Wednesday, June 5, 2013

வானவில் : உதயம் NH 4- நிஜ சுஜாதா பேட்டி - நித்யா மேனன்

பார்த்த படம் - உதயம் 

வீட்டை விட்டு ஓடி போகும் காதலர் கதை- பலரின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாய் விரிகிறது. திரைக்கதை ஏனோ வழ வழா கொழ கொழாவென்று ஆகி விட்டது.

கல்லூரி முடிக்க போகும் ஹீரோயினுக்கு 18 வயசு முடியலை என்பது மிக பெரிய பூ சுத்தல். அப்படி 18 வயசு முடியலை என்றால் - அவ்வளவு அவசரமாக கல்யாணம் + ஓடி போவதன் அவசியம் என்ன?

இத்தகைய படங்களுக்கு மிக அழகான ஹீரோயின் அவசியம். ஆனால் ஹீரோயின் அழகு + நடிப்பில் பாஸ் மார்க் கூட வாங்க முடியாத பெண் !கொஞ்சம் முயன்றிருந்தால் -அசத்தல் கதையாய் வந்திருக்க வேண்டிய படம் - ப்ச் ...

சுஜாதா மனைவி பேட்டி

எழுத்தாளர் சுஜாதா மனைவி - தன் கணவர் குறித்து தந்த பேட்டி சில நாட்களாக பரபரப்பாய் ஓடிக் கொண்டுள்ளது. எனக்கு தெரிந்து சுஜாதா அளவு பிரபலமான ஒரு தமிழ் எழுத்தாளர் இது வரை இருந்ததில்லை; இனி இருக்க போவதுமில்லை. அவர் இறந்து ஏழெட்டு வருடம் ஆகியும் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியில் அவர் புத்தகங்களே அதிகம் விற்பது இதற்கு சாட்சி.

முழு நேர எழுத்தாளராக இல்லாமல், ஒரு பொறுப்புள்ள வேலையில் இருந்து கொண்டே, அவர் இவ்வளவு எழுதியது மிக பெரும் சாதனை தான். இதில் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போவது இயற்கையே

இறந்த ஒருவரை பற்றி அவதூறாக சொல்ல/ எழுத கூடாது என்கிற மரபின் பின்னே - நிச்சயம் பல காரணங்கள் இருக்க கூடும். எனக்கு தெரிந்த ஒரு காரணம் இது -

எந்த ஒருவரது - தவறுகள் / குறைகள் பற்றி எழுதினாலும் , அது பற்றி தனது தரப்பை அவரால் பதிலாக சொல்ல முடியும்; ஆனால் இறந்தவரால் தனது தரப்பை விளக்கவே முடியாது; இப்படி பதில் சொல்ல முடியாத நிலையில், மரித்து போன ஒருவரை பற்றி நெகடிவ் - ஆக எழுதுவது சரியில்லை என்றே நினைக்கிறேன்.

இத்தகைய பேட்டிகள் சுஜாதா மீதான ஈர்ப்பை என்னை போன்ற தீவிர ரசிகர்களுக்கு குறைக்க போவதில்லை !

அழகு கார்னர்விகடன் மேடையில் பாரதிராஜா

விகடன் மேடையில் பாரதிராஜா பதில் அளிக்கிறார் படிக்க செம காமெடியாய் உள்ளது. கேள்விகளுக்கு இடையே ஆங்கிலத்தில் ஒரு வரி சொல்லி விட்டு அதன் தமிழ் அர்த்தமும் சொல்வது அக்மார்க் மேஜர் சுந்தர் ராஜன் ஸ்டைல் :)

உங்கள் படங்களில் சிறந்த படம் எது ? பதில் கிடையாது. "உங்கள் உதவியாளராய் இருந்து இயக்குனர் ஆனவர்களில் யாரை பிடிக்கும்?"
 "எனது குழந்தைகளில் எந்த குழந்தை பிடிக்கும்னா எப்படி பதில் சொல்றது ?" என்ற ரீதியில் போகுது பதில்கள் ..:))

நிற்க விகடன் வலை பாயுதேவில் ரசித்த சில வரிகள் :

* மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் ஸ்கூல்ல எந்த மிஸ் அழகுன்னு !

* ஷாப்பிங் மாலில் பார்க்க கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது ஏன் கிடைப்பதில்லை ?

* தோல்வியடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளை தானே தவிர இலக்குகளை அல்ல !

போஸ்டர் கார்னர்வழக்கு : இரண்டாம் திருமணத்தால் பாதிப்படைந்த  சென்னை ஆடிட்டர்
மோகனசுந்தரம் என்பவர் CA படித்த ஒரு சார்டர்ட் அக்கவுன்டண்ட். தனியாக ஆடிட்டராக பல நிறுவனங்களுக்கு பணியாற்றி வந்தார். மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை இவர் மணக்க, முதல் மனைவி இவர் மீது CA இன்ஸ்டிடியூட் -ல் கம்பிலேயின்ட் பதிவு செய்தார். (ஆடிட்டர்கள் மீது குற்றம் என்றால், அதனை CA இன்ஸ்டிடியூட் விசாரிக்கும்). அவர் இரண்டாம் திருமணம் செய்தது உறுதியானதால் - கிரிமினல் வழக்கு பதிவாகி ஒரு வருடம் சிறை செல்ல, அவரது சார்டர்ட் அக்கவுன்டண்ட். மெம்பர்ஷிப் நீக்கப்பட்டு- இனி அவர் வாழ்நாளைக்கும் சார்டர்ட் அக்கவுன்டண்ட். ஆக பணியாற்ற முடியாது என்று ஆனது.

ஒரு வருட தண்டனை - 6 மாதமாக குறைந்து வெளியே வந்த அவர் மீண்டும் - சென்னை உயர் நீதி மன்றத்தில் தனது மெம்பர்ஷிப்பை நீக்கியது தவறு என்று வழக்கு போட , உயர் நீதி மன்றமோ, இரண்டாம் திருமணம் செய்த ஒருவரது மெம்பர்ஷிப்பை வாழ்நாளைக்கும் நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது.

சார்டர்ட் அக்கவுன்டண்ட்கள் "தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைக்காக ப்ரொபசனல் மெம்பர்ஷிப் நீக்குவது எப்படி சரியாகும்?" என தங்கள் குழுமங்களில் புலம்பி வருகிறார்கள்!

பதிவர் பக்கம் - ரசனைக்காரன் @ நடராஜ் 

ரசனைக்காரன் என்ற பெயரில் பதிவெழுதும் நடராஜ்- ஐ அவ்வப்போது பின்னூட்டங்களில் பார்த்துள்ளேன். மனிதர் எப்போதேனும் ஒரு முறை தான் எழுதுவார் போலும் . 35 வயது காரனின் மனது + உடலை பற்றிய அவரது இந்த பதிவை வாசித்து பாருங்கள். சுவாரஸ்யம் !

இவ்வளவு அழகான எழுத்து நடை வைத்து கொண்டு எப்போதேனும் ஒரு முறை எழுதாதீர்கள் நடராஜ்.. அடிக்கடி எழுதுங்கள் !
******
அண்மை பதிவுகள்


ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்


ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்

11 comments:

 1. மோகன்..என் பின்னூட்டத்தில் ஒருவர் சொல்லித்தான் நீங்கள் என்னை பற்றி பேசியதை அறிந்தேன். உங்களிடம் பெரிய அறிமுகம் இல்லாவிடினும், உங்களை பொதுவாக பிடிக்கும். உங்களின் ரீசண்ட் சந்துரு பதிவு உட்பட பல பதிவுகளும் :)

  முடிஞ்சளவுக்கு எழுதுறேன்..என்ன மகா சோம்பேறி நான் :)

  ReplyDelete
 2. Hi. You do not like Ashrita (Udhayam heroine)? It is surprising.

  ReplyDelete
 3. I like your posts, the way you writing something I liked it. Keep it up.

  ReplyDelete
 4. உதயம் படம் நானும் பார்த்தேன். உங்க கருத்துப்படி ஹீரோயின் படு கேவலம். அதோட வாய்தான் அழகை கெடுக்குதோ?! நடிப்பும் வரலை, அழகும் இல்ல அப்புறம் எப்படி இதெல்லாம் நடிக்க வந்துச்சு?

  ReplyDelete
 5. பதிவர் அறிமுகம் அவரது தளத்தை இப்போது தான் பார்கிறேன் அருமை உங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 6. நன்றி நடராஜ்

  வாங்க ஜகன்னாத் ; ரசனைகள் மாறும் இல்லீங்களா

  மகிழ்ச்சியும் நன்றியும் லோகநாதன்

  நன்றி ராஜி; ரைட்டு

  நன்றி சக்கர கட்டி தம்பி;

  நன்றி ஸ்ரீ விஜி

  ReplyDelete
 7. படத் தகவல்களுக்கு நன்றி. தப்பிவிடுவோம்.:)

  வானவில் நன்று.

  ReplyDelete
 8. நன்றி சார் பதிவர் அறிமுகத்திற்கு உங்களைப்போன்றோர் மூத்தவர்கள் பலரை என் போன்ற புதியவர்களுக்கு அறிமுகம் செய்தால் தானே பலரைப்படிக்க முடியும் நன்றி நல்ல பதிவை இனம் காட்டியதுக்கு சார்!

  ReplyDelete
 9. இத்தகைய பேட்டிகள் சுஜாதா மீதான ஈர்ப்பை என்னை போன்ற தீவிர ரசிகர்களுக்கு குறைக்க போவதில்லை !

  Me too !!

  ReplyDelete
 10. பதிவர் அறிமுகத்திற்கு நன்றி மோகன்.

  வழக்கம் போல் வானவில் அருமையாக!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...