Sunday, November 20, 2011

வானவில் -ஜாக்பாட் சிம்ரன்: Why this கொலை வெறி Di?


டிவி கார்னர்
ஜாக்பாட் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட சிம்ரனை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில வருடங்களில் இப்படியா மாறுவார்? தமிழை கடித்து துப்புகிறார் என்பதை கூட பொறுத்து கொள்ளலாம். கடைசி ரவுண்டில் குறிப்பிட்ட ஒரு நிமிடத்துக்குள் 5 கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி ஆகணும். இதற்கு சிம்ரன் எழுத்து கூட்டி, எழுத்து கூட்டி கேள்வி கேட்பதற்குள் பதில் செல்வோர் நேரமாகிறதே என டென்ஷன் ஆகி விடுகிறார்கள். மேலும் அவர் தமிழில் கேட்கும் கேள்வியும் தெளிவாக புரிவதில்லை. உண்மையில் இறுதி கட்டம் வருவோர் ஜாக்பாட் வெல்லாமல் போவதற்கு சிம்ரனும் நிச்சயம் ஒரு காரணமாக இருக்கிறார். (வேண்டுமானால் இன்றைய  நிகழ்ச்சியில் கேட்டு பாருங்கள் !)  பல வாரங்களாக இது தொடர்கிறது. சேனல் இதை உணர்ந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் தேவலை ! அட்லீஸ்ட் சிம்ரன் தமிழை மனதில் கொண்டு பதில் சொல்வதற்கான நேரத்தை அதிகமாக்கலாம் !


Why this கொலை வெறி?

சமீபத்தில் வெளி வந்த "3 " பட பாடலான "Why this கொலை வெறி di " செமையா இருக்கு ! முதல் முறை கேட்கும் போதே ஒரு பாட்டு பிடிப்பது ரொம்ப அரிதாக தான் நடக்கும். இது அப்படி ஒரு பாட்டு !!  கேட்கும் போது சிரிப்பு பீறிடுவதை தடுக்க முடியாது. போலவே ரெண்டாவது முறை கேட்கும் போது அருமையான பீட்டுக்கு, அமர்ந்திருந்தால் கூட கால்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றன.

வீடியோவில் பார்க்க 





ஆடியோ மட்டும் கேட்க 


Why This Kolaveri Di - Dhanush

Powered by mp3skull.com



நாட்டி கார்னர் 

முன்பு நாட்டி பற்றி ஒரு தனி பதிவு எழுதினேன் அல்லவா? அப்போது எடுத்த வீடியோவில் நாட்டியின் குரல் பதிவாகி இருக்கும். அந்த பதிவையோ, அல்லது கம்பியூட்டரில் அந்த வீடியோவையோ நாங்கள் பார்க்கும் போது நாட்டி கத்துகிற குரல் கேட்டு, அது ரொம்ப excite ஆகி விடும். வேறு ஏதோ கிளி வந்து விட்டது என தானும் "கீ. கீ" என கத்தும் ! வேக வேகமாக நடக்கும் ! கம்பியூட்டரில் இந்த ஒலி மிக மெல்லிதாக கேட்டாலும் நாட்டி உடனே கத்த ஆரம்பித்து விடும். நாம் பேசுவதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லாததால் "நாட்டிக்கு காது கேட்குதா இல்லையா?" என அவ்வபோது யாராவது முன்பு கமன்ட் அடிப்பதுண்டு. இந்த சம்பவத்திற்கு பின் காது கேட்கிறதா என்ற சந்தேகம் வருவதே இல்லை !

விலை வாசி ஏற்றமும் சாதாரண மனிதர்களும்

எங்கள் ஆபிசில் ஏராளமான அட்டென்டர்கள் மற்றும் டிரைவர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாக எப்போதும் பஸ் விலை உயர்வை குறித்தே பேசுகிறார்கள். வருவதற்கு இருபது ரூபாய், செல்ல இருபது ரூபாய் என ஒரு நாளைக்கு நாற்பது ருபாய் செலவானா, மாசம் ஆயிரம் ரூபாய் இதுக்கே போயிடுது. நாலாயிரம்/ ஐந்தாயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்துவது என்பது அவர்கள் கவலை.

பஸ் கட்டண விலை ஏறிய முதல் நாளே போதுமான பணம் இல்லை என, பாதி வழியில் இறக்கி விடப்பட்டவர்கள் ஏராளம் பேர் ! எங்கள் அலுவலகத்திலேயே குறைந்தது நான்கைந்து பேருக்கு இது நடந்துள்ளது ! ம்ம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை !

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்
If a cat crosses you when you are going somewhere it means ...........................................

the cat is going somewhere. Think positive.

விகடன் "வலை பாயுதே"வில் ரசித்த ட்விட்டர்

நேத்து கேட்ட பாட்டு இன்னிக்கு முழுக்க மண்டைக்குள் ஓடுறது ஒரு பிரச்சனைன்னா, அதோட ரெண்டாவது வரி எப்பவும் தெரிய மாட்டேங்குதுங்கறது அடுத்த பிரச்சனை !!

(இது எனக்கும் உண்டு. என்ன ஒண்ணு. எனக்கு எப்பவும் பாதி பாட்டு வரை மண்டைக்குள் ஓடும் !)

தமிழ் மணத்தில் மீண்டும்.. 

புகழையும் வெற்றியையும் போல மோசமான போதை வேறு ஏதும் இல்லை. ஒரு முறை அதை சுவைக்க துவங்கினால், மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இப்போ இது எதுக்கு என்கிறீர்களா?

சென்ற வாரம் யுடான்ஸ் ஸ்டார் என்பதால் ஒரு வாரம் முழுக்க பதிவுகள் போட்டேன். அதில் சில பதிவுகள் வெளியாகாமல் இருக்க, அவற்றை இந்த வாரம் வெளியிட்டேன். கூடவே ஒரு சில புது பதிவுகளும் !! இவ்வார தமிழ் மண டாப் 20-லும் இரண்டாவது வாரமாக வீடுதிரும்பல் வந்துள்ளது. ம்ம் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்ப்போம் !

தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்
RSS feed -

      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2011-11-20      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்



11 comments:

  1. // If a cat crosses you when you are going somewhere it means ................... //

    as simple as "it's going in a direction perpendicular to your way.."

    ReplyDelete
  2. நாம் பேசுவதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லாததால் "நாட்டிக்கு காது கேட்குதா இல்லையா?" என அவ்வபோது யாராவது முன்பு கமன்ட் அடிப்பதுண்டு. இந்த சம்பவத்திற்கு பின் காது கேட்கிறதா என்ற சந்தேகம் வருவதே இல்லை !

    மனுஷங்க கூட காரியச் செவிடா இருப்பதா சொல்வாங்க.. அதுவும் கத்துகிச்சோ என்னவோ

    ReplyDelete
  3. why this kolaveri... நேற்று இன்னோர் வலைப்பூவிலும் பார்த்தேன்... :)

    why this kolaveri?

    தமிழ்மணம்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. மாதவன்: கணக்கு புலின்னு நிருபிக்கிறீங்க :))
    **
    ரிஷபன் சார் : :))) நம்ம பேசுவது கிளிக்கு புரிவதில்லைன்னு நினைக்கிறேன். நாய் மாதிரி சொல்வதை செய்வதில்லை. கிளி வளர்ப்பது அழகுக்கும், அது செய்யும் சேட்டைக்கும் தான்
    **
    வெங்கட்: நன்றி இந்த பாட்டு செம ஹிட் ஆகும் பாருங்க

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //கேட்கும் போது சிரிப்பு பீறிடுவதை தடுக்க முடியாது//

    பாடல் பதிவை பார்க்கும் போதும் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    //why this kolaveri... நேற்று இன்னோர் வலைப்பூவிலும் பார்த்தேன்... :)

    why this kolaveri?//

    நண்பர் வெங்கட் நம்மை பற்றி தான் சொல்வது போல் தெரிகிறது...

    ReplyDelete
  7. //நேத்து கேட்ட பாட்டு இன்னிக்கு முழுக்க மண்டைக்குள் ஓடுறது ஒரு பிரச்சனைன்னா, அதோட ரெண்டாவது வரி எப்பவும் தெரிய மாட்டேங்குதுங்கறது அடுத்த பிரச்சனை //

    கூகுள் எல்லாம் எதுக்கு இருக்கு?

    ReplyDelete
  8. வாசகன்: பாட்டு தெரியாதது பிரச்சனை இல்லை. நீங்க சொன்னது போல் இணையம் மூலம் மீதி வரி கண்டு பிடிச்சிடலாம். ஏன் தான் தேவையில்லாம பாட்டு ஓடுதோ? எப்போ நிக்குமோ என்பது தான் பிரச்சனை :)))

    ReplyDelete
  9. //நாம் பேசுவதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லாததால்..//

    பெயருக்கேற்ற குறும்புடன் நாட்டி:)!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...