Friday, May 6, 2016

ஆலப்புழா - எப்போது செல்லலாம்? எங்கு தங்கலாம்? FAQ

லப்புழா குறித்தான முந்தைய பதிவை அடுத்து - பல நண்பர்களும் எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் என பல கேள்விகளை மெயிலில் கேட்டனர்' ; எனவே இப்பதிவை கேள்வி - பதில் பாணியில் தந்துள்ளேன்

******************
முந்தைய பதிவுகள் :

ஆலப்புழா - படகு சவாரி ஸ்பெஷல் படங்கள்

ஆலப்புழா படகு சவாரி - பயண அனுபவம்

****************
ஆலப்புழா செல்ல சிறந்த நேரம் எது ?

ஆலப்புழா செல்ல - எல்லா மாதமும் ஓகே என்றாலும், மிக சரியான நேரம் நவம்பர், டிசம்பர் ஜனவரி மாதங்கள் தான். நாங்கள் சென்ற போது இருந்த கலங்கிய நீர் - சென்று கடலில் சேர்ந்து விட, மழை பெய்ததில் சேர்ந்த நல்ல நீர் அப்போது இங்கிருக்கும் ; மேலும் மழை முடிந்து கிளைமேட் கூட ரசிக்கும் படி இருக்கும்.

**********
கேரளாவில் நாம் 4 நாள் சுற்று பயணம் செய்கிறோம் - என்றால்- அதில் 1 நாள் இந்த படகு சவாரி செய்வோம்; அந்த 1 நாளைக்கு நாம் ஹோட்டலை காலி செய்யாமல் - அதற்கான வாடகையும் கொடுக்கணும்; படகுக்கான வாடகையும் கொடுக்கணும் ; இது இரட்டி செலவாச்சே ?


உண்மை தான்; இதை தவிர்க்க பலரும் - தங்கள் பயணத்தில் எடுத்தவுடன் - அதாவது ரயிலில் இறங்கியவுடன் நேராக படகு சவாரி செல்ல துவங்கி விடுவார்கள்; மூட்டை முடிச்சு ​+ முழு லக்கேஜுடன் படகில் ஏறி அங்கேயே குளித்து விட்டு பயணம் தொடர்வார்கள் அல்லது உங்கள் கேரள பயணத்தின் இறுதியில் - நீங்கள் தங்கிய ஹோட்டல் அரை காலி செய்து விட்டு ஹவுஸ் போட் வந்து விடலாம். அங்கிருந்து நேரே உங்கள் ரயில் பிடிக்கிற மாதிரி திட்டமிட்டு கொள்ள வேண்டும்

**********
ஒரு நாள் இரவு மட்டும் படகில் தங்குகிறோமே ; அப்போது படகு தொடர்ந்து இயங்கி / நகர்ந்து கொண்டிருக்குமா?

இல்லை; மாலை ஆறு மணியளவில் படகு நிறுத்தப்பட்டு விடும். பேக் வாட்டர்ஸ் பின்னணியில் ஒரு சின்ன கிராமத்தில் நமது படகும், போலவே இன்னும் பல படகுகளும் நிற்கும். மாலை 6 - 7 வெளிச்சம் இருக்கும் போதே ஒரு ரவுண்ட் கிராமத்தை சுற்றி வந்து விடுதல் நலம். பின் இரவு சாப்பாடு - நல்ல நட்பு வட்டம் இருந்தால் - போட்டில் மாலை அல்லது இரவு- உங்களுக்குள் சில விளையாட்டுகள் நடத்தி மகிழலாம்.

**********
படகில் பயணித்தவாறே சன்ரைஸ் அல்லது சன் செட் பார்க்க முடியுமா?

அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு; மாலை 6 மணிக்குள் படகை நிறுத்தி விடுவதால் - சன் செட் பார்க்க முடிவதில்லை ; காலை நாம் குளித்து , சாப்பிட்டு முடித்த பின் தான் படகை மீண்டும் இயக்குவார்கள்; அதற்குள் நிச்சயம் சன் ரைஸ் முடிந்திருக்கும்

சில படகு சவாரி இணைய தளங்கள் - சன்ரைஸ் & சன் செட் பார்த்து என்ஜாய் செய்யலாம் என விளம்பரம் செய்கின்றன; இது மார்கெட்டிங் ஜிம்மிக் தான். அப்படி விளம்பரம் செய்யும் ஆட்களிடம் கேட்டு உறுதி படுத்தி கொள்ளலாம்
**********
இந்த படகு சவாரியை "நான்வெஜ்" சாப்பிடும் ஆட்கள் தான் அதிகம் என்ஜாய் செய்வார்கள் என்பது உண்மையா?

என்னை பொறுத்த வரை இது முழுக்க, முழுக்க உண்மை; படகு சவாரியில் அந்த வித்யாச பின்னணிக்கு அடுத்து நம்மை பெரிதும் ஈர்ப்பது - அங்கு சாப்பிடும் சாப்பாடு !

நாங்கள் தங்கிய கிராமத்தில் கண் முன்னே - உயிர் மீன் பிடித்து ஒரு கிலோ நூறு ருபாய் என 2 கிலோ வாங்கினோம்; அங்கிருக்கும் ஒரு வயதான பெண்மணி அதை கிளீன் செய்ய வாங்கியது வெறும் 50 ரூபாய் ; 2 கிலோவிற்கும் அதிகமாக இருக்கும் மீன்களை அவ்வளவு அருமையாக - ஒண்ணரை மணி நேரம் செலவழித்து புளி போட்டு தேய்த்து சுத்தமாக தந்தார்

செல்லும் வழியில் ஒரு மீன் கடைக்கு படகுக்காரர்கள் கூட்டி சென்றனர்; அங்கு நம்ம ஊர் விலையில் மீன்,  நண்டு விற்கின்றனர். வேறு வழியின்றி அங்கு நண்டு வாங்கினோம். (கிராமத்தில் இப்படி அருமையான மீன் கிடைப்பது தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டோம்)இரவு சாப்பாடு - சிக்கன் குழம்பு; நண்டு மசாலா ; மீன் வறுவல் - இவை மூன்றும் 5 கிலோ இருக்கும் ; வெறும் 10 பேர் - இந்த 5 கிலோவையும் சாப்பிட்டு காலி செய்தோம். சப்பாத்தி, சாதம் போன்றவை இருந்தும் அதை - செகண்டரி ஆக்கி விட்டு- மெயின் கோர்ஸ் ஆக நான்வெஜில் புகுந்து விளாசினோம்; அவ்வளவு அருமையான சாப்பாடு ! அனைவரும் வெரி ஹாப்பி ! மறு நாள் யாருக்கும் எதுவும் வயிற்றுக்கு பிரச்சனை வரலை .. சிறுவர்கள் உட்பட !நமக்கு வேண்டிய மெனு முன்பே சொல்லி விட முடியுமா?

உங்கள் படகு சவாரிக்கு ஒரு நாள் முன்பு அவர்களுக்கு போன் செய்து - உங்களுக்கு வேண்டிய சமையலை பற்றி பேசலாம்; எத்தனை பேர் வர போகிறார்கள்; அதில் எத்தனை பேர் வெஜ் எவ்வளவு பேர் நான் வெஜ் போன்ற தகவல்கள் சொல்லலாம் ; மலையாள குண்டு அரிசி வேண்டாம்; தமிழக அரிசி வேண்டும் என்றால் சொல்லி விடலாம் (நாங்கள் அப்படி தான் சொல்லியிருந்தோம்) ; மீன் - தேங்காய் எண்ணையில் பொறிக்கலாமா, நல்ல எண்ணையில் தான் பொறிக்கனுமா என்கிற வரைக்கும் instructions - தரலாம். மேலும் பசங்களுக்கு போர் அடித்தால் பார்க்க - DVD Player வேண்டும்; ஆடியோ சிஸ்டம் வேண்டும்; மீன் பிடிக்க தூண்டில் வேண்டும் போன்றவை முன்பே சொன்னால் எடுத்து வைப்பார்கள் ; இவற்றிற்கு சார்ஜ் கிடையாது
***********
படகு சவாரிக்கு எவ்வளவு நாள் முன்பு புக்கிங் செய்யணும்?

சென்னை டு ஆலப்புழா தினமும் ஒரு ரயில் (Chennai - Alleppey Express/16041)- இரவு 8.45 க்கு சென்ட்ரலில் இருந்து செல்கிறது ; இதில் ரயில் டிக்கெட் போடுவது தான் முதலில் செய்ய வேண்டிய வேலை; செல்ல; திரும்ப - இரண்டிற்கும் ரயில் டிக்கெட் - ஒரு சில மாதங்கள் முன்பு புக்கிங் செய்வது அவசியம். மற்றபடி போட் புக்கிங் ஒரு வாரம் முன்பு செய்யலாம். ஆளப்புழாவில் 2000 படகுகள் இருப்பதால் படகிற்கு தட்டுப்பாடு இல்லை; சில நேரம் ரொம்ப நெருக்கத்தில் நீங்கள் - 4 அல்லது 5 படுக்கை உள்ள படகு கேட்டால் - குறிப்பிட்ட நிறுவனத்திடம் அது ஏற்கனவே புக் ஆகியிருக்கலாம் ; எனில் வேறு நிறுவனத்தை தொடர்பு கொள்ளனும்

**********
ஒரு நாள் போல படகில் இருக்கிறோமே.. மொத்தம் எவ்வளவு தூரம் பயணம் செய்வோம்?

கேட்க சற்று காமெடியாய் தான் இருக்கும்; மொத்தம் - 20 அல்லது 30 கிலோ மீட்டர் தான் பயணிப்போம். 15 கிலோ மீட்டர் போல சென்று விட்டு அதே 15 கிலோ மீட்டர் திரும்ப வருவோம் அவ்வளவு தான்

இந்த பேக் வாட்டர் - ஆலப்புழா முதல் கோட்டயம் வரை நீள்கிறது ; இதன் மொத்த நீளம் - 22 கிலோ மீட்டர். பெரும்பாலான படகுகள் - ஆலப்புழா முதல் குமரக்கோம் வரை மட்டுமே பயணிக்கிறது
**********
கப்பலில் பயணிக்கையில் - வரும் சிக்நெஸ் போல் இதில் வர வாய்ப்புண்டா ?

நிச்சயம் இல்லை; பயணிக்கும் தூரமே குறைவு; மேலும் ஓரிரு மணி நேரத்துக்கு ஒரு முறை ப்ரேக் விடுகிறார்கள்; படகை நிறுத்தி இறங்கி நடந்து விட்டு வருகிறோம்
*********
படகில் விபத்து என அவ்வப்போது கேள்விப்படுகிறோமே ?
ஆம் ரெண்டு வகை ரிஸ்க் இருக்கிறது ஒன்று - அசம்பாவிதமாய் படகு கவிழ்ந்து - சிலர் இறப்பது. அடுத்து இரவு நேரம் படகுகள் வரிசையாய் நிறுத்தி விட்டு தூங்கும் நேரம் - தீ விபத்து நடந்து அது மற்ற இடங்களுக்கும் பரவி ஓரிரு முறை விபத்து நிகழ்ந்துள்ளது

கார் அல்லது பஸ்-சில் செல்லும்போது நடக்கும் விபத்து போல் தான் இதுவும் ! லைப் ஜாக்கெட் போன்றவை உள்ளதா அவை சரியாக வேலை செய்கிறதா என்று வேண்டுமானால் கேட்கலாம் ; வேறு ஏதும் நாம் செய்ய முடியும் என தோணலை !
**********
இந்த படகுகளுக்கு எப்படி புக் செய்வது?

சென்னையில் உள்ள கேரளா டூரிசம் மூலம் நாங்கள் புக் செய்தோம்; அரசு அங்கீகரித்த போட் ஆப்பரேட்டரை அறிமுகம் செய்தனர்; பாதி பணம் இங்கேயே கட்டி விட்டோம். ஆனால் இப்படி இன்னொரு ஆள் மூலம் செல்லும்போது சற்று விலை அதிகமாக வாய்ப்பு உண்டு ; போனில் இரண்டு அல்லது மூன்று நிறுவனத்திடம் பேசி - பார்கயின் செய்தால் நிச்சயம் நல்ல ரேட் கிடைக்கும்

1. நாங்கள் சென்ற நிறுவனம்: http://www.cheravallyhouseboats.com/

தொலைபேசி :
94468 55869
94471 37104
94465 37146

2. நண்பர் ஸ்கூல்பையன் சென்றது : http://www.lakeslagoons.com/

3. பதிவர் கிரி தந்த நிறுவன தகவல்கள்:

Angel Queen Travels

Mobile: +91 98475 04216
Mail ID: angelqueentours@yahoo.com
http://www.angelqueencruise.com

ஒரே ஒரு தனி குடும்பம் சென்றால் - கணவன் - மனைவி- 2 குழந்தைகள் ஒரு நாள் படகு சவாரி + 3 வேளை சாப்பாட்டுக்கு 10,000 போல் வாங்குவார்கள். குடும்பங்கள் அதிகம் சேரும்போது விலை கணிசமாய் குறைய வாய்ப்புண்டு. காரணம் படகு ஒன்றே; படகில் வேலை செய்வோரும் அதே அளவே !

*********
ஆலப்புழா தவிர நாங்கள் கொச்சின் மற்றும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி சென்று வந்தோம்.

ஆலப்புழா பற்றி வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில்
கேளுங்கள் !

18 comments:

 1. அண்ணா.. கேள்வி பதில் ஸ்டைலில் பதிவிட்டது அருமை... அப்படியே நம்ம தளத்துக்கும்இணைப்பு கொடுத் ததற்கும் மிக்க நன்றி... மிகப்பெரிய போட்டொகிராபரான நீங்கள் எடுத்த பல புகைப்படங்களைப் பார்க்க ஆவல்... எப்போது வெளியிடுவீர்கள்?

  ReplyDelete
 2. நன்றி ஸ்கூல் பையன்

  முதல் பதிவில் படங்கள் நிறைய போட்டு விட்டேன் ; குடும்ப உறுப்பினர் படங்கள் நிறைய எடுத்தாலும் அவை இங்கு பகிர்வதில்லை

  ReplyDelete
 3. நல்ல பயனுள்ள பதிவு..தொலைப்பேசி எண்களை குறித்து கொண்டேன்.

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள தகவல்கள்..

  ReplyDelete
 5. பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 6. ஆஹா, அருமையான தகவல்கள்.....இன்னும் இரண்டு வாரத்தில் அங்கு செல்ல இருக்கிறேன் !! நன்றி மோகன் ஜி......தெளிவான விவரங்களுக்கு நன்றி !

  ReplyDelete
 7. நீங்கள் எழுதிய பயண கட்டுரை அருமை. உங்கள் ப்ளாக் முதல் தடவை படிக்கிறேன். ரொம்ப நன்றாக உள்ளது

  ReplyDelete
 8. Anonymous3:11:00 PM

  மிக அருமை. ஆலப்புழைக்கு போவது என் நெடுநாள் கனவு. அடுத்த முறை இந்தியா வரும்போது போய்விட வேண்டியது தான். :)

  ReplyDelete
 9. அருமையான இடம் காணக்கிடைத்தால் மகிழ்வேன். தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. ஆலப்புழா போக திட்டம் இருக்கிறது,பயனுள்ள தகவல்கள்,நன்றி

  ReplyDelete
 11. நல்ல தகவல்கள் மோகன். பயன்படும்!

  ReplyDelete
 12. கொச்சியில் இருக்கும் எனக்கும் தங்களது பதிவு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
  தாங்கள் கொச்சி வந்தால் எனக்கு ஒரு மெயில் தாருங்கள் என்னால் முடிந்த உதவியை நானும் செய்யக் காத்திருக்கிறேன்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 13. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  தேவதாஸ் சார்: மிக்க நன்றி. அடுத்த முறை கொச்சின் வந்தால் தங்களை தொடர்பு கொள்கிறேன்

  ReplyDelete
 14. Super Information. Thanks a LOT!

  ReplyDelete
 15. cut and paste from previous post..???

  ReplyDelete
 16. Planning to travel next week
  Very informative
  Thanks ji

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...