Wednesday, June 19, 2013

வானவில்: கலைஞர் - சென்னையின் வளர்ச்சி - சமந்தா

சென்னையின் வளர்ச்சி

சமீபத்தில் நண்பர் ஒருவர் பேசும்போது சொன்னதை இங்கு பகிர்கிறேன் :

" சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தென் மாநிலங்களில் சென்னை அளவு ரியல் எஸ்டேட் விலையேற்றம் - கடந்த 5 வருடங்களில் எங்கும் நிகழலை. குறிப்பா ஹைதராபாத்தில் 5 வருடமா எந்த நிலமும் கொஞ்சம் கூட விலை ஏறலை. ஆனா சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் flat விலை கூட கடந்த 5 வருடத்தில் மூணு மடங்காகிடுச்சு.

கம்பனிகள் பலவும் சென்னையை சுற்றியே தான் வருகின்றன. இது சென்னைக்கு மிக பெரிய பலம். தெலுங்கானா பிரச்சனையால் யாரும் ஹைதராபாத் பக்கம் செல்வதில்லை. பெங்களூரு தான் முதலில் எல்லாருக்கும் பிடித்த இடமாய் இருந்தாலும், பெரிதாய் வளர வாய்ப்பில்லாததால் சென்னை அளவுக்கு அதன் தொழில் வளர்ச்சி இப்போது இல்லை.

சென்னை இப்படி மிக வேகமாக தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட்டில் வளர்ந்தாலும் Infrastructure development -ல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை விட மிக மோசமான நிலையில் உள்ளது. டிரைனேஜ், குடி தண்ணீர் உள்ளிட்ட சிவிக் விஷயங்களில் அரசாங்கத்தின் செயல்பாடு மற்ற மாநிலங்கள் அளவுக்கு சுத்தமாய் இல்லை.Infrastructure இவ்வளவு சுமாராய் இருக்கும்போதே - ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் வளர்ச்சி இவ்வளவு நன்றாய் இருக்கிறது என்றால், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போல - அவற்றில் நல்ல வளர்ச்சி அடைந்தால், சென்னை எங்கேயோ போயிடும் !"

அழகு கார்னர்


இரு செய்திகள் 

செய்தி 1: வட இந்தியாவில் வெள்ளம் - ஏராள பாதிப்பு .

சென்னையில் வெய்யில் சுட்டெரிக்க - தண்ணீர் பஞ்சம் மீண்டும் எட்டி பார்க்கிறது இன்னொரு புறம், அதே நேரத்தில் - வட இந்தியாவில் - எவ்வளவோ நீர் வீணாகிறது. நதிநீர் இணைப்பு விஷயத்தில் ஏன் தீவிரமாக செயல்பட முடியாமல் போகிறது !!

செய்தி 2: ஹிந்தி நடிகை ஜியா கான் தற்கொலை விஷயத்தில் - அவரது காதலர் கைது செய்யப்பட்டார். இது பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை - ஆண்கள் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டால் - அவரது காதலி என எந்த பெண்ணும் கைது செய்யப்படுவதில்லை என எழுதியிருந்தது. யோசிக்க வேண்டிய விஷயம் தான் இது !

என்னா பாட்டுடே 

என் இனிய பொன் நிலாவே .....இந்த பாடலை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியுமா ....

ஜேசுதாசின் குரல் தனித்துவமானது. கிட்டார் உள்ளிட்ட வாத்தியங்களில் - ராஜா- ராஜாங்கம் செய்திருப்பார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் ஷோபாவை காணும்போது தான் மனம் என்னவோ போல் .ஆகிறது . எவ்வளவு அற்புத நடிகை ......ஹூம் !நீங்க - நான் - ராஜா சார்

சரவணன் மீனாட்சி சீரியலின் - ஹீரோ செந்தில் - அந்த கதையில் வருவது போல நிஜ வாழ்க்கையில் ஒரு ரேடியோ ஜாக்கி ! அந்த சீரியல் துவங்கும் அதே இரவு 9 மணி துவங்கி -நள்ளிரவு 1 மணி - வரை "நீங்க - நான் - ராஜா சார்" என்கிற தலைப்பில் ரேடியோ மிர்ச்சியில் இளைய ராஜா பாடல்களை ஒலிபரப்புகிறார். இரவு 10 முதல் பத்தரை வரை ரேடியோவில் - இந்நிகழ்ச்சி கேட்டுவிட்டு தூங்க செல்வது வழக்கமாகி விட்டது.

அண்மையில் இளையராஜா பிறந்த நாள் வந்தபோது அவரிடம் ஜாலியாக பேட்டி எடுத்து ஒலிபரப்பினர். " உங்க லவ் அனுபவங்கள் பத்தி சொல்லுங்க" " உங்க பாட்டு கேட்டுட்டு நாங்க டான்ஸ் ஆடுறோமே; நீங்க எப்பவாவது டான்ஸ் ஆடிருக்கீங்களா?" " உங்களுக்கு பிடிச்ச நடிகை யார் ?" போன்ற எல்லா கேள்விக்கும் ராஜா ஜாலியான மூடில் பதில் சொன்னார். அவரது பேவரைட் நடிகை பானுமதியாம் !

பதிவர் பக்கம் - கடல் பயணங்கள் சுரேஷ் குமார் 

சுரேஷ் குமார் ப்ளாக் துவங்கி ஓராண்டு ஆகிறது. விடாமல் தொடர்ந்து எழுதுகிறார். மாதம் 20 முதல் 30 பதிவுகள் எழுதி விடுகிறார் இந்த பெங்களூர் வாழ் இளைஞர் ! 

பல்வேறு இடங்களுக்கு பயணம், சாப்பாட்டு கடை மற்றும் அந்தந்த ஊர் ஸ்பெஷல் எழுதுவது இவரின் விருப்ப பதிவுகளாக இருக்கிறது

பயண கட்டுரைகள் மற்றும் ஊர் ஸ்பெஷல் பல நேரங்களில் ரசிக்க வைக்கிறது 

ராஜபாளையம் நாய்கள் பற்றிய விரிவான கட்டுரை அசத்துகிறது
மாலத்தீவில் - தண்ணீரில் இறங்கும் விமானம் பற்றிய சுவாரஸ்ய கட்டுரை - இங்கு

தொடர்ந்து எழுதுங்கள் சுரேஷ்குமார் ! வாழ்த்துகள் !

டாக்டர் விகடனில் கலைஞர் 

டாக்டர் விகடன் பத்திரிகையில் - வாரம் ஒரு பிரபலம் - தனது உடல்நலனை எப்படி பாதுகாக்கிறார் என்பது பற்றி எழுதுவார்கள் இந்த இதழில் கலைஞர் கருணாநிதி குறித்து எழுதியிருந்தனர். 4 மணிக்கு எழுவார் முன்பெல்லாம் வாக்கிங் போவார்; இப்போது செல்வதில்லை என பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்த தகவல் என்றாலும் ஒரு செய்தி மட்டும் ஆச்சரியப்படுத்தியது

கலைஞருக்கு இதுவரை சர்க்கரை நோய் அல்லது ரத்த கொதிப்பு (B. P ) இல்லையாம் ! இந்த இரு நோய்களும் டென்ஷன் ஆன வாழ்க்கை வாழும் எவருக்கும் பெரும்பாலும் வந்து விடும். அதிலும் சற்று வயதானால் வருவதற்கு வாய்ப்புகள் இன்னும் அதிகம்.

நடை பயிற்சி சாப்பாட்டில் அதீத எச்சரிக்கை என இருக்கும் வைரமுத்துவிற்கு கூட சர்க்கரை நோய் வந்து விட்டது. இதன் காரணம் கேட்ட போது "தொழிலில் உள்ள டென்ஷன் தான் " என்று கூறியிருந்தார் (அவரது முக்கிய டென்ஷன்- எழுதிய பாடலுக்கு தயாரிப்பாளரிடம் இருந்து பணம் ஒழுங்காய் வராததே !)

90 வயது வரை - கலைஞர் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து விட்டார் ! எப்படி அவர் தன் மனதை - பிரச்சனைகள் பாதிக்கா வண்ணம் வைத்துள்ளார் (டென்ஷனை மனதுக்குள் -விட்டிருந்தால் மேற்படி நோய்கள் இரண்டும் நிச்சயம் வந்திருக்கும் ) - இது நிச்சயம் ஆச்சரியமாகவே உள்ளது.

அநேகமாய் கலைஞர் சென்ச்சுரி அடித்து விடுவார் !

8 comments:

 1. அசப்பில் அந்த கால த்ரிஷா போல இருக்கிறார் ஷோபா ! (என்ன ஒரு அவதானிப்பு)

  ReplyDelete
 2. சென்னையின் வளர்ச்சி பற்றி கருத்து உண்மையே! அப்புறம் கலைஞர் பற்றி சொன்னதுக்கு பதில்.., என் அம்மா அடிக்கட் சொல்லுவாங்க.., முதன்முதலில் அடிப்படும்போதுதான் வலிக்கும்.., அப்புறம் மறத்து போய் மனசு ஏத்துக்கும்ன்னு.., அதுப்போலதான் கலைஞர் ஐயாவும்..,

  ReplyDelete
 3. //ஆண்கள் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டால்//

  நல்லா வாசிச்சுச் சொல்லுங்க, அது ‘தற்கொலையா’ அல்லது ‘தன் காதலியைக் கொலை’ செய்வதா? :-))))

  ஆண்கள் காதல் தோல்வின்னா, அதிக பட்சம் ‘தேவதாஸ்’ மாதிரி குடிகாரன் ஆவாங்க, அடுத்த காதலி கிடைக்கும்வரை(யிலும்; கிடைத்தபின்பு, அதைக் கொண்டடவும்) அப்படின்னுதான் கேள்விப்பட்டுருக்கேன். இது புதுசா இருக்கு. :-))))

  காதலன் என்று இல்லை, யார் தற்கொலை செய்தாலும், அதற்கு இன்னார்தான் தூண்டினார் என்று ஆதாரம் கிடைத்தால்தான் - தற்கொலைக் கடிதம் - காரணமானவரைக் கைது செய்துவிடுவார்கள் என்று வக்கீல் சார் உங்களுக்குத் தெரியாததா? இப்ப ஜியா கான் எழுதிய கடிதம் கிடைத்ததாலேயே அவர் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படித்தானே?

  ReplyDelete
 4. // பெங்களூரு தான் முதலில் எல்லாருக்கும் பிடித்த இடமாய் இருந்தாலும், பெரிதாய் வளர வாய்ப்பில்லாததால் சென்னை அளவுக்கு அதன் தொழில் வளர்ச்சி இப்போது இல்லை. //

  appadiya sollave illai.

  chennai vs bangalore

  No. of. IT Companies
  No. of Industries (except car)
  No. of Hardware companies
  No. of Clothing companies
  No. of Shopping malls
  No. of Biriyani Zones & Barbeque Nations & Snacks bar & Bakery
  etc.

  list pottu paarunga..

  chumma chennai-la ukkaandhukkittu chennai thaan best-nu solradhu nallava irukku boss?

  Infra structure mattum illai, real estates-leyum blr top thaan

  chennai-la 5 years-la thaan hike, inga 3 years-la sema hike.

  My brother bought one land in near by silk board, 2010 year-la vaangunar. vaangura appo 14 lakhs, ippo 45 lakhs-kku kekkuraanga.

  free-a tv & mixi koduttha vote podura kuttam thaane nama.. mattha state kaaran appadi illaiye :)

  ReplyDelete
 5. சென்னையின் வளர்ச்சி பிரம்மிக்கவே வைக்கிறது! எனக்கும் மிகவும்பிடித்த பாடல் என் இனிய பொன் நிலாவே! கலைஞருக்கு சுகர் பிபி இல்லையா? ஆச்சர்யத்தகவல்! நன்றி!

  ReplyDelete
 6. அண்ணே நீங்க ஷோபா ரசிகரா அப்பன்னா உங்க வயசு

  ReplyDelete
 7. பல தகவல்களுடன் வானவில்.

  வடஇந்தியா சென்ற யாத்திரீகர்கள் அல்லாடுவதும் வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்படுவதும் காண பயங்கரமாகவே இருக்கின்றது.:(

  ReplyDelete
 8. கலைஞர் இளைஞர் அல்லவா சதம் அடிப்பது அவருக்கு எளிதென்றே நினைக்கிறேன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...