Thursday, December 27, 2012

2012-அசத்திய 10 சூப்பர்ஹிட் பாடல்கள்: ஒலியும்,ஒளியும்

ப்ளாக் துவங்கிய மூன்று வருடத்தில் தவறாமல் செய்கிற ஒரு விஷயம் - சிறந்த பத்து படங்கள் மற்றும் சிறந்த பத்து பாடல்கள் தேர்வு செய்வது.

2009- சிறந்த 10 பாடல்கள் : இங்கு

2010- சிறந்த 10 பாடல்கள் : இங்கு

2011- சிறந்த 10 பாடல்கள் : இங்கு

இவ்வருட சிறந்த பாடல்களை இப்போது பார்க்கலாம். முதல் இடம்- இரண்டாம் இடம் என்றெல்லாம் பிரிக்காமல் நான் ரசித்த 10 பாடல்கள் தொகுப்பு இது !
*********
1. பற பற பறவை ஒன்று

படம்: நீர் பறவை
இயற்றியவர் : வைரமுத்து
பாடியவர்: GV பிரகாஷ் குமார்
இசை: ரகுநந்தன்
**********
GV பிரகாஷ் குமார் என்ற பிரபல இசை அமைப்பாளர் அதிகம் பிரபலமாகாத இன்னொரு இசை அமைப்பாளர் படத்தில் பாடியதே ஆரோக் கியமான ஒரு நிகழ்வாய் இருக்கிறது. ரகுநந்தன் மிக நம்பிக்கை தரும் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவு, சுனைனா என்று பாட்டை ரசிக்க இன்னும் பல காரணங்களும் கூட உண்டு :)

 ********
2. ஆசை ஒரு புல்வெளி
*****
படம் : அட்ட கத்தி 
இயற்றியவர் :கபிலன்
பாடியவர்கள்: பிரதீப், கல்யாணி நாயர்

இசை: சந்தோஷ் நாராயணன்

********
நல்ல மெலடி எப்போதும் மனதை கவர்ந்து விடும். மிக சிறிய, மெதுவான  பாட்டு தான். ஆனால் மனதை சுண்டி இழுத்து விடுகிறது. பாடல் படமாக்கப்பட்ட விதமும் ரசித்து செய்துள்ளனர்.




3. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் 

படம் : கழுகு
இயற்றியவர் : சிநேகன்
பாடியவர்கள்: கிருஷ்ணராஜ், வேல்முருகன் சத்யன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
**********
நடு ரோடு, சிறு பார் (Bar ) , அருகே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட், - இவை தான் பாட்டின் லொகேஷன். ஹீரோ மட்டுமல்லாது கருணாஸ் மற்றும் தம்பி ராமையாவுக்கும் பாட்டில் சரி சமமான முக்கியத்துவம் உண்டு.
மிக எளிதான பீட், தெளிவாய் புரியும் வரிகள், ரசிக்க வைக்கும் டான்ஸ் இவற்றால் இந்த பாட்டு ஈர்த்தது. குறிப்பாய் டி ஷர்ட்டை எடுத்து முகத்தை மூடி கொண்டு ஆடுவது கியூட். கடைசியில் ஸ்வட்டர் அணிந்த சில பெண்களும் சேர்ந்து ஆடும்போது இன்னும் ரசிக்கும்படி உள்ளது.

எப்போது டிவியில் போட்டாலும் சானல் மாற்றாமல் ரசிக்கிற பாட்டு இது

4. மனசெல்லாம் மழையே

படம் : சகுனி
இயற்றியவர் : நா முத்து குமார்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
இசை: GV பிரகாஷ் குமார்
**************
சகுனி படம் வெளிவரும் முன்பே இந்த பாடல் மிக ஹிட் ஆகிவிட்டது. படம் ஒரு மாபெரும் மொக்கை என்பதால் இந்த நல்ல மெலடியை நாம் தள்ள முடியாது இல்லையா ?

பாடலுக்கு அற்புதமான வெளிநாட்டு லொகேஷன்கள் நிச்சயம் ஒரு பிளஸ். இப்போது கேட்டாலும் இந்த மெலடி ரசிக்க முடிகிறது





5. என் பிரண்டை போல யாரு மச்சான்

************
படம் : நண்பன்
இயற்றியவர் : விவேகா
பாடியவர்கள் : கிருஷ் & சுஜித் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
************
நண்பனில் அஸ்க லஸ்கா உள்ளிட்ட பல பாட்டுகள் ஹிட் ! நட்பின் வலிமையை சொல்லும் இப்பாட்டு தான் எனது பேவரைட்.

 6. வேணாம் மச்சான் வேணாம் 
***
படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி
இயற்றியவர் : நா. முத்து குமார்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: வேல்முருகன், நரேஷ் ஐயர்

*****
ஹாரிஸ் ஜெயராஜ் தனது முந்தைய பாடலான " அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை" யில் இருந்து தான் இந்த பாட்டை உருவியிருந்தார். ஆனால் அது எத்தனை பேருக்கு தெரியும் ? படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்து, ஞாயிறு காலை ஒன்பது மணி காட்சி தியேட்டரில் பார்க்கிறோம். இந்த பாட்டுக்கு தியேட்டரில் பலர் டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டனர். டான்ஸ் ஆடாத மக்களும் கூட பீட்டுக்கு ஏற்ப கை தட்டி கொண்டிருந்தனர்

மிக எளிதான டான்ஸ் மூவ்மென்ட். இதனால் உதயநிதி ஸ்டாலினும் கஷ்டப்படாமல் ஆடிவிட்டார்.

சந்தானத்தின் காமெடி படத்தில் மட்டுமல்ல இந்த பாட்டிலும் ஒரு பெரிய பிளஸ். பாட்டில் சைகையிலேயே சில விஷயம் அவர் சொல்வது செம !




7. காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்

படம்: நீதானே என் பொன்வசந்தம்
பாடியவர்: கார்த்திக்
இசை: இளைய ராஜா

***********
ராஜா மறுபடி இசை ராஜ்ஜியம் செய்த படம்.  சாய்ந்து சாய்ந்து உள்ளிட்ட பல பாடல்கள் அருமை ! இசைக்காகவே இந்த பாட்டை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. பட ரிசல்ட் சற்று  ஏமாற்றம் தந்தாலும் ராஜாவின் இசையை குறை சொல்லவே முடியாது !

8. என்ன சொல்ல ஏது சொல்ல 

படம்: மனம் கொத்தி பறவை
இயற்றியவர் : யுகபாரதி

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி
இசை: இமான்
***********
இந்த படத்தில் பல பாட்டுகள் அட்டகாசம்.  ஒரே பாடல் என்பதால் மட்டுமே இந்த பாடலை குறிப்பிடுகிறேன். இசை அமைப்பாளர் இமானின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்துகிறது. சாதாரண, ஆனால் கேட்சி டியூன், தெளிவாய் புரியும் வரிகள் என்பதையே தன் தாரக மந்திரமாய் கொண்டுள்ளார் இமான்.

படத்தின் பாடல்களை மூனாரை ஒட்டி எடுத்துள்ளனர். ஹீரோயினும் பசுமையான பின்னணியும் பாட்டை கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடிக்க வைத்து விடுகிறது

9. நாணி கோணி

படம்: மாற்றான் 
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
*******************
அழகான மெட்டு, விஜய் பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷலின் இனிய குரலால் இன்றும் ரசித்து கேட்கிற பாட்டு இது. படமாக்கத்தில் "கோ" பட அமளி துமளி சாயல் தெரிந்தாலும் கூட லொகேஷன்கள் ரசிக்கும்படி உள்ளது



10. அய்யய்யோ ஆனந்தமே
**********
படம்: கும்கி
இசை: இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி
**********

பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் கும்கியில் இருந்தது ! இப்பாட்டை, பாடல் முடியும் போது வரும் இசைக்காகவே ர்வு செய்துள்ளேன். படமாக்கலும் அற்புதம். போலவே  சொல்லிட்டாளே அவ காதலை பாட்டும் சரி, அந்த அருவியும் சரி மறக்க முடியாத படி அமைந்து விட்டன

***********
உங்களுக்கு பிடித்த பாடல் இந்த வரிசையில் இருக்கிறதா ?

நல்ல பாடலை நான் தவற விட்டிருந்தாலும் சொல்லுங்கள் !

***********

21 comments:

  1. பாடல்கள் தொகுப்பு அருமை....
    கும்கியில் சொல்லிட்டாளே, கையளவு, இரண்டும் நன்றாக இருக்குமே...ஏன் பத்து பாடல்கள் மட்டும்...இன்னும் கொடுத்து இருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவை நேரம்:

      //ஏன் பத்து பாடல்கள் மட்டும்...இன்னும் கொடுத்து இருக்கலாமே...//

      ஆமால்ல ?

      Delete
  2. நான் ஈ படப்பாடல்கள் ஒன்றும் இல்லை...நான் படப்பாடல் மக்கயாலா, முக்கியமா துப்பாக்கி...கூகுல்..

    ReplyDelete
  3. வழக்கு எண்.....ஒரு குரல் கேட்குது...
    போங்க சார்...நீங்க கள்ளாட்டம் ஆடறீங்க...எல்லாத்தையும் அழிங்க..மீண்டும் பாட்டை தொகுங்க...

    ReplyDelete
  4. உங்க லிஸ்டில் சில பாடல்கள் (நீர்பறவை,கும்கி) எனக்கும் பிடிக்கும்..

    என்னுடைய டாப் டென் லிஸ்ட் இது

    http://riyasdreams.blogspot.com/2012/12/2012-top-ten-tamil-songs.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரியாஸ். உங்கள் தொகுப்பும் நேற்று படிதேன் நன்று !

      Delete
  5. மனம் கொத்திப் பறவை..நண்பன்... கும்கி... என் மனம் கவர்ந்தவை

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீனு நன்றி

      Delete
  6. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  8. தொகுப்பு நன்றாக இருக்கிறது மோகன்.

    சில பாடல்களை இப்போது தான் கேட்கிறேன்; குறிப்பாக சகுனி, மாற்றான் ஆகியவை.
    சகுனி விளம்பரத்தில் கூட இந்த பாடலைக் கேட்டதாக நினைவில்லை.

    ReplyDelete
  9. எனக்குப் பிடித்த பாடல்களும் லிஸ்ட்டில் இருக்கின்றன. அவரவர்க்கு அவரவர் ரசனை!!

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் ஸ்ரீராம் சார் !

      Delete
  10. அழகான அருமையான ரசனையுடன் தொகுத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உமா; மகிழ்ச்சி

      Delete
  11. லிஸ்ட் சூப்பருங்க..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணகுமரன்

      Delete
  12. 3 & முகமூடி விட்டுட்டீங்க. இந்த ரெண்டு படங்களோட இசையும், இந்த வருஷத்தில் என்னோட most favorites லிஸ்ட்டில் இருக்கு.

    உங்க லிஸ்ட்டில் எனக்கு 1,2,5,7,8 & 10 புடிச்சிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரகு; 3 படத்தில் சில பாட்டு இப்போதும் பிடிக்கிறது சேர்க்க மறந்துட்டேன் முகமூடி ஒரிரு பாட்டும் குட் ; நினைவு படுத்தியமைக்கு நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...