Saturday, June 8, 2013

குட்டிப்புலி = பெரிய சைஸ் கரடி- விமர்சனம்

ரளவு மதிக்கத்தக்க/ விரும்பத்தக்க அளவில் தான் இதுவரை சசிகுமார் நடித்து வந்தார்; திடீரென்று ஏன் ரஜினி ஆகும் ஆசை அவருக்கு வந்தது ? பார்க்கும் நமக்கு - தாடி வைத்த டி. ராஜேந்தர் தான் நினைவுக்கு வருகிறார் ! முடியல !


இளிச்சவாய மக்கள்- எப்படி நடிச்சாலும் பாப்பாங்க-
வாங்க நாம இன்னொரு படம் சேர்ந்து நடிக்கலாம்


கதை

தங்கள் கிராமத்து பெண்ணை கிண்டல் செய்ததற்காக ஒருவனை கொலை செய்கிறார் ஹீரோவின் தந்தை - பின் வெட்டுப்பட்டு சாகிறார்

அவருக்கு பிறந்த மகனும் (ஹீரோ சசிகுமார்) - ரவுடியாக திரிகிறார். அம்மா சரண்யா மகனுக்கு ஒரு திருமணம் முடித்து வைத்து அவரை "காப்பாற்ற " நினைக்கிறார். அது நடந்ததா என்பதை - தைரியம் இருந்தால் - சன் டிவியில் - பண்டிகை தினத்தில் - ரத்தம் தெறிக்க கண்டு மகிழுங்கள் !

*********
படம் எடுத்து முடித்தவுடன், அதை பார்த்து விட்டு தானே சன் டிவி காரர்கள் - உள்ளே வந்தனர்? அவர்கள் ரசனை ஏன் இப்படி ஆகி போனது ? இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று வாங்கினர் ? 80 களில் வெளியாக வேண்டிய கதை- சிரிப்பை வர வைக்க முயன்று முழுமையாய் தோற்கும் திரைக்கதை- நாக்கை கடித்த படி க்ளோஸ் அப்பில் மிரட்டும் ஹீரோ - ஒரு காட்சி கூட உருப்படியாய் இல்லாத ஒரு படம் - ஹூம் !

படம் முடிந்து வரும்போது நம் நிலை

இந்த லட்சணத்தில் இந்த படம் ஹிட்டு என்று சொல்கிறார்கள்- படம் தமிழ் மக்களுக்கு பிடிக்கிறது என்றால் - அவர்கள் ரசனையை நினைத்து வருந்தத்தான் முடியும் !

சம்மர் லீவில் வியாழக்கிழமை - சோலோ ரிலீஸ் - ரஜினி படம் போல எக்கச்சக்க தியேட்டர்கள். வியாழன் டு ஞாயிறு - நாளே நாளில் - படம் எப்படி என்கிற விபரம் பெரிதாய் பரவும் முன்னே - போட்ட காசை எடுத்து தப்பித்து விட்டனர்.

படத்தில் சிரிப்பை வர வைத்த ஒரே இடம் - சரண்யா தன மகனுக்கு உடை வாங்கும்போது கடையில் ஷாரூக் படத்தை பார்த்து விட்டு என் பையன் " அந்த மாதிரி இருப்பான்" என்பதும், கூட இருக்கும் கிழவி " நம்ம பையன் அதை விட அழகு" என்பதும் ! (சசி குமாரை தெரிந்தே கிண்டல் அடிச்சிருக்காங்க !)

சைக்கிள் ஓட்ட கற்று தரும் - இயக்குனர் & துணை இயக்குனர் குழு-
கூடவே - ஷேவ் செய்ய கற்று தந்திருக்கலாம் :)


வாகை சூடவா - ஜிப்ரான் - உங்க மேஜிக்கல் டச் என்ன ஆச்சு ?

லட்சுமி மேனன் - இவ்வருடம் எழுதிய டெண்த் பரிட்சையில் மட்டுமல்ல - படத்திலும் பெயில் மார்க் தான் !

தமிழ் சினிமாவில் அருவாள் உபயோகம் செய்ய சீரியஸா தடை செய்யணும். ! முடியல !

உயர் ரக குறியீட்டு படம் இது !

கிளை மாக்சில் இரண்டு கிழவிகள் - கோழி அறுக்கிற மாதிரி வில்லன் கழுத்தை அறுக்கும்போது நமக்கு குமட்டுகிறது !

குட்டிப்புலி - பெரிய சைஸ் கரடி !
*****
அண்மை பதிவுகள் 

ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் 

தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்

7 comments:

 1. ம்ம் ரைட்டு

  ReplyDelete
  Replies
  1. ராஜி அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தா மாதிரி தெரிகிறது. எழுத்து நடை கிண்டல்...இதெல்லாம் சென்னையில் படித்தர்வர்களுக்கு மட்டுமே கைவரும்...
   சரியா? ரை..ரை...ரைட்.

   ரை..ரை...ரைட்..: இந்த சொற்றடர் பல்லவன் போக்குவரத்து கலக (sic) நடத்துனர்களின் காப்பி ரைட்...வாசகம். பெண்களைப் பார்த்தல் கூடவே விசில் வேற...

   Delete
 2. இன்னனொரு அருவாசாமி துணை.

  ReplyDelete
 3. The worst picture. Damaging the reputation of Srivilliputtur. The picture to be banned.

  ReplyDelete
  Replies
  1. rajapalayam la nalla thaan oduthu , neenga worst nu solreenga

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 4. ம்.... சினிமாவே அதிகமா பார்க்கதில்லை! அதனால பிரச்சனையில்லை. ஆனா சன் டீவீல அடிக்கடி இதோட விளம்பரம் வந்து படுத்துது!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...