Sunday, December 9, 2012

உணவகம் அறிமுகம் : ஸ்பைஸ் மாஸ்டர்ஸ் வேளச்சேரி

ந்த கடையை அது கையேந்திபவனாக இருந்த காலத்திலிருந்து அறிவேன். கடந்த சில ஆண்டுகளில் செம வளர்ச்சி ! கையேந்தி பவனில் இருந்து மாறி தரை தளத்தில் அமர்ந்து சாப்பிடும் கடையை மாற்றினார்கள். இப்போது மாடி கட்டி அங்கு ஏ. சி ரெஸ்டாரன்ட் கொண்டு வந்துள்ளனர். இவை அனைத்தும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது ! என்னா வளர்ச்சி !


வேளச்சேரியில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பேச்சிலர்களுக்கென ஏராளமாய் சிறு கடைகள் உள்ளன. அப்படி ஒரு கடையாக வந்தது தான் இந்த கடையும். கடையின் சிறப்பம்சமே விலை மிக குறைவு டேஸ்ட் மிக அருமையாய் இருக்கும் என்பது தான்.

மதிய சாப்பாடு 55 ரூபாய். லிமிட்டட் சாப்பாடு என்றாலும், அவர்கள் தரும் உணவுக்கு மேல் நாம் சாப்பிடவே முடியாது

சப்பாத்தி, குருமா, இரண்டு காய்கள், சாம்பார், கார குழம்பு (அல்லது மோர் குழம்பு), ரசம், மோர் மற்றும் ஒரு ஸ்வீட். இதில் சாம்பார் மற்றும் கார குழம்பு அருமையாய் இருக்கும். ரசம் சில நேரம் சுமார் தான்  !
டிபன் வகைகளில் இவர்களது வெஜிடபிள் பிரியாணி Very டேஸ்ட்டி .

கொத்து பரோட்டா அல்லது சில்லி பரோட்டா இவற்றுக்கு நானும் எனது பெண்ணும் விசிறிகள்.

பரோட்டாவை பிய்த்து போட்டு கைமா செய்து , நிறைய குருமா ஊற்றி நம் கண் முன்னே கல்லில் போட்டு சற்று வேக வைத்து தருவார்கள். குருமா நன்கு பரோட்டவிற்குள் சென்று ஊறி , அதன் சுவையை கூட்டி விடும். ஒரு கொத்து பரோட்டா வாங்கி சாப்பிட்டால் வேறு எதுவுமே சாப்பிட வேண்டாம் !

மாலை வேளைகளில் கிடைக்கும் போண்டா, வடை மற்றும் வடக்கத்திய ஸ்நாக்ஸ் வகைகளும், பில்டர் காபியும்  பலமுறை சுவைத்து ரசித்திருக்கிறோம் .

முன்பு பேச்சிலர் ஆண்கள் மட்டுமே வந்த காலம் மாறி இப்போது குடும்பங்களும் கூட நிறைய பேர் வந்து சாப்பிடுகிறார்கள்

மிக ரீசனபில் விலையில் நல்ல சுவையுடன் இருப்பதால் நாங்கள் மிக அதிக முறை செல்லும் ஹோட்டல்களில் இதுவும் ஒன்று !
****
முகவரி:

ஸ்பைஸ் மாஸ்டர்ஸ்
பைபாஸ் ரோடு
வேளச்சேரி (மோகனா மோட்டார்ஸ் அருகில்).

23 comments:

 1. கொத்து புரோட்டா அல்லது சில்லி புரோட்டா.... நானும் டிரை பண்ணி பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 2. சென்னை வந்தா ஒரு பிடி பிடிசிடுறேன்....

  ReplyDelete
  Replies

  1. அவசியம் முயலுங்கள் பாலா

   Delete
 3. பதிவு எங்களை சுண்டி இழுக்கிறது...

  ஹோட்டலுக்கு கண்டிப்பா செல்கிறேன்

  ReplyDelete
 4. ம்ம்ம்.... பேரு கூட நல்லா இருக்கு...

  சாப்பிட உங்களோடு சென்றால் போயிற்று! :)

  ReplyDelete
  Replies
  1. வெங்கட்: அடுத்த முறை போனால் போச்சு

   Delete
 5. அந்த பக்கம் வந்தா ஒரு கை பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. பரோட்டாவை பிய்த்து போட்டு கைமா செய்து , நிறைய குருமா ஊற்றி நம் கண் முன்னே கல்லில் போட்டு சற்று வேக வைத்து தருவார்கள். குருமா நன்கு பரோட்டவிற்குள் சென்று ஊறி , அதன் சுவையை கூட்டி விடும். ஒரு கொத்து பரோட்டா வாங்கி சாப்பிட்டால் வேறு எதுவுமே சாப்பிட வேண்டாம் !


  எச்சில் ஊறுகிறது. அருமையான பகிர்வு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க செம்மலை ஆகாஷ் மகிழ்ச்சி நன்றி

   Delete
 7. நல்ல அறிமுகம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரோஷினி அம்மா

   Delete
 8. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் சார்: நன்றி

   Delete
 9. ஒரு வேளச்சேரி விஜயத்தில் உள்நுழைந்து பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. செய்யுங்க ஸ்ரீராம் சார்

   Delete
 10. இங்கே
  நெய் ரவா வெங்காய ஸ்பெஷல் மசாலா ரோஸ்ட்
  கிடைக்குமா ? ஸைட் டிஷ் என்ன ?

  காஃபி நல்லா இருக்குமா ?

  என்ன டயத்துக்கு கிடைக்கும்?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies

  1. அட்ரஸ் அன்ட் லேன்ட் மார்க்
   தரவும்

   சுப்பு தாத்தா.

   Delete

  2. சார் நீங்க சொன்ன ஐட்டம் எல்லாம் கிடைக்கும்; சைட் டிஷ் சாம்பார் சட்னி தான். காலை ஏழு முதல் பதினொன்று மற்றும் மாலை நான்கு முதல் 11 வரை டிபான்; மதியம் 12 டு 4 சாப்பாடு


   அட்ரஸ் & லேண்ட்மார்க் கடைசியில் கொடுத்திருக்கேன் சார் (டோர் நம்பர் தெரியலை)

   Delete
 11. Anonymous9:26:00 PM

  இந்த உணவகம் எப்படி என்று தெரியாது. ஆனால் நீங்கள் வர்ணிக்கும் விதம் ரியலி சூப்பர்...

  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாலஹனுமான் நாம் சென்ற ஹோட்டல் அருகில் தான் இதுவும் உள்ளது

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...