Thursday, January 31, 2013

கடல் பாடல்கள்: AR ரகுமானின் மாஸ்டர் பீஸ்.. ஆடியோ + விமர்சனம் !

ணிரத்னத்தின் கடல் நாளைக்கு வெளியாகிறது.

Draft-ல் கொஞ்ச நாள் தூங்கி விட்டு இன்று வெளியாகிறது பாடல் விமர்சனம் !

மொத்தம் 7 பாட்டு இருக்கு. நிச்சயம் 3 அல்லது 4 பாடல்கள் Outstanding!

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இயற்றியவர்: வைரமுத்து

ஆல்பத்தில் முதலில் ரிலீஸ் ஆனது இந்த பாட்டு தான். அனைவரும் இப்பாட்டை ஆஹோ ஓஹோ என சிலாகிக்க, சற்று எதிர்பார்ப்போடு கேட்டதாலோ என்னவோ அதிகம் கவரலை. பின் மற்ற பாடல்களும் வந்து சேர - இப்போ "நெஞ்சுக்குள்ளே " - ஸ்ட்ராங்காய் உள்ளிறங்கி விட்டது.



பொதுவாய் ஆண்களுக்கு, ஆண் குரல்  பாடும் பாடல்களும், பெண்களுக்கு பெண் குரல் பாடும் பாடல்களும் தான் அதிகம் பிடிக்கும் என நினைக்கிறேன். காரணம் காதல் பாடலை நம் மனதுக்கு பிடித்தவரை நினைத்து கொண்டு கேட்கிற பழக்கம் எதோ ஒரு காலத்தில் நம்மிடம் வந்து ஒட்டி கொள்கிறது. எனக்கு மிக பிடித்த பெண் குரல் தனி பாடல்கள் மிக குறைவாக தான் இருக்கும். அந்த லிஸ்ட்டில் இணைகிறது இப்பாடல்.



பாடல் முழுக்க முழுக்க ரகுமான் மேஜிக் தான். மயக்கும் துவக்க இசை, ஊஞ்சலாடும் மெட்டு, அர்த்தமுள்ள வரிகள், இனிய குரல்.. என நெஞ்சை நிறைக்கிறது. கேட்டு பாருங்கள்....!

அன்பின் வாசலிலே

பாடியவர்: ஹரிசரண்
இயற்றியவர்: மதன் கார்க்கி

பம்பாய் உள்ளிட்ட படங்களில் ரகுமான் இசையில் கேட்ட வேறு சில பாடல்களை நினைவு படுத்துது. பெரிதாய் கவரவில்லை என்று தான் சொல்லணும்

எலேய் கீச்சான்

பாடியவர்: AR ரகுமான்
இயற்றியவர்: மதன் கார்க்கி

ரகுமான் இசை அமைத்து பாடியுள்ள இந்த பாட்டு கடல் வாழ்க்கையையும் காதலையும் ஒரு சேர நமக்கு அறிமுகம் செய்கிறது. மீண்டும் ஒரு அட்டகாச மெட்டு ! ரகுமான் ரொம்ப என்ஜாய் செய்து பாடியிருக்கிறார்.



ஆரம்பத்தில் கேட்கையில் பாடல் வரிகள் முழுசாய் புரியவில்லை. இது ஒரு குறை தான். இதை மீறி இப்பாட்டை ரசிக்க ஒரு எளிய வழி உண்டு.

பாட்டை சிஸ்டத்தில் ஓட விட்டு,  காதில் கேட்ட படியே, இந்த லிங்கில் பாடல் வரிகளை ஒரு முறை மட்டும் படித்து பாருங்கள். உங்களை அறியாமல் முகத்தில் சிரிப்பலை பரவும். அடுத்த முறை பாடல் வரிகளை படிக்க வேண்டாம். பாட்டு கேட்கும் போதே ரசிக்கலாம்



"வா..... லே ... கொண்டா .. லே கட்டுமரம் கொண்டா....லே
குண்டு மீனை அள்ளி வர கொண்டா...லே " என கோரஸ் பாடும் இடமும், "

"ஒரு ஒரு தரம் உரசுற; பொசுக்குன்னு உசுரை உசுப்புற " என்று ரகுமான் பாடும் இடமும், மிக மெதுவாய் பாடல் முடிவதும் இப்போதைக்கு பிடித்தமான இடங்கள்.

வந்தாச்சு என்பதை முழுசாய் சொல்லாமல் வந்தாச் என ரகுமான் சொல்லி போவது அழகு :)
*****
மகுடி மகுடி

பாடியவர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்னம், சின்மயி
இயற்றியவர் : ஆர்யன் தினேஷ் கனகரத்னம்

ஸ்பீடாக போகிற வித்யாசமான பாட்டு. மகுடி மகுடி என்கிற வார்த்தைகளே மறுபடி மறுபடி ஒலிக்கிறது. நடுவில் சின்மயி கொஞ்சம் பேசுகிறார் (ஆம் பேசுகிறார்). வித்தியாச பாட்டு என்கிற அளவில் மட்டும் தான் இப்போதைக்கு வைக்க முடிகிறது

மூங்கில் தோட்டம்

பாடியவர்: அபை ஜோத்புரக்கர், ஹரிணி
இயற்றியவர்: வைரமுத்து

நண்பர் ரகுவிடம் சில வாரம் முன் பேசும்போது கேட்டார் " கடல் பாட்டு கேட்டீங்களா? எப்படி இருக்கு? " " நெஞ்சுக்குள்ளே தான் இப்போதைக்கு புடிக்குது" என்று நான் சொல்ல, " என்ன இப்படி சொல்லிட்டீங்க? மத்த பாட்டும் கேளுங்க .. அட்டகாசமா இருக்கு " என்றார். மற்ற பாட்டுகள் நெஞ்சுக்குள்ளே பாட்டை பீட் செய்ய முடியும் என்று அவர் சொன்னதை என்னால் ஏற்கவே முடியவில்லை.. எல்லாம் மூங்கில் தோட்டம் பாட்டு கேட்கும் வரை !

தான் தாண்டும் உயரங்களை, அடுத்தடுத்து அனாயசமாக தாண்டி போகும் ரகுமானை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கிறேன்.

மிக மிக மெதுவான பாட்டு. இவ்வளவு ஸ்லோ பாட்டு போட எவ்வளவு துணிச்சல் வேண்டும் ! அதையும் சூப்பர் ஹிட் ஆக்கி நம்மை கிறுகிறுக்க வைக்கிறார்.

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிறைஞ்ச வானம்
நீ பாடும் கீதம்
பவுர்ணமி இரவு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதை
உன் கூட பொடி நடை
இது போதும் எனக்கு
இ...து போதுமே... !
வேறென்ன வேணும்
நீ போதுமே..!

இரண்டு வார்த்தைகளில் ஒவ்வொரு வரியும் - புது கவிதை போல  இருக்கு. அதை அட்டகாச பாட்டாக மாற்றிய ரகுமான் ... வாட் எ ஜீனியஸ் !

" கொளத்தாங்கரையிலே" போன்ற வார்த்தைகளை கேட்கும் போது கிராமத்தில் வளர்ந்த ஒருவரால் மட்டுமே இத்தகைய வரிகளை எழுத முடியும் என தெளிவாக தெரிகிறது. தேசிய விருதுக்கான களத்தில் வைரமுத்து இந்த முறையும் போட்டியில் இருப்பார். கூடவே இப்பாடலை பாடிய ஹரிணியும்... !

 உங்களுக்கு மெலடி பிடிக்கும் என்றால், நிதானமாய் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். சான்சே இல்லை ! சிம்ப்ளி சூப்பர்ப் !

ஒரே ஒரு பிரச்சனை. 2- 3 தடவை கேட்டு, பாட்டும் பிடிச்சுட்டா, அப்புறம் தினம் 10 முறை கேட்க வைக்கும் இந்த பாட்டு.. I am literally addicted to this song now !


*****

சித்திரை நிலா

பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இயற்றியவர்: வைரமுத்து

மிக மெதுவாக துவங்கி பாதிக்கு மேல் வேகம் பிடிக்கிற பாட்டு. மனம் நொந்துள்ள  நாயகனுக்கு ஆறுதலும் ஊக்கமும் சொல்கிறது

"புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும் "

"துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும் "

என செல்கிறது. ஜேசுதாஸ் பாடவேண்டிய பாட்டு... அவர் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
***
அடியே

பாடியவர் சித் ஸ்ரீராம்
இயற்றியவர்: மதன் கார்க்கி
 *******  
இன்னொரு அட்டகாச பாட்டு. கேட்டவுடன் இது ரகுமான் பாட்டு என சொல்லி விடலாம்.



பாடகர் சித் ஸ்ரீராம் யார், வேறு பாட்டு பாடியுள்ளாரா என தெரிய வில்லை. காதலின் கிறுக்கு தனத்தை அழகாய் வரிகளில் கொண்டு வந்துள்ளார் மதன் கார்க்கி.
*********
மொத்தத்தில் : தமிழில் மட்டுமல்ல, இந்திய இசை உலகின் இன்றைய முடிசூடா மன்னன் ரகுமான் என மீண்டும் ஒரு முறை நமக்கு நினைவு படுத்துகிறது இந்த ஆல்பம் !

கடல் பாடல்கள்..... ரகுமானின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ! அவசியம் கேளுங்கள் !
****
அண்மை பதிவு 

கன்யாகுமரி :சில கசப்பான உண்மைகள் 

15 comments:

  1. நான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்....நினைச்சுகிட்டு மட்டும் இருந்தேன். :))

    //தேசிய விருதுக்கான களத்தில் வைரமுத்து இந்த முறையும் போட்டியில் இருப்பார். கூடவே இப்பாடலை பாடிய ஹரிணியும்.//

    சீரியஸ்! இதேதான் நானும் நினைச்சேன்....முதல் முறை கேட்டவுடன். கூடவே, ரஹ்மானும் இருப்பார் என்றும்.

    //நடுவில் சின்மயி கொஞ்சம் பேசுகிறார் (ஆம் பேசுகிறார்).//

    சின்மயி குரல் இவ்ளோ கிக்கா இருக்கும்னே நினைக்கல....அதுவும் "நான் மகுடிடா" என்று கொஞ்சம் திமிர் கலந்து சொல்லும்போது....ப்ப்பா ;-)

    ReplyDelete
  2. எனக்கு பிடித்த வரிசை:

    1. மூங்கில் தோட்டம்
    2. அடியே
    3. நெஞ்சுக்குள்ளே
    4. சித்திரை நிலா & ஏலே கீச்சான்
    5. மகுடி மகுடி
    6. அன்பின் வாசலிலே

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஏறக்குறைய அதே வரிசை. நான்காவது இடம் எலேய் கிச்சானுக்கு மட்டுமே ; சித்திரை நிலவு இன்னும் அந்த அளவு ஈர்க்கலை

      Delete
  3. மூங்கில் தோட்டம் கேட்ட பின் Facebookல் எழுதியது:

    அமைதியான இரவு. அறையில் தனிமை. நைட் லேம்ப் வெளிச்சம். கையில் மொபைல். காதில் ஹெட்செட். கண் மூடி, கேட்க ஆரம்பித்தால், 'சுகம்', 'பரவசம்', 'மெய்சிலிர்ப்பு'.....இப்படி வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலாத, வேறு ஏதோ ஒரு மயக்கத்தை இந்த பாடல் தருகிறது. ட்ரூலி, ரஹ்மான் ஈஸ் எ ஜீனியஸ்!

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு! எம்பி 3 டவுண்லோடு லிங்கும் கொடுத்தா சவுகர்யமா இருக்கும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்; அதை எப்படி செய்வதென தெரியலை; தெரிந்து கொண்டு செய்ய முயல்கிறேன்

      Delete
  5. ரசனையான பாடல்கள். IAM ADDICTED.ரசனையான வர்ணனை .

    ரகுமான் பாடல்கள் எப்பவுமே கேட்க்க கேட்ட்க தான் பிடிக்கும்.--

    ReplyDelete
  6. ஆம் அத்தனை பாடல்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கும்மாச்சி நன்றி

      Delete
  7. அனைத்து பாடல்களும் அருமை... முக்கியமாக நெஞ்சுக்குள்ள மற்றும் மகுடி மகுடி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்கூல் பையன் நன்றி

      Delete
  8. moongil thottam reminded me of the first few lines of Mera Jahan from Tare Zameen Par. need to listen to rest of the songs..

    ReplyDelete
  9. //பொதுவாய் ஆண்களுக்கு, ஆண் குரல் பாடும் பாடல்களும், பெண்களுக்கு பெண் குரல் பாடும் பாடல்களும் தான் அதிகம் பிடிக்கும் என நினைக்கிறேன்.//
    சரியான கணிப்பு

    ReplyDelete
  10. I read one ultimate point is in சித்திரை நிலா song from jeyamohan sir blog.
    It is a Chirtian song written by nonreligious person, composed by Muslim, sung by Hindu... Great India... Right a.? Sir

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...