Saturday, December 29, 2012

விளையாட்டு உலகம் -2012 : பத்து முக்கிய நிகழ்வுகள் !

ளம் பதிவர்களில் என் ரசிப்புக்குரியவர் : மெட்ராஸ் பவன் சிவகுமார். சீரியஸ் விஷயத்தை கூட நகைச்சுவை  குழைத்து எழுதும் இவர் எழுத்து  பத்திரிக்கையில் வெளிவர தகுதியானது ! எழுதுவதை விட ஆணித்தரமாய், நேரில் , தான் நம்பும் விஷயங்களுக்காக விவாதம் செய்யக்கூடியவர். தமன்னா ரசிகர் என்பதை தவிர மற்றபடி ரொம்ப நல்ல மனிதர் :)

இவரிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் உண்டு: அதை உங்கள் முன் இங்கு வைக்கிறேன்.

சிவா தம்பி, நீங்கள் இப்போது கூட வக்கீலுக்கு படிக்கலாம். ஆந்திராவில் பல யூனிவர்சிட்டிகள் வக்கீல் படிப்பை கரஸ்-சில் தருகிறார்கள். நிச்சயம் அந்த துறையில் நீங்கள் ஷைன் செய்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நோ ஜோக்ஸ். சீரியசாய் யோசியுங்கள் !
**************
விளையாட்டு -2012 : பத்து முக்கிய நிகழ்வுகள் - மெட்ராஸ்பவன் சிவகுமார்
****
லக விளையாட்டு அரங்கில் 2012 ஆம் ஆண்டு நடந்த பத்து முக்கிய நிகழ்வுகள் பற்றி வீடு திரும்பல் வாசகர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி. சர்வதேச விளையாட்டை பொருத்தவரை பத்து நிகழ்வுகள் என்பதே மிகச்சிறிய எண்ணிக்கைதான். ஆண்டாண்டு தோறும் பல்வேறு அதிர்ச்சிகள்,ஆச்சர்யங்கள் மற்றும் சாதனைகளை நிகழ்த்தும் உலக விளையாட்டு போட்டிகளில் 2012 ஆம் ஆண்டின் சிறந்த/முக்கிய பத்து நிகழ்வுகளாக நான் கருதுபவை கீழ்வருமாறு:

* ஒலிம்பிக்: சீனாவின் ஆதிக்கத்தை தகர்த்து கடைசி நாட்களில் லாங் ஜம்ப் செய்து 46 தங்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றுவிட்டது. இந்தியா அதிக பதக்கங்களை வென்றதும் மகிழ்ச்சியே.


குறிப்பாக மேரி கோம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகும் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றது இந்திய மகளிர் மேலும் முனைப்புடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* க்ரிக்கெட்: 2011 உலக சாம்பியன் இந்தியாவின் டப்பா 2012 இல் முக்காபுலா டான்ஸ் ஆடிவிட்டது. விக்கட் கீப்பர் மற்றும் முன்னணி பேட்ஸ்மேன் ஆக பெர்பாம் செய்வது கொடிது. அதனினும் கொடிது இவ்விரண்டுடன் கேப்டன் பதவியை திறம்பட செய்வது. அதிலும் பலகோடி க்ரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்திய அணியில் இப்பேற்பட்ட பொறுப்பில் இருப்பது. பாவம் தோனி. ஒருநாள் க்ரிக்கட் போட்டிகளில் மட்டுமே தலைமை தாங்கிவிட்டு டெஸ்ட், T20 கேப்டன் பதவிகளை இளையவர்களுக்கு தருவதே சரியான முடிவாக இருக்க முடியும். இந்தியா தவிர்த்து எந்த முன்னணி அணியும் மூன்று வகை பார்மேட்களுக்கும் ஒரே கேப்டனை வைத்திருக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

* டென்னிஸ்: முன்னிலை வீரர்கள் சரிக்கு சமமாக மோதிக்கொண்டது இவ்வாண்டுதான். ஆஸி ஓப்பனில் ஜோகோவிக் நடாலை வீழ்த்தினார் என்றால் அதற்கு பழிவாங்கி ப்ரெஞ்ச் ஓப்பனில் அவரை சாய்த்து கோப்பையை வென்றார் நடால். விம்பிள்டனில் பெடரர் ஆன்டி முர்ரேவை அடித்தால் ஒலிம்பிக் தங்கப்பதக்க போட்டியில் முர்ரே பெடரரை மண்ணை கவ்வ வைத்தார்.


இறுதியாக அமெரிக்க ஓப்பனில் ஜோகோவிக்கை வென்றார் முர்ரே. அனல் பறந்த ஆடவர் டென்னிஸில் இவ்வாண்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது முர்ரே என்பதில் சந்தேகமில்லை.

* க்ரிக்கெட்: அதிர்ச்சி மற்றும் கவலை தந்த சம்பவங்களில் ஒன்று இது. பாகிஸ்தானின் கண்பார்வையற்றோர் ஆடவர் கிரிக்கெட் அணி T-20 போட்டிகளில் இந்தியாவுடன் மோத பெங்களூர் வந்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் ஜீஷான் அப்பாஸி அருந்திய குடிநீரில் சோப்பு துகள்கள் இருந்ததால் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


அது ஆசிட் என்றும், இந்தியாவிற்கு பொறுப்பில்லை என்றும் வழக்கம்போல பாகிஸ்தான் மகுடி வாசிக்க பிறகு ஒரு வழியாக இருதரப்பும் சமாதானம் ஆனது. கண்பார்வையற்றோர் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது அனைத்து நபர்களுக்குமான பாடமாகிப்போனது இந்நிகழ்வு.

* செஸ்: 'அறிவிற்சிறந்தவன் இந்தியனே' என்பதை அகிலத்திற்கு நிரூபித்து இருக்கும் தமிழன். ஐந்தாம் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் இந்த சதுரங்க சாம்ராட்.


பால்ய வயது முதலே செஸ்ஸை தவிர வேறொன்றும் அறியேன்' என லட்சிய காய்களை துல்லியமாக நகர்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளார் ஆனந்த். CNN - IBN சேனல் 'சிறந்த இந்தியன் - 2012' விருதை தந்து இவரை கௌரவித்துள்ளது.

* சைக்ளிங்: லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்...உலக சைக்ளிங் என்றதும் உடனே நினைவிற்கு வரும் பெயர். உலகின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் டூர்-டி-பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் 1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை பட்டம் வென்ற ஒரே வீரர். கேன்சரில் இருந்து மீண்டு வந்தவர். ஆனால் 2012 இல் இவருக்கு பேரிடி காத்திருந்தது. போட்டிகளில் போதை மருந்து உட்கொண்டார் என்பதால் இவர் வென்ற அனைத்து பட்டங்களும் பறிக்கப்பட்டன. அண்டம் போற்றிய மிதிவண்டி வீரரை வாழ்க்கை வண்டி மிதித்த ஆண்டு இந்த 2012.

* ஹாக்கி: முன்பொரு காலத்தில் உலகையே ஆட்டிப்படைத்த இந்திய ஹாக்கி அணி 2012 ஒலிம்பிக்கில் இப்படி ஒரு பெருவீழ்ச்சியை சந்தித்தது எனக்கு ஆச்சர்யம் அல்ல. இது குறித்து எனது தளத்தில் ஒலிம்பிக் முன்னோட்ட பதிவொன்றில் எழுதி இருந்தேன்.

க்ளிக் செய்க: லண்டன் ஒலிம்பிக் - 3

மிஞ்சிப்போனால் வெண்கலம் என்பதே எனது அப்போதைய கணிப்பு. அதையும் ஹாக்கி வல்லுனர்கள் சிலரிடம் கலந்துரையாடிய பிறகே கூறினேன். இந்திய ஹாக்கி பிளவுபட்டு இருப்பினும் புதிய வீரர்கள் நம்பிக்கை தருவார்கள் என அவர்கள் கூறினர். ஆனால் ஒலிம்பிக்கில் கடைசி இடத்தை அடைந்து மானத்தை கப்பலேற்றியது இந்திய அணி. இறுதி நிமிடங்களில் எதிரிகளை கோலடிக்க விடுதல், ஐரோப்ப வீரர்களின் உடல்திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் போட்டி போடாமல் இருப்பது இந்தியாவின் மைனஸ். தேசிய விளையாட்டான ஹாக்கி விரைவில் மறுமலர்ச்சி பெறும் என நம்பும் ஹாக்கி ரசிகர்களில் ஒருவனாக நானும் கன்னத்தில் கை வைத்து காத்திருக்கிறேன்.

* கங்னம் ஸ்டைல்: 2012 இல் உலக விளையாட்டு ரசிகர்கள் இவ்வாண்டு அரங்கைத்தாண்டி கொண்டாடியது கொரிய பாடகர் சை ஆடிப்பாடிய கங்னம் ஸ்டைல் பாடலைத்தான். சும்மா அதிரி புதிரி ஹிட். உபயம்: க்ரிக்கெட் வீரர் க்ரிஸ் கெய்ல்.

http://www.youtube.com/watch?v=60MQ3AG1c8o

*தடகளம்: மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட் வீரராக வரவேண்டியவர். விதிவசத்தால்(!) ஓட்டப்பந்தய வீரரானார் ஜமைக்காவின் உசேன் போல்ட்.


2012 ஒலிம்பிக்கில் 100, 200 & 4* 100 மீட்டர் ரிலே என மூன்றிலும் தங்கம் வென்று நிலமதிர வைத்த கருப்பு மின்னல். இவருக்கு கடும் சவாலை தந்து வருபவர் 'தி பீஸ்ட்' என்று வர்ணிக்கப்படும் யோஹன் ப்ளேக்(ஜமைக்கா). அடுத்த ஆண்டு பீஸ்ட்டின் Feast ஐ எதிர்பார்க்கலாம்.

* பாரா ஒலிம்பிக்ஸ்: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் போட்டிகளை மீடியா மற்றும் ரசிகர்கள் பெரிதும் கண்டு கொள்ளாதது வருத்தத்திற்கு உரியது. 2012 லண்டனில் நடந்த இப்போட்டிகளில் 95 தங்கங்களை வென்று முதலிடம் பிடித்தது சீனா. அதற்கடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான இந்தியா ஒரே ஒரு வெள்ளியுடன் 67-வது இடத்தையே பிடித்தது. அந்த அளவிற்கு இருக்கிறது மாற்றுத்திறனாளிகளை இந்தியா ஊக்குவிக்கும் லட்சணம். வெள்ளி வென்றவர் கர்நாடகாவின் உயரம் தாண்டும் வீரர் கிரிஷா நாகராஜேகவுடா(வயது 24).


போலியோவால் இடது கால் செயலற்று போனது இவருக்கு. இவரது தந்தை ஒரு ஏழை விவசாயி. இருந்தும் மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு தடைபோடவில்லை. NGO ஒன்றின் உதவியால் லண்டன் சென்றி சரித்திரம் படைத்துள்ளார் கிரிஷா.

-மெட்ராஸ்பவன் சிவகுமார்
அண்மை பதிவுகள் :

2012- அசத்திய 10 சிறுபடங்கள் + 5 சூப்பர் ஹிட் படங்கள்

2012: 10 சூப்பர் ஹிட் பாடல்கள் : ஒலியும், ஒளியும்   2012 : 

இந்திய அரசியல் : ஒரு பார்வை - வேங்கட சீனிவாசன்

2012 : தமிழகம் : டாப் 10 சம்பவங்கள் - சமீரா

12 comments:

 1. //சீரியஸ் விஷயத்தை கூட நகைச்சுவை குழைத்து எழுதும் இவர் எழுத்து பத்திரிக்கையில் வெளிவர தகுதியானது ! // வன்மையாக ஆதரிக்கிறேன்

  //. நோ ஜோக்ஸ். சீரியசாய் யோசியுங்கள் ! // இப்புடி சொன்னதும் தான் இது ஜோக் நு தோணுது ஹா ஹா ஹா

  சாரே கிரிக்கெட் தவிர வேறு எதுவும் தெரியாது...இப்போ அதுவும் தெரியாது... மொத்தத்தில் விளையாட்டு என்பது என்னைப் பொறுத்த வரை "அதுவும் ஒரு செய்தியே"

  ReplyDelete
 2. மொத்தத்தில் விளையாட்டு என்பது என்னைப் பொறுத்த வரை "அதுவும் ஒரு செய்தியே
  >>
  எனக்கும் அப்படியே. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 3. //// தமன்னா ரசிகர் என்பதை தவிர மற்றபடி ரொம்ப நல்ல மனிதர் :)////

  தமன்னா ரசிகரா இருப்பது கெட்டவிஷயமா...... அடடா முன்னாடியே இது தெரியாம போச்சே........

  ReplyDelete
 4. சீனு: சிவா பத்தி எழுதினதுக்கு அவரோட நண்பர்கள் கிண்டல் அடிப்பாங்கன்னு தான் நோ ஜோக்ஸ் -ன்னு எழுதினா, அதை வச்சும் காமெடி பண்றீங்களேப்பா ! திறமையான தம்பி... எப்படியாவது நம்ம தொழிலுக்கு இழுக்கணும்னு பாத்தா விட மாட்டீங்குரீங்களே :)

  ReplyDelete
 5. நன்றி ராஜி

  ReplyDelete
 6. ராம்சாமி அண்ணே: அனுஷ்கா ரசிகரா இல்லாம தமனா ரசிகரா இருந்தா, எங்களை பொறுத்த வரை
  அது கெட்ட விஷயம் தானே? :)

  ReplyDelete
 7. Anonymous11:32:00 AM

  தங்கள் ஆலோசனைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 8. http://www.vesinhcongnghiep.us/

  ReplyDelete
 9. கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டுகள் பத்தி தெரிந்துகொள்ள முடிந்தது... நன்றி சார்...

  ReplyDelete
 10. டோனி நீக்கம் அநேகமாக ஆஸ்திரேலியா -இந்திய தொடருக்கு பின் நடக்கலாம் .

  மோகன் சார் ,நீங்க எல்லா விளையாட்டுகளையும் பற்றி தொடர்ந்து வருகிறீர்களா என்ன? அசத்துகிரீர்களே ?

  ReplyDelete
 11. நிறைய அலசல். நிறைவான அலசல். ஒருநாள் போட்டிகளிலிருந்து டெண்டுல்கர் ரிடைர்மென்ட் ஒரு முக்கிய நிகழ்வு இல்லையா! விட்டுப் போச்சே...

  ReplyDelete
 12. பார்ரா... மெட்ராஸ் வக்கீலுக்கு படிச்சா.... கோர்ட் தாங்முமா.... எனக்கென்னவோ இதுல பெரிய சதிதிட்டம் இருக்குதுன்னுதான் படுது :-))))))))))))
  (இது ஜோக்குக்காகச் சொன்னது )

  மெட்ராசூ உண்மையாதாம்பா படுது... பெங்களூர்ல கூட LLB கரஸ்ல வாங்கலாம்னு கேள்வி பட்டிருக்கேன், ஒன்னை வாங்கிபோடுப்பா, நாளைபின்னே ஊஸ் ஆகும்.

  விளையாட்டு பகிர்வுகள் அருமை.!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...