Monday, November 7, 2011

கமல் அசத்திய 10 படங்கள்: பிறந்த நாள் சிறப்பு பதிவு

கமலின் பிறந்த நாளை முன்னிட்டு இதோ ஓர் சிறப்பு (மீள்)பதிவு: 


***** 
களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர்,   1973  முதல் (அரங்கேற்றம்) -  இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமான காரியம் தான்.

இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை. 

1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்) 

கமலின் படங்களில் எனது All time favourite.  இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க,  உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக்.  

2. நாயகன்

கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC  ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே. 

படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார்.  நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது.  

3. அபூர்வ சகோதரர்கள்

ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி.  கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.

4. தேவர் மகன் 

இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல்  எந்த காட்சியும் இருக்காது.  சிவாஜி,  ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.

5. இந்தியன் 

இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது. 

6. 16 வயதினிலே 

கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!

ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல. 

7. மகா நதி 

நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது.  இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது. 

இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின. 

" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)

8. பேசும்  படம் 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே  பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம். 

அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்).  நீங்கள்  இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும்.   

9. தசாவதாரம் 

ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். 

10. அன்பே சிவம் 

இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்!  டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))

முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.

விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை : 

மைக்கேல்  மதன  காமராஜன் 
மூன்றாம் பிறை 
சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா) 
பஞ்சதந்திரம் 

கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்!  நன்றி !!

43 comments:

 1. அட நீங்களுமா படங்களைப் பற்றிய உங்கள் பார்வை அருமை
  உங்களுக்கும் எனக்கும் ஒரே ரசனை சாகர சங்கமத்தை வைத்துச் சொல்கிறேன் என் பதிவையும் நேரமிருந்தால் பாருங்கள்

  http://sridharshan.blogspot.com/2010/11/10-ii.html

  ReplyDelete
 2. பட்டியலிட்டிருக்கும் அத்தனை படங்களும் சிறப்பானவை. பிடித்த படம் என்றால் கருப்பு வெள்ளை காலத்தில் ‘நிழல் நிஜமாகிறது’, சமீபத்தியதில் ‘அன்பே சிவம்’:)!

  ReplyDelete
 3. லிஸ்டில் உள்ள அத்தனைப் படங்களும் பிடிக்கும்.

  ReplyDelete
 4. "கமல் -மாதவன்"

  நானா ? இல்லையே..

  ReplyDelete
 5. அன்பேசிவமும் அபூர்வராகங்களும் என்னுடைய ஆல் டைம் பேவரைட். ரசித்து படிக்கும்படியாக இருந்தது உங்களின் பதிவு.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 6. நன்றாக வரிசை படுத்தி இருக்கீங்க மோகன். கமலின் மறக்க முடியாத படங்களில் ஒன்று மகாநதி. எனக்கு குணாவும் பிடிக்கும்.

  ஒரு சிறிய குறிப்பு. மகாநதி படத்தில் தன் பெண்ணை கமல் கொல்கத்தாவின் “சோனா காச்சி” பகுதியில் இருந்து மீட்டு வருவார். மும்பாயிலிருந்து அல்ல. அதனால் தான் அந்த படத்தில் ஒரு பெங்காலி பாட்டு கூட இருக்கும்.

  ReplyDelete
 7. அருமை மோகன் ஜி,

  சொன்ன வாக்கை காப்பத்திறீங்க போல..

  எனக்கு மகாநதி ( சென்னை வாழ்க்கையின் மறுமுகம் காட்டப்பட்ட படம்)

  அன்பே சிவம்... ஒவ்வொரு பிரேமும் ரசித்த படம்.

  அந்த கடைசி காட்சி, சந்தானபாரதியை பார்த்து, நீ தான்யா கடவுள் வசனம்..

  எனக்கென்னமோ, கமலை தமிழ் திரையுலகம் கொண்டாடவில்லை.
  வருத்தம் தான் ..

  ReplyDelete
 8. மகிழ்ச்சி தர்ஷன். வாசிக்கிறேன்.
  ***
  ராமலக்ஷ்மி: நன்றி. உங்களுக்கு பிடித்த இரண்டு படங்களில் ஒன்று எனக்கும் பிடித்த படம் (அன்பே சிவம்)
  ***
  நன்றி ராகவன் சார்; ரசித்து வாசித்துள்ளீர்கள்.
  **
  நன்றி வெங்கட்; மாற்றி விடுகிறேன்
  **
  கேபிள்: சரியா சொன்னீங்க
  **
  நன்றி கலா நேசன்
  **
  மாதவன்: ஹா ஹாஹ் நன்றி
  **
  நன்றி கணேஷ்; ரசித்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். கமல் ஹிந்தியில் இருந்திருந்தால் இன்னும் அதிக உயரம் தொட்டிருக்கலாம்.
  **

  ReplyDelete
 9. என்னைப் பொறுத்தவரை தமிழக மக்கள் ஒரு கலைஞனை கலையையும் தாண்டி அவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்தே மதிப்பிடுகிறார்கள். அந்த வகையில் தனிப்பட்ட மனிதனாக கமல் மக்கள் புகழும்படி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. (குறிப்பாக நம்முடைய கலாசாரத்தை மீறி திருமணம் பற்றி அவரது பிதற்றல்கள்)

  ReplyDelete
 10. படத்தொகுப்பும் வரிசையும் அருமை!
  'நாயகன்' மிகவும் பாதித்த படமென்றாலும் ' சலங்கை ஒலி' தான் என்றுமே முதலிடம்!
  இன்னொரு மறக்க முடியாத படம் 'அபூர்வ ராகங்கள்'!

  ReplyDelete
 11. "Kuruthi punal" also a very good movie from Kamal!!

  ReplyDelete
 12. படம் பேர் நியாபகம் இல்லிங்க.. ஸ்ரீதேவி, மேஜர் சுந்தர்ராஜன், கமல் நடிச்சிருப்பாங்க.. அதுல கமலோட காஸ்ட்யூம் ஒரு ஹாப் டிரவுசர், பெரிய மீசை இவ்வ்ளவ்வுதான்.. அவர் அந்த படத்துல ஹீரோ மாதிரி கூட வரமாட்டாரு.. நடிப்புல பிரமாதப்படுதிருப்பார்.. இம்ம். அந்த மாதிரி நிரைய படம் இருக்கு சிலாகிக்க.. லிஸ்ட்ல இருக்கற படங்கள்ல தசாவாதாரம் எனக்கு மனசுல ஒட்டல.. ஏதோ பேன்ஸி டிரஸ் காம்பெடிஷன் மாதிரி இருக்கும்.. என்னய பொருத்த வரைக்கும் விருமாண்டி ஒரு முக்கியமான படம்.. நீங்க பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 13. எனக்கு எப்பவும் விருப்பமான படம் என்றால் நாயகன் தான். விருமாண்டியை மறந்தது ஏனோ???? கமலின் சகல படங்களும் மிகவும் பிடிக்கும் மஹாநதி மட்டும் பல தடவை பார்க்காத ஒரே ஒரு கமல்ப் படம். மனதைப் பிசையும் படம் என்பதால் மீண்டும் மீண்டும் பார்க்கமுடியவில்லை. வசூல்ராஜா, அபூர்வசகோதரர்கள், மைமகாராஜன், பஞ்சதந்திரம் பம்பல்கேசம்பந்தம், சதீ லீலாவதி எல்லாம் கிட்டத்தட்ட வசனங்கள் மனப்பாடமாகிய படங்கள்.

  பெயர் சொல்லவிரும்பாதவன் ஒழுக்கம் பற்றிக் கதைக்கின்றார். உலகத் தமிழர்களின் தலைவன் என தன்னை அழைத்த்துக்கொள்பவர் தமிழர் கலாச்சாரப்படியாகவா வாழ்கின்றார். நடிகனை நடிகனாப் பாருங்கள். கமலின் மனித நேயப் பணிகளை ஊக்கிவியுங்கள், அதை விட்டுவிட்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் எட்டிப்பார்க்கின்றீர்கள்.

  ReplyDelete
 14. //பெயர் சொல்லவிரும்பாதவன் ஒழுக்கம் பற்றிக் கதைக்கின்றார். உலகத் தமிழர்களின் தலைவன் என தன்னை அழைத்த்துக்கொள்பவர் தமிழர் கலாச்சாரப்படியாகவா வாழ்கின்றார். நடிகனை நடிகனாப் பாருங்கள். கமலின் மனித நேயப் பணிகளை ஊக்கிவியுங்கள், அதை விட்டுவிட்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் எட்டிப்பார்க்கின்றீர்கள்.
  //

  மன்னிக்க வேண்டும் வந்தியத் தேவன், பொதுவாகவே, தமிழக மக்கள் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்தே மதிப்பிடுகிறார்கள் என்றுதான் கூறினேன். அரசியல்வியாதிகளின் நிலை அப்படி அல்ல. கமல் மாபெரும் கலைஞன் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

  ReplyDelete
 15. நன்றி கணேஷ்; ரசித்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். கமல் ஹிந்தியில் இருந்திருந்தால் இன்னும் அதிக உயரம் தொட்டிருக்கலாம். ///

  உயரமாக என்ற ஒரு சொல் விட்டுப் போயிடிச்சு ஜி! :))

  ReplyDelete
 16. நல்ல தொகுப்பு என்னிடமும் இந்த லிஸ்ட் இருக்கின்றது. இந்த படங்களை நேரம் கிடைக்கும் போது விரிவாய் எழுதி சிலாகிக்கவேண்டும் என்பது என் ஆசை..

  ReplyDelete
 17. கமலின் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிடுவது சிரமம் என்பதை நாம் அறிவோம்.

  சிறப்பாக செய்துள்ளீர்கள்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 18. பெயர் சொல்ல: நன்றி
  ***
  மனோ மேடம்: மிக்க நன்றி; ராகவன் சார் கூட அபூர்வ ராகங்கள் சொல்லியிருக்கிறார்!
  **
  திரு: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  **
  ராமசாமி கண்ணன்: நல்ல பின்னூட்டம். குறிப்பாய் உங்களின் தசாவதாரம் பற்றிய கருத்தை ரசித்தேன்.
  **
  வந்திய தேவன்: கமலின் காமெடி படங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். மற்ற படி பெயர் சொல்ல clarify செய்து விட்டார். I normally want to stay away from controversy. Thanks

  ReplyDelete
 19. ஷங்கர்: :)) நன்றி
  **
  ஜாக்கி : அட உங்களின் ரசனையோடு இந்த லிஸ்ட் ஒத்து போகிறதா? மகிழ்ச்சி நன்றி
  **
  அமைதி அப்பா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. என்னடா மைக்கேல் மதன காமராஜனைக் காணோமேன்னு தட்டிக்கிட்டே வந்தேன்:))

  ReplyDelete
 21. எனக்கும் நீங்கள் குறிப்பிட்ட எல்லா படங்களும் பிடிக்கும். குணா - நான் பல முறை பார்த்தப் படம்

  ReplyDelete
 22. நல்ல பகிர்வு. எனக்கு பிடித்த படங்கள் என்றால் “அன்பே சிவம்” “மைக்கேல் மதன காமராஜன்” “பஞ்ச தந்திரம்” “வறுமையின் நிறம் சிவப்பு” இப்படி போய்க் கொண்டே இருக்கலாம்.

  ReplyDelete
 23. well written.hey ram is my most favourite of all times

  ReplyDelete
 24. அருமை....!.

  //ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல //

  16வயதினிலேக்கு எவ்வளவு மார்க் சார் விகடன் போட்டாங்க ??

  ReplyDelete
 25. நன்றி வித்யா
  **
  நன்றி பின்னோக்கி
  **
  கோவை டு தில்லி: நீங்கள் சொன்ன படங்கள் பல்வேறு காலங்களில் நானும் ரசித்தவையே
  **
  நன்றி டாக்டர் வடிவுக்கரசி.
  **
  நன்றி ஜமீல் ; விகடனில் 16 வயதினிலே வாங்கியது 67 மார்க் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 26. Anonymous5:15:00 PM

  சூப்பரான தொகுப்பு

  ReplyDelete
 27. நல்ல ரசனையுடன் வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றிலுமே கமலை ரசித்தவன் நான். இதில் விடுபட்ட படம் என நான் கருதுவது கல்யாணராமன் படம். அசடன் கேரக்டரில் வெளுத்துக் கட்டியிருப்பார்.

  ReplyDelete
 28. மேலே உள்ள கமலின் படங்கள் (photos) எந்த எந்த திரைப்படங்கள் என்று சொல்லுங்களேன்.... சிலவற்றை கண்டுபிடிப்பது கஷ்டமாக உள்ளது உதாரண்ம் ஐந்தாவது மற்றும் இந்தியன் தாத்தாவிற்க்கு இடப்புறம் உள்ளவை

  ReplyDelete
  Replies
  1. மைமகாரா, சாணக்யன்(ம), டெய்சி(ம)

   Delete
 29. இது நம்ம கமலான்னு ஆச்சரியமாய் பார்க்க வைத்த படம்......குறத்திமகன் படத்தில் கதாநாயகனின் தோழனாக [சோப்ளாங்கி மாதிரி]வந்து என்ன செய்வதென்று தெரியாமல் கையை இப்படிக்கட்டுவார் அப்படி முறுக்குவார்

  கிடைத்தால் பாருங்கள்

  ReplyDelete
 30. கமலின் படத்தில் என்னைக்கவர்ந்த படம் வாழ்வே மாயம் [அதுவும் இரண்டாம் பாதி]

  ReplyDelete
 31. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

  கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


  **** ஆதாமின்டே மகன் அபு *****


  மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப்படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. .

  அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை

  மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.

  இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை.

  மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"

  உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!

  ReplyDelete
 32. Anonymous1:23:00 PM

  நானும் கமல் ரசிகன்தான். வேட்டையாடு விளையாடு,சதிலீலாவதி போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.

  ReplyDelete
 33. குணா, ஹேராம், விருமாண்டியையும் சேர்திருக்களாம்

  ReplyDelete
 34. neelamana hair...andha still dhanae?deisi.. malayalam movie.. prathap phothan direction...

  ReplyDelete
 35. நம்ம வீட்டில் எல்லோருமே கமல் ரசிகர்கள்தான். உங்க பட்டியலில் இருக்கும் ஒரு படத்தை இன்னும் பார்க்கலை:( அந்த 'பேசும்படம்' கிடைக்கலை:(

  கமலின் நகைச்சுவைப் படங்கள் மகளுக்குப் பிடிக்கும். மைமகாரா ஒரு ஆயிரம் முறைகள் பார்த்திருப்பாள்:-)

  ReplyDelete
 36. 16 vayathinela padathukku Aanantha Vikadan le 74 mark pottange

  Murali
  Singapore

  ReplyDelete
 37. Actually... we can start the list today... n complete it by 7th Nov......... 2014. One movie per day....

  ReplyDelete
 38. குணா,விருமாண்டி,....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...