாளிங்க எப்படி பாடினாலும் பாராட்டுறாங்க "

சுஜாதா பேசும் சில நேரம் எனக்கும் இதே விதமாய் தோன்றுகிறது. பார்வதி போன்ற சிலரை ஆஹோ ஓஹோ என அவர் பாராட்டுவது " நம்ம ஆள் " என்கிற எண்ணம் தான் !

இவர் இப்படி என்றால் - இன்னும் சில ஜட்ஜ்களும் கூட " நம்ம ஆள் " என்று பாராட்டும் நிலை இருக்கவே செய்கிறது (யார் என்று சொல்லாமல் உங்கள் ஊகத்திற்கு விடுகிறேன். பெரும்பாலும் நீதிபதிகளா அவங்க தான் வர்றாங்க )

மார்க் போடும் ஆட்கள் இப்படி பாரபட்சமாய் இருந்தால் அது கொடுமையான சூழ்நிலை தான் !

டிவி யில் பார்த்த படம் - ஹரிதாஸ்

ஜீ தமிழ் டிவியில் ஒரு சாதாரண ஞாயிறின் மாலையில் - எந்த பெரிய அதிரடி விளம்பரங்களும் இல்லாமல் - அண்மையில் வெளியான ஹரிதாஸ் படம் ஒளிபரப்பினர்.

படம் வெளியான போதே பார்த்திருந்த போதும் மீண்டும் ஒரு முறை பார்க்க வைத்தது - அருமையான கதையும், கிஷோர் மற்றும் சிறுவனின் நடிப்பும். நீங்கள் இதுவரை பார்க்காவிடில் இனி அடிக்கடி ஜீ தமிழ் டிவியில் போடுவார்கள். பாருங்கள்

இதே டிவியில் இன்னும் சில வெற்றி பெற்ற தமிழ் படங்களும் ஒளிபரப்பாக உள்ளது - அவர்கள் போடும் ப்ரோமோவில் தெரிந்தது !

எங்கிருந்தாலும் வாழ்க

ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஒரு ஆலயத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத பாடல் " எங்கிருந்தாலும் வாழ்க ".

இதே பெயரில் - இசை அருவியில் சற்றே சோகமான காதல் பாடல்கள் ஒளி பரப்புகின்றனர். ஒரு நாள் பார்க்க ஆரம்பித்து சானல் மாற்ற முடியாமல் தொடர்ந்து பார்த்தேன்

மன்னிப்பாயா - விண்ணை தாண்டி வருவாயா
எப்போ புள்ள சொல்ல போறே - கும்கி
போ போ போ - மனம் கொத்தி பறவை

இவையெல்லாம் அடுத்தடுத்து அவர்கள் ஒளிபரப்பிய பாடல்கள் !

இனி எப்பவாவது இந்த நிகழ்ச்சி வந்தால் பார்க்க வேண்டும் என எண்ண வைத்து விட்டது !

****
அண்மை பதிவு

ஆலப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

11 comments:

 1. // எந்த பெரிய அதிரடி விளம்பரங்களும் இல்லாமல் - அண்மையில் வெளியான ஹரிதாஸ் படம் ஒளிபரப்பினர். // :)

  ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி ஹரிதாஸ் படம் போடுறோம்நு விளம்பரம் பண்ணங்கா
  அண்ணே...z டி வி ஒரு மாசம் முன்னாடி இருந்தே விளம்பரம் போட்டாங்க....!!

  ReplyDelete
 2. LAKSMI க்காவே பாக்கலாம் பாஸ் ஆபீஸ் ( படத்தில் நடுவில் )

  ReplyDelete
 3. Anonymous8:32:00 AM

  விஜய் டிவி, சன் டிவி ரண்டும் இங்கு வரும், கொடுமை பார்க்கிற மாதிரி ஒன்னுமில்லை, தமிழ்க் கொலையும் நாசம். லோக்கல் தமிழ் சேனல்கள் ரண்டு ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகின்றன, அது அதைவிடக் கொடுமை. நல்ல தமிழ் தொ.கா. வருமா? இணையத்துக்கு தாவி விட்டேன்.

  ReplyDelete
 4. //மழையால் பல மேட்ச்கள் பாதிக்கப்பட்டு விட்டன. பைனலை முடித்தே ஆகணும் என எதோ ஒரு விதமாய் //

  இதுல ஜோக் இப்போ இங்கிலாந்தில் சம்மர் சீசனாம். :) :) :)

  நம்பூர்ல மழைகாலத்துல மழை பெஞ்சாலே பெரிய விஷயமா இருக்கு :(

  ReplyDelete
 5. நான் குட்டீஸ் சுட்டீஸ் மட்டும்தான் பார்த்தேன்..,

  ReplyDelete
 6. surya irritated the viewers with his contispated talks, no spontaneity at all, very artificial and prakash follows the same. vijay tv tried copying KBC but Surya and prakash couldn't copy or match the style of Mr.Big B and SRK. Poor tamil audience are the scapegoats.

  ReplyDelete
 7. பழைய சூப்பர் சிங்கர் போல இல்லை இதற்கு சன் சிங்கர் தேவலாம்

  ReplyDelete
 8. Surya athiga urimai eduthu pesum potho, konjam perumaiyai pesum potho, Prakash Raj cut seithathu comedy!

  ReplyDelete
 9. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ! சூர்யா நடத்தினப்பவே பல பகுதிகள் பார்க்கவில்லை! இப்போ இன்னும் சுத்தம்! சூர்யாவுக்கு முன்னால குழந்தைங்க கலந்துகிட்ட பகுதி கொஞ்சம் கலகலப்பா இருந்தது! சீரியல்கள் எல்லாம் மொக்கைதான்! நான் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் டி வி பார்த்தாலே அதிகம்! நீங்க எப்படித்தான் இவ்வளவும் பார்த்து எழுதறீங்களோ? நன்றி!

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...