Tuesday, May 17, 2016

தொல்லைகாட்சி: அர்விந்த் சுவாமி- சரவணா விளம்பரம்- கிங்க்ஸ் ஆப் டான்ஸ்

தொல்லை காட்சி- நம் வீடுதிரும்பலில் முன்பு வாரா வாரம் திங்கள் வெளியாகும். நண்பர்கள் மிக அதிகம் வாசித்த ஒரு பகுதி இது..

தொடர்ந்து வெளியாகுமா அல்லது வானவில்லில் மட்டுமே சில பகுதிகள் வருமா என நிச்சயமாய் சொல்ல முடிய வில்லை..

இப்போதைக்கு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்.. தொல்லை காட்சி

டிவி கார்னர் : கிங்க்ஸ் ஆப் டான்ஸ்

விஜய் டிவி எப்போதும் ஒரு டான்ஸ் ஷோ நடத்தும். இதற்கு முன் டிவியில் நடிப்போரை வைத்தே மிக அதிக ஜோடி டான்ஸ் ஷோக்கள் நடத்தின. இம்முறை டான்ஸ் குழுக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி.. கிங்க்ஸ் ஆப் டான்ஸ் என்கிற பெயரில் வருகிறது.எல்லோரும் டான்சர்கள் என்பதால் - சில நடனங்கள் மிக அருமை !

நடுவர்களாக (அழகு) ப்ரியாமணி மற்றும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் . இந்த வாரம் நடிகை ராதா மறுவிஜயம்.

கொஞ்ச நாள் நமது பேவரைட் விஜய் டிவி ப்ரியா தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்; தற்சமயம் அவர் வருவதில்லை என்பது சோகமான விஷயம் :(

ராஜ் டிவி முதல்வன் விருதுகள்

ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் சில இடங்கள் வாங்கும் மாணவர்களுக்கு ராஜ் டிவி சென்னைக்கு அழைத்து விருது தந்து பாராட்டுகிறது. நம்ம ஸ்ரீநாத் கூட இப்படி விருது வாங்கியிருக்கிறார் !

இவ்வருடம் பரிசு வாங்க வந்த அனைவரையும் ராஜ் டிவி க்கு அழைத்து சென்று அங்கு நியூஸ் எப்படி தயார் ஆகிறது, எப்படி எடிட் ஆகிறது என முழுவதும் ஒரு நாள் காண்பித்துள்ளனர். டிவி சானல் உள்ளே சென்று பார்த்த excitement உடன் பேசினார் அந்த மாணவ, மாணவிகள்.

பெரும்பாலும் மொக்கை போட்டாலும் ராஜ் டிவி வருடா வருடம் செய்யும் நல்ல காரியம் இந்த முதல்வன் விருதுகள் !

நீயா நானா 

வர வர  நீயா நானா ரொம்பவும் களை இழந்து விட்டது. இந்த வாரம் பெரிய சைஸ் பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம்- அவர்கள் பெற்றோர் மறு பக்கம் என பேசினர்.

கோட் போடாமல் - சாதா சட்டை- பேண்ட்டில் கோபி  !!  அதுவே பார்ப்பது நீயா நானாவா என சந்தேகம் கொள்ள வைத்தது...

தொடர்ந்து வாரா வாரம் பார்ப்பதில்லை.. வைக்கிற சில நேரமும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.. நீயா நானா டீம் விழித்து கொண்டு - வேலை செய்வது நல்லது !

ஐ. பி. எல் கார்னர் 

RCB Vs குஜராத் லயன்ஸ் மேட்சில் டீ வில்லியர்ஸ் & கோலி உரித்து எடுத்தனர்.. பந்துக்கு பந்து 4, 6 என அடித்தது கண் கொள்ளா காட்சி. 20-20 என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். 14 மே அன்று நடந்த இந்த மேட்ச் ஹை லைட்ஸ் - குறிப்பாக RCB பேட்டிங் கீழே உள்ள லிங்க் மூலம் காணுங்கள்..

http://www.iplt20.com/videos/media/id/4893673025001/m44-rcb-vs-gl-match-highlights

இருப்பதிலேயே மட்டமான டீமாய் தோனியின் புனே மாறி போனது  வருத்தமே.குறிப்பாக நல்ல கிரவுண்டில் 138 ரன் எடுக்க முடியாமல் 4 ரன்னில் தோற்றார்கள்.. 4 நல்ல வீரர்கள் - இஞ்சுரியால்  இல்லாமல் போனது எல்லாம் இருக்கட்டும்.. அவர்கள் இருந்த போதும் கூட புனே சரியாக ஆட வில்லை என்பதே உண்மை.

கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு , டில்லி. மும்பை இவற்றில் 4 டீம் Play off செல்ல கூடும்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 

மீண்டும் விஜய் டிவி யில் துவங்குகிறது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி . இம்முறை நடத்துபவர் அரவிந்த் சாமி !  இளைஞர்கள், பெண்கள் இருவரையும் நிகழ்ச்சி பார்க்க வைக்க இவர் ஒரு மிகசரியான சாய்ஸ்  !தனியாய் HR payroll நிறுவனமும் நடத்திவரும் அர்விந்த் சுவாமிக்கு நிச்சயம் ஓரளவு பொது அறிவு இருக்கும் என்றும் நம்பலாம். மனிதர் ஜென்டில் ஆக நடந்து கொள்வது, மென்மையாக பேசுவது என நிச்சயம் கவருவார்..

சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் விளம்பரம் 

தமன்னா மற்றும் ஹன்ஷிகாவுடன் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் வரும் விளம்பரம் பற்றி கிண்டலடித்து ஏராளமானோர் எழுதி விட்டனர்... இன்னொரு பக்கம் உழைப்பால் உயர்ந்தவர் வருவது தப்பா?  அழகாய் இருப்பவர்கள் மட்டும் தான் நடிக்கணுமா என்று கொந்தளிக்கும் சமூக போராளிகள் இன்னொரு பக்கம் .. 

இதற்கு நடுவில் இந்த விளம்பரத்துக்கு தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விட்டது.. அண்மையில் கொரட்டூர் செல்லும்போது வார நாளின் மதிய பொழுதில்  - இந்த புது கடைக்கு வெளியே  மாபெரும் ட்ராபிக் ஜாம். உள்ளே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது... 

நிற்க. விளம்பரத்திற்கு மீண்டும் வருவோம்... எனது ஒரு ரூபாய் கருத்து: விளம்பரத்தில் இவர் தான் நடிக்கணும் என்றில்லை; ஆனால் கொஞ்சமாவது நடிக்க தெரியனும்; முக பாவம்???? ஹூம்.. நடிப்பில் பவர் ஸ்டார் வகையறா ஆளாக  இருக்கிறார் இந்த சரவணன்....

அந்த விளம்பரம் டிவி யில் வரும்போது தமன்னா, ஹன்ஷிகாவை விட நாம் அந்த ஆணை தான் அதிகம் கவனிக்கிறோம்.. இல்லையா??

****
அண்மை பதிவு: 

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

4 comments:

 1. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
 2. 2 - 4 வரிகளில் 'நச்'னு இருந்தன பதிவின் அம்சங்கள்!

  ReplyDelete
 3. அருமையான கருத்துக்கள். சூப்பர்

  ReplyDelete
 4. அருமையான கருத்துக்கள். சூப்பர்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...