Saturday, August 3, 2013

பதிவர் திருவிழா - இன்னா நடக்க போகுது நைனா - சில கோரிக்கைகள் !

கொஞ்ச நாட்களாக சற்று போர் அடிக்கிற மாதிரி தோன்றிய பதிவுலகம் மீண்டும் பர பரப்பாகியிருக்கிறது

ஒரே நேரத்தில் 3 தொடர் பதிவுகள் சென்று கொண்டிருக்கின்றன -

கணினி - முதல் அனுபவம்
முதல் பதிவு தந்த மகிழ்ச்சி
தியேட்டரில் காதல் அனுபவம்

...இப்படி பலரும் தொடர் பதிவு எழுதுகிறார்கள்.

இதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று - சென்னையில் செப் 1- நடக்க இருக்கும் பதிவர் திருவிழா என்று தோன்றுகிறதுவிழாவுக்கு இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் 100 க்கும் மேற்பட்ட பதிவர்கள் இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்து விட்டனர். இம்முறை 200 க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என்பது நிச்சயம் ! (இது சென்ற முறையை விட 50 % அதிகம் !)

பதிவர் சந்திப்பு குறித்து சில கோரிக்கைகள் உங்கள் முன்பு வைக்கிறோம்

1. வருகையை உறுதி செய்க !

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

- ஆரூர் மூனா செந்தில்
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்

2. விழா சிறக்க தங்களின் பங்களிப்பு .... நன்கொடை வடிவில் :

இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

3. பதிவர்கள் நூல் வெளியிடலாம் !

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படும் என்பதால் விரைவில் உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

(கோவை நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது உறுதியாகியிருக்கிறது; இன்னும் சில "பிரபல பதிவர்களின்" புத்தகங்கள் வெளி வர போகிறது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. விபரங்கள் விரைவில்.... )

4. பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி


ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

***********
நண்பர்களே ... செப் 1, 2013 - உங்கள் ஒவ்வொருவருக்கும் பல புதிய நட்புகள் கிடைக்க போகிற நாள் - வாருங்கள் ! காத்திருக்கிறோம் !

14 comments:

 1. உங்களைச் சந்தித்து ஓராண்டு ஆகிவிட்டதா ?
  நாட்கள்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது

  ReplyDelete
 2. கலக்கிடலாம்!!

  ReplyDelete
 3. வெளியூர் பதிவர்களை வரவேற்று பேனர் அடிக்கும் பொறுப்பு உங்களுடையதாமே!!! நம்பள மறந்துடாதீங்க சார்.

  ReplyDelete
 4. அசத்திடலாம் மோகன் சார்

  ReplyDelete
 5. இந்த வருட பதிவர் திருவிழா கலக்கப் போறது நிச்சயம் ...காரணம் ,நானும் கலந்துக்கப் போறேனே !
  http://jokkaali.blogspot.com/

  ReplyDelete
 6. அன்பின் மோகன் குமார் - சென்றா ஆண்டு கலந்து கொண்டு மகிழ்ந்தது இன்றும் பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கிறது - அவ்வப்போது அசை போட்டு ஆனந்திக்கும் மலரும் நினைவுகள் - இவ்வாண்டு அயலகத்தில் இருப்பதனால் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம் - சந்திப்பு சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. சிறப்பான பகிர்வு..

  ReplyDelete
 8. சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.....

  ReplyDelete
 9. we are there in abroad we cannot come directly still we want to take part in this directly. you guys can think do something for this like skype and all

  ReplyDelete
 10. எப்போது எல்லோரையும் சந்திக்க போகிறோம் என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்......

  ReplyDelete
 11. விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  ரமணி சார்: ஆம் ஓராண்டுக்கு பின் மீண்டும் உங்களை சந்திக்க போகிறேன்

  புது மாப்ளே கோகுல்: பணம் மட்டும் குடுங்க பிளக்ஸ் போர்டே வச்சிடலாம் :)

  பகவான்ஜி : வாங்க நண்பரே சந்திப்போம்

  ReplyDelete
 13. சுரேஷ் குமார்: உங்களை சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன். என்று வருகிறீர்கள்? விழா அன்று தானா? முதல் நாளே வருகிறீர்களா ?

  கோவம் நல்லது: லைவ் ஆக நிகழ்ச்சிசென்ற வருடமே உலகில் இருந்த அனைத்து நண்பர்களும் பார்த்தனர் இந்த முறையும் அதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம்

  சீனா ஐயா : அடுத்த வருடம் நீங்கள் இருக்கும்போது கலக்குவோம் ; இந்த வருடம் தங்களின் ஆசிகள் விழா நன்கு நடக்க உதவும்

  மதுமதி, ராஜி, சவுந்தர் அமைதி சாரல் வெங்கட் நாகராஜ் : நன்றி நண்பர்களே

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...