Monday, January 7, 2013

நீதானே என் பொன்வசந்தம் - கெளதம் மேனன் சறுக்கினாரா?

நீதானே என் பொன்வசந்தம் சற்று தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. இப்படத்துக்கு வந்த விமர்சனங்கள் பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களே. அரிதாய் ஆங்காங்கு ஒரு சிலர் படம் நன்று எழுதி கொண்டிருந்தனர். இத்தனை விமர்சனம் படித்த பின்னும் (அதிலும் நெகடிவ் விமர்சனம் அதிகம் வாசித்த பின்னும்) படம் நிச்சயம் என்னை கவரவே செய்தது !



மிக சாதாரண கதை: சிறு வயது முதல் காதலிக்கும் இருவர் - பற்பல சண்டைகள் -ஈகோ மோதல்களுக்கு பின் - இறுதியில் சேர்கின்றனர். அவுட் லைன் என்று பார்த்தால் "குஷி" பாணி கதை தான். ஆனால் குஷியுடன் ஒப்பிட்டால் அதனை விட நிச்சயம் இப்படம் பெட்டர் எனலாம். காரணம் கெளதம் மேனன் மேலோட்டமாக காதலை இங்கு அணுகவில்லை அக்கு வேறு, ஆணி வேறாக அலசுகிறார். வெவ்வேறு வயதில் காதலின் வளர்ச்சியை மிக இயல்பாக , அந்தந்த வயதின் பிரச்சனைகள், முட்டாள் தனங்களுடன் பிரதிபலிக்கிறார்.

கெளதம் மேனன் காதலித்தவர் என்பது மட்டுமல்ல, தன் நண்பர்கள் காதலை அருகில் இருந்து முழுமையாய் ரசித்தவர் என்பதும் தெளிவாய் தெரிகிறது.

பொதுவாய் பள்ளிக்கால காதலை திரையில் காட்டினாலே பிடிக்காத எனக்கு, இப்படத்தில் விரைவாய் கடந்து போகும் பள்ளி கால காதல் அதிகம் கோபப்படுத்த வில்லை.

கல்லூரி வந்த பின் அவர்களுக்கான உறவு, கல்லூரி முடித்த பின் வரும் மெச்சூரிட்டி, வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞன் மனது, அதனால் வரும் பிரிவு என முதல் பாதியில் குறை சொல்ல ஒன்றுமே இல்லை ! சினிமா காதல் போலன்றி நிஜ காதல் போல ரியலிஸ்டிக் ஆக தான் இருந்தது.

அந்த இடைவேளை காட்சி அட்டகாசம். ஜீவா வீட்டு மொட்டை மாடி -  படத்தில் ஒரு பாத்திரமாகவே வருகிறது. (ஒவ்வொரு காதலனுக்கும் மொட்டை மாடியில் எத்தனையோ நினைவுகள் புதைந்திருக்கும் ! தொடல், அழுகை, சிரிப்பு என பல வகை உணர்வை தரும் இடமாக பலருக்கும் மொட்டை மாடி இருந்து வந்திருக்கும். இப்படம் அதனை மிக அருகில் காட்டுகிறது !)

மீண்டும் அந்த இடை வேளை காட்சிக்கு வருவோம்.

ஜீவாவும், சமந்தாவும் பேசி கொள்ளும் இந்த காட்சியில் காமிரா தூரத்தில் இருந்து அவர்களை காட்டுகிறது. காட்சி முழுதும் காமிரா அவர்களுக்கு  மிக அருகில் வரவே இல்லை. ஆனால் மிக மெலிதாய் மேலும் கீழுமாய் காமிரா நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஊசலாடும் சமந்தா மனம் போலவே அக்காட்சி படமாக்கப்பட்டிருப்பது மிக அழகு. வசனங்களும் கூட இரு பக்க நியாயத்தையும் நேர்மையாய் அலசுகிறது. இந்த ஒரு காட்சியே போதும் கெளதமின் திரை ஆளுமை சொல்ல !

இடைவேளைக்கு பின் வரும் சந்தானத்தின் " விண்ணை தாண்டி வருவாயா" காதலில் சிரித்து நிமிர்ந்த பின் கதை வேறு தளத்துக்கு செல்கிறது.

சிறு பிரிவுக்கு பின் ஜீவா ஏதோ ஒரு கிராமத்தில் சேவை செய்யும் சமந்தாவை சந்திக்க செல்லும் காட்சி அப்படியே அலை பாயுதே படத்தின் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடல் காட்சியை நினைவூட்டுகிறது. கெளதம் அலை பாயுதே படத்தின் அந்த காட்சியிலிருந்து தான் நீதானே படத்தின் கதையை எழுத துவங்கினேன் என ஒப்பு கொண்டார் ! அந்த நேர்மைக்காக விட்டு விடுவோம் !

ஆனால் கதை லேசாய் நொண்டியது இங்கு தான். அவ்வளவு தூரம் தன்னை தேடி வந்து ஜீவா பார்க்கும் போது, சமந்தா அவ்வளவு கோபமாய் இருக்க வலுவான காரணமே இல்லை. ஜீவா தன் வேலையே போனாலும் போகட்டும் என அந்த ஊரில் பல வாரம் இருந்தும், ஒரு காலத்தில் உயிருக்குயிராய் காதலித்த சமந்தா தொடர்ந்து ஜீவாவை நிராகரிப்பதும், கோபப்படுவதும் ஏனோ மனதில் ஒட்டவில்லை.

மற்றபடி கதையை "விண்ணை தாண்டி வருவாயா" பாணியில் இருவரும் பிரிந்தனர் என சோகமாய் முடிக்க வாய்ப்பிருந்தும் நல்லபடி முடித்தது மகிழ்ச்சி.

ராஜா !

எப்படி சொல்லி பாராட்டுவது ! கடந்த ஐந்து வருடத்தில் ராஜாவின் பெஸ்ட் மியூசிக் (பாடல்களில்) இப்படத்தில் தான். 

துவக்கத்தில் அதிகம் பிடிக்காத சில பாடல்களும் கூட படத்தோடு பார்க்க மிக பிடிக்கிறது. பாடல்கள் அனைத்தையும் துண்டு துண்டாய் பிய்த்து போட்டார் என்பது ஒரு குறையே ஆயினும் , கெளதம் பாடல்கள் அனைத்தையும் கதையை நகர்த்தவே பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மூடில் வருகிறது. அந்த மூட் + அந்த காட்சி முழுதும் அப்பாட்டு வருகிறது. 

பல பாட்டுகள் படத்தில் பார்க்கும்போது மனது நெகிழ்ந்து போகிறது !

சமந்தாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிக தைரியமாய் சொந்த குரலில் பேசி உள்ளார். சின்ன சின்ன முக பாவங்கள் மாறும் விதம் - ரொம்ப அருமை. " காதலன் தான் தனக்கு எல்லாம் " என சொல்லும் பெண்ணின் உணர்வுகள் மிக சரியாய் திரையில் வந்துள்ளது. ஹீரோவுக்கு இணையாய்,  இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட பெண் பாத்திரம் தமிழ் சினிமாவில் படைப்போர் மிக அரிதே ! கெளதமுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் !

ஜீவாவை ஏன் பலரும் பாராட்ட/ கண்டுகொள்ள வில்லை என தெரியவில்லை. எனக்கு தெரிந்து ரொம்ப அழகான நடிப்பு இவருடையது . குரலை மாற்றி பேசியுள்ளார். நிஜத்தில் பெண்கள் தான் பல சண்டைகளில் இறங்கி போவார்கள். இங்கு ஜீவா எப்போதும் இறங்கி போவது சற்று ஆச்சரியமாக தான் உள்ளது. (இப்படியான ஆண்களும் ஆங்காங்கு இருக்கவே செய்வார்கள்)

சந்தானத்துக்கு ஸ்கோப் சற்று குறைவு எனினும் நிச்சயம் அவரது பல ஜோக்குகளுக்கு மனம்விட்டு சிரித்தேன்.

நிறைவாக:

"சிறுக சிறுக சித்ரவதை அனுபவிக்க நீங்கள் தயாரென்றால், காதல் சரியான வழி தான் "என ஒரு பழமொழி உண்டு. படம் சொல்வது காதலின் இந்த வலியை தான் !

நீதானே என் பொன்வசந்தம் - புறக்கணிக்கதக்க ஒரு படைப்பல்ல. எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவசியம் ஒரு முறை பாருங்கள்.

நான் நிச்சயம் இன்னும் சில முறை பார்ப்பேன் :)

****
அண்மை பதிவுகள்
விஸ்வரூபம்: எத்தனை பாடல் ஓகே? பாடல் விமர்சனம்

டிராபிக் & டயமன்க் நெக்லஸ் - 2 அற்புத மலையாள படங்கள் விமர்சனம்

41 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க.

    //நிஜத்தில் பெண்கள் தான் பல சண்டைகளில் இறங்கி போவார்கள்.//

    ஆனாலும் அய்யாசாமி அநியாயத்துக்கு Safer Side! :)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. பட விமரிசனம் நல்லா இருக்கு. எங்க ஊருக்கு வரும்போது பாக்கலாம்னுதான் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பூந்தளிர் பாருங்க

      Delete
  3. நானும் படத்தைப்பார்த்தேன் படம் பிடித்திருந்தது..உண்மையைக்கூறினால் இசைதான் படத்தை நாசமாக்கியது என்பதுதான் என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தோனுச்சு ! ஆச்சரியமா இருக்கு. கருத்துக்கு நன்றி நண்பா

      Delete
  4. சார் சமந்தா சொந்த குரலில் பேசி உள்ளார ? கௌதம் படங்களின் நாயகிகளுக்கு பெரும்பாலும் பாடகி சின்மயி தான் குரல் கொடுப்பார் . ARE U SURE MOHAN SIR?
    எனக்கு படம் பிடிக்கல சார்.ஒரே ஆறுதல் ராஜா.

    ReplyDelete
    Replies
    1. சொந்த குரல் என கூகிள் பிளஸ் சில் வாசித்தேன் சீன் கிரியேட்டர்; செக் பண்ணனும்

      Delete
  5. //எவ்வித எதிர்பார்ப்புமின்றி//
    இதுதான் பெரிய சறுக்கலுக்கு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. கரக்ட் தான் சேக்காளி

      Delete
  6. மிக அழகாக விமர்சனம் எழுதியிருக்கீங்க மோகன்.நெகடிவான விமர்சனங்களை படித்துவிட்டு உங்க விமர்சனத்தை படித்த பொழுது விதயாசமாக இருக்கு.எல்லாம் நம் பார்வையிலும் உணரும் விதத்திலும்தான் இருக்கு என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம்வி; தங்கள் வரிகள் மகிழ்ச்சி தருகிறது

      Delete
  7. நீங்கள் கூறிய அந்த மொட்டை மாடிக் காட்சி : ஜீவாவும் சமந்தாவும் பேசும் காட்சிகளுக்கு close up இல்லை. இதனால், காட்சியின் வலிமை குறைந்து போகின்றது. காதல் படம் என்று சொல்லி விட்டு, கடைசியில் ஒரு சாதாரண முறையில், பெண் ஆணிடம் கெஞ்சித்தான் காதலைப் பெற முடியும் என்று படத்தை முடித்து, பழைய பாணியில் கொடுத்த இப்படம் வரவேற்பு பெறாதது வரவேற்கத்தக்கதே.

    ReplyDelete
    Replies
    1. Nagarajan:

      "இதனால், காட்சியின் வலிமை குறைந்து போகின்றது." .. you are correct, i felt the same..

      Delete
    2. நாகராஜ் & வடிவேலன் : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து/ ரசனை இருக்கும் இல்லியா? உங்கள் கருத்து பலருக்கும் உள்ளது புரிகிறது

      அந்த காட்சியில் ஹீரோ- ஹீரோயின் ஒரே இடத்தில இருக்க மாட்டார்கள். முதலில் கட்டி அணைத்த படி பேச துவங்கி, பின் சமந்தா கோபித்து கொண்டு சுவர் பக்கம் போவார்; பின்னே ஜீவா வந்து சமாதானம் செய்வார் பின் ஜீவா கோபமாவார்; சமந்தா அவர் பின் செல்வார் இப்படி அவர்கள் உடல் அசைவையும் காட்டத்தான் கெளதம் இந்த முறை பின் பற்றினார் போலும்

      காமிரா ஒரு மௌன சாட்சியாக தூரம் இருந்து பார்க்கிற மாதிரி தோன்றியது; நானும் அந்த காமிரா மாதிரி ஒரு மௌன சாட்சியாக மொட்டை மாடியில் இருந்துள்ளேன் ஒரு நண்பனின் காதலில் !

      Delete
  8. பதிவுலகில் படத்திற்கு நெகடிவ் விமர்சங்கள் இருந்தாலும் தொ.கா. களில் 2012-இன் டாப் 10 படங்களின் வரிசையில் இது இருந்தது என்று நினைக்கிறேன்.

    முன்னரும் பதிவுலகில் சிலாகிக்கப்பட்ட படங்கள் (நந்தலாலா, ஆரண்யகாண்டம் போன்றவை) சரியாக போகாமல் இருந்க்துள்ளனவே!

    சில நேரங்களில் பதிவுலகின் கருத்திற்கும் பொது மக்களின் கருத்திற்கும் இடைவெளி இருக்கிறதோ?

    ReplyDelete
    Replies
    1. சீனி: நன்றி ; சில படங்கள் இரு வேறு வித கருத்தை (பாசிடிவ் மற்றும் நெகடிவ்) உண்டு செய்யும் இல்லையா? இது அத்தகைய படம் தான் ! வேறொன்றும் இல்லை

      Delete
  9. நிஜமாகவே நல்லா இருக்கா? அப்போ பார்க்கவேண்டிய படம் தான்!!!
    நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா; அதிக எதிர்பார்ப்பின்றி பாருங்கள்

      Delete
  10. மோகன்குமார், நிஜமாகவே எனக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது

    ReplyDelete
  11. நான் ஒரு சினிமா ரசிகனோ, விமர்சகனோ அல்ல. ஆனாலும், நான் முதன்முதலாக ஒரு திரைப்படத்தை பற்றி எழுதியது இப்படம் குறித்துதான்.

    நிச்சயமாக இது ஒரு மிகச்சிறந்த திரைப்படம். ஒரு படம் பார்த்த பின்பும் அதன் தாக்கம் நம்முள் இருந்தால் அது நல்ல படம் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தப்படம் பார்த்தபின்பு பல நாட்களுக்கு அதன் தாக்கம் என்னுள் இருந்தது.

    ஆனாலும், பலரும் இதனை மோசமான படம் என்று குறிப்பிட்டது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

    சமந்தாவின் நடிப்பு மிக அற்புதம். இணைசொல்ல வாய்ப்பே இல்லை.

    எனது கருத்தையும் பாருங்களேன்:

    "நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!"

    http://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.html

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி அருள்; தங்கள் விமர்சனம் வாசித்தேன் அருமை

      Delete

  12. "///சிறுக சிறுக சித்ரவதை அனுபவிக்க நீங்கள் தயாரென்றால், காதல் சரியான வழி தான் // அப்ப பெருக பெருக சித்ரவதை அனுவிக்க நீங்கள் தயாரென்றால் கல்யாணம்தான் சரியான வழியா?

    ReplyDelete
    Replies
    1. உஸ்ஸ் !பப்ளிக் ! பப்ளிக் !

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. வெளியேதெரியாமல் அமுங்கிப்போன சில நல்ல படங்களை தேடிப்பிடித்து பார்க்கவைத்தவர்கள் நம் இணையதள விமர்சகர்கள் (உதாரணம் லீலை, விண்மீன்கள்...) இவர்கள் விமர்சனம் தரமானது, உண்மையானது. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தரமான படங்களுக்கு 45 மதிப்பெண்னும், குப்பை படங்களுக்கு 42 மதிப்பெண்னும் வாரி வழங்கும் வருமான விசுவாசம் இங்கே இருக்காது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்த நீதானே என் பொன் வசந்தத்திற்கு இவர்களின் எதிர்மறையான விமர்சனம் படத்தின் மீதான எனது ஆர்வத்தை குறைத்துவிட்டது. அம்மன நிலையிலேயே படத்தை பார்த்தேன். ஆனால் படம் ஓட ஓட என்னை முழுதும் ஆக்ரமித்துவிட்டது. படம் முடிந்தும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை. சமந்தா- சமகால நடிகைகளிடம் இல்லாத ஒரு ஈர்ப்பு. கணகள் முழுவதும் காதல். காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers. என்ன ஆச்சி உங்களுக்கு. சறுக்கியது கௌதம் அல்ல திரு.மோகன், ரசிகர்கள்தான்.

    ReplyDelete
  15. @Prabhu Shankar

    நான் நினைப்பதை நீங்கள் அப்படியே கூறியுள்ளீர்கள். நன்றி

    "காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers."

    "நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!"

    http://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.html

    ReplyDelete
  16. தங்களின் விமர்சனம் படித்தேன் அருள். மிக அருமை. இதைபோன்ற படங்களுக்கு ஆதரவு தராத நம் மக்களை நினைத்து வருந்துவதை தவிற வேறு என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. @Prabhu Shankar

      நன்றி. அடுக்குமொழி வசனங்களுக்கு ஆ'வென்று வாய்பிளக்கும் கூட்டமாகவே தமிழ் நாட்டு மக்கள் இன்னும் இருக்கின்றனர்.

      "நீதானே என் பொன்வசந்தம்" போன்ற படங்களை சட்டென்று புரிந்துகொள்ளும் அளவுக்கு ரசனையும் - கண், காதின் திறனும் வளரவில்லை போலிருக்கிறது.

      கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் சொன்னது போல, கௌதம் மேனனின் படத்தை உள்வாங்கும் திறன் ரசிகர்களுக்கு இல்லை என்பதே உண்மை. இப்படத்தை மோசம் என்று சித்தரித்த விமர்சனங்களைத் தான் என்னால் சகிக்க முடியவில்லை.

      Delete
  17. padam nallaarukkuppa.enakku romba pudichirukku.

    ReplyDelete
  18. பாவத்தைக் கழுவியதா ஆனந்த விகடன்: சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது!

    http://arulgreen.blogspot.com/2013/01/Samantha-Vikatanawards.html

    ReplyDelete
  19. முக்கிய பிரச்சினை நமது வலைத்தள விமர்சகர்கள் எதைத்தான் தமிழ் திரைப்படத்தில் எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான். தமிழ் பதிவர்களை பொருத்தவரை ஒரு எதிர்பார்ப்போடு படத்துக்கு செல்வார்கள் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி கதை இல்லாது வேறு வடிவில் இருந்தால் அந்த படத்தை ஈவு இஇரக்கம் இல்லாமல் விமர்சித்து தள்ளி விடுவார்கள்.

    கெளதம் மேனனின் சிறப்புகளில் ஒன்று தனது படங்களில் பெற்றோரை கொடூர வில்லன்களாக காட்ட மாட்டார். நீஎபொ இலும் அவ்வாறு இல்லை. வாரணம் ஆயிரம் படத்திலும் இல்லை.
    "கதாநாயகி தனது காதலை சொல்லும் போது தனது அப்பாவுக்கும் உன்னை பிடிக்கும் என்றே சொல்கிறாள்"
    http://www.youtube.com/watch?v=Hb8S-MFpPSM

    VTV லும் ஜென்னி யின் பெற்றோரின் எதிர்ப்பு இருந்தாலும் அவர்களை கொடூர வில்லன்களாக காட்டவில்லை. ஆனால் பெற்றோரின் விருப்பின்மை அவர்கள் பார்வையில் நியாயமானதாக தோன்றும்.

    "அவர் ஒரு சென்னைப் பெண்." அவர் தமிழ் பெண் அல்ல. தெலுங்கு மலையாள பெற்றோருக்கு பிறந்த பெண்.

    ReplyDelete
  20. kumudini சொன்னது…

    // //அவர் தமிழ் பெண் அல்ல// //

    அடையாளச் சிக்கலுக்கு என்னால் விளக்கம் சொல்ல முடியாது. அது தேவையும் இல்லை. ஏனெனில், 'தமிழ் பெண்' என்கிற வார்த்தை மிகவும் குழப்பமானது. அதற்கு விடைதேட நம்மால் முடியாது என்றே நினைக்கிறேன். (இதற்கு மேல் பேசினால் யாராவது அடிக்க வருவார்கள்).

    இந்த வம்பு எனக்கு வேண்டாம் என்பதால் தான், சமந்தா ஒரு 'தமிழ்நாட்டுப் பெண்' 'சென்னைப் பெண்' என்று கூறினேன்.சமந்தா ஒரு தெலுங்குப் பட நடிகை என்று சொல்வது எளிது.

    'தமிழ் பெண்' என்பது ஒரு தேசிய இன அடையாளம் என்று எடுத்துக்கொண்டால், 'தேசிய இன அடையாளத்தை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு' என்கிற அடிப்படையில், சமந்தா ஒரு தமிழ்ப் பெண் என்று கூறலாம்.

    ஏனெனில், அவரை அவரே அப்படித்தான் கூறிக்கொள்கிறார்.

    "Samantha is from Chennai; her mother is a Malayali, her father speaks Telugu, and she insists she's a Tamilian." (The Hindu, 1.3.2010)

    http://www.thehindu.com/arts/cinema/article124253.ece

    சரி, எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி!

    ReplyDelete
  21. மிகவும் அருமையான படம். கௌதம் படங்களில் சிறந்த படம் இதுதான்.
    ராஜாவின் இசை தான் படத்தின் பெரிய பலம் என்பேன்.
    பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் தேவைகேற்ப காட்சிகளுடன் இணைத்திருப்பது இது ராஜாவின் படமா என்று ஞாபக படுத்தாமல் படத்தை ரசிக்க வைத்திருக்கும் நேர்த்தி சொன்னால் புரியாது.
    மெல்ல மெல்ல நம் மனதை அள்ளும் விதம் படத்தை பார்க்கும் பொது புரியும்.நா.முத்துகுமார் பாடல்வரிகளும் மனதோடு விளையாடும் விதம் அருமை.சமந்த + ஜீவாவின் நடிப்பும் அழகு.
    நீ தானே பொன் வசந்தம் ஏமாற்றவில்லை.

    ReplyDelete
  22. இவ்வளவு தாமதமாக இப்போது தான் பார்த்தேன் இப்படத்தை. மிக அற்புதமான படம்
    இது யாருக்கு போய் சேரும் என்றால் திருமணமாகி சில ஆண்டுகள் அடி பட்ட இரு பாலருக்கும் .. (மற்றவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படாது )
    ஜீவா வேலைகளை விடுத்து சென்று கெஞ்சும் போது பெண் பல தன் தரப்பு நியாயங்களை பேசி அமைதி அடைந்து சேர மறுக்கின்றார். இதில் சிலர் குறை காண்கின்றனர் ...பெண்ணின் குணாதிசயமே இது தான்.. ஆனால் பெண் பின்பு சொல்கிறார், 'நான் பேசினாலும் , நீ என்னை போக விட்டு போய் இருக்க கூடாது ' என்று.. ஆக இது ஒரு வகை முரண்டு பிடித்தல் கடைசி வரை .. பெண்களின் எல்லை மிக அதிகம்.. ஆண் அவ்வளவு பிடிவாதமாக இருப்பதில்லை பொதுவாக. அவர்கள் உங்களை சாட , நீங்கள் கேட்டு கொள்ள வேண்டும்...ஓடி போக கூடாது..முடிந்தவரை படத்தை ஒரு சார்பாக காட்டாமல் படத்தை எடுத்துள்ளார் .
    இசை அதி அற்புதம்.. வேறு யாரும் இவ்வளவு உணர்ந்து இசை தர முடியுமா? பாடல் ஆசிரியர் அதனினும் ஒரு படி மேலே நிற்கிறார். வரிகளில் அவ்வளவு கதையை ஒட்டிய கருத்துகள் "காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்ன சின்ன தலைகனமே , காதல் அதை பொறுக்கனுமே..."

    ReplyDelete
  23. நான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றிதான் நீ தானே என் பொன்வசந்தம் படம் பார்த்தேன் ஆனால் இப்போது பலமுறை பார்த்துக் கொண்டே இருக்க வைத்து விட்டது. இந்த படத்தை குறை சொல்பவர்களின் காரணம் மற்ற காதல் படங்களை சேர்த்து வைத்து இதனை பார்ப்பது தான் காதலின் வலி புரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த படம் எவ்வுளவு பெரிய பொக்கிஷம் என்று புரியும். அவர்களால் மட்டுமே ஒரு ஒரு காட்சியையும் ரசிக்க முடியும். பாடல்கள் பற்றி குறை கூற என்ன இருக்கிறது. காட்சியோடு இணைத்து ஒன்றி பார்க்கும்போது தான் அதன் தாக்கத்தை (feel) உணர முடியும். கெளதம் ஒரு ஒரு காட்சியையும் செதுக்கி எடுத்திருக்கிறார் காதலின் உச்சகட்ட வலியினை இறுதிக் காட்சியில் கொடுத்து மறக்க முடியாத படமாக்கி விட்டார்.

    ReplyDelete
  24. கௌதமின் முந்தைய படங்களை பார்த்த அனைவருக்கும் தெரியும் அதில் கண்டிப்பாக சண்டை காட்சிகள் இருக்கும் அது இல்லாமல் எடுத்திருக்கும் முதல் படம் இது அவர் முந்தைய படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பிரம்மாண்டம் இருக்கும் இதிலும் உண்டு அது காதல். அது மட்டும் தான் இதில் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. வாரணம் ஆயிரம் action மற்றும் காதல் கொண்டது ஆனால், இது காதல் மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டது கௌதமின் மற்ற படைப்புக்களை வைத்து இப்படத்தை பார்க்காமல் தனியாக பார்பவர்கள் ரசிக்க முடியும். நான் திரையரங்கில் படம் பார்த்து விட்டு வெளியில் வரும் போது கண்டிப்பாக ஒரு 60 வயதை தொட்ட ஒருவர் யாரும் பார்த்துவிடாமல் தேம்பி அழுது கொண்டிருப்பதை கண்டேன் காரணம் அவர் வாழ்வில் அவர் கடந்த நாட்களை நினைவு படுத்திவிட்டது. சுருக்கமாக சொன்னால் காதலை காதலாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு இந்த படம் சாதாரணமாக மட்டுமே தெரியும். காதலை அனுபவித்து வாழ்ந்து அது வெற்றியோ, தோல்வியோ, அதனை அடைந்தவர்கள் மட்டுமே உணர்வுபூர்வமாக ரசிக்க முடியும்.
    நன்றி.....

    ReplyDelete
  25. காதல் உள்ளவர்கள் அனைவரின் உள்ளத்திலும் ஜீவா (வருண்), சமந்தா (நித்யா) என்ற கதாபாத்திரங்கள் நிச்சயம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். பெண்களுக்கு என்று காதல் சோக பாடல் மனதில் நிலைக்கும் என்றால் அது "முதல் முறை பார்த்த நியாபகம்" பாடல் என்றும் மறக்காது.

    ReplyDelete
  26. இந்த படத்தில் இறுதி காட்சியில் வரும் வசனம் "நமக்குள்ள சண்ட வரப்பலா நான் ஒன்னு செஞ்சுருகனும் (முத்தம்) அத பண்ணல அதனாலதான் இவ்வுளவும்" என்று கூறும்போது படத்தின் கருத்து தெளிவாக வெளிபடுகிறது. எத்தனை சண்டை வந்தாலும் யாரது ஒருத்தர் விட்டு குடுத்து போனால் போதும் பல வருட உயிர் வலியினை உண்டாக்கும் பிரிவினை இது தவிர்த்திடும் என்பதே. கெளதம் YOU ARE REALLY GREAT

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...