Sunday, November 13, 2011

வேலாயுதம் வெற்றிப் படமா?


வேலாயுதம் இந்த வார இறுதியில் தான் பார்க்க முடிந்தது. படம் குறித்து சுருக்கமான ஒரு பார்வை.

ரஜினி, விஜய் போன்றோருக்கு ஒரு ராசி உண்டு. அவர்கள் நடித்த படம் சுமாராக இருந்தாலே ஓரளவு ஓடி விடும். மிக மொக்கையாக இருந்தால் தான் (அதிசய பிறவி - ரஜினிக்கு, சுறா - விஜய்க்கு) அவை தோல்வி படமாகும். எனவே இவர்களிடம் எதிர்பார்ப்பது ஆவரேஜ் (மசாலா) படம் தான்.

விஜய் படங்களில் வேலாயுதம் - Above Average படம் என முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆசாத் பட தழுவல் என்றாலும் திரைக்கதை பெருமளவு சுவாரஸ்யமாக உள்ளது. படத்தின் முக்கிய ஆட்கள் பற்றி சற்று பார்ப்போம்.

விஜய்: : காவலனிலும் விஜயை நிச்சயம் ரசிக்க முடிந்தது. அடுத்து வேலாயுதம். இந்த வருடம் விஜய்க்கு நிச்சயம் நல்ல வருடமாக அமைந்து விட்டது. அடுத்து நண்பன், கெளதம் மேனன் படம் என அவருக்கு ஏறுமுகம் தான் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் விஜய்க்கு லட்டு மாதிரி கேரக்டர். காமெடி, டான்ஸ், சண்டை, எமோஷன் என tailor made ! நிச்சயம் அவரது ஸ்க்ரீன் presence அசத்துகிறது. எனக்கு ஒரே பயம் திருப்பாச்சி, வேலாயுதம் என தங்கச்சி செண்டிமெண்ட் படங்கள் நன்கு ஓடுகிறது என அவர் மீண்டும் இன்னொரு படம் இதே மாதிரி செய்ய கூடாதே என்பது தான். (முடியாதுடா சாமி!!)

ஹன்சிகா: சின்ன வயது குஷ்பூவை நிச்சயம் நினைவு படுத்துகிறார் ! ஆனால் நடிப்பு.. சுத்தமா வரலை. ஓரிரு சுற்று குண்டாக ஆனால் நமீதா ரேஞ்சுக்கு வரும் ஆபத்தும் உள்ளது.

ஜெனிலியா: வழக்கமாக அரை லூசு பாத்திரத்தில் வருவார். இம்முறை சற்று அறிவை உபயோகிக்கும் பாத்திரம். ஒண்ணரை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதோடு விஜயை ஒன் சைடா காதலிக்கிறார்.

சந்தானம்: சமீபத்தில் எனக்கு மிக பிடித்த காமெடியன். ஆனால் இந்த படத்தில் வழக்கமான அளவு சிரிப்பு வெடி இல்லை. அப்பாவை செருப்பால் அடிப்பது காமெடியா சந்தானம்? அப்புறம் "புர்" விடுவதை வைத்து சிரிக்க வைக்க முயல்கிறார். சிறுத்தை படம் மாதிரி கலக்கணும் பாஸ் !!

சரண்யா மோகன்: டிபிகல் தங்கச்சி. படம் முழுதும் சொல்லி கொள்கிற மாதிரி ஏதும் இல்லா விடினும், கடைசி காட்சியில் இவர் செய்யும் காரியம் இவரை நம் மனதில் இடம் பிடிக்க வைத்து விடுகிறது. (இவரும் விஜயும் சேர்ந்து செய்யும் லூட்டிகள் சந்தானம் காமெடியை விட நன்கு எடுபடுகிறது)

ஷாயாஜி ஷிண்டே: பாரதியாக நடித்தவர் வழக்கமா மோசமான அரசியல் வாதியா வருவார். (தூள் படத்தில் துவங்கியது). அதிசயமா இந்த படத்தில் போலிஸ் உயர் அதிகாரியா வர்றார். அதுவும் நல்ல போலிஸ்!! தீவிர வாதிகள் முஸ்லீம்கள் என்று காட்டுவதால் அதை பேலன்ஸ் செய்ய இவரும் முஸ்லீம் என இறப்பதற்கு அரை நிமிடம் முன் நமக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

ராகவ்: நஞ்சுபுரம் படத்தில் இப்போ தான் ஹீரோவா நடித்தவர் துக்குநியூண்டு கேரக்டரில் விஜயின் புகழ் பாடுபவராக வருகிறார். ஏன் ராகவ்?

இனி இசை மட்டும் இயக்கம் பற்றி..

விஜய் ஆண்டனி : எப்படி இவ்ளோ அருமையா பாட்டு போட்டார்னு தெரியலை. அதுவும் படத்தோடு சேர்த்து பார்க்கும் போது நல்லாவே இருக்கு. பல பாட்டுகள் திடீர்னு வராமல் அதுக்குன்னு ஒரு சூழல் .....அப்புறம் வருது. (காவலனில் கூட பாடல்கள் படத்தோடு இயைந்து வந்தது குறிப்பிட தக்கது)

இயக்குனர் ராஜா.
என்ன தான் இருந்தாலும் கதை, திரைக்கதை என இவர் தன் பெயர் போட்டது கொஞ்சம் ஓவர் தான்.

படத்தை மிக சுவாரஸ்யமாக கொண்டு சென்றது, தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லாதது, விஜய்க்கு ஏற்ற படம் செய்தது என பல விஷயங்களில் பாராட்டு பெறுகிறார். பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் அனைவரையும் திறமையாக கையாண்டுள்ளார்.

தங்கையை கொன்றவனை ஹீரோ கொல்லும் காட்சியில், தன் தங்கை எப்படி இறந்தாள் என்பதை நினைத்து நினைத்து பார்த்து, வில்லனை கொல்வது இது வரை தமிழ் சினிமா பார்க்காத "புதுமையான" காட்சி. :))) ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

மொத்தத்தில் : நிச்சயம் சுவாரஸ்யமான என்டர்டெயிநிங் படம்: Go for it !!

டிஸ்கி: இன்றுடன் உடான்ஸ் ஸ்டார் வாரம் முடிகிறது. !! வாரம் முழுதும் நண்பர்களின் ஆதரவுக்கு நன்றியும் அன்பும்...மோகன் குமார் 

12 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. தொடர்ந்து எழுதணும்னுதானே எழுதச் சொன்னோம்..இன்னும் எழுதுங்க.. நன்றி

  ReplyDelete
 3. கேபிள்: தினம் பதிவுகள் வந்ததால் அடுத்தடுத்தும் அப்படியே எதிர் பார்ப்பார்களே என்று தான் சொன்னேன். முன்பு போல அவ்வப்போது எழுதுவே செய்வேன். உடான்ஸ் வாய்ப்புக்கு நன்றி

  ReplyDelete
 4. //கொஞ்ச நாள் நம்ம ப்ளாகில் பதிவுகள் எதிர் பார்க்க வேண்டாம்!! ///

  ஏன்.... ?

  நல்ல விமர்சனம்....

  ReplyDelete
 5. உங்கள் விமர்சனம், படத்தை விட சுவாரசியமாக இருக்கிறது என்பதால், i am not going for velayudham!!

  ReplyDelete
 6. சிறப்பான நட்சத்திர வாரம். வாழ்த்துக்கள் மோகன் குமார்!

  ReplyDelete
 7. சிறப்பான நட்சத்திர வாரம். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. படத்தை கிண்டல் பண்ணி நிறைய எஸ் எம் எஸ் நீங்க படம் பார்க்கலாம்னு சொல்றீங்க.. பார்க்கலாம்..

  ReplyDelete
 9. >>எனக்கு ஒரே பயம் திருப்பாச்சி, வேலாயுதம் என தங்கச்சி செண்டிமெண்ட் படங்கள் நன்கு ஓடுகிறது என அவர் மீண்டும் இன்னொரு படம் இதே மாதிரி செய்ய கூடாதே என்பது தான். (முடியாதுடா சாமி!!)

  எனக்கும் அதே பயம்தான். கெளதம் மேனன் முன்பு ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது. விஜயுடன் படம் செய்ய அவருக்கு முதலில் வாய்ப்பு வந்த போது, விஜய் அவரிடம் சிவகாசி, திருப்பாச்சி படங்களின் DVD-க்களைக் கொடுத்து 'நாம் இதே போல் ஒரு படம் செய்யலாமா ?' என்று கேட்டாராம். கெளதம் மேனன் escape என்று ஓடி விட்டாராம். காலத்தின் கோலம்... அதே கெளதம் மேனன் விஜயுடன் இணைந்து இன்று ஒரு படம் பண்ணுகிறார்...

  ReplyDelete
 10. Anonymous11:12:00 AM

  சரண்யா போன்றவர்களை டிபிகல் 'சினிமா' தங்கச்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். டிபிகல் ரியல் தங்கச்சிகள் சினிமாவில் வருவது போல ஓவர் ஆக்டிங் செய்வதே இல்லை.

  ReplyDelete
 11. வெங்கட்: தினமும் இனி எழுத முடியாது என்று தான் சொல்ல நினைத்தேன் நன்றி
  **
  Dr . வடிவுக்கரசி : நன்றி
  **
  ராம லட்சுமி: மகிழ்ச்சி நன்றி
  **
  மாதவி : நன்றி
  **
  பால ஹனுமான்: தகவலுக்கு நன்றி. இந்த முறை கெளதம் பாணியில் தான் படம் இருக்கும் என நினைக்கிறேன்
  **
  நன்றி சிவகுமார் நீங்க சொல்வது சரி தான்

  ReplyDelete
 12. good review... thanks for sharing..vaalththukkal

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...