Tuesday, June 4, 2013

தொல்லை காட்சி- 60 நொடி ஆர் யூ ரெடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்

விஜய் அவார்ட்ஸ் 

கேரளா சென்று ஞாயிறு மதியம்தான் வந்ததால் வெளியூரில் விஜய் அவார்ட்ஸ் சற்று தான் பார்க்க முடிந்தது. ஆனால் ஞாயிறு மதியம் " பெஸ்ட் மொமன்ட்ஸ் ஆப் விஜய் அவார்ட்ஸ் " என்று முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்பினர்.

3 படத்துக்கு ஏன் தான் இத்தனை விருதுகளோ ? சிறந்த படம், சிறந்த இயக்கமும் ஏனோ அப்படத்துக்கு கொடுக்காமல் விட்டார்கள் :))ஷாரூக் டான்ஸ், கமல் பேச்சு என எப்படி விழாவை மார்கெட்டிங் செய்யணும் என தெரிந்து வைத்துள்ளனர் விஜய் டிவி மக்கள் ! அஜீத், விஜய்  என முக்கிய நடிகர்களை பாராட்டி - அவர்கள் ரசிகர்களை குஷிப்படுத்துவும் தவறுவதில்லை !

Sharukh EntrySidhardh Medley PerformanceBest Find - AnirudhVijay Best Entertainerநல்ல நிகழ்ச்சி : எல்லை கடப்போம்

சன் செய்திகளில் வரும் ஒரு நல்ல நிகழ்ச்சி " எல்லை கடப்போம்".

சில பதிவர்கள் வெவ்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு பகிரும் தகவல்கள் போல சுற்றுலா பற்றிய நிகழ்ச்சி இது

வெளிநாடுகளில் சுற்றி பார்க்க சிறந்த இடம் எது, எங்கு தங்கலாம், என்ன சாப்பிடலாம், எவ்வளவு செலவாகும், எந்த ஊர்களுக்கு விசா இன்றியே கூட பயணிக்கலாம் போன்ற தகவல்கள் பகிரப்படுகிறது, சனி மற்றும் ஞாயிறு 11 பகல் மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி

அறுபது நொடி ஆர் யூ ரெடி

இந்த பெயரில் விஜய் டிவியில் தொடர்ந்து கூத்தடித்து கொண்டுள்ளனர். எப்போதேனும் பொழுது போகாமல் சற்று பார்ப்பது வழக்கம். இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளர் - கலந்து கொள்வோர் அதிகம் கிண்டல் செய்து ரேகிங் செய்கிறார்கள் என சண்டை போட்டு வெளிநடப்பு செய்தார். ஆனால் அடுத்த 5 நிமிடத்தில் திரும்ப வந்து விட்டார் ! இந்த காட்சியை ப்ரோமோவில் போட்டே நிகழ்ச்சியை பிரபல படுத்த முயன்றது விஜய்.

எனக்கென்னவோ இந்த நிகழ்ச்சி முழுவதுமே பிக்சிங் இருப்பதாக தெரிகிறது. பார்வையாளராக போனவரை கேட்டால் நிச்சயம் பல கதைகள் கிடைக்க கூடும் !

நீயா நானா

நீயா நானாவில் - சாதாரண மனிதர்களிடம் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றிய விவாதம் நடந்தது. ஆட்டோ காரர், பிளாட் பாரத்தில் விற்பனை செய்பவர் போன்றோரிடம் மக்கள் எப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியே லைம்லைட் இருந்தது. வியாபாரிகள் செய்யும் தவறுகளை மிக லேசாக தொட்டு சென்று விட்டனர்

நிகழ்ச்சியில் ஒரு பெரியவர் (நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லா விடினும்) சொன்ன வரி ரசிக்க வைத்தது :

தான் பெற்றது (மகன்/ மகள்) - இன்பம் ! தான் பெற்றது - பெற்றது பேரின்பம் !

அட !

பார்த்த படம் - ஒரு தலை ராகம்

ஜெயா தொலைக்காட்சியில் ஒரு தலை ராகம் படம் ரொம்ப வருடங்களுக்கு பிறகு பார்க்க முடிந்தது. படத்தில் 10-க்கும் மேற்பட்ட பாடல்கள். அனைத்தும் ஆண் குரலில் மட்டுமே இருக்கும் ! கதை நம்ம T. ராஜேந்தரின் வழக்கமான "ஒரு தலை காதல்" தான். பாடல்கள் அடடடா ! 30 வருடத்துக்கு பின்னும் சூப்பர் ஹிட்டாய் தான் இருக்கு. படத்தின் நடுவில் அதிக பாடல்கள் இல்லை - பாடல்களின்றி மெதுவாய் நகரும் படத்தை பார்க்க விருப்பமில்லாமல் சானல் மாற்ற வேண்டியதாயிற்று

புதிய நிகழ்ச்சி சாம்பியன்ஸ் - சன் டிவியில்

மாற்று திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கென்று சன் டிவி யில் வெளி வர உள்ள நிகழ்ச்சி " சாம்பியன்ஸ் ". டான்ஸ், பாட்டு, மிமிக்ரி என தங்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இதுவரை கலந்து கொள்வோர் தவிர புதிதாக யாரும் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்த வண்ணம் உள்ளனர்

விளம்பரம் கார்னர்


****
அண்மை பதிவுகள்

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்2 comments:

  1. நானும் இதுப்போல ஒரு போஸ்ட் போடனும்ன்னு ரொம்ப நாளா நினைக்குறேன். ஆனா,5 நிமிசத்துக்கு மேல டிவி பொட்டி முன்னாடி உக்கார முடியல. அதுக்காக டைம் இல்லன்னு பொய் சொல்ல வரலை. பொறுமை இல்ல. ம்ம்ம் பார்க்கலாம் எதிர்வரும் வாரங்களிலாவது பார்த்துட்டு போஸ்ட் போடுறேனான்னு?!

    ReplyDelete
  2. நான் இப்பல்லாம் பொதுவா டி.வி. பார்க்கறதே இல்லை - அது தான் உங்க பதிவு இருக்கே - அதிலேயே தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி படிக்கறதோட சரி! :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...