Monday, June 17, 2013

தொல்லை காட்சி- SPB - அறிவாளி வேடம் -மீனாட்சி அப்டேட்

ராக மாலிகாவில் SPB 

ஜெயா டிவி நடத்தும் பாட்டு நிகழ்ச்சி ராக மாலிகா. 500- வது நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வந்த SPB - என்ன சத்தம் இந்த நேரம், எனக்கொரு காதலி இருக்கின்றாள், காதலின் தீபம் ஒன்று - என பல அட்டகாச பாடல்களை பாடி மகிழ்வித்தார். என்ன ஒன்று - இப்போதைய நிலையில் - சோக பாட்டு தான் அவரால் ஒன்றி பாட முடியுது (சொந்த வாழ்க்கை எபக்ட் போலும் !) மகிழ்ச்சி பாட்டை பாடும் போது அதன் சோக வெர்ஷனை அவர் பாடுற மாதிர்யிருக்கு !இதுவரை 37,000 முதல் 40,000 பாடல்களுக்குள் பாடியிருப்பதாகவும் இன்னும் 2 வருடம் -பாடினால், பாட வந்து 50 வருடம் ஆகிடும்; அத்துடன் ரிட்டயர் ஆகிடுவேன் என்றும் சொன்னார் SPB !

சரவணன் மீனாட்சி அப்டேட்

வீட்டுக்கு வந்து சேரும் நேரம்- இந்த கருமம் ஓடுவதால் - சற்று பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு.

வேலைக்கு போகும் மீனாட்சியை சந்தேகப்படுகிறார் ஹீரோ. முக நூலில் வேறு பெயரில் வந்து சாட்டிங் செய்து நேரில் சந்திக்கலாமா என்று கேட்கிறார். விஷயம் தெரிந்த மீனாட்சி " என்னை எப்படி சந்தேகப்படலாம்" என கடந்த சில பல மாதங்களாக பேசாமல் இருக்கிறார்(பொண்டாட்டி கூட மாச கணக்கில் பேசாம இருக்க முடியுமா என்ன ? கணவன் - மனைவி சண்டை முடிவது எங்கு தெரியுமா ? சரி வேணாம் விடுங்க .. நிறைய சின்ன பசங்க நம்ம ப்ளாக் படிக்குறாங்க )

சரவணன் காணாமல் போயி திரும்ப வர்றார் அப்பவும் மீனாட்சி பேசலை;

இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே - புருஷனையும் - வாடா போடான்னுது ; பரவால்லை உரிமைன்னு நினைச்சா, ஆபிசில் தன்னோட மேனேஜரையும் வாடா போடான்னுது. ஒரே குயப்பமா இருக்கு !

கிரிக்கெட் கார்னர் 

இங்கிலாந்தில் நடக்கும் ஐ சி சி - கிரிக்கெட் மேட்ச்சில் பல மேட்சுகள் மழையால் பாதிக்கப்படுகின்றன. " ஏங்கடா இந்த நேரத்தில் இங்கிலாந்தில் மேட்ச்கள் வச்சீங்க? " என கேட்கலாம்னு பார்த்தால் , இது தான் இங்கிலாந்தின் கோடை காலமாம் ! அட பாவிகளா !

மிக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் மழையால் - அரை மணிக்கொரு முறை நிறுத்தி நிறுத்தி ஆடினாங்க. இதனால் மேட்ச் பிசுபிசுத்து போச்சு .

மழையால் மிக பாதிக்கப்பட்டது மேற்கு இந்திய தீவு தான். தென் ஆப்ரிக்காவுடன் அழகாய் ஜெயிக்க வேண்டிய மேட்ச் மழையால் "டை " ஆக, ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா செமி பைனல் உள்ளே நுழைஞ்சுடுச்சு. மேற்கு இந்திய தீவை நினைச்சால் பாவமா !இருக்கு !

நல்ல -நிகழ்ச்சி பொதிகையில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் 

பொதிகை டிவி- யில் ஒரு மாமா - கால் மேல் கால் போட்ட படி - ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்துகிறார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வரும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சி நடத்துபவருக்கு எல்லா விளையாட்டிலும் செம அறிவு ! (நம்ம அறிவெல்லாம் கிரிக்கெட் உடன் முடிஞ்சுடும்!) போன் செய்து - கேள்விக்கு பதில் சொல்லும் முறையை - தமிழில் ஆரம்பித்தது இவர்களாக தான் இருக்கும் என நினைக்கிறேன்

ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றாலும் அரக்க பறக்க - கிடு கிடுவென நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசுவது செம காமெடியாய் இருக்கும்.

டிவியில் பார்த்த படம் - அமராவதி

அமராவதி படத்தின் முக்கிய சிறப்பு (!!??) என்ன தெரியுமா? தல அஜீத் மற்றும் - நடிகை சங்கவி அறிமுகமான படம் இது தான் ! ஏனோ இப்படம் இதுவரை முழுதும் பார்த்ததே இல்லை

ராஜ் டிவியில் இம்முறை போட்ட போதும் அரை மணி நேரம் தான் காண  முடிந்தது. மிக மிக ஒல்லியான அஜீத்தை பார்க்க செம சிரிப்பாய் இருந்தது. எக்ஸ்பிரஷனே இல்லாமல் - முடியை விரித்து முகத்தில் போட்ட படி பேசும் சங்கவி - இன்னொரு காமெடி.

படத்தில் வரும் புத்தம் புது மலரே என்ற அற்புத பாட்டு என்றும் எனக்கு பிடித்த லிஸ்ட்டில் இருக்கிறது. பாடலில் அந்த கால அஜீத்தை கண்டு களியுங்கள்


ஜோடி சீசன் - காமெடி ரவுண்ட்

நடிகைகள் ராதா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடுவர்களாய் இருக்க - இந்த வாரம் காமெடி ரவுண்ட் நடத்தினர். பார்த்த நமக்கு பல இடங்களில் சிரிப்பு வந்தாலும் நடுவர்கள் " நல்லா இல்லை; சிரிப்பு வரலை " என்றே சொல்லி கொண்டிருந்தனர்

கலந்து கொண்ட அத்தனை டீமும் - காமெடி என்கிற பேரில் கடைசியில் "பாம்" போட்டு நாற்றம் அடிக்கிற மாதிரி செய்தது தான் கொடுமையாய் இருந்தது !

இப்போல்லாம் ஒரு வார நிகழ்ச்சியையே - 2 வாரம் இழுத்துடுறாங்க. ... இருக்கிறது ஏழெட்டு ஜோடி.. ஒவ்வொரு ஜோடி ஒவ்வொரு வாரம் அவுட் ஆனா - ஏழு வாரத்தில் - ப்ரோக்ராம் முழுக்க முடிஞ்சுடுமே... அதனால் ஒரு முறை நடந்த போட்டியை இழு இழுன்னு இழுத்து 2 வாரம் ஒளிபரப்புறாங்க .. !

நீயா நானா - அறிவாளி வேடம்

இந்த வார நீயா நானாவில் அறிவாளி வேடம் போடுவதன் அவசியம் என்ன என்று அலசினார்கள். பொதுவாய் இரண்டு பக்கமும் எதிரெதிராய் பேசுவார்கள் இங்கோ இரண்டு பக்கமும் அறிவாளி வேடம் அவசியமே என்று பேசினர்.

தெரிந்த முகங்களாக பதிவர் கார்க்கி மற்றும் தீபாவை காண முடிந்தது

தலைப்புக்கு பஞ்சமா என்று தெரியலை. நிகழ்ச்சி அதிகம் களை கட்டலை. ரசிக்க முடிந்த ஒரே ரவுண்ட் - நீயா நானாவில் என்ன அறிவாளி வேடம் போடுகிறார்கள் என - கிண்டலடித்த ரவுண்ட் தான் !

8 comments:

 1. (பொண்டாட்டி கூட மாச கணக்கில் பேசாம இருக்க முடியுமா என்ன ? கணவன் - மனைவி சண்டை முடிவது எங்கு தெரியுமா ? சரி வேணாம் விடுங்க .. நிறைய சின்ன பசங்க நம்ம ப்ளாக் படிக்குறாங்க )
  //

  அப்படி என்ன ரகசியங்க? சொன்னா சின்ன பையங்க தெரிஞ்சுகிடுவோம்ல

  ReplyDelete
 2. ம்ம் இந்த வாரம் நீயா நானா? நானும் பார்த்தேன்.., பரவாயில்ல..,

  புத்தம் புது மலரே! என் ஃபேவரிட் பாட்டு. பார்க்க நல்லா இருக்காது..., கேட்க நல்லா இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. தூர்தர்ஷனில் SPORTS QUIZ நடத்துபவர் பெயர் Dr Sumanth. இவர் ஒரு மருத்துவர். இவர் ஒரு popular quizzer. இந்த ப்ரோக்ராம் முன்னர் சனி கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். இப்போது ஞாயிறுகளில் வருகிறது. மற்ற நிகழ்சிகளில் வெட்டியாக பேசி பேசி நேரத்தை கடத்துபவர்கள் மத்தியில் 1 மணி நேரத்தில் எத்தனை கேள்விகள் கேட்க முடியுமோ அதனையும் அவசரமாக கேட்கும் Dr சுமந்த ன் சுறுசுறுப்பு ரசிக்கத்தக்கது. பரிசு என்கிற பெயரில் 200 ருபாய் டாக் டைம்! honest program, dedicated anchor.

  ReplyDelete
 4. //மகிழ்ச்சி பாட்டை பாடும் போது அதன் சோக வெர்ஷனை அவர் பாடுற மாதிர்யிருக்கு !// mmm.... paavam!

  ReplyDelete
 5. அறிவாளி வேடம் போடுபவர்களில் முதலிடம் கோபிநாத்திற்கு தரலாம். எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக அதிபுத்திசாலி வேடம் போடுவதில் கோபிநாத்திற்கு நிகர் கோபிநாத் தான்.

  ReplyDelete
 6. //கணவன் - மனைவி சண்டை முடிவது எங்கு தெரியுமா ? சரி வேணாம் விடுங்க .. நிறைய சின்ன பசங்க நம்ம ப்ளாக் படிக்குறாங்க //

  ரொம்ப நாள் கழிச்சு வாசிக்கலாம்னு வந்தா, Aடாகூடமான பதிவா இருக்கே :-)

  ReplyDelete
 7. சுமந்த் சி.ராமனின் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நானும் பார்த்து இருக்கிறேன்! சில சமயம் சரவணன் மீனாட்சி பார்ப்பது உண்டு. உங்களைப்போலவே எனக்கும் சந்தேகம்தான் புருசன் -மனைவி சண்டை இத்தனை நாள் தொடருமா என்று? மற்றபடி நீயா- நானா ரொம்ப நேரம் அறுப்பதால் பார்ப்பது இல்லை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. பிரேம் : ஹீ ஹீ

  வாங்க ராஜி. அதிசயமா கொஞ்சம் டிவி பார்த்தீங்க போல

  கார்த்திக்::டாக்டர் சுமந்த பற்றிய தகவலுக்கு மிக நன்றி

  வாங்க மாதவி ; ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க

  தமிழ் நேசன் : தங்கள் கருத்தை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி

  ஆஹா : ரகு: ரசித்தேன்

  சுரேஷ் : நன்றி சார்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...