Wednesday, August 28, 2013

வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை !

" வ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு புத்தகம் எழுதும் அளவு செய்தி இருக்கிறது " தலைவர் சுஜாதா இதனை ஒரு முறை Quote செய்திருந்தார்.

இவ்வரிகளின் உண்மையை நண்பன் லட்சுமணன் மறைவுக்கு பின் - அவனது கவிதை தொகுப்பை வெளியிட்ட போது முழுமையாக உணர்ந்தேன். அப்போதே "வாழ்நாளில் நாமும் ஒரு புத்தகம் வெளியிடணும் " என்ற எண்ணம் மிக ஆழமாக பதிந்து விட்டது.

ப்ளாக் எழுத துவங்கி- பல புத்தக வெளியீடுகள் பார்த்த பின் ஒரு புத்தகம் எழுதலாம் என நம்பிக்கை வந்தது. 2010 ல் எழுத துவங்கி - 10 பாகம் வரை வெளியாகி - மிக அதிக பாராட்டு பெற்ற - வாங்க முன்னேறி பார்க்கலாம் தான் - இப்போது வெற்றிக்கோடாக அகவொளி பதிப்பக வெளியீடாக வருகிறது


அவ்வப்போது மனைவியிடம் " வாழ்நாளில்  ஒரு புக் வெளியிட்டு விடுவேன் ; ஒருவேளை நான் வெளியிடா விட்டால் - என்னோட புக்கை நண்பர்கள் மூலம் நீ ரிலீஸ் பண்ணிடு " என சொல்லி கொண்டிருப்பேன்.

நிற்க . மனைவி இப்ப சொல்றார் - " அப்பாடா ! புத்தகம் வெளியிடுற வேலை எனக்கு இல்லை.  " :)) (அவர்களின் கவலையே கவலை !)

புத்தகம் குறித்த சில சுவாரஸ்யங்கள் இங்கு -
**********
சுய முன்னேற்ற புத்தகம் என்றும் இதனை கொள்ளலாம்; மோகன் குமார் என்பவனின் சிறு ஆட்டோ பயோகிராபி என்றும் சொல்லலாம்.

ஒவ்வொரு மனிதனும் முன்னேற பல்வேறு குணங்கள் தேவைப்படுகிறது. சில குணங்கள் / பழக்கங்கள் நம்மை முன்னேற்றும். வேறு சிலவோ - பரம பத - பாம்பு போல நம்மை கீழிழுக்கும்

இப்படி பாசிடிவ் மற்றும் நெகடிவ் குணங்கள் புத்தகத்தில் மாறி மாறி பயணிக்கிறது .
***
சற்றே பெரிய சைசில் (டம்மி சைஸ்) 104 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை - 80 ரூபாய். வரும் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு மட்டும் ரூ. 50 என்கிற விலைக்கு புத்தகம் கிடைக்கும்.

104 பக்கங்கள் உள்ள டம்மி சைஸ் புத்தகம் - 100 ரூபாய் போடலாம் என்று சில நண்பர்கள் சொன்ன போதும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலை குறைக்கப்பட்டது.

குறிப்பாக முதல் 2 நாளுக்கு விலை 50 ரூபாய் என்பது நிச்சயம் ஒரு செமையான ஆபர். தயவு செய்து இதை தவற விடாதீர்கள்.
***
புத்தகத்துக்கான வாழ்த்துரை வழங்கியவர் பல சுய முன்னேற்ற நூல்கள் எழுதிய திரு. சோம வள்ளியப்பன். ஒரே நாளில் புத்தகத்தை படித்து விட்டு, நான் மெயில் அனுப்பிய 24 மணி நேரத்துக்குள் மிக அழகான முன்னுரை எழுதி தந்தார் (அந்த வாழ்த்துரை மட்டும் முடிந்தால் தனி பதிவாக பின்னர் பகிர்கிறேன் )
***

சுகுமார் சுவாமிநாதன் - நம் ரசனைக்கேற்ப அழகாக படம் வரைந்தார். பல முறை சின்ன சின்ன மாறுதல் சொன்ன போதும் சிறிதும் மனம் கோணாமல் வரைந்த தம்பி சுகுமார் இந்த துறையில் அடைய போகும் உயரங்கள் மிக அதிகம் என்பது நிச்சயம் தெரிகிறது !
***

புத்தகத்தின் பதிப்பாளர் நம் நண்பராகவும் இருப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை ! அதுவும் அகநாழிகை வாசு போல ஒரு மென்மையான மனிதர் இப்புத்தகம் வெளியிடுவது மிக மகிழ்ச்சியாக .உள்ளது. ( மணிஜி உங்களின் பங்களிப்பையும் மறக்க முடியாது !)

ஒற்று பிழைகளை சரி செய்யவே அகநாழிகை வாசுவிற்கு " தாவு " தீர்ந்து விட்டது. கணினியில் எழுதுவதால் ஏராள பிழைகள் வருகிறது. தனது புதிய கடை திறப்பு விழா நடுவிலும் மிக பொறுப்புடனும், பொறுமையுடனும் இதை செய்த தோழர் அகநாழிகை வாசுவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
***
மிக குறைவான நேரத்தில் இதை புத்தகமாக அச்சிட்டு உதவும் பாலகணேஷ் - இந்த விழாவில் வெளியாகும் 3 புத்தகங்களின் அச்சு வேலையும் இவர் பொறுப்பே. அண்ணன் இருக்கிறார் என்பதால் - புத்தகம் எப்போது பிரிண்ட் ஆகும் - சரியான நேரத்தில் வந்து சேருமா போன்ற கவலைகள் இன்றி ஹாயாக இருக்கிறேன்
***
புத்தகத்தை வெளியிடுவது கேபிள் சங்கர். முதல் பிரதி பெற்று கொள்வோர் - ஜாக்கி சேகர் மற்றும் திருமதி. பத்மஜா நாராயணன்

இந்த தொடர் முதன்முதலில் வீடுதிரும்பலில் வரும்போதே - " இது புத்தகமாக போடணும் தலைவரே; சூப்பர் கான்செப்ட்டா இருக்கு ; எல்லாரும் அவர் பெரிய ஆள் ஆனார் - இவர் பெரிய ஆள் ஆனார்னு சொல்லுவாங்க - நீங்க உங்க கதையை சொல்றீங்க பாருங்க - அங்கே தான் இந்த புக்கு நிக்கும் " என்பார். சொன்னதோடு மட்டுமல்லாது அப்போதே அகநாழிகை வாசுவிடம் " இதை புக்கா போடுங்க " என பரிந்துரைத்து விட்டார். அப்படி அவர் சொன்னது கூட வாசு சொல்லித்தான் எனக்கு தெரியும் ! கேபிள் யூ ஆர் கிரேட் !

இந்த புத்தகத்துக்கான விதையை முதலில் தூவிய கேபிள் சங்கர் இப்புத்தகத்தை வெளியிடுவது எத்தனை பொருத்தம் ! இன்று அவர் ஒரு இயக்குனராக மாறியபோதும் - எளிமை மாறாமல் - " தலைவரே - இந்த புக்கு ரிலீசுக்கு எங்கே இருந்தாலும் வந்துடுவேன் " என்று சொல்லி மகிழ வைத்தார்.
***

"கேபிள் சங்கர் வெளியிட ஜாக்கி சேகர் பெற்று கொள்கிறார்" என்பது கேட்கவே அழகாக இருக்கிறது !

ஜாக்கி - மனதில் உள்ளதை அப்படியே எழுதுவதில் வித்தகர். Straight from heart -பேச்சு மற்றும் எழுத்து இவருடையது

ஸ்நேஹமான , எந்த ஒப்பனையுமில்லா எழுத்துக்கு சொந்தக்காரரான ஜாக்கி - மிக எளிய எழுத்தை கொண்ட - இப்புத்தகத்தை பெற்று கொள்கிறார்.
***

பத்மஜா நாராயணன் - கவிஞர் - அனைவரிடமும் மிக ஸ்நேகமானவர். குடும்பம் , வேலை, குழந்தைகள் என அனைத்தையும் பார்த்து கொண்டு - தனது ரசனைக்கும் நேரம் ஒதுக்கும், சென்னையில் நடக்கும் எந்த ஒரு விழாவையும் தவற விடாமல் கலந்து கொள்ளும் இவரை எப்போதும் ஆச்சரியமாக பார்ப்பேன். ஜாக்கியுடன் முதல் பிரதியை பெற்று கொள்பவர் இவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி !

(இவரது பேரை பரிந்துரைத்த - " இதழில் எழுதிய கவிதைகள்" தொகுப்பை இதே நாளில் வெளியிடும் தம்பி சங்கவிக்கு மனமார்ந்த நன்றி! புத்தகத்தை பலரிடம் சென்று சேர்க்க சங்கவி எடுக்கும் முயற்சிகள் அசத்தல் ரகம் !   )
***

வெற்றிக்கோடு புத்தகம் - முதல் 10 பகுதிகள் மட்டும் தான் ப்ளாகில் வந்தது. அப்போது கிடைத்த வரவேற்பை பார்த்து விட்டு " முழுக்க எழுதிட்டா எல்லாரும் இங்கேயே படிச்சு முடிச்சுடுவாங்க " என மீதத்தை ப்ளாகில் வெளியிடாமல் வைத்து விட்டேன் :))

முதல் 10 பகுதிகள் ப்ளாகில் வாசித்த நண்பர்கள் மீதம் பகுதிகள் புத்தகத்தில் தான் வாசிக்கணும் !
***

முக்கிய விஷயம்: ஒவ்வொரு பதிவரும் மிக விரும்பும் விஷயம் பின்னூட்டம் தான் ! சுவாரஸ்ய பின்னூட்டங்கள் தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்புத்தகத்தின் பகுதிகள் வீடுதிரும்பலில் வெளியான போது நண்பர்கள் இட்ட பல பின்னூட்டங்கள் - அவர்களின் பெயர் மற்றும் வலைத்தள முகவரியுடன் புத்தகத்தின் இறுதியில் வெளியாகிறது ! உங்கள் பெயரும் - வலைத்தளமும் கூட அதில் இருக்கலாம் ! புத்தகத்தில் கண்டு மகிழுங்கள் !
***

புத்தகத்தை இலவசமாய் பெற்றால் - அதன் மதிப்பு தெரியாது - இலவசமாய் வந்த புத்தகத்தை பலர் படிக்காமலும் போகலாம். எனவே முதல் இரு நாட்களில் 50 ரூபாய் மட்டும் தந்து புத்தகம் வாங்கி வாசியுங்கள் ! உங்கள் நண்பனின் வேண்டுகோள் இது !
***

செப் 1 - ஞாயிறு மதியம் 3 மணிக்கு புத்தக வெளியீடும் - அதற்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அகநாழிகை புத்தக கடையில் நூல் குறித்த விமர்சன கூட்டமும் நடை பெற உள்ளது. இந்த இரு இடங்களிலும் புத்தகம் 50 ரூபாய்க்கு கிடைக்கும்.
நூல் விமர்சன கூட்டம் மற்றும் புத்தக வெளியீடு இரண்டு நிகழ்வுக்குமோ, அல்லது குறைந்தது ஒரு நிகழ்வுக்கேனும் நீங்கள் வரவேண்டும் என்பது உங்கள் நண்பனின் எதிர்பார்ப்பு !
***

பதிவர் திருவிழாவில் புத்தகம் வெளியாகும் விபரங்கள்

தேதி & நேரம் - செப் 1, 2013 ஞாயிறு மாலை 3 மணிக்கு !

முகவரி -

இசை கலைஞர்கள் சங்கம்
கமலா தியேட்டர் அருகில்
வடபழனி, சென்னை

அவசியம் விழாவிற்கு வருக; திரும்ப செல்லும்போது கையில் இப்புத்தகத்தையும், நெஞ்சில் விழா குறித்து ஏராள நினைவுகளையும் எடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்..
****
புத்தகத்தின் அட்டை மற்றும் விழா அழைப்பிதழ் இரண்டையும் முக நூல் மற்றும் கூகிள் பிளஸ்சில் பகிர, இரு இடங்களிலும் நண்பர்கள் தரும் உற்சாக வரவேற்பு நான் கனவிலும் நினைக்காத ஒன்று !

எவ்வளவு நண்பர்கள் ! எத்தனை அன்பு !

ஒரு நண்பனின் துயரத்தில் பங்கேற்க, ஆறுதல் சொல்ல எத்தனையோ பேர் கிடைக்கலாம் ஆனால் ஒரு நண்பனின் சிறு முன்னேற்றத்தை கண்டு ஆனந்தம் அடையும் நண்பர்கள் கிடைக்கப் பெற்றோர் பாக்கியவான்கள்

நான் பாக்கியவான் !

57 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் சார் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி ees ; இப்ப எந்த ஊர்? சென்னையா? எனில் சனி, ஞாயிறு இரண்டு நாளில் ஏதேனும் ஒரு நாள் வர முயலவும் ; சந்திப்போம்

   Delete
 3. இந்த புத்தகத்துக்கான விதையை முதலில் தூவிய கேபிள் சங்கருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தங்கள் சாதனைகளில் மற்றுமொரு மைல்கல்
  சாதனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி + நன்றி ரமணி சார் ; நேரில் சந்திப்போம்

   Delete
 5. வாழ்த்துகள் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிச்சைக்காரன்; சென்னை தானே நண்பரே? பதிவர் விழாவுக்கு வர முயலுங்கள்

   Delete
 6. அன்பின் மோகன் குமார் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா

   Delete
 7. Anonymous10:43:00 AM

  வாழ்த்துக்கள்! நீங்கள் உண்மையிலேயே பாக்கியவான்தான் :-)

  ReplyDelete
  Replies
  1. பின்னே ? உங்களை போன்றோரை நண்பராக பெற்ற நான் பாக்கியசாலி தானே பாலஹனுமான்?

   Delete
 8. வெற்றிக்கோடு வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க எழில்; நன்றி

   Delete
 9. சிகரம் தொட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி ஜோதிஜி; விழாவில் சந்திப்போம்

   Delete
 10. வாழ்த்துகள் சார் :)
  //அவசியம் விழாவிற்கு வருக; திரும்ப செல்லும்போது கையில் இப்புத்தகத்தையும், நெஞ்சில் விழா குறித்து ஏராள நினைவுகளையும் எடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்.// விழாவிற்காகவும், தங்களின் புத்தகத்திற்கும் காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அடடா ! ரொம்ப சந்தோசம். விழாவில் நிச்சயம் சந்திப்போம்

   Delete
 11. வாழ்த்துகள் மோகன்.

  முதல் புத்தகம் வெளியிடும் நாள் முக்கியமான நாள். அன்று நடக்கும் ஒவ்வொன்றையும் அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? ரொம்ப நன்றி லக்கி. புத்தக வெளியீடு மட்டும் 10 அல்லது 15 நிமிடம் தான் முடிந்தால் சிறு வீடியோவாக எடுக்க முயல்கிறேன் ; பின்னர் பார்த்து ரசிக்கவும் பயன்படும்

   நீங்கள் விழாவுக்கு வரக்கூடும் என்று நண்பர்கள் சிலர் கூறினர் ; சனி & ஞாயிறு இரு நாளும் அவசியம் வர முயலுங்கள் ! இணைய கருத்து வேறுபாடுகள் பற்றி சீனியர் என்ற முறையில் தாங்கள் என்னை விட நன்கு அறிவீர்கள். அவை மிக எளிதில் காணாமல் போகும் தானே ! ஞாயிறு விழாவிற்கு நீங்களும் அதிஷாவும் அவசியம் வரவும்.

   Delete
 12. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. சகோ புக்கு குறைந்தது 10 வாங்கிட்டு போகணும். ரைட்டா?

   Delete
 14. கேக்கவே சந்தோஷமா இருக்குங்க... புத்தக வெளியீடும் அதன் விற்பனையும் சிறப்புற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. Replies
  1. வாங்க யோகேஷ். நன்றி

   Delete
 16. மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. இப்புத்தகம் பற்றி அவ்வப்போது நினைவூட்டி கொண்டே இருந்த தங்களின் பங்களிப்பிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன் அக்கா !

   Delete
 17. புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அமைதி சாரல் நன்றி

   Delete
 18. புத்தக வெளியீட்டுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மோகன் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன் சார்; சனியன்றும் ஞாயிறன்றும் சந்திப்போம்

   Delete
 19. வாழ்த்துக்கள் நண்பரே.... ஆன்லைனில் கிடைக்குமா எம் போன்ற வெளிநாட்டு வாசகர்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆன்லைனில் நிச்சயம் கிடைக்கும் ஒரு வாசகன். விரைவில் அது பற்றிய தகவல்கள் பகிர்வோம்

   Delete
 20. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் நண்பரே! எனக்கொரு பிரதி எடுத்து வையுங்கள் வாங்கிக் கொள்கிறேன்! விழாவிற்கு வர முடியுமா என்று தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ? சென்னை தானே நண்பரே ? நீங்கள் வருவீர்கள் என்று நினைத்தோம்.

   Delete
 22. வாழ்த்துகள் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருகபூபதி

   Delete
 23. வாழ்த்துக்கள் மோகன்!
  நேரிலும் வாழ்த்த வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆசி நேரில் கிடைப்பதில் பெரும் மகிழ்ச்சி அம்மா

   Delete
 24. Replies
  1. வாங்க ஹரி நன்றி

   Delete
 25. தங்களது முதல் படைப்பிற்கு வாழ்த்துக்கள் மோகன். வெற்றிக்கோடு தங்களுக்கும் அதைப் படிப்பவர்களக்கும் வாழ்வில் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தும். தங்களது எழுத்துப் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. ஒரு நண்பனின் சிறு முன்னேற்றத்தை கண்டு ஆனந்தம் அடையும் நண்பர்கள் கிடைக்கப் பெற்றோர் பாக்கியவான்கள்

  இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 27. congrage......mohan sir.........u r work must continue.......

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...