Monday, December 31, 2012

2012- திரைப்படம் + அரசியல்: சீரியஸ் & காமெடி விருதுகள் !

திரைப்படம்/ அரசியல்/ விளையாட்டு சார்ந்து இந்த வருடத்தின் சீரியஸ் + காமெடி விருதுகள் மற்றும் சில முக்கிய நிகழ்வுகள் இதோ.
******
திரைப்படம்

சிறந்த இயக்குனர்: பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் )



சிறந்த புதுமுக இயக்குனர் : கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)

சிறந்த நடிகர்: விஜய் சேதுபதி (பீட்சா)

சிறந்த நடிகை: சமந்தா (நான் ஈ& நீதானே)

சிறந்த புதுமுக நடிகர் :  தினேஷ் ( அட்ட கத்தி )

சிறந்த புதுமுக நடிகை : லட்சுமி மேனன் ( கும்கி, சுந்தரபாண்டியன்)

சிறந்த கவிஞர்: வைரமுத்து (நீர்ப்பறவை)

சிறந்த இசை அமைப்பாளர் : இமான் (கும்கி)

சிறந்த வசனகர்த்தா: ஜெயமோகன்/ சீனு ராமசாமி (நீர்ப்பறவை)

சிறந்த ஒளிப்பதிவாளர் : சுகுமார் (கும்கி)

சிறந்த காமெடி நடிகர் : சந்தானம் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)

சிறந்த பொழுதுபோக்கு/ கமர்ஷியல் படங்கள்: துப்பாக்கி & நான் ஈ

சமூக கருத்தை சொன்ன சிறந்த படம்: வழக்கு எண் 18/9

சிறந்த பின்னணி பாடகர் : விஜய் பிரகாஷ் ( நாணி கோணி - மாற்றான் & என்ன சொல்ல ஏது சொல்ல - மனம் கொத்தி பறவை)

சிறந்த பின்னணி பாடகி : சைந்தவி (உயிரின் உயிரே- தாண்டவம் & மனசெல்லாம் மழையே - சகுனி )

அரசியல்

அதீத லாபமடைந்தவர் : துணை கொ. ப. செ பதவியுடன் இன்னோவா காரும் பெற்றவர் ( மூணு வருடத்தில் கோடீஸ்வரர் கன்பர்ம்)

அதிர்ச்சி தீர்மானம்: சில்லறை வர்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதி

மிக சிறந்த ஜோக்: " என்னாது? மிக அதிக மின்வெட்டு தமிழகத்தில் இருக்கா? இதை ஏன் எந்த அமைச்சரும் என் கவனத்துக்கு கொண்டு வரவே இல்லை?"

அமைச்சர்கள்

Exit : செங்கோட்டையன், அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, வேலுமணி, சிவா சண்முகம், ஜெயகுமார் (சபாநாயகர்)

Entry : பி. மோகன், சிவபதி, முக்கூர் சுப்ரமணியன் , தனபால் (சபாநாயகர்)

தமிழக துயரம்: வரலாறு காணாத மின்வெட்டும், பஸ், பால், மின்கட்டண உயர்வும்

பலே பல்டி : சசி நீக்கமும், சேர்ப்பும்

மின்வெட்டுக்கு அடுத்து தமிழர்களை மிரட்டியது : டெங்கு காய்ச்சல்

2013 -ன் கவலை: வறட்சி, தண்ணீர் பஞ்சம்

கிரிகெட்

சிறந்த கிரிகெட் வீரர்கள்: மைக்கேல் கிளார்க், விராட் கோலி

சிறந்த Comeback : யுவராஜ்

வீழ்ந்த சுவர்கள்: டிராவிட், லக்ஸ்மன்

MISCELLANEOUS

பயமுறுத்தி புஸ் ஆகியவர் : மாயன்

முக்கிய மரணங்கள்: ஐ. கே குஜ்ரால், பால் தாக்கரே, வீரபாண்டி ஆறுமுகம்

கவனம் ஈர்த்த இளம் பதிவர்: திடங்கொண்டு போராடு சீனு

பதிவர்களை பதுங்க வைத்தது : 66 A

சிறந்த "You are Dismissed " விருது : நித்யானந்தா - (மதுரை ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது )

என்னா கண்டுபிடிப்புடே : கடவுள் துகள் (ஹிக்ஸ் போஸான்)
நான் ஏதும் தவற விட்டிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

26 comments:

  1. அருமை..நிறையா ஒத்துபோவுது நம்ம டேஸ்ட்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மரா. நன்றி புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  2. //கவனம் ஈர்த்த இளம் பதிவர்: திடங்கொண்டு போராடு சீனு //

    சத்தியமா இதனை நான் எதிர்பார்த்து இருக்கவில்லை சார்.... வழக்கமான ஒரு பதிவாகத் பாவித்து தான் இதனை ஓபன் செய்தேன், இறுதியில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கும் என்று நினைக்கவில்லை...

    புத்தாண்டின் சிறந்த பரிசாக இதனைக் கருதுறேன்... மிக்க நன்றி சார்....

    உங்களைக் போன்ற சீனியர் பதிவர்கள் தரும் உற்சாகம் தான் எம் போன்ற இளையவர்களி மிக உற்சாகமாக வலையிலே பயணிக்க உதவும்... மீண்டுமொருமுறை நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. சீனு: You deserve it ! Congrats ! குவாலிட்டியாக தொடர்ந்து எழுதவும் .

      Delete
  3. Anonymous10:41:00 AM

    வாழ்த்துக்கள் சீனு மோதிரக் கையால் குட்டுப் பெற்றதற்கு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலஹனுமான்
      மோதிரக்கை என்பது கொஞ்சம் ஓவரா இல்லை? :)

      Delete
  4. //கவனம் ஈர்த்த இளம் பதிவர்: திடங்கொண்டு போராடு சீனு //

    வட போச்சே! (எனக்கு). வாழ்த்துக்கள் (சீனுவுக்கு).

    2013 யிலும் அலுத்து போன விஷயம் - ரஜினியிடம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, 'என் வழி தனி வழி என இன்னமும் சொல்லி கொண்டு இருப்பது'

    ReplyDelete
    Replies
    1. ஆதிமனிதன்: நீங்கள் இளம் பதிவரா? ரெண்டு மூணு வருஷமா கலக்கிட்டு இருக்கீங்க நீங்க !

      Delete
  5. வாழ்த்துக்கள் சீனு... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா ! புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  6. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் mohan sir

    ReplyDelete
  7. திடங்கொண்டு போராடு சீனு-க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிமாறன்

      Delete
  8. Replies
    1. வாங்க ராஜசேகர் நன்றி

      Delete
  9. பாஸ் நானும் அதே ஆள தேர்ந்து எடுத்து இருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? பார்க்கிறேன்.

      Delete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துகள் பாஸ்கரன்

      Delete
  11. சபாஷ் சீனு....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம் சார் நன்றி

      Delete
  12. செல்வமும், செழுமையும் கொழிக்கட்டும்
    நலமும் வளமும் வளரட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துகள் ராஜி நன்றி

      Delete
  13. புத்தாண்டு வாழ்த்துகள் தேவதாஸ்

    ReplyDelete
  14. Binance is another cryptocurrency wallet which is being widely by people in recent time. But they keep going through the Binance Support Number unwanted issues such as Unable to login from different State, City & Country in Binance. Call up at the Binance customer service number +877-209-3306 expert team anytime and they will help with right solutions. Consult tech experts as soon as possible because delay may further bring inconveniences.

    ReplyDelete
  15. Blockchain is another cryptocurrency wallet which is being widely by people in recent time. But they keep going through the unwanted issues such as Unable to login from different State, City & Country in Blockchain. Blockchain Support Number Call up at the Blockchain customer service number +877-209-3306 expert team anytime and they will help with right solutions. Consult tech experts as soon as possible because delay may further bring inconveniences.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...