Friday, December 7, 2012

இந்தியா Vs USA - சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?

இந்தியா Vs USA --ஆதிமனிதன் 
*******
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா? என்னடா இவ்வளவு நாள் அமெரிக்கா அப்படி இருக்கும், இப்படி இருக்கும்னு சொல்லிட்டு இருந்த ஆதி மனிதன்  இப்ப அப்படியே பிளேட்ட திருப்பி போடுறானேன்னு பாக்குறீங்களா?

வெளியூர், வெளி நாடுகள் என்று பல இடங்களுக்கு போனால்தான், நம்மிடம் என்ன இருக்கு என்ன இல்லை என்று தெரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பல நல்ல விஷயங்கள் இருக்கு. அதே அளவு (இந்தியர்களை பொறுத்தவரை) கெட்ட விஷயங்களும் !அதற்குள் போகும் முன், இந்த பதிவின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை படிப்போம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?

ஆமாங்க. அப்படி இல்லன்னா நான் ஏன் இங்கு திரும்பி வர போகிறேன்? இதை எழுதும் போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் ஊர் திரும்புவதால், என்னுடைய காரை விற்பதற்காக விளம்பரம் கொடுத்திருந்தேன். அதை பார்த்து ஒரு எகிப்த்தியர் காரை பற்றி விசாரிக்க என் அலுவலகம் வந்திருந்தார். கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் என்பதால் அனேகமாக யாராக இருந்தாலும் இந்தியர்களை எளிதில் அடையலாம் கண்டு விடுவார்கள்.

இந்த எகிப்தியரும் என்னை சரியாக கண்டுகொண்டு நீங்கள் இந்தியரா என கேட்டார். நானும் ஆமாம் என்றேன். அடுத்து ஏன் நீங்கள் காரை விற்கிறீர்கள் என கேட்டார். நான் முழுவதுமாக இந்தியா திரும்புகிறேன். அதனால் தான் காரை விற்கிறேன் என கூறினேன். அதற்க்கு அவர், இந்தியா ஏன் திரும்பி போகிறீர்கள். உங்கள் நாடும் எங்கள் நாடு போலவே ஏழை நாடு. அங்கு என்ன இருக்கிறது. அரசாங்கம் சரியில்லை அது இது என பேச ஆரம்பித்து விட்டார்.

உடனே நான், "ஐயா, தயவு செய்து உங்கள் நாட்டுடன் எங்கள் நாட்டை ஒப்பிடாதீர்கள். நீங்கள் எல்லாம் உங்கள் நாடு பிடிக்காமல் அல்லது அங்கு வாழ முடியாமல் இங்கு வந்திருக்கிறீகள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. வேலை நிமித்தம் இங்கு வருகிறோம். விருப்பப்பட்டால் இங்கேயே இருப்போம். இல்லை என்றால் என்றைக்கு  வேண்டுமானாலும்  சந்தோசமாக நாங்கள் திரும்பி செல்வோம். வாழ வழி இல்லாமல் நாங்கள் இங்கு வரவில்லை" என்று. 

எதற்கு இதை  சொல்கிறேன் என்றால்,  உண்மை அதுதான் !  நாங்கள் யாரும் இந்தியா பிடிக்காமல் அமெரிக்கா செல்வதில்லை. எப்படி ஒரு வங்கியில் ப்ரோமோஷன் கொடுத்தால், வெளி மாவட்டம்/மாநிலத்திற்கு மாற்றி அனுப்புகிறார்களோ அது போல் தான் நன்றாக வேலை செய்பவர்களுக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு  IT துறையில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. அதில் நமக்கு பெருமை தானே? இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் அமெரிக்கர்களே நம்மிடம் ரிப்போர்ட் செய்வார்கள். சிலர் சொல்வது போல் இந்திய IT மக்கள் யாரும் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதில்லை.


மீண்டும் இந்தியா வர எல்லோருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் நிச்சயமாக ஒன்று உண்டு. அது நம் உறவுகளோடு கலந்து வாழவும், பிள்ளைகளுக்கு நம் கலாச்சாரம் பண்பாடு குடும்ப பாசம் மறந்து விட கூடாது என்பதும் தான்.

அமெரிக்காவில் ஐந்து வயதிற்குள்ளேயே குழந்தைகள் தனி அறைக்குள் தங்களை சிறை வைத்துக் கொள்வார்கள். கேட்டால் ப்ரைவசி என்பார்கள். பிறகு எப்படி அக்காள் தங்கை அண்ணன் தம்பி என ஒற்றுதல் ஏற்படும். அவர்கள் (அமெரிக்கர்கள்) கலாச்சாரப்படி அது சரி. ஏனென்றால் வளர்ந்து பெரியவ(ள்)ன் ஆன உடனேயே பெற்றோரை விட்டு பிரிந்து விடுவர். பின் வருஷம் ஒரு முறை அவர்களை போய் பார்பதே பெரிய விஷயம். நாம் அப்படி இல்லையே ! கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பின் கூட தாய் தந்தையாரிடமும் சகோதர்களிடமும் கலந்து தானே எல்லாம் செய்கிறோம்.

எட்டு வயதான போதே (கொஞ்சம் லேட்டு தான்) என் சின்னவள் தனி அறை கேட்டு வாங்கி விட்டாள். கதவின் முன் புறம், 'Enter with permission' என எழுதி ஒட்டி விட்டாள். நான் உட்பட என் மனைவி, பெரிய மகள் என யாராக இருந்தாலும் கதவை தட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். நினைத்து பாருங்கள். எட்டு வயது குழந்தை நம்மூரில் என்ன செய்யும்? எப்போதுமே தனக்கு அக்காள், அண்ணன் இருந்தால் அவர்களை சுற்றி சுற்றி வரும். இரவானால் தாயின் மடி தேடும். இவை எல்லாம் அமெரிக்காவில் மிஸ்ஸிங். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தைகள் தனியாக படுப்பது நன்று தான். ஆனால் நான்கு, ஐந்து வயதில் என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இப்படியே போனால் பின் ஒரு நாள், எனக்கு இன்னாருடன் இன்ன தேதியில் கல்யாணம். அவசியம் வந்து போங்க என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நிலைமை வந்து விடும் என்று தான் பல (சில!) இந்திய குடும்பங்கள் ஒரு கட்டத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி விடுகின்றனர்


இன்னும் வரும்....

46 comments:

 1. //இப்படியே போனால் பின் ஒரு நாள், எனக்கு இன்னாருடன் இன்ன தேதியில் கல்யாணம். அவசியம் வந்து போங்க என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நிலைமை வந்து விடும் என்று தான் பல (சில!) இந்திய குடும்பங்கள் ஒரு கட்டத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி விடுகின்றனர்//  எட்டு வயதான போதே (கொஞ்சம் லேட்டு தான்) என் சின்னவள் தனி அறை கேட்டு வாங்கி விட்டாள். கதவின் முன் புறம், 'Enter with permission' என எழுதி ஒட்டி விட்டாள். நான் உட்பட என் மனைவி, பெரிய மகள் என யாராக இருந்தாலும் கதவை தட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். நினைத்து பாருங்கள். எட்டு வயது குழந்தை நம்மூரில் என்ன செய்யும்? எப்போதுமே தனக்கு அக்காள், அண்ணன் இருந்தால் அவர்களை சுற்றி சுற்றி வரும். இரவானால் தாயின் மடி தேடும்.//

  0-:)
  என்றுமே நம்ம ஊர் சொர்கம்தான்.

  ReplyDelete
  Replies
  1. //என்றுமே நம்ம ஊர் சொர்கம்தான்.//

   அப்ப தலைப்பு சரிதாங்கிறீங்க. நன்றி பு.த.

   Delete

 2. ///இந்திய IT மக்கள் யாரும் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதில்லை.///

  அமெரிக்கர்கள் இந்திய மக்களை கொத்தடிமைகளாக நடத்துவதில்லை என்பது உண்மை ஆனால் நம்மக்கள் தாமாகவே முன் வந்து கொத்தடிமைகள் போலத்தான் வேலை செய்து தன் வேலையை தக்க வைத்துகொள்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.. நாங்க எல்லாம் அப்படி இல்லை என்பவர்கள் பீலா விடுபவர்களாகத்தான் இருப்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் நம்மக்கள் தாமாகவே முன் வந்து கொத்தடிமைகள் போலத்தான் வேலை செய்து தன் வேலையை தக்க வைத்துகொள்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை..//

   ஓரளவுக்கு உண்மை என்று தான் நான் சொல்வேன். நன்றி அ. உ.

   Delete
 3. Anonymous11:11:00 AM

  அமெரிக்கா, கனடா வாழ்வில் அனைத்து சுகங்களும் கிடைத்தாலும், நம் மண் சார்ந்த வாழ்வு, உணவு, உறவு, நிம்மதி கிட்டாது. என்ன தான் வாழைமரத்தை தொட்டியில் வைத்து அழகுப்பார்த்தாலும், வாழைத் தோப்பு தானே அழகு. இருந்தாலும் வாய்ப்புக்கள், தேவைகள் கருதி புலம் பெயர்வு தவிர்க்க முடியாத ஒன்றே.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. சரியாக சொன்னீர்கள். நன்றி இக்பால்.

   Delete
 4. மீண்டும் இந்தியா வர எல்லோருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் நிச்சயமாக ஒன்று உண்டு. அது நம் உறவுகளோடு கலந்து வாழவும், பிள்ளைகளுக்கு நம் கலாச்சாரம் பண்பாடு குடும்ப பாசம் மறந்து விட கூடாது என்பதும் தான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 5. எனக்கும் தெரிந்தவர் இங்கிருக்கும் வாழ்வுமுறையில் மிகுந்த நாட்டமாதலால் பையனுக்கு 9 வயதாகும்போதே இங்கு வந்துவிட்டார்.ஆனால் பையன் அப்போதே தனி அறை கலாச்சாரத்தில் இருந்தமையால் நீங்கள் சொல்வது போல் தனிமையைத்தான் விரும்புகிறான் யாரோடும் பழகுவதில்லை வந்து இரண்டு வருடமாகிவிட்டது. மாறிவிடுவான் என நம்புகிறான். இது கூடப் பரவாயில்ல்லை .நான்கே வ்யதான என் தோழியின் தம்பி மகள் அத்தை enter only after permission என்கிறாளாம் என் தோழிக்கு சிறிய பெண் எப்படி பேசுகிறாள் என்று சந்தோசமாகவும் ,வருத்தமாகவும்.....

  ReplyDelete
  Replies
  1. //மாறிவிடுவான் என நம்புகிறான்//

   நிச்சயமாக மாற்றம் ஏற்படும். வந்த புதிதில் சிறிது அழுக்கு இருந்தால் கூட கீழே கால் வைக்காத என் மகள் தற்போதெல்லாம் நன்றாக மண்ணில் ஓடி ஆடி விளையாடுகிறாள்.

   Delete
 6. உண்மைதான் நண்பரே! நாமெல்லாம் வெளிநாடு செல்வது இந்தியாவில் வாழ பிடிக்காமல் இல்லை, வேலைக்காக மட்டுமே, ஒவ்வொரு நிம்டமும் நம் மனது எப்பவும் எதிலும் இந்தியாவையே காணும், இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கும். நிறைய விஷயங்கள் சொல்லிருக்கிங்க... அருமையான பதிவு.

  ReplyDelete
 7. பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர்கள் தான் குழந்தைக்கு 10 வயதானதும் இந்தியாவிற்கு அதிகம் திரும்பி வருகிறார்கள் என்று நினைக்கிறேன். என் சொந்தக்காரருக்கு இரண்டு பெண் குழந்தைகள். பெற்றோர் இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்கிறாகள். இரண்டு பெண் குழந்தைகளும் இங்கு பாட்டி வீட்டில் வளர்கின்றன. லீவிற்கு தான் சிங்கப்பூர் செல்கின்றன. அவர்கள் கூறும் காரணம் கலாச்சாரம்.

  ReplyDelete
  Replies
  1. //பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர்கள் தான் குழந்தைக்கு 10 வயதானதும் இந்தியாவிற்கு அதிகம் திரும்பி வருகிறார்கள் என்று நினைக்கிறேன்//

   இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்து பையன்கள் உள்ள என் நண்பர்களும் ஒரு கட்டத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எனது பதிவு பெண் பிள்ளைகளால் தான் பெற்றோர்கள் இந்தியா திருப்புகிறார்கள் என ஒரு கருத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

   அது நிச்சயமாக எனக்கு ஒரு காரணமல்ல. பலருக்கும் அது மட்டும் பெரிய காரணமாக எனக்கு தெரியவில்லை.

   Delete
 8. Voluntary Declaration / Justification???!!!

  //அதில் நமக்கு பெருமை தானே?// என்ன தோணுதுங்கர உண்மைய சொல்லட்டுமா? சும்மா காமெடி பண்ணாதீங்க சார்.

  //இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் அமெரிக்கர்களே நம்மிடம் ரிப்போர்ட் செய்வார்கள்// "சில நேரங்களில்" :-)

  //நாங்கள் யாரும் இந்தியா பிடிக்காமல் அமெரிக்கா செல்வதில்லை// "நாங்கள்"??!! ;-)

  என்ன ஒன்னு கொஞ்சம் அப்பப்போ இந்தியால இது சரியில்லை அது சரியில்ல (மன்னிக்க : லொட்டை லொடப்பை ன்னு நொள்ள சொல்றது) அப்படின்னு சொல்லிப்போம்.

  //உடனே நான், "ஐயா, தயவு செய்து உங்கள் நாட்டுடன் எங்கள் நாட்டை ஒப்பிடாதீர்கள். நீங்கள் எல்லாம் உங்கள் நாடு பிடிக்காமல் அல்லது அங்கு வாழ முடியாமல் இங்கு வந்திருக்கிறீகள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. வேலை நிமித்தம் இங்கு வருகிறோம். விருப்பப்பட்டால் இங்கேயே இருப்போம். இல்லை என்றால் என்றைக்கு வேண்டுமானாலும் சந்தோசமாக நாங்கள் திரும்பி செல்வோம். வாழ வழி இல்லாமல் நாங்கள் இங்கு வரவில்லை" என்று// ஏன்னா எங்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!!!

  //இப்படியே போனால் பின் ஒரு நாள், எனக்கு இன்னாருடன் இன்ன தேதியில் கல்யாணம். அவசியம் வந்து போங்க என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நிலைமை வந்து விடும் என்று தான் பல (சில!) இந்திய குடும்பங்கள் ஒரு கட்டத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி விடுகின்றனர்// இப்போ சொன்னீங்களே, இது...இது...இதுல இருக்கு விஷயம் / உண்மை. ஆனா நான் மேல சொன்ன கூழ்... மீசை...க்கு இதான் ப்ரூஃபா இருக்கு.

  எண்ணத்தொடக்கத்திற்கும், பகிர்தலுக்கும் அடியெடுத்து கொடுத்ததற்கு நன்றி.

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. //Voluntary Declaration / Justification???!!!//

   எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

   ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு. உங்கள் கருத்தை நீங்கள் கூறி இருகிறீர்கள். தனி தனியாக நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

   //ஏன்னா எங்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!!!//

   நிச்சயமாக. இரண்டுக்கும் ஆசை தான். அது தானே இயல்பு. மினசோட்டா குளிரில் நடுங்கும் போது அப்படியே சென்னை வெயிலில் காய்ந்தால் இப்போ எப்படி இருக்கும் என தோன்றும். அதுவே இங்கு வந்தால் இந்த வெயிலுக்கு சும்மா சில்லுனு இருந்தா எப்படி இருக்கும் என தோன்றும்.

   வருகை மற்றும் கருத்துக்கு நன்றி . உங்கள் பதிவு வந்ததும் அவசியம் படிக்கிறேன்.

   Delete
 9. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா? - மறுக்க முடியாத உண்மை..
  ஏதேனும் ஒரு நேரத்தில் மூச்சு முட்டும் நிலை வந்துவிடும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சமீரா. நன்றி.

   Delete
 10. அருமையான பதிவு.
  நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. Anonymous7:01:00 PM

  ஃபாரின்ல இருக்கும் நம்மவர்கள் எல்லாருமே பயப்பட்ரது கலாச்சாரத்தப் பாதுகாப்பது பற்றித்தானே!

  ReplyDelete
 12. Anonymous9:25:00 PM

  இந்தியா இந்தியா என்று மார்தட்டிக்கொண்டிருந்தவனை இப்படி எழுத வைத்துவிட்டீர்கள். உங்கள் பதிவில் மறுமொழி இடத்தொடங்கினேன். பெரிதானதால் இந்த பதிவு..

  இந்தியா Vs USA –எதிர்வினை

  http://reverienreality.blogspot.com/2012/12/vs-usa.html

  ReplyDelete
 13. Anonymous10:24:00 PM

  தொடருங்கள் உங்கள் 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?' தொடரை...


  முந்திலாம் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமான்னு உணர்ச்சியோட சொல்வேன்... இப்ப யதார்த்தம், புரிதல், முதிர்ச்சி போன்றன சில தளர்ந்த பொழுதுகளில் மட்டும் மனதில் மட்டும் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமான்னு நிழலாடச் செய்கின்றன..

  இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்...


  'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரெவெரி. No one is perfect in this world. ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு. நான் எப்பவுமே விவாதங்களுக்குள் செல்லுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. ஏன்? ஒருவருக்கு ஒரு சமயத்தில் சரியென்று பட்டது அடுத்த சமயம் அவருக்கே தவறு என படலாம். உங்கள் கருத்தை நீங்கள் கூறி இருக்குறீர்கள். அப்படி தான் நான் எடுத்துக்கொள்வேன்.

   Delete
  2. No one is perfect in this world - Here I meant myself.

   Delete
 14. ////இப்படியே போனால் பின் ஒரு நாள், எனக்கு இன்னாருடன் இன்ன தேதியில் கல்யாணம். அவசியம் வந்து போங்க என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நிலைமை வந்து விடும் என்று தான் பல (சில!) இந்திய குடும்பங்கள் ஒரு கட்டத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி விடுகின்றனர்// இப்போ சொன்னீங்களே, இது...இது...இதுல இருக்கு விஷயம் / உண்மை. ஆனா நான் மேல சொன்ன கூழ்... மீசை...க்கு இதான் ப்ரூஃபா இருக்கு.//

  வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் குழந்தை குருஞ்செய்தியாவது கொடுப்பாங்க இன்னைக்கு தமிழ் நாட்டில வளர்ந்தா எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது விருப்பம் இருந்தால் வந்து பார்க்கவும் என்று தான் குருஞ்செய்தி வரும்,

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடுங்க அருவாளை

   Delete
 15. I think this is not an issue for most Indians settled in the USA. Particularly after some 10 - 15 years of stay there, they won't be able to live with the rush, dirt, bad roads, horrible politics, thugs and eve teasers etc in India. All will feel great to move with relatives (they would have lost old friends!) for a short time during their vacation but once they come and settle here, they won't be meeting them often. If the family / relatives in India are well settled, prosperous and in good health, then it may be ok. All said and done, you have taken a considered decision and wish you and your family a happy home coming! - R. J.

  ReplyDelete
  Replies
  1. Agreed 100%. Most difficult thing for me to deal with in India during my short visits are thuggery, corruption and pollution in that order. I had always been righteously indignant. It got me into lot of trouble when I was kid, broken nose, suspended from college etc. I cannot live a slavish life; I cannot survive too long in India. 99% of Indians can't stand up to injustice done (even by a local Councillor) and just put up with every injustice, turn a blind eye and lie to themselves they are living a free life! I came to America for economic opportunity but I stayed here for liberty. No other place on earth, at least I know of, more free than USA for everyone, including kids. If freedom is the most cherished thing, don't you want to give it to the ones you love the most, your kids? If you love someone dearly, wouldn't you want to set them free? (BTW, I do love India, lot of great things and of course family, but I am simply pointing out it is wrong for Indians to think Indians in America don't have freedom, it is quite the opposite)

   Delete
  2. @Jagannathan
   //I think this is not an issue for most Indians settled in the USA. Particularly after some 10 - 15 years of stay there, they won't be able to live with the rush, dirt, bad roads, horrible politics, thugs and eve teasers etc in India. All will feel great to move with relatives (they would have lost old friends!) for a short time during their vacation but once they come and settle here, they won't be meeting them often. If the family / relatives in India are well settled, prosperous and in good health, then it may be ok. All said and done, you have taken a considered decision and wish you and your family a happy home coming! - R. J.//

   இந்த யதார்த்தம் யதார்த்தம் னு சொல்றாங்களே அது இருக்கு உங்களோட இந்த மறுமொழிப் பின்னூட்டத்துல.

   ஒரு வேளை இதை (யும்) சேர்த்து யோசித்து, திரு. ஆதிமனிதன் அவரது எதிர்பார்ப்புகளை அமைத்துக்கொண்டால் நல்லது - நீண்ட கால நோக்கில்.
   மத்தபடி "காசேதான் கடவுளடா,
   அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா" பாட்டு ஏனோ நினைவுக்கு வருகிறது.
   take everything with a pinch of salt.

   http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 23. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 26. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 27. திரு. ஆதிமனிதன் அவர்களே,

  இதனை (என் கருத்துக்களை) ஏன், எதனால் அவ்வாறு சொல்லத்தோன்றியது / சொல்லப்புகுந்தேன் என விளக்கமளிக்க புகப்போவதில்லை. மறுபடி அது ஒஅர் தன்னிலை விளக்கமாகவே அமைந்து தன்பாட்டுக்கு இழுத்து செல்லும் என எண்ணுகிறேன்.

  மேலே, முந்தைய பின்னூட்டங்களில், சொன்னதில் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் / தவறாகப்பட்டால் ( அல்லது ) கடுமையான வார்த்தைகளாக / கடுமையான விதமாக இருந்தால் / அவ்வாறு பட்டால் வருந்துகிறேன்.

  மன்னிக்க.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...