Saturday, May 28, 2016

ஜாலியான சிம்லா பயணம்- எங்கள் ஹோட்டல் + குப்ரி + கிரீன்வேலி

சிம்லா சென்று இறங்கியதும் போர்ட்டர்கள் போல் உள்ள கமிஷன் ஏஜண்டுகள் நம்மை மொய்க்கிறார்கள். "ரூம் வேணுமா?" என கேட்டு ! ரூம் போட்டாச்சு என்று சொன்னாலும் ஹோட்டல் பேர் கேட்டு விட்டு " அங்கேயா ரூம் போட்டுருக்கீங்க? அது வேஸ்ட். ரொம்ப தூரம் இருக்கு " என்று நம் மனதை கலைக்க பார்க்கின்றனர். " நல்ல ஹோட்டலுக்கு நான் கூட்டி போகிறேன் " என்று மொய்க்கிற இவர்களை தவிர்த்து விட்டு வெளியே வந்தால் அரசாங்கமே ஆட்களை நியமித்து காருக்கு குறிப்பிட்ட தொகை மட்டும் தந்து உங்கள் ஹோட்டலில் இறக்கி விட வழி செய்துள்ளது.

சிம்லாவில் உள்ள ஒரு அரசாங்க அலுவலகம்

சிம்லா முழுதும் ஆட்டோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு நீங்கள் ஆட்டோவை பார்க்கவே முடியாது. இதனால் எங்கு போனாலும் காரில் தான் போகணும். காருக்கு குறைந்தது (Minimum amount) நூறு ரூபாய் வாங்குகிறார்கள். 

சிம்லாவில் லோக்கல் டூர் ட்ரிப் அடிக்க ஹிமாச்சல் டூரிசமே ஏற்பாடு செய்கிறது. ஒரு நாளில் குப்ரி மற்றும் செயில் பேலஸ் ஆகிய இடங்களை இவர்கள் சுற்றி காட்டுகிறார்கள். அப்படி ஒரு நாள் டூரில் தான் நாங்கள் சிம்லாவின் இடங்களை சுற்றி பார்த்தோம்.

சிம்லாவில் நாங்கள் பார்த்த சில இடங்களை ஒவ்வொன்றாய் பார்ப்போம்

குப்ரி

                            

குப்ரி என்ற இந்த இடம் சிம்லா சென்ற பலரும் செல்வார்கள். உண்மையில் இங்கு பெரிதாய் ஒன்றுமில்லை. குதிரைகள் நிறைய இருக்கும் மலைப்பாங்கான இடம் அவ்வளவு தான்.

குப்ரி யை நெருங்கும் போதே ஏராள குதிரைகள் இருப்பதை கண்கள் மட்டுமல்ல மூக்கும் காட்டி கொடுத்து விடுகிறது (கப்பு தான் !)

குப்ரியில் சில பஸ்கள் மேலே வரை செல்லும். சில பஸ்களோ குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி விட்டு அதன் பின் குதிரையில் போக சொல்வர். உண்மையில் பஸ் மேலே ஏறும் வரை அனுமதியும் வசதியும் உள்ளது. ஆனால் குதிரை காரர்களுக்கு வருமானம் வேண்டும் என்கிற "ஒப்பந்தத்தில்" தான் இப்படி பாதியில் பஸ்ஸை நிறுத்துவது. குதிரை மேல் ஏறி போவதில் விசேஷமா ஏதும் இல்லை !  குதிரை சவாரி செய்வது எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதை தவிர.

குப்ரி கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் உள்ளது

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் இங்கு தான் கையெழுத்தானது 
இந்தியா பாகிஸ்தான் இடையே 1971-ல் போர் நடந்தது. 1972-ல் போர் நிறுத்தம் நிகழும் போது இங்கு தான் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திராவும் பாகிஸ்தான் அதிபரும் இங்கு கையெழுத்திட்டனர்.

உள்ளே சிறு கார்டன் மற்றும் மேற்சொன்ன சரித்திர பிரசத்தி பெற்ற இடத்தை காண டிக்கெட் ஐந்து ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.

இந்த இடத்தில் எடுத்த வீடியோ இதோ



சிறுவர்கள் விளையாட கம்பியூட்டர் கேம்ஸ் இங்கு உள்ளன.

                                           


இங்கு ஒரு Zoo கட்டி கொண்டுள்ளனராம்.விரைவில் திறக்க படலாம்

இங்கு இந்த இடதிற்கென சிறப்பு மிக்க சில பழங்கள் விற்கப்படுகின்றன. அவற்றின் பெயர்கள்: செர்ரி, ஆப்ரிகார்ட், காபல் ஆகியவை. இதோ இந்த படத்தில் அந்த பழங்களை பாருங்கள்

                       

சைனாவிலிருந்து நிறைய பொருட்கள் இங்கு கொண்டு வந்து விற்கப்படுகின்றன.


சைனா பசார் என்ற பெயரில் கடைகள் உள்ளன. கீ செயின் கிளிப் போன்ற சமாச்சாரங்கள் இங்கு வாங்கினர். இந்த இடம் சிம்லாவிலிருந்து மலை மேல் உள்ளதால், நாம் பொருட்களை சிம்லாவில் வாங்குவதே புத்தி சாலிதனம். இங்கு சிம்லாவை விட விலை அதிகம் இருக்க வாய்ப்பு அதிகம்

குப்ரியில் நின்ற போது எங்கள் பஸ்ஸில் வந்த ஒரு இளம் ஜோடி பாரில் சென்று புகுந்தது. பின் நிதானமாக, தாமதமாக வந்து சேர்ந்தது. பெண்ணுக்கு அப்புறம் வழியெல்லாம் வாந்தி ! மலை பிரதேசத்தில் நல்ல நேரத்திலயே குமட்டும் ! இதில் ஆல்கஹால் வேறு சாப்பிட்டால் என்ன ஆவது?

நாங்கள் லோக்கல் டூர் சென்ற பஸ் 

குப்ரி செல்லும் வழியில் கிரீன் வேலி என்கிற இடம் உள்ளது. முழுக்க மரங்கள் சூழ்ந்து பச்சையாக இருப்பதால் இந்த பெயர்.


இங்குள்ள மரங்களின் பெயர் தேவதார் மரங்கள் என்பதாகும்.
இங்கு எடுத்த வீடியோ:


சிம்லா முழுவதுமே "Yak " என்று சொல்லப்படுகிற இந்த மிருகம் மிக பேமஸ். பல இடங்களிலும் இது நிற்கும். இதன் மீது அமர்ந்து போட்டோ எடுத்து கொள்ள பலரும் விரும்புவார்கள். அப்படி ஏறி போட்டோ எடுக்க ஒரு ரேட், வீடியோ எடுக்க ஒரு ரேட். அதன் மீது அமர்ந்து ரவுண்ட அடிக்க தனி காசு.



மேலே நாம் எடுத்த போட்டோ மற்றும் வீடியோ இதோ:


ஹோட்டல் சுக் சாகர்

நாங்கள் தங்கிய ஹோட்டலை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஹோட்டல் சுக் சாகர் !

Rs. 1400 முதல் இரண்டு பெட் ரூம் அறைகள் கிடைக்கிறது. நிச்சயம் ஒரு டீசன்ட் ஹோட்டல். உணவும் நன்கு உள்ளது. புபே விலை இருநூறு ரூபாய். இது அதிகம் என நினைத்தால், உணவுகள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஒரு நாள் புபேயும் மறுநாள் ஆர்டர் செய்தும் சாப்பிட்டோம், ஆர்டர் செய்து சாப்பிடுவது சீப்பாக உள்ளது. சப்பாத்தி மற்றும் அதற்கான சைட் டிஷ் மிக அருமை


இரண்டு சீக்கியர்கள் தான் இதற்கு ஓனர்கள். இருவரும் எப்போதும் ஹோட்டலில் இருந்து வியாபாரத்தையும் வாடிக்கையாளர்களையும் கவனிக்கிறார்கள். இதனாலேயே ஹோட்டல் நிர்வாகம் நன்கு உள்ளது. இரவு பத்தரை, பதினோரு மணி வரை இருந்து விட்டு அப்புறம் தான் கிளம்புகிறார்கள்.

புபேயில் சாப்பிடும் போது, இவர்களில் ஒருவர் வந்து " வேறு ஏதும் வேணுமா?" என பல முறை நம்மிடம் கேட்டு உபசரித்தார்.

ஐஸ்கிரீம் குறிப்பாய் மில்க் கிரீம் செம சூப்பராக இருந்தது.

இந்த சீக்கியர்களிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன்

" நீங்க தான் ஓனரா சார்?" என்றதும், "கடவுள் தான் ஓனர். நாங்க அவரோட வேலை காரர்கள்" என்றார் செண்டிமென்ட்டாய்"..!

33 comments:

  1. யாக் மேல உக்காந்து அருமையா போஸ் கொடுக்கறீங்க!
    நாளை:முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசைப் பின்னடைவு- காரணம் என்ன? தலைப்பை இணைச்சிட்டேன்.

    ReplyDelete
  2. ’யாக்’கின் மேலே - படம், கையில் ஒரு கயிறும், தலையில் ஒரு கிரீடமும்தான் குறை!! :-))))))))))))

    குப்ரி குதிரைகள் குளித்தே பலவருஷம் இருக்கும்போல இருக்கு. அதான் கப்பு அடிச்சிருக்கு!!

    சிம்லாவில் ஆட்டோ இல்லை என்பது புது தகவல். சீக்கியர்களின் தொழில் பக்தியும், பணிவும் ஆச்சர்யம். சின்ன அளவில் பிஸினஸ் செய்றவங்ககூட, தன்னை ‘முதலாளி’ ‘யாரிடமும் கைகட்டத் தேவையில்லாதவன்’ என்று சொல்லிக்கொள்ளும் உலகில், இதுபோல் பார்ப்பது மிக அரிதானது.

    ReplyDelete
  3. போடோக்கள் அருமை

    நல்ல விமர்சனம்.சினிமா பார்ப்பது போல இருந்தது

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. குப்ரி, குதிரைச்சவாரி, யாக் எனப் பயணித்தோம். இனிய பயணம்.

    ReplyDelete
  5. yak சவாரி நல்லா இருக்கே!!!!!!

    அடடா.... யாக் எங்களை இப்படி மிஸ் பண்ணிருச்சே:(

    ReplyDelete
  6. அஹ்ஹா உங்களுடன் சிம்லா பார்த்ததுபோல் உள்ளது பதிவு.

    என்னுடைய வலைப்பூவில் இன்று பயணக்கட்டுரை-பிரான்ஸ்
    http://www.kummacchionline.com/2012/08/francepix.html

    ReplyDelete
  7. \\அப்படி ஏறி போட்டோ எடுக்க ஒரு ரேட், வீடியோ எடுக்க ஒரு ரேட். அதன் மீது அமர்ந்து ரவுண்ட அடிக்க தனி காசு. \\ ஏனோ தெரியல, இது ஒரு சாமியாரை எனக்கு ஞாபகப் படுத்துது!!

    \\
    ஹோட்டல் சுக் சாகர் \\ அந்த தங்குமிடத்தின் தொலைபேசி எங்களை வெளியிடலாமே!!

    \\" நீங்க தான் ஓனரா சார்?" என்றதும், "கடவுள் தான் ஓனர். நாங்க அவரோட வேலை காரர்கள்" என்றார் செண்டிமென்ட்டாய்"..!\\ இது செண்டிமென்ட் இல்லை சார், உண்மை, இதைப் புரிஞ்சுகிட்டாலே வாழ்க்கை வெற்றி தான்!!

    ReplyDelete
  8. ஆகா.. அருமையான பதிவு. சிம்லாவிற்கு கூடவே வந்தது போல இருக்கே.. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  9. பல தகவல்களை உள்ளடக்கிய நல்ல பதிவு. நன்றிகள்.

    ReplyDelete
  10. பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...

    படங்கள் அருமை... நன்றி... (TM 10)

    ReplyDelete
  11. தகவல்களும் படங்களும் நன்று.

    ஐநூறு ஆயிரமாகட்டும். வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. #சைனாவிலிருந்து நிறைய பொருட்கள் இங்கு கொண்டு வந்து விற்கப்படுகின்றன.#

    பாவிபய சைனாக்காரன் ஒரு இடத்தையும் விடமாட்டான் போல ...பயணக்கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது ..நன்றி

    ReplyDelete
  13. அருமையான கட்டுரை... சிம்லா என்றாலே எனக்கு அன்பே வா MGR படம் தான் நினைவிற்கு வரும்.

    ReplyDelete
  14. சுற்றுலா அனுபவங்கள் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete

  15. ஹுஸைனம்மா said...

    ’யாக்’கின் மேலே - படம், கையில் ஒரு கயிறும், தலையில் ஒரு கிரீடமும்தான் குறை!!
    **
    என் வக்கீல் நண்பர் ஒருத்தர் போன் பண்ணி " உன்னை ஒருத்தர் எமதர்மன் மாதிரி போஸ் குடுதுருக்கேன்னு கிண்டல் பண்றாங்களே" அப்படின்னு இப்போ தான் கலாய்ச்சார் ; உங்க பின்னூட்டம் எங்கெல்லாம் போயிடுச்சு பாருங்க !!

    ReplyDelete
  16. நன்றி மாதேவி

    ReplyDelete
  17. துளசி கோபால் said
    ...
    அடடா.... யாக் எங்களை இப்படி மிஸ் பண்ணிருச்சே:(

    *********
    க்க்கும் ! டீச்சர் செய்யாத சாதனையை மாணவன் நான் செஞ்சிருக்கேனாக்கும் !

    ReplyDelete
  18. நன்றி கும்மாச்சி வாசிக்கிறேன்

    ReplyDelete
  19. Jayadev Das said...


    \\ஹோட்டல் சுக் சாகர் \\ அந்த தங்குமிடத்தின் தொலைபேசி எங்களை வெளியிடலாமே!!

    ****
    சிம்லா குளு பிளான் செய்வது எப்படி என்கிற பதிவிலேயே Hotel Phone No போட்டு விட்டேன். மறுபடி வேண்ணா இங்கும் சேர்த்துடலாம்

    ReplyDelete
  20. அட பவள சங்கரி மேடம் அதிசயமா இந்த பக்கம் நன்றி

    ReplyDelete

  21. நன்றி சீனி நீங்க சிம்லா போயிருக்கீங்களா? இல்லை என நினைக்கிறேன் இல்லாட்டி சில அடிஷனல் தகவல் சொல்லிருப்பீங்க

    ReplyDelete
  22. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  23. நன்றி ராமலட்சுமி மேடம்

    ReplyDelete
  24. ஹாஜா மைதீன்: ஆமாங்கோ நன்றி

    ReplyDelete
  25. சமீரா: ஆம் நாங்களும் அந்த படம் பற்றி அங்கு போன போது பேசி கொண்டிருந்தோம்

    ReplyDelete
  26. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  27. இனிய பகிர்வு...

    //" நீங்க தான் ஓனரா சார்?" என்றதும், "கடவுள் தான் ஓனர். நாங்க அவரோட வேலை காரர்கள்" //

    அதானே உண்மை... அவர்களுக்குப் புரிந்திருப்பது இன்னும் பலருக்குப் புரியவில்லை....

    ReplyDelete
  28. அருமை..... Mohan

    ReplyDelete
  29. அருமையாக சுற்றிக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி!

    ***

    //
    " நீங்க தான் ஓனரா சார்?" என்றதும், "கடவுள் தான் ஓனர். நாங்க அவரோட வேலை காரர்கள்" என்றார் செண்டிமென்ட்டாய்"..! //

    அடடா, அருமை!! உண்மைதான், எனது சீக்கிய நண்பர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள்.. நாம்தான் சர்தார்ஜி ஜோக்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறோம்!!

    ReplyDelete
  30. படங்களும் பகிர்வும் அருமை. Followers 500 க்கு மேல்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. உடன் பயணித்த உணர்வு
    அருமை

    ReplyDelete
  32. மோகன் ஜி, சிம்லாவில் சுற்றி பார்க்க இடங்கள் ரொம்ப கம்மியோ? சென்னையிலிருந்து எப்படி போனீர்கள்? அதன் பயண விவரம் தெரிவிக்கவும்...

    ReplyDelete
  33. அருமை நண்பரே எந்த மாதம் செல்லலாம்.நாங்கள் ஜுலை மாதம் செல்லாமல் என்று திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...