Saturday, August 24, 2013

சென்னையில் இன்று 2 முக்கிய விழா ..வாங்க பேசலாம் !

டந்த 2 வாரங்களாக எனது நாளின் பெரும்பாலான நேரத்தை எடுத்து கொண்டது கம்பனி சட்டம் குறித்து இன்று நடக்க உள்ள இந்த விழா தான்.


நிகழ்வில் ஒரு ஆர்கனைசர் என்பதுடன் - புதிய தலைப்பில் பேச வேண்டும் என்ற இரட்டை பொறுப்பு.  ஒழுங்காய்  தூங்கி  கொஞ்ச நாள் ஆச்சு.

எங்கள் குழுவின் உழைப்பிற்கு கிடைத்த மிக பெரும் வெற்றி...விழா துவங்க  4 நாளுக்கு முன்பே, 150 பேர் அமரும்  ஹால் முழுதும் புக் ஆகி விட்டது. அருகிலேயே உள்ள இன்னொரு ஹால் புக் செய்து - அங்கு லைவ் ரிலே செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.  தற்போதைய நிலவரப்படி இந்த ஹாலும் நிரம்பி விட்டது !

ஓரிரு ஆங்கில பத்திரிக்கைகளிலும் - தந்தி டிவி செய்திகளிலும் இந்த விழா குறிப்புகள் நாளை இடம்பெறும் !

**************

மாலை நடக்கும் விழா உங்களுக்கும் தொடர்புள்ள ஒன்று !

அகநாழிகை வாசு மற்றும் மணிஜி துவங்கும் புத்தக கடை திறப்பு விழா இன்று .. மனுஷ்ய புத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், பாஸ்கர் சக்தி ஆகியோர் பேசுகிறார்கள்

வாசு மற்றும் மணிஜி இருவருக்குமே நண்பர்கள் மிக அதிகம் . எனவே இன்று மாலை நீங்கள் அகநாழிகை பதிப்பகம் வந்தால் - புத்தகங்களை மட்டுமல்ல சென்னையின் ஏராள பதிவர்களையும்   ஒருங்கே பார்க்கலாம்.


அண்ணா சாலையில் சைதை  - பேருந்து நிலையம் மிக அருகில் உள்ளது இந்த புத்தக கடை !

மாலை அகநாழிகை விழாவில் சந்திப்போம் நண்பர்களே !

8 comments:

  1. இதோ வந்து விடுகிறேன்...!

    ReplyDelete
  2. தமிழச்சியும், பாஸ்கரும் எனக்கு பிடித்த எழுத்தாளார்கள். என்ன, தூரம் காரணமா என்னாலதான் கலந்துக்க முடியாது!!

    ReplyDelete
  3. வரணும்னுதான் ஆசைதான்... ஆனா ஆவடியிலருந்து வரணும்னா ஒரு ஊர் வழி போனா மாதிரி இருக்குமேன்னு யோசிக்கிறேன்:(

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  5. அன்பின் வாசு & மணி - விழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. Anonymous11:50:00 PM

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...