Saturday, May 21, 2016

வைகோ - ஒரு சீரியஸ் பார்வை + ஜாலி மீம்ஸ்

வை.கோபால்சாமி... இந்த பெயரை முதலில் நான் கேள்விபட்டது 80 களின் இறுதியில்.. திருச்சி சட்ட கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் - தி.மு.க மாநில மாநாடு நடந்தது. அதில் வைகோ உரையை கேட்கவே நண்பர்கள் பலரும் சென்றனர்.. கேட்டு விட்டு வந்து " என்ன பேச்சு..!!!! உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு" என புளகாங்கிதம் அடைந்தனர்..

ஈழ மக்களுக்காக கள்ள தோனியில் இலங்கை சென்றபோது " மனுஷ்னன்னா இவர் தான்யா மனுஷன். என்ன ஒரு தமிழ் உணர்வு... வாழ்க்கையையே ரிஸ்க் எடுத்து போயிருக்கார் பாரு.. " என பேசிக்கொண்டோம்..

அடுத்து வைகோ பற்றி முக்கிய பேச்சு வந்தது அவர் தி.மு. க  விட்டு வெளியே வந்த போது.. பொது வெளியில் வைக்கோவின் கண்ணீர் - அப்போது தான் பார்த்தேன்.. நெகிழ்வாக, வருத்தமாக இருந்தது.. தி.மு.க மீது சற்று கோபமாகவும்.. !



அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் அணி மாறி, மாறி -கூட்டணி அமைத்த போது கூட " அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" என்று தான் இருந்தேன்..

2002ல் பொடா சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் ஜெ அவரை சிறை வைத்த போது அவர் மீது பெரும் வெறுப்பு இருந்தது.. தேவையே இன்றி வைகோவை சிறை வைக்கிறார்கள் என்று..!

தி,முக விலிருந்து வெளியேறிய பின் தள்ளியே இருந்த கலைஞர் அவரை சிறையில் சில முறை சென்று சந்திக்கிறார்.. " கலைஞர் தான் என்றைக்கும் எனது அண்ணன்; இனி வாழ்நாளில் என்றைக்கும் அவரை எதிர்க்க மாட்டேன்" என்று உருகினார் வைகோ

சிறையை விட்டு வெளி வந்து 2006 தேர்தலில் அ.தி.மு.க வை எதிர்த்து தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.   தி.மு.க குறிப்பிட்ட சீட்டுகள் தர, அதை விட 2 சீட்டுகள் அதிகம் தருகிறார் என்று காரணம் காட்டி அ.தி.மு.க விடம் சேர்ந்தார் வைகோ.

வைகோ மீதிருந்த நம்பிக்கை சுத்தமாக எனக்கு தளர்ந்தது அந்த சந்தர்ப்பத்தில் தான் ! சற்று முன்பு வரை தன்னை  சிறை வைத்த / அந்த முறை மிக மோசமான ஆட்சி தந்த அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்கிறார்.. !! 2 சீட்டுக்காக கொள்கையை மாற்றி கொள்கிறார் எனில் உண்மையில் இவருக்கு கொள்கை என ஒன்றும் இல்லை; இவர் அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று நான் உணர்ந்த நாள் அது; அன்று முதல் இன்று வரை எனது அந்த நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் வைகோ

கடந்த 15 ஆண்டுகளில் சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என தெரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட தேவையில்லை; வைகோ எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணி தோற்கும்; அதற்கு எதிர் அணி ஜெயிக்கும். MGR க்கு பின் ஒவ்வொரு தேர்தலிலும் Anti incumbency அலை தான் அடித்து கொண்டிருந்தது. மேலும் தி.மு.க ஆளும் கட்சி என்றால் சிறு கட்சிகள் அனைத்தும் அதி.மு.க வுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும்; வெல்லும்; இதுவே அ .தி.மு.க  ஆளும் கட்சி என்றால் தி.மு.க வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து அந்த அணி வெற்றி கொள்ளும்..

ஆனால் இந்த அரசியல் காமன் சென்ஸ் சிறிதும் இன்றி ஒவ்வொரு முறையும் தோற்கும் அணியுடன் தான் கை கோர்ப்பார் வைகோ.

தங்கள் கட்சி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடாது என சென்ற முறை (2011) முடிவெடுத்ததெல்லாம் - அரசியல் தற்கொலைக்கு சமம், இம்முறை தி.மு.க வந்து விடக்கூடாது என தீவிரமாக இருந்தார் வைகோ. இதன் பின்னணியில் ஜெ இருந்தார் என பலரும் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறேன்.

தங்கள் அணிக்கு விஜய் காந்த் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது அவர் தி.முக பக்கம் சென்று விட கூடாது என்ற despareteness என்பது வெளிப்படை

சட்ட மன்ற தேர்தல் என வரும்போது ஆளும் கட்சி எப்படி ஆட்சி நடத்தியது,  அதில் உள்ள குறைகள் என்ன என்பது தான் எதிரில் நிற்கும் கட்சிக்கு முக்கிய பேசு பொருளாக இருக்கும்.இம்முறை வைகோ தி.முக மீது தான் மிக கடுமையான தாக்குதலில் இருந்தார். குறிப்பாக கலைஞரை சாதிய ரீதியில் பேசியது - 2006ல்  தன்னை சிறை வைத்த சுவடு மறையும் முன் அ தி.முக வுடன் கூட்டணி வைத்ததற்கு ஒப்பான தவறு..

நிற்க. வைகோவிற்கென்று எந்த ஒட்டு வங்கியும் இல்லை- வாழ் நாளில்  முதல்வர் ஆக போவதில்லை -அவர் 1 அல்லது 2 சதவீத ஓட்டுகளை கொண்ட ஒரு மிக சிறு கட்சியின் தலைவர்; அதை உணர்ந்து ஏதேனும் ஒரு பெரும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது மட்டுமே அவரது கட்சியை, தொண்டர்களை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைக்கும்..

******
சீரியஸ் டாபிக் முடிந்து ஜாலி பகுதிக்கு வருவோம்..

இம்முறை தேர்தலில் வென்ற ஜெ வை விட, தோற்ற கலைஞரை  விட - வைகோ பற்றி மீம்ஸ்கள் தான் மிக அதிகம்.. அவற்றில் சில மட்டும் இங்கு..


















தொடர்புடைய பதிவு

வானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை 

6 comments:

  1. அருமையான அலசல். தஞ்சாவூர் திண்ணை பேச்சு கேட்ட திருப்தி

    ReplyDelete
  2. You are articulating like a senior reporter. It's really awesome sir!! Keep on writing!!

    ReplyDelete
  3. இளையராஜா திருவாசகம் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய இசை உரை அற்புதமானது.அப்படிப்பட்ட மனிதர் இப்படி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  4. வைகோ 90களில் எனது விருப்பமான தலைவராக இருந்தார். அப்புறம் அவரது நடவடிக்கைகளால் அவரையே தாழ்த்திக் கொண்டுவிட்டார். இந்த முறை அவரது பேச்சுக்கள் பிதற்றல் ரகம்! மீம்ஸ் எல்லாம் ரொம்ப ஜோர்!

    ReplyDelete
  5. எங்கள் கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்திற்கு வைகோவைத்தான் புரவலராகப் போடலாம் என்று இருக்கிறோம். கையில நெறய காசு வச்சிருக்கார்ல.

    ReplyDelete
  6. உங்க பதிவை படிச்சு பார்த்தா
    அடுத்த தேர்தல் லே
    வை.கோ வுக்கு டிமாண்ட் எச்சகச்சம்
    ஆகிவிடும்.

    subbu thatha

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...