Thursday, June 27, 2013

வானவில்: அன்னகொடி- No இலவச SMS - அந்தரங்க மனிதர்கள்

வங்கி சேவை - இனி இல்லை இலவச SMS

உங்கள் வங்கி கணக்கில் இருந்து செக் அல்லது ATM மூலம் பணம் எடுத்தாலோ, உங்கள் வங்கி கணக்கிற்கு யாரேனும் பணம் டிரான்ஸ்பர் செய்தாலோ இப்படி என்ன விஷயம் நடந்தாலும் நமக்கு வங்கியிலிருந்து ஒரு SMS வரும் ஆப்ஷன் இருந்தது. இதை வாசிக்கும் உங்களில் பலரும் அதனை பயன்படுத்தியிருப்பீர்கள்

இதுவரை இலவச சேவையாக இதை செய்து வந்த வங்கிகள் இனி இதற்கு - பணம் வசூலிப்பேன் என்று அறிவித்துள்ளது. அதிகமில்லை வருடம் 60 ரூபா தான் !

சரி போகட்டும் என விட்டு விட்டு - சேவையை தொடரத்தான் வேணும் !

மேலும் அறிய இங்கே வாசியுங்கள் !

அழகு கார்னர்என்னா பாட்டுடே 

பாடலின் முதல் சில வரிகளை கவனியுங்கள் :

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

செண்டிமெண்டுக்கு பெயர் போன தமிழ் சினிமாவில் - சற்று நெகடிவ் ஆன இப்பாட்டு - மிக பிரபலம் ஆகிவிட்டது.

பல இளைஞர்களும், நடிகர்களுக்கும், பாடகர்களும் - தங்களுக்கு பிடித்த பாட்டாக இப்பாடலை சொல்வதை கவனித்துள்ளேன்

மிக மெதுவாய் நகரும் இனிய மெலடி - பாவனாவின் அழகு பாடலை ரசிக்க கூடுதல் போனஸ்குங்குமம் - அந்தரங்க மனிதர்கள் 

குங்குமம் வார இதழில் புதிதாக " அந்தரங்க மனிதர்கள்" என்ற பகுதி தொடங்கியிருக்கிறது. சானை பிடிப்பவர்கள் போன்ற வித்தியாச விளிம்பு நிலை மனிதர்களை பேட்டி எடுத்து கடந்த சில வாரங்களாக வெளியிடுகிறார்கள்

நம்ம சாதாரண மனிதர்கள் - (அறியாத தகவல்கள் :)) )கான்செப்ட் பார்த்து வந்ததா இல்லை தானாகவே அவர்களுக்கு தோன்றியதா என தெரியலை :))

இந்த வார ரிலீஸ்: அன்னக்கொடி 

ரொம்ப நாள் கழித்து ஒரு பாரதிராஜா படம்.... ஒரு காலத்தில் பாடல்களை படமாக்குவதில் இவரை விட சிறந்த இயக்குனர் கிடையாது ! (இப்படத்தில் பாடல்கள் ரொம்ப சுமார் தான் )

பாரதிராஜாவுக்கு வயது 70 க்கு மேல் ! டிரைலரில் நடித்து காட்டுவதையும் அவர் உடையையும் பாருங்கள். 70 வயது மாதிரி தெரியவே இல்லை. (நிற்க ! மணிவண்ணன் பற்றி அவர் எழுதியதில் எனக்கும் வருத்தமே ! அதை விட அதிக வருத்தம் அவர் இறந்த பின் அவரது இல்லம் கூட சென்று அஞ்சலி செலுத்தாதது )

மாறி போன இன்றைய சூழலில் படம் ஓடும் என எண்ணவில்லை ! பாரதிராஜா படம் என்கிற அளவில் பின்னர் பொறுமையாக பார்க்க கூடும். அவ்வளவே !பதிவர் பக்கம் - வாங்க ப்ளாகலாம் - அனந்து

வாங்க ப்ளாகலாம் - என்கிற தலைப்பில் எழுதி வருகிறார் சென்னையில் பணிபுரியும் அனந்து. ஆங்காங்கே அரசியல், சிறுகதை கவிதை என தொட்டு பார்த்தாலும் கூட, இவரது ஸ்பெஷாலிட்டி சினிமா விமர்சனங்களே ! புது படங்களை சுட சுட பார்த்துவிட்டு வார இறுதியில் எழுதி விடுகிறார். பதிவின் தலைப்பிலேயே - படம் குறித்த தனது கருத்தை சொல்லி விடுவது இவரது ஸ்டைல். படத்துக்கு விகடன் பாணியில் மார்க்கும் தருகிறார்

அனந்துவின் ப்ளாக் முகவரி : http://pesalamblogalam.blogspot.in/

அய்யாசாமி கார்னர்

தினம் காலை இட்லி தான் உணவு என்பது பெரும்கொடுமை ! இதை இட்லி பொடி வைத்து சற்று சமாளிப்பார் அய்யாசாமி. அருகிலேயே - சேம் நிறத்தில் - அதே போன்ற டப்பாவில் - மிளகு பொடி என ஒரு வஸ்த்துவும் இருக்கும்.

ஒரு நாள் Mrs. அய்யாசாமி இட்லி சாப்பிடும்போது டப்பாவை மாற்றி எடுத்து கொண்டிருப்பதை பார்த்த அய்யாசாமி பொங்கி எழுந்தார்

" ஹல்லோ .. இட்லி பொடின்னு நினைச்சுக்கிட்டு - மிளகு பொடி போட்டுக்கிட்டு இருக்கே - என்னாதிது !"

அவர் சொல்வதை கேட்டு Mrs. அய்யாசாமிக்கு சற்று சந்தேகம் வர, பின் நன்றாக சோதித்து விட்டு தான் எடுத்தது தான் இட்லி பொடி என்று அறிவித்தார்

ஷாக் ஆகி அய்யாசாமி முழித்ததை பார்த்ததும் Mrs. அய்யாசாமிக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது

" தினம் காலையில் இட்லி பொடின்னு நினைச்சிக்கிட்டு - மிளகு பொடியை போட்டு சாப்பிடுறீங்களா? சாப்பிடும் போது கூட வித்யாசம் தெரியலையா? நானும் என்னடா - மிளகு பொடி சீக்கிரம் காலியாகுதேன்னு நினைச்சேன் " என்று சொல்ல .....

காதில் விழாத மாதிரி பேப்பரை படிக்கலானார் அய்யாசாமி !
*********
அண்மை பதிவு


ஆலப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

தொல்லை காட்சி - அகரம் -சூர்யா - ஆபிஸ் சீரியல் - ஹரிதாஸ்

12 comments:

 1. இட்லிப் பொடின்னு நினைச்சு மிளகுப் பொடி - கலக்கறாரே அய்யாசாமி.... :)

  ReplyDelete
 2. //தினம் காலையில் இட்லி பொடின்னு நினைச்சிக்கிட்டு - மிளகு பொடியை போட்டு சாப்பிடுறீங்களா? சாப்பிடும் போது கூட வித்யாசம் தெரியலையா?//

  அதானே.. காரம் காட்டிக்கொடுக்கலையா? :-))

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்கோ. பேப்பர் அல்லது டிவி பார்த்துகிட்டு சாப்பிட்டா இந்த கதி தான் போல ...

   Delete
 3. //இட்லி பொடின்னு நினைச்சிக்கிட்டு - மிளகு பொடியை//

  இட்லி பொடி சிகப்பா இருக்கும்; மிளகு(pepper) பொடி கருப்பா இருக்குமே??

  ReplyDelete
  Replies
  1. கரக்ட்டு ஹூசைனம்மா ! நானும் அப்படி தான் நம்பி கிட்டு இருந்தேன் ஆனா ரெண்டும் ஒரே கலரா இந்த முறை அமைஞ்சுடுச்சு :)

   Delete
 4. ஓ அதுவா விஷயம் மிளகு பொடி சாப்பிட்டு நாள் முழுவதும் செம பசியெடுத்து அந்த ஹோட்டல் இந்த ஹோட்டல் என்று போய் வெட்டி கொண்டு இருக்கீங்களா..தூள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நல்லா கண்டுபுடிக்கிறீங்க டீட்டைலு :)

   Delete
 5. எல்லாத்தையும் விட அய்யாசாமி கார்னர் செம ஜோக்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் நன்றி

   Delete
 6. என் வலைத்தளத்தைப் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி நண்பரே ...

  ReplyDelete
 7. அய்யாசாமி.......:)) அய்யோ பாவம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...