Monday, May 16, 2016

மிக வித்யாசமான தேர்தல் 2016 : ஒரு பார்வை

1980 முதல் தமிழக தேர்தலை கவனித்து வருகிறேன்.. 1980 ல் ஆரம்ப பள்ளியில் படித்தபோது - நினைவு தெரிந்து நடந்த முதல்  தேர்தல் துவங்கி இன்று வரை ஏராள தேர்தல்கள் பார்த்திருந்தாலும் இம்முறை நடக்கும் தேர்தல் மிக மிக வித்யாசமான முறையில் இருக்கிறது... காரணங்கள்....1. எந்த சுவர்களிலும் வேட்பாளர் பெயர் - சின்னம் வரையப்படாமல் நடந்த முதல் தேர்தல் .. கொஞ்சம் கொஞ்சமாக இது குறைந்து வந்தது எனினும் இம்முறை சுத்தமாக எங்கும் பெயர்- சின்னம் வரையப்பட வில்லை.. குறைந்த பட்சம் சென்னையில் இப்படியாக தான் இருக்கிறது நிலைமை..

2. வீடுகளுக்க்கு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தரும் பிட் நோட்டிஸ் கூட இம்முறை தரப்படவில்லை; இதனால் நமது தொகுதியில் யார் வேட்பாளர் என்பதே தெரியாமல் போய் விட்டது.

ஒரு நாளைக்கு முன்பு தேர்தல் கமிஷன் வெப் சைட்டை திறந்து தான் இம்முறை யார் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அவர்கள் என்ன படித்துள்ளனர், எவ்வளவு சொத்து என்கிற விபரமும் அறிய முடிகிறது.

இதில் தி.மு.க, அ.தி. மு. க - 2 கட்சிகளுக்கு தான் பெரும் நலன் கிடைக்கும். அவை தான் மக்களிடம் நன்கு எஸ்டாப்ளிஷ்  ஆன கட்சிகள்.. வேட்பாளர்- அவர்தம் கட்சி விபரங்கள் தெரியாத நிலையில் - ஏற்கனவே நன்கு பிரபலமான இந்த 2 கட்சிகளுக்கு தான் மிக அதிக ஓட்டுகள் சென்று சேரும்..

சுவர் விளம்பரம் மற்றும் பிட் நோட்டிஸ் தடுப்பது பல நல்ல விளைவுகளை தந்தாலும், எல்லாரும் தேர்தல் கமிஷன் வெப் சைட்டை பார்த்து என்னென்ன வேட்பாளர் என தெரிந்து கொள்ள முடியாதே !! நம் நாட்டில் இணையத்தை பயன் படுத்துவோரே மிக குறைவு தான்...

http://myneta.info/

இந்த வெப் சைட் சென்று தமிழ் நாடு தேர்ந்தெடுத்து பின் உங்கள் மாவட்டம் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் தெரியும். அதில் உங்கள் தொகுதியை க்ளிக் செய்தால் - உங்கள் தொகுதி வேட்பாளர்கள் - பெயர்- கட்சி- அவர்கள் பின்னணி- படிப்பு மற்றும் சொத்து விபரம் தெரிய வரும்.

3. உண்மையில் கட்சிகளின் உழைப்பை விட மிக அதிகம் உழைத்து தேர்தல் கமிஷனும் - அவர்கள் டீமும் தான். வாய்ப்பிருந்தால் அவர்களுக்கே கூட வாக்களிக்கலாம் :) அவ்வளவு அற்புதமான உழைப்பு.. 100% வாக்கு பதிவு என்ற கடினமான இலக்குடன் - பால் கவர் துவங்கி, டிவி - ரேடியோ விளம்பரங்கள் என பல்வேறு விதத்தில் அவர்கள் வாக்களிக்க சொன்ன விதம் அருமை !!

4. ஜெ, கலைஞர், ஸ்டாலின், விஜய் காந்த் என்ற தலைவர்களை வைத்து கட்சிகள் ஆங்காங்கு மீட்டிங் போட்டதுடன் சரி.. அதற்கு வந்த கூட்டம் அனைத்தும் "கூட்டி வரப்பட்ட" கூட்டமே. எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அரை கிலோ மீட்டர் தள்ளி ஏராள வாகனங்கள் - மீட்டிங்  முடிந்ததும் - அவர்கள் அனைவரும் வந்து கூட்டம் கூட்டமாக அந்த லாரிகளில் ஏறி சென்றனர்.. அடுத்த நாள் வேறு மீட்டிங்.. வேறு கூட்டம்..

  5. வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் கமிஷன் முடிந்தவரை முடக்க பார்த்தது. முழுமையாய் தடை செய்ய முடிய வில்லை என்பது தான் உண்மை. ஆயினும் வழக்கமான அளவு பண புழக்கம் இல்லை என்றும் ,தேர்தல் கமிஷன் நடவடிக்கை தான் காரணம் என்றும் பல நண்பர்களும் கூறினர்..

**************
தேர்தல் நாளான இன்று - நள்ளிரவில் சென்னையில் மழை பெய்தமையால் காலை வெய்யில் சற்று குறைவாய் இருந்தது.
மடிப்பாக்கத்தில் காலை 7.15 மணிக்கு வாக்கு பதிவு 

நானும் மனைவியும் காலை 7.15க்கெல்லாம் வாக்களிக்க சென்று விட்டோம். அப்போதே மிக நல்ல கூட்டம்.
நம்ம வீட்டம்மணி எனக்கு முன்பாக வாக்களிக்கிறார் 

எவ்வளவு கூட்டம் இருப்பினும் 5 முதல் 15 நிமிடத்திற்குள் வாக்களித்து விடலாம்..

வாக்களிக்கும் முன்...

இம்முறை வாக்காளர் சீட்டு  ( பூத் ஸ்லிப்) கூட கட்சிகள் தர அனுமதியில்லை; தேர்தல் ஆணையம் தான் அணைத்து வீடுகளிலும் தந்துள்ளது. அந்த பூத் ஸ்லிப்  உங்கள் வீட்டுக்கு வந்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை; அந்த சீட்டுடன் - வாக்காளர் அடையாள அட்டை, டிரைவின் லைசன்ஸ், ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் போன்ற எந்த அடையாள அட்டையை எடுத்து சென்றும் வாக்களித்து விடலாம்,,

பூத் ஸ்லிப்  உங்கள் இல்லத்திற்கு/ உங்கள் கைக்கு வராத பட்சம்.. 

உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் வாக்கு சாவடிக்கு அவசியம் செல்லுங்கள். அங்கு குறிப்பிட்ட பள்ளி/ கல்லூரிக்கு முன்பே ஏராள வாலண்டியர்கள் வாக்காளர் விபரங்களுடன் அமர்ந்துள்ளனர். அதில் உங்களது வாக்காளர் எண் என்ன - பூத் எண் எது என தெரிந்து கொள்ளுங்கள். இப்படி பூத் நம்பர் மற்றும் வாக்காளர் வரிசை எண் - இரண்டும் தெரிந்தாலே - வாக்காளர் சீட்டு இல்லா விடினும் தாரளமாக வாக்களிக்கலாம்..

வாக்களிப்போரில் பாதி பேர் தான் பூத் ஸ்லிப் வைத்துள்ளனர்.மீதம் உள்ளோர் வாக்கு சாவடிக்கு சென்று தான்  வாக்காளர் எண் & பூத் எண் எது என தெரிந்து கொண்டு - வாக்களிக்கிறார்கள். எனவே பூத் ஸ்லிப் இல்லாவிடினும் - உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் இருந்தால் நிச்சயம் வாக்களிக்கலாம்.

உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் உள்ளதா என அறிய இந்த ஸ்டெப்களை பயன்படுத்துங்கள்:அவசியம் வாக்களியுங்கள்... இந்த கறை நல்லது !

அண்மை பதிவு: 

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...