Monday, November 14, 2011

தமிழ் மணம்- Top 20 ப்ளாக் பட்டியல்.. சில கருத்துகள்


உங்களுக்கு என் செய்கை சிறு பிள்ளை தனமாய் தோன்றலாம். உங்களில் பலருக்கு இப்படி நடந்த போது நீங்கள் இவ்வாறு செய்யாமல் இருந்திருக்கலாம். எனக்கு எப்போ..........தோ ஒரு முறை நடப்பதால் இவ்வாறு செய்கிறேன். அனுமதியுங்கள்.

தமிழ் மணம் வாரா வாரம் சிறந்த 20 ப்ளாகுகள் லிஸ்ட் வெளியிடுவது அனைவரும் அறிந்ததே. அதில் இந்த வாரம் வீடு திரும்பல் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. யுடான்ஸ் வாய்ப்பாலும் தினம் ஒன்று அல்லது இரு பதிவுகள் வெளியிட்டமையாலும், உங்கள் அனைவரின் ஆதரவினாலும் இது நடந்துள்ளது. நன்றி நன்றி நன்றி !!

இந்த ஒரு வாரத்தில் கூகிளில் நம்மை புதிதாக தொடர்வோர் 12 பேர். இன்ட்லியில் புதிதாக 14 பேர் . (மக்கள் இப்போதெல்லாம் இன்ட்லியில் தொடர்வதை எளிதாக நினைக்கிறார்கள் போலும் ) கூகிளில் தொடர்வோர் முந்நூறை தாண்டியதும் இன்ட்லியில் தொடர்வோர் நூறை தாண்டியதும் இந்த வாரம் தான் !

தமிழ் மணம் ஸ்டாராக இருந்த போது அந்த வாரம், வீடு திரும்பல் நான்காம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த வருட பிப்ரவரியில் தான் !!

யுடான்ஸ் (ரொம்ப நாள் வரை உடான்ஸ்ன்னு நினைச்சிட்டிருந்தேன் !!) நட்சத்திர வார அனுபவம் பற்றி சுருக்கமாய் பகிர்ந்து கொண்டு முடிக்கிறேன்.
கேபிள் சங்கர் சிலவாரங்களுக்கு முன்பே தொடர்பு கொண்டு "யுடான்சில் ஒரு வாரம் ஸ்டாராக இருங்கள்" என்றார்.  "15 நாளில் போர்ட் மீட்டிங் இருப்பதால் அடுத்த இரு வாரம் விட்டு விடுங்கள். அப்புறம் பார்க்கலாம்" என்றேன். அதே போல் 15 நாள் கழித்து மீண்டும் பேசும் போது இந்த வாரத்தில் துவங்க முடிவானது.

7ஆம் அறிவு, வேலாயுதம் மற்றும் 11/11/11 பற்றிய பதிவுகள் மட்டுமே இந்த வாரத்தில் எழுதப்பட்டவை. மற்றவை எல்லாம் முழுமையாக முன்பே தயார் ஆனவை. எஸ். ரா பேட்டி மற்றும் எங்க ஊர் நீடாமங்கலம் பற்றிய பதிவு இந்த வாரத்தில் தான் வெளியிட வேண்டுமென திட்டமிட்டிருந்தேன்.

சினிமா பதிவுகளை தான் மக்கள் மிக அதிகம் விரும்பி வாசிக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது. படம் வெளியாகி ரெண்டு வாரம் கழித்து எழுதினாலும் 7ஆம் அறிவு மற்றும் வேலாயுதம் குறித்த பதிவுகள் தான் மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்டன. (முதலாவது 1000 + hits அடுத்தது 700+ hits so far!) நண்பன் தேவா கூட " சினிமா குறித்த பதிவுகளே டாப்-10ல் வருவது தவறான விஷயம் அல்லவா? " என ஒரு முறை வருத்தப்பட்டான். என்ன செய்வது? நம்மால் இதை மாற்ற முடியாது !

கமலின் சிறந்த 10 படங்கள் குறித்த பதிவு சென்ற வருடம் எழுதியதை மீண்டும் வெளியிட அதையும் மிக அதிகம் பேர் வாசித்தனர்.

இவற்றிற்கு அடுத்து அதிகம் வாசித்தது, சினிமா இல்லாமல் பிற பதிவுகளில் அதிகம் வாசித்தது எங்க ஊர் பதிவு என்பதில் மிக மகிழ்ச்சி.

வேளச்சேரி ஹோட்டல்கள் பற்றிய பதிவொன்றும், தென்னக ரயில்வே குறித்த பதிவொன்றும் முழுமையாக தயார் ஆனாலும் பிற பதிவுகள் வந்ததால் வெளி வர வில்லை. இந்த மாதத்தில் வெளியாகும்.

இந்த recognition ஒன்றை மட்டும் தெளிவாக புரிய வைக்கிறது. நிறைய பேரால் வாசிக்க பட வேண்டுமெனில், டாப் 20-ல் வர வேண்டுமெனில் தினம் பதிவு எழுத வேண்டும் ! அது தற்சமயம் உள்ள கடமைகளில் என்னால் முடியாத ஒன்று. என்றேனும் ஓர் நாள் (பதிவர் ராதா கிருஷ்ணன் சார் போல ரிட்டையர் ஆன பின்) தினம் பதிவு எழுதி வெளியிட கூடும் (யாரது அங்கே "அய்யோ" என கத்தியது?) அப்போது வாரா வாரம் டாப் 20-ல் நானும் இருப்பேன் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன் !

தொடர்ந்து வாசித்து ஊக்குவித்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் நல் வார்த்தைகளுக்கும் நன்றி !

கீழே உள்ள லிஸ்ட் என்றும் நினைவில் நான் திரும்பி பார்க்க இங்கு பதிவு செய்கிறேன். டாப் 20- ல் வந்த மற்ற பதிவர் நண்பர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் !






19 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் மோகன் குமார்.....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  4. என் வாழ்த்துக்களும் உங்களைச் சேரட்டும்

    ReplyDelete
  5. Very well deserved...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிய நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி. சினிமா பதிவுகளை அதிகம் பேர் வாசிப்பது பற்றி கவலை எனக்கு இருப்பதில்லை. சினிமா ஒன்றை விட்டால் தமிழர் வாழ்வில் entertainment என்பது அறவும் கிடையாது. கடந்த 50 வருடங்களில், நாம் மிகவும் serious ஆகிவிட்டோம். ஆடல் பாடல் என்பதெல்லாம் நம் வழக்கிலேயே இப்போது இல்லை. அது மாதிரி வார்த்தைகளையே கலாச்சார சீர்கேடு என்று நினைக்கிறோம். ஏதோ சினிமா பார்த்தாவது , சிரித்து விட்டு போகட்டுமே. அதற்கு மேல் செல்வது தான் பிரச்சனையே....star-politics பற்றி சொன்னேன்.

    ReplyDelete
  8. உங்க‌ளுக்கு 8 என்ப‌தே க‌ம்மிதான். நான் வாசிக்கும் ஒரு சில‌ ப‌திவுக‌ளில் ரொம்ப‌ டீச‌ன்ட்டான‌ ப‌திவு உங்க‌ளுடைய‌தும். வாழ்த்துக‌ள், அடிச்சு ஆடுங்க‌ :)

    ReplyDelete
  9. வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஏய், எல்லோரும் பாத்துக்கோங்க, நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்

    :-))

    ReplyDelete
  13. நண்பர்கள்

    ரத்னவேல் ஐயா
    வெங்கட் நாகராஜ்
    MR
    நிலாமதி
    பால ஹனுமான் (மகிழ்ச்சி நண்பரே)
    மனோ சுவாமி நாதன் மேடம்

    அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  14. Dr. வடிவுக்கரசி: மகிழ்ச்சி. சினிமா நல்ல ரிலாக்சேஷன் என்பது உண்மையே. படிக்கும் பசங்களுக்கு இருக்க கூடாது
    **
    மகிழ்ச்சி ரகு. ரொம்ப நாளாக இதை சொல்லி வருகிறீர்கள் ரொம்ப சந்தோஷம்
    **
    நன்றி விக்கியுலகம்
    **
    நன்றி ஸ்ரீராம்
    **
    நன்றி ஜனா சார்

    ReplyDelete
  15. அப்பாதுரை & சங்கவி நன்றி
    **
    கோபி: சரியா சொன்னீங்க. "நானும் ரவுடி தான்" பாணியில் எழுதிய பதிவு தான் இது :))

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. நன்றி ராமலட்சுமி & கலா நேசன் !

    ReplyDelete
  18. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...