Wednesday, December 5, 2012

வானவில்- அதிரசம் -அமலாபால்-பாண்டிச்சேரி

கிரிக்கெட் கார்னர்

சவுத் ஆப்ரிக்கா ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே அடித்து துவைத்து டெஸ்ட் சீரிஸ் வென்றது. அவுட் ஆப் ஆர்ம் ஆன ரிக்கி பான்டிங் தானாகவே ரிட்டையர் ஆகுறேன் என சொல்லிட்டு மூட்டை கட்டிட்டார். கடைசி மேட்சிலும் அவர் நியாபகம் வச்சுக்குற மாதிரி ஏதும் செய்யலை.

கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு அடுத்து, மிக வலுவான ஒரு அணிக்கு கேப்டன் ஆக இருந்தவர் பான்டிங் தான். Aggressive காப்டன் (கொஞ்சம் "போங்கு" என்று கூட சொல்லலாம்). ரிட்டையர் ஆகும் சீரிஸில் பாண்ட்டிங் இப்படி சொன்னார்: " ஒழுங்காய் ஆடா விட்டால் நான் ஆஸ்த்ரியேலிய அணியில் தொடர்ந்து ஆடமுடியும் என கனவு காண முடியாது; நானாகவே கிளம்ப வேண்டியது தான் "

பத்து இன்னிங்க்சா ஏதும் அடிக்காம சொதப்பிக்கொண்டிருக்கிறார்  சச்சின். 

அங்கும் இஸ்க் இஸ்க்  என்று தான்  கேட்கிறதா சச்சின்?- இப்படிக்கு பான்டிங் !

அழகு கார்னர்

உடல் இளைக்கும்போது முதலில் குறைவது கன்னத்து சதை தான் என ஜிம் மாஸ்டர் அடிக்கடி சொல்வார். வெயிட் குறைந்தோர் அல்லது வெயிட் மெயின்டெயின் செய்யும் எல்லாருக்கும் பொதுவாய் கன்னம் ஒட்டி போய் இருக்கும் என்பார் அவர். ஆனால் அமலா பாலுக்கு உடல் ஒல்லியா இருந்தாலும் கன்னம் புசுபுசுன்னு chubby -ஆ இருப்பது எப்படி என தெரியவில்லை ! நைஸ் கேர்ள் !


பாண்டிச்சேரி விசிட்

இந்த வார சனி, ஞாயிறு ஒரு திருமணத்துக்காக பாண்டிச்சேரி சென்றேன். கூடவே சில முக்கிய இடங்களையும் சுற்றி பார்த்தோம். மிக நிறைவான ட்ரிப்பாய் இருந்தது. வழக்கமாக செல்ல முடியாத சில இடங்களையும் பதிவர் நண்பர் ஒருவர் உதவியால் (யாரென்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் ! முடிந்தால் ஊகியுங்கள் !) விசிட் செய்ய முடிந்தது. நிறைய படங்களும் வீடியோவும், ஏராள தகவல்களும் சேகரித்துள்ளேன். பாண்டி பற்றி எழுத முடிந்தால் இம்முறை ஒவ்வொரு வாரமாக இழுக்காமல் நான்கைந்து பதிவு அடுத்தடுத்த போட்டு ஜனகன மன பாடும் ஐடியா தான். ஆனால் அதில் உங்களுக்கு பாண்டிச்சேரி குறித்து ஏ...........ராளமான தகவல்கள் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இம்முறை படங்களை ஓரளவு குறைத்து (வீடியோ நிச்சயம் உண்டு) தகவல்கள் அதிகம் இருக்கிற மாதிரி யோசனை ! பார்ப்போம்

சென்னை ஸ்பெஷல் - தி.நகர் பெண்கள் ஆக்சசரீஸ் கடை


தி. நகர் ஷாப்பிங் சென்றால் நாங்கள் வளையல் உள்ளிட்ட பெண்கள் accessories வாங்கும் கடை இது.


உஸ்மான் ரோடில் ரங்கநாதன் தெருவை விட்டு வெளியே வந்தால் வலது புறத்தில் ஒரு அடையார் ஆனந்த பவன் சுவீட் கடை இருக்கும் (ஹோட்டல் அல்ல;சுவீட் கடை மட்டுமே) அதற்கு அருகில் இருக்கு இந்த வளையல் கடை ! மிக பெரிய கடை. ஏகமான வெரைட்டிகள் ! பெண்ணுக்கோ, மனைவிக்கோ துணி எடுத்த பின் அதற்கான மேட்சிங் Accessories வாங்குவது எப்போதும் இங்கு தான்காய்கறி கடையில் ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்து காய்கள் எடுத்து போடுவது போல ஏராளமான பெண்கள் வளையல், பொட்டு இன்ன பிற பொருட்கள் எடுத்து போட, ஆண்கள வெளியே தேவுடு காக்கிறார்கள். இதுவரை செல்லா விடில் பெண்கள் இந்த கடைக்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம் ! நிச்சயம் எனக்கு மனதுக்குள் நன்றி சொல்வீர்கள் :)

சம்பவம் - சாலையில் கண்டது

சாலையில் பைக்கில் செல்கையில் காண்கிறேன். எனக்கு முன்னே இரு வேறு பைக்கில் பயணிக்கும் இரு நண்பர்கள், ஒருவரின் வலது உள்ளங்கையில் இன்னொருவரின் இடது உள்ளங்கையை வைத்தவாறே தத்தம் வண்டியை ஓட்டியவாறு செல்கின்றனர். முதலில் ஒரு வண்டி ப்ரேக் டவுன் ஆனதால் தான், இன்னொரு வண்டியை அப்படி இழுத்து செல்கிறார்கள் என நினைத்தேன். சிறிது நேரத்தில் அப்படி இல்லை என்று புரிந்தது.

இரு வண்டியின் பின்னும் அவரவர் மனைவி அமர்ந்திருந்தனர். ஒருவர் கர்ப்பமாக இருந்தார். இன்னொரு பெண்ணின் கையில் அவரது குழந்தை ! இப்படி குடும்பம் பின்னிருக்க, சாலையில் கை கோர்த்து பேசிய படி செல்கிறார்கள் இரு ஆண்கள்.

குறிப்பிட்ட சாலை வந்ததும், ஒரு வாகனம் இடப்புறமும், இன்னொரு வாகனம் வலப்புறம் உள்ள சாலையிலும் பிரிந்து செல்ல ஆரம்பித்தது. நண்பர்கள் பிரியும் முன் நடந்த அன்னியோன்னியம் தான் இது போலும் ! " ஆண்களுக்கு மட்டும் திருமணத்துக்கு பின்னும் நட்புகள் நீடிக்கிறது இல்லையா" என்ற கேள்வியுடன் எனது பயணம் தொடர்ந்தது.

போஸ்டர் கார்னர்அய்யாசாமிக்கு உதவிய மினிஸ்ட்டர் 

தீபாவளியின் போது மனைவி தனக்கு அதிரசம் செய்து தரலை என அய்யாசாமி புலம்பி கொண்டே இருக்க, அவர் மனைவி சில வாரம் கழித்து அதிரசம் செய்து தர ஆயத்தமானார். அரிசியை ஊறவைத்து மாவு மில்லில் போய் அரைத்து வர சொல்ல, மாவு மில் காரர் " பத்து மணி ஆகப்போவுது; இன்னும் அஞ்சு நிமிஷத்தில் கரண்ட் போயிடும்" என அரைக்க மறுத்துட்டார்.

"அரிசி காஞ்சுட்டா அதிரசம் எப்படி சரியா வரும்? முதல்லேயே போயிருக்கலாம் " என்ற யோசனையில் வீட்டுக்கு வந்த அய்யாசாமி உத்திரத்தை பார்த்து 15 நிமிடம் நிஷ்டையில் இருக்க, என்ன ஆச்சரியம் ..! பத்தே கால் ஆகியும் கரண்ட் போகலை. ஈ. பி ஆபிசுக்கு போன் செய்தால் " இன்னிக்கு மினிஸ்டர் வர்றார். அவர் வந்துட்டு போனபின்னே சாயங்காலம் தான் கரண்ட் நிறுத்துவோம்" னு சொல்ல, மில்லுக்கு மறுபடி ஓடி மினிஸ்டர் குறித்த தகவலை சொல்லி அறைச்சிட்டு வந்துட்டார்.

அய்யாசாமியின் பைனல் கமன்ட் : மினிஸ்டர் வந்தா மட்டும் கரண்ட் நிறுத்த மாட்டாங்களா? அந்த மினிஸ்டர்களை அப்பப்போ எங்க தஞ்சாவூர் பக்கமும் போக சொல்லுங்க. ஒரு நாளாவது தடையில்லா மின்சாரம் அவங்களுக்கும் கிடைக்கட்டும் !

40 comments:

 1. பாண்டிச்சேரி அருமையான ஊர். பதிவுகளுக்குக் காத்திருக்கிறோம்.

  போஸ்டர் கார்னர் அவசியமான பகிர்வு.

  அதுசரி, மினிஸ்டர் தஞ்சாவூர் மட்டும்தான் போக வேண்டுமா:)? தமிழகம் எங்கும் செல்லட்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கடைசிலே லா பாயின்ட் பிடிச்சுட்டீங்களே :)

   Delete
 2. எல்லா மினிஸ்டர்களையும் தமிழகச் சுற்றுப்பயணத்துக்கு அனுப்பி வைக்கணும் :-))

  சாலையில் கண்ட சம்பவம் யோசிக்க வைக்குது.

  பாண்டி பற்றிய பகிர்வுகளுக்காகக் காத்திருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. //பாண்டி பற்றிய பகிர்வுகளுக்காகக் காத்திருக்கோம்.//

   விதி வலியது :)

   Delete
 3. பலத்தகவல்களை படப்படன்னு சொல்லிட்டீங்களே!, அருமை ரசித்தேன், பாண்டிச்சேரி பற்றி எழுதுங்கள் தகவலுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க செம்மலை ஆகாஷ் வணக்கம்

   Delete
 4. ரிக்கி பாண்டிங் - நான் பார்த்ததிலேயே பெஸ்ட் கேப்டன் (சிலசமயம் நீங்கள் சொன்னதுபோல போங்கு இருந்தாலும்)

  // பாண்டி பற்றி எழுத //

  I'm waiting

  ReplyDelete
  Replies
  1. சார் துப்பாக்கி விஜய் மாதிரி I'm waiting சொல்றீங்க நீங்களாவது அந்த பதிவரை சரியா கண்டுபிடிசீன்களா ? உங்க ஊர் ஆள் தான் சார்

   Delete
  2. ஏதாவது க்ளு குடுங்க சார். எதுவுமே குடுக்காம இப்பிடி கேட்டா என்ன சொல்றது?

   Delete
  3. க்ளூவா? டிரைலரில் அவர் போட்டோவே போடுறேன் பார்த்தாவது நீங்களோ மத்தவங்களோ கண்டு பிடிக்கிராங்கலான்னு பாக்கலாம் :)

   Delete
 5. Replies
  1. நன்றிங்க கண்ணதாசன் சார்

   Delete
 6. ஆண்கள் மனது வைத்தால் பெண்களுக்கும் திருமணத்திற்கு பிறகும் பழைய நட்பு சாகும் வரை நீடிக்கும்.எங்காத்துக்காரர் மனசு வைச்சார்.அதிரசத்தை படம் பிடித்து போடலையா???நாங்களும் இந்த தீவாளிக்கு அதிரசம் செய்யலை. அதான் அதிரசம் படமாவது பார்க்கலாமேன்னு..

  ReplyDelete
  Replies

  1. அதிரசம் காலி ! கொஞ்சமா செஞ்சதால் சீக்கிரம் காலி ஆகிடுச்சு (இல்லாட்டி மட்டும் ரொம்ப நாள் அய்யாசாமி விட்டு வச் சிருவாராக்கும் )

   Delete
 7. 1253 is an excellent information. Thankyou.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுவாமி ஆனா நண்பர் ஸ்ரீராம் அது வேலை செய்யலை என்கிறார் :((

   Delete
 8. நான் கூட மினிஸ்டர் தான் அதிரசம் செஞ்சி கொடுதாரோன்னு நினைச்சிட்டேன்.
  போஸ்டர் கார்னர் - நல்ல தகவல்..
  வளையல் கடை- அடடா கவனிச்சதே இல்லையே.. ரொம்ப நன்றி சார்....

  ReplyDelete
  Replies
  1. சமீரா: அந்த கடை முயற்சி பண்ணி பாருங்க நிச்சயம் லைக் பண்ணுவீங்க

   Delete
 9. வளையல் கடை.... இத்தனை நாள் பார்க்காமல் இருப்பார்களா? என் பாஸுக்கு ஏற்கெனவே தெரியுமாம்!

  1253 எண் வேலை செய்யவில்லை. நீளம் புயல் சமயம், நீலாங்கரை அருகே ஒரு பாட்டியின் பரிதாப நிலை கண்டு அலைபேச யத்தனித்தபோது செக் யுவர் நம்பர் என்றது!

  ReplyDelete
  Replies
  1. அடடா இனிமே கால் பண்ணி பார்த்துட்டு பகிரனும் போல ! Thanks for the info Sriram Sir !

   Delete
 10. சாரி நீலம் புயல் நீளம் புயல் ஆகிவிட்டது!

  ReplyDelete
 11. அருமையான பல தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
 12. போஸ்ட் கார்னர் பயனுள்ள தகவல். பாண்டிச்சேரி பற்றிய தகவல் தொடரட்டும்.
  தகவலுக்கு நன்றி....

  ReplyDelete
  Replies
  1. வாங்க தொழிற் களம் நன்றி

   Delete
 13. //பத்து இன்னிங்க்சா ஏதும் அடிக்காம சொதப்பிக்கொண்டிருக்கிறார் சச்சின்.//

  அதான் கொல்கத்தாவுலே 70 சொச்சம் எடுத்திட்டாரே! இன்னும் பத்து டெஸ்ட் மேட்சுக்கு ரிட்டயர்மெண்ட் பத்தி மூச்சு விடப்படாது!

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார் ; என்னதான் சொன்னாலும் இன்னிக்கு செஞ்சுரி அடிச்சிருக்கலாம் என வருத்தப்படும் சச்சின் ரசிகன் தான் நானும்

   Delete
 14. 2004ல் என் பெரிய நாத்தனார் பாண்டிச்சேரியில் இருந்தார். அப்போ அவங்கள பார்க்க போயிட்டு பீச், மதர் ஆஸ்ரமமும் பார்த்தோம். மணக்குள விநாயகர் கோவில் கூட போக முடியலை. நீங்க பதிவு போடுங்க..தகவல்கள் நிறைய தெரிஞ்சிகிட்டு இன்னொருவாட்டி போனா போகுது...:)

  அதிரசம் படம் ஏன் போடலை..? நான் இன்னும் செய்து பார்த்ததில்லை. என் கணவருக்கு பிடிக்கும்.

  மினிஸ்டர எல்லா ஊருக்கும் போக சொல்லுங்க...தஞ்சாவூருக்கு மட்டும் ஏன் ஓர வஞ்சனை?...

  ReplyDelete
  Replies
  1. நல்லது ரோஷினி அம்மா; அவசியம் போய் வாங்க நம்ம தொடர் உங்களுக்கு யூஸ் ஆனா மகிழ்ச்சி

   Delete
 15. பாண்டிச்சேரி பதிவர் - சேஷாத்ரி?

  ReplyDelete
  Replies

  1. இல்லீங்க வெங்கட் சொல்றேன் :)

   Delete
 16. // இரு வண்டியின் பின்னும் அவரவர் மனைவி அமர்ந்திருந்தனர். ஒருவர் கர்ப்பமாக இருந்தார். இன்னொரு பெண்ணின் கையில் அவரது குழந்தை ! இப்படி குடும்பம் பின்னிருக்க, சாலையில் கை கோர்த்து பேசிய படி செல்கிறார்கள் இரு ஆண்கள். //
  // சாலையில் கண்ட சம்பவம் யோசிக்க வைக்குது.//

  இது கொஞ்சம் பதற வைத்தது - ஒருவகையில் நீங்கள் சொல்வதுபோல் அன்னியோன்யமாக தோன்றினாலும் - சாலையில், அதுவும் கிழக்கு கடற்கரை சாலையாக இருக்கும் என நினைக்கிறேன், பாண்டி செல்லும் போது என்று சொல்வதால் - பாதுகாப்பு இல்லாதது.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. ECR இல்லீங்க ; மேடவாக்கத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரோடு ; மனைவி குழந்தை உடன் வாகனம் நிறைய வரும் சாலையில் அப்படி போனது ரிஸ்க்கி தான்

   Delete
 17. //பத்து இன்னிங்க்சா ஏதும் அடிக்காம சொதப்பிக்கொண்டிருக்கிறார் சச்சின். //

  ஹலோ பாத்தீங்கல்ல...இப்போ எப்புடி?! :)

  ReplyDelete
  Replies
  1. அட போங்கப்பா பதினோரு இன்னின்க்சுக்கு ஒரு முறை ஹாப் செஞ்சுரி நான் கூட அடிக்கலாம் :)))

   Delete
 18. சார் நான் கண்டு பிடிச்சுடேன் பாண்டி பார்ட்டி யாருனு சொல்லுட்டா அது (கோவை நேரம்)பார்ட்டிதானே.சரியா?

  ReplyDelete
  Replies
  1. கோவை நேரத்துக்கும் பாண்டிக்கும் என்ன சம்பந்தம் ? அவரு கோவைலே தானே இருக்கார்? அவர் இல்லீங்க ஆரிப் :)

   Delete
 19. // அவுட் ஆப் ஆர்ம் ஆன ரிக்கி பான்டிங் தானாகவே ரிட்டையர் ஆகுறேன் என சொல்லிட்டு மூட்டை கட்டிட்டார். //

  அவரு மானஸ்தனையா

  இங்கிட்டு பாருங்க.. ஒரு ஆளு.. தப்பித் தவறி ஒரு 75 அடிச்சிட்டாரு(6th dec 2012). அவ்ளோதான்.. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அவரோட ரிடையர் மெண்டு பத்தி பேச விடமாட்டாரு.. வேண்டு வருஷத்துக்குள்ள அடுத்த அம்பது அடிச்சிட்டா..... அவர அடிச்க(சு, கிரிக்கெட்ட விட்டு தொறத்த) வே முடியாது போங்க !!

  ReplyDelete
 20. //. ஈ. பி ஆபிசுக்கு போன் செய்தால் //

  நம்பிட்டோமையா.. நம்பிட்டோம்

  ReplyDelete
  Replies
  1. ஏன் தம்பி ஒய் திஸ் டவுட்டு? நிஜமாதான் பேசினார்பா

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...