Saturday, May 7, 2016

வானவில்: தனி ஒருவன் - Captain பேச்சு - வோட்டுக்கு காசு

ஓட்டுக்கு காசு 

பரங்கிமலையிலிருந்து தினம் காலை 9.10க்கு பாரிஸ் கார்னர் (பீச் ஸ்டேஷன்) செல்கிறது ஒரு ரயில். ஆபிஸ் நேரம் - அந்த வழியில் பிற ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், இந்த ரயில்  பரங்கிமலையிலிருந்து துவங்குவதால் குறைவான கூட்டமே இருக்கும்.

அண்மையில் இதில் பயணம் செய்யும்போது ஏழெட்டு அலுவலக நண்பர்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு பயணித்தனர். தேர்தலில் அணிகள் பணம் தருவது பற்றி பேச்சு சுற்றி கொண்டிருந்தது

"எலக்ஷனுக்கு சரியா 2 நாள் முன்னாடி ரெண்டு கட்சி காரங்களும் பணம் கொண்டு வந்து தருவாங்க... "

" 2 பேர் கிட்டேயும் வாங்குவியா ?"

"ஆமா ; 2 பேர் கிட்டேயும் வாங்கிட்டு வேற ஆளுக்கு கூட போட்டிருக்கேன். யார் கேட்க முடியும் ?"

" எப்படிய்யா வந்து கொடுப்பாங்க ?"

" நைட்டு 9 மணிக்கு மேலே தான் வருவாங்க; ஏரியாவிலே முக்கியமான ஆள் வர மாட்டார்.. சாதாரண ஆள் வருவார்.. அவர் பணத்தை ஒழுங்கா கொடுக்குறாரான்னு பாக்க இன்னொரு ஆளை அனுப்புவாங்க "

"ப்ச் .. எங்க எரியாவுக்கெல்லாம் வந்ததே இல்லைப்பா"

" எந்த ஏரியாவுலே கொடுக்குறதுன்னு பாத்து தான் கொடுப்பாங்க. கொஞ்சம் காசு உள்ள ஆளுங்கன்னா அந்த ஏரியாவுக்கு வர மாட்டாங்க. மாட்டி விட்டுடுவாங்கன்னு ஒரு காரணம்.. ரெண்டாவது ஒட்டு போட வருவாங்களான்னும் தெரியாது; அதான் "

"என்னமோ போ.. காசு வாங்குறது ரைட்டுங்குறே ?"

" அவங்க கிட்டே இருக்கு .. குடுக்குறாங்க; நான் வாங்கிக்குறேன் ; அவ்ளோ தான் "

ஐ. பி. எல் கார்னர் 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் இல்லாத ஐ. பி. எல்- தமிழகத்தை பொறுத்தவரை ஆர்வம் இழக்க வைத்துவிட்டது..உண்மை தான்..

இருந்தாலும் மேட்ச் இண்டரெஸ்டிங் ஆக இருந்தால்  இரவு கொஞ்ச நேரமாவது மேட்ச் பார்த்து வருகிறேன். ..

குஜராத், கொல்கட்டா, டில்லி, மும்பை - நான்கும் செமி பைனல் செல்லவே வாய்ப்புகள் அதிகம். ஹைதராபாத் ஏதாவது ஒரு அணியை தள்ளி விட்டு உள்ளே நுழையலாம். மற்ற அணிகளுக்கு வாய்ப்பு மிக குறைவு..

இந்த ஐ. பி. எல் சேசிங் அணிகள் தான் பெரும்பாலும் ஜெயிக்கின்றன.. அதிலும் கடைசி பந்து வரை செல்லும் விறுவிறுப்பு ஆட்டமும் மிஸ்ஸிங்..

தோனி இருந்து புனே அணி சரியாய் ஆடாதது சற்று வருத்தம் தான். சின்ன தளபதி ரைனாவின் குஜராத் நன்கு ஆடுவதை பார்த்து ஆறுதல் பெற வேண்டியுள்ளது !

கேப்டன் பேச்சு 

இந்த தேர்தலின் ஹை லைட் கேப்டன் பேச்சு தான் ; கீழே உள்ள அவரது உன்னதமான பேச்சை இதுவரை எத்தனை முறை வாசித்து மகிழ்ந்திருப்பேன் என்று கணக்கே இல்லை. இவர் முதல்வர் ஆனால் - நாம் தினம் தினம் விழுந்து விழுந்து சிரித்து மகிழலாம்.. அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் !

கேப்டன் பேசியது இதோ:

நான் ஒரு சினிமாக்காரன். பயங்கர சண்டை போடுவேன். அதுவும் மதுரைக்காரன் !! பயங்கரமா கோபம் வரும். நான் ஒரு நாய் மாதிரி, சுத்தி நடக்குற விஷயங்களை கரெக்டா கண்டுபிடிப்பேன். என் வீட்டில் நாய் வளர்த்தேன். அது சிங்கம் மாதிரி படுக்கும், தூங்கும். அதை எனது மூத்தமகன் நல்லா வைத்துக்கொள்வான். தப்பு செஞ்சா தொண்டையை கடிச்சிடும். அந்த நாய் இறந்துவிட்டது. நான் நாய் குட்டிகளுக்கு ஜூலியர், சீசர் என்றுதான் பெயர் வைப்பேன். எனது மகன்கள் வேற பெயரை வச்சுடுவாங்க. இப்ப ஒரு நாய் வளர்க்கிறேன். அது பெயர் லக்கி. அது பாக்க நாய் மாதிரியும் இருக்கும், சிங்கம் மாதிரியும் இருக்கும். மக்களே நன்றி

"தேர்தல்  பிரச்சாரத்தில்" பேசியது; நன்றி: விகடன்

அழகு கார்னர் 

placeholder

ரேடியோ 

வீட்டில் சமையல் அல்லது பிற வேலைகள் பார்க்கும் போது ரேடியோ இன்றைக்கும் ஒரு துணையாக இருக்கிறது.. ஹவுஸ் பாஸ் - நான் இருவருக்கும் !

அண்மையில் சென்னை வானொலி விவித் பாரதியை சற்று காலையிலேயே கேட்ட போது - சில விஷயம் இன்னும் மாறாமல் இருப்பது தெரிந்தது..

நான் சின்ன வயதில் இருந்த போது விவித் பாரதியில் (மட்டும்) தினம் அன்று வெவ்வேறு நிகழ்ச்சியில் எந்தெந்த படங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்பாகும் என காலை 7.25 க்கு அறிவிப்பார்கள். 5 நிமிடமே வரும் இதனை தினமும் கேட்க மறக்க மாட்டோம் நாங்கள்.. எந்தெந்த நேரத்தில் நல்ல படத்தில் இருந்து பாடல்கள் வரும் என அறிந்து கொண்டு சரியாக அந்த நிகழ்சிகளை கேட்போம்..

இப்படி நாள் முழுதும் வெவ்வேறு நிகழ்ச்சியில் ஒலி பரப்பாகும் பாடல்கள் பட்டியலை சொல்லும்  வழக்கம் இன்னமும் தொடர்கிறது. காலை 6.55 க்கு விவித் பாரதியில் !

சில நிகழ்ச்சிகளின் பெயர்கள் கூட மாறவில்லை (ஜரோகா ! ஹிந்தி பாடல்கள் தொகுப்பு!) இந்த 5 நிமிடம் பாடல் வரிசையை கேட்கும் போது சின்ன வயது நினைவுகள் பல வந்து போனது..

கருத்து திணிப்பு 

கருத்து கணிப்புகள் மீது முழுவதும் நம்பிக்கை இழந்தது இந்த தேர்தலில் தான்.. ஆள் ஆளுக்கு இஷ்டத்துக்கு அடித்து விடுகிறார்கள். ஜர்நலிசத்தில் டெஸ்க் வொர்க் என ஒரு வகை உண்டு. உட்கார்ந்த இடத்தில் கட்டுரை எழுதுவது.. சில கருத்து கணிப்புகளும் அதே வகையில் எழுதப்பட்டுள்ளது வெளிப்படையாய் தெரிகிறது..

தினமலர் கருத்து கணிப்பு வெளியாக 2 நாள் முன்பு கலைஞர் இப்படி சொன்னார்: " நாங்கள் எந்த கருத்து கணிப்பையும் நம்ப வில்லை; தினமலர் கருத்து கணிப்பு ஒன்று தான் நியாயமான முறையில் நடத்தப்பட்டுள்ளது  என்று அறிகிறோம் "

அடேங்கப்பா.. கருத்து கணிப்பு வெளியாகும் முன்பே சரியாக கணிப்பது என்ன ஒரு சாதுரியம்  :) :)

தான் எந்த கட்சியை சார்ந்துள்ளோமோ  - அவர்களை சப்போர்ட் செய்தால் முடிந்தது கருத்து திணிப்பு. தினமலர்/ தினத் தந்தி இருவரும் செய்வது இதை தான் !!

தினத்தந்தி பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கும்;; தினமலர் மாற்றம் தான் ஆச்சரியாமான ஒன்று..

டிவி பக்கம்: தனி ஒருவன் 

அண்மையில் சன் டிவி யில் எந்த விசேஷமும் இல்லாமல் ஒரு ஞாயிறு மாலை - தனி ஒருவன் படம் !! நிச்சயம் பண்டிகை தினத்தில் ஒளிபரப்ப வேண்டிய விசேஷ படம்...

ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பு - முழுசும் உட்கார்ந்து பார்க்க வைத்தது..

இப்படத்தில் ஜெயம் ரவி - நயன்தாராவிடம் காதலை சொல்லும் அந்த சீன் - இயக்குனரின் புத்திசாலித்  தனதுக்கு ஒரு  சான்று.

படம் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த குட்டி சீனை ரசிப்பார். பார்க்காதோருக்கு முழுதும் புரிவது சற்று கடினமே !


அண்மை பதிவு: 


சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

24- தமிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி - சினிமா விமர்சனம்

2 comments:

  1. சுவையான தகவல்கள்! விவிதபாரதி கேட்டு மகிழ்ந்த காலங்கள் இனிமையானது! நன்றி!

    ReplyDelete
  2. http://www.thenewsminute.com/article/tn-polls-dinamalar-distances-itself-dinamalar-news-7s-west-tn-surveys-42655
    இதைப் படித்தீர்களா?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...