Tuesday, October 9, 2012

உணவகம் அறிமுகம்: செலிபிரேஷன்- வேளச்சேரி

வேளச்சேரியில் ஏற்கனவே "பபே " சாப்பாட்டுக்கு பெயர் போனது " பிளமிங்கோ ஹோட்டல்". இது பற்றி இங்கு ஏற்கனவே எழுதி உள்ளோம். இப்போது அதற்கு போட்டியாய்,  விஜயநகர் சிக்னல் நேர் எதிரே  செலிபிரேஷன் என்கிற இந்த கடை வந்துள்ளது.

வாசலில் பேருந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் நிற்பதால் காரில் வருவோர் அவற்றை தாண்டி வண்டியை உள்ளே எடுத்து செல்ல பிரம்ம பிரயத்தன படவேண்டும் ! பார்க்கிங் ஓரளவு இருக்கு. ஆனால் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருப்பதாலும் ஷேர் ஆட்டோக்கள் வழி விடாமல் நிற்பதாலும் இந்த பிரச்சனை !


வேளச்சேரியின் பல்வேறு இடங்களில் " 250 ரூபாய்க்கு நான் வெஜ் பபே" என போர்டு வைத்துள்ளனர். இங்கு கடை வெளியிலும் கடை பெயரை விட இந்த போர்டு தான் பெரிதாக ஈர்க்கிறது.

ஹோட்டலுக்குள் ஆம்பியன்ஸ் நன்றாக இருக்கிறது. ஹோட்டல் மாடியில் மூன்னூறு பேர் அமரும் படி மினி ஹால் தயாராகி வருகிறது.

சரி நாம் சாப்பாட்டுக்குள் செல்வோம்

நான் வெஜ் தான் மெயின். இவ்வளவு பணம் தந்து நான் வெஜ் ஒரு கை பார்க்கணும் என்று தான் மக்கள் வருகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாய் நானும், உடன் வந்த தேவாவும் புரட்டாசி என்பதால் நான் வெஜ் பக்கம் செல்ல வில்லை.

வெஜ் மெனு இப்படி இருந்தது

வெஜ் சூப்
கோபி மன்ஜூரியன்
பிந்தி மசாலா
புல்கா / குல்ச்சா
பீஸ் புலாவ்
ஜீரா தால்
சாதம்
வெஜ் கறி
தயிர் சாதம்

**

இதில் நாங்கள் ரொம்ப ரசித்து சாப்பிட்டது கோபி மன்ஜூரியன் மற்றும் பீஸ் புலாவ்.



கோபி மன்ஜூரியன் ஸ்பைசி ஆகவும் முறுகலாகவும் இருந்தது.

பீஸ் புலாவ் செம டேஸ்ட்டி ! வெஜ் கறியும் செம சுவை ! மெனுவில் காய்கறிகள் என்று தனியே ஏதும் இல்லாதது ஏமாற்றம்.

சூப் ஜஸ்ட் ஆவரேஜ் தான். தயிர் சாதமும் அப்படியே !

சாப்பிட்டு முடித்ததும் ஐஸ் கிரீம் மற்றும் புரூட் சாலட் ஒரு ரவுண்ட் !





நான் வெஜ் என்றால்

சிக்கன் பிரியாணி,
மீன் கறி,
நெத்திலி Fry,
சிக்கன் காடை

என செம வேட்டை இருக்கு ! நான் வெஜ் சாப்பிட்டு வந்த சில ஆபிஸ் நண்பர்கள் நன்றாய் இருப்பதாக சொன்னார்கள். நான் நான் வெஜ் சாப்பிட்டால் " வானவில்லில்" எப்படி இருந்தது என சொல்கிறேன் !

மொத்தத்தில்:
வெஜ் பபே - பொறுத்தவரை - பிளமிங்கோ தான் குட்- நான் வெஜ் பபே என்றால் மட்டுமே இங்கு வரலாம் என்று தோன்றுகிறது !

19 comments:

  1. புரட்டாசி மாதம் - இப்படி ஒரு மெனுவா...?

    ReplyDelete
  2. நான் ஒரு முறை இங்கே நான்வெஜ் ட்ரை பண்ணியிருக்கேன். சூப்பர் ரகம் இல்லை...பட் 250 ரூபாய்க்கு ஓகே.

    ReplyDelete
  3. ம்ம்ம். ஒருநாள் நான்வெஜ் எப்படியிருக்குன்னும் டேஸ்ட் பார்த்துற வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நான் பிளமிங்கோ போக வேண்டியதுதான் :)))

    ReplyDelete
  7. சென்னை வந்தால் (?!) சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. நன்றி தனபாலன். நாங்க நான் வெஜ் சாப்பிடலை மெனு மட்டும் தான் தந்துள்ளேன்

    ReplyDelete

  9. நன்றி ரகு உங்கள் அனுபவம் சொன்னமைக்கு

    ReplyDelete

  10. நன்றி ரகு உங்கள் அனுபவம் சொன்னமைக்கு

    ReplyDelete

  11. அட பாலகணேஷ அப்படியா? வாங்க போயிடலாம்

    ReplyDelete
  12. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  13. வாங்க வெங்கட் நன்றி

    ReplyDelete

  14. நன்றி மாதேவி. நீங்க சொன்னது சரியே

    ReplyDelete

  15. நன்றி மாதேவி. நீங்க சொன்னது சரியே

    ReplyDelete

  16. சென்னை வந்தால் சொல்லுங்க துரை டேனியல். சேர்ந்தே எங்காவது சாப்பிடலாம்

    ReplyDelete

  17. சென்னை வந்தால் சொல்லுங்க துரை டேனியல். சேர்ந்தே எங்காவது சாப்பிடலாம்

    ReplyDelete
  18. ம்ம்ம்ம் சாப்பிடும் ஆசையை தூண்டுரீங்களே நன்றி...!

    ReplyDelete
  19. bloggers பெரும்பாலும் அறிவு சார்ந்த தகவல் பரிமாற்றத்துக்கு உதவ வேண்டுமே தவிர வெறுமனே சாப்பாட்டு கடைக்கு ஜால்ராவும், சினிமாவுக்கு விமர்சனமும் கூடாது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...