Sunday, May 5, 2013

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்

ஒரு சினிமாவில் என்னென்ன எதிர்பார்ப்போம்?

ஓரளவு நல்ல கதை
சிரிக்க வைக்கும் காமெடி
இனிமையான பாட்டுகள்
படம் முடிந்து வரும்போது ஜாலியான மனது

இவை அனைத்தும் சேர்த்து ஒரே பாக்கேஜ் ஆக தந்துள்ளார் புது இயக்குனர் செந்தில் குமார்

அசாதாரண பெயர் வைப்பதால் - அவஸ்தைப்படுவோரை நிச்சயம் சந்தித்திருப்போம். இந்த டிராக் ஒரு புறம். இந்திய விளையாட்டில் உள்ள அரசியல் மறுபுறம் என இரு விஷயங்களை எடுத்து கொண்டு நிறைய சிரிப்பு + சுவாரஸ்யத்துடன் தந்து முதல் பந்தையே பவுண்டரி ஆக்கிய இயக்குனருக்கு ஒரு ஷொட்டு.


கதை

குஞ்சிதபாதம் என்கிற தன் பெயருக்காக காம்ப்ளக்ஸ் உடன் இருக்கும் இளைஞர் சிவகார்த்திகேயன். தன் நண்பன் சதீஷ் அறிவுரையில் - ஜோதிடரை அணுகி - ஹரீஷ் என்று பெயர் மாற்றுகிறார். அதன் பின் ப்ரியா ஆனந்த் மீது காதல் மலர்கிறது.

ப்ரியா ஆனந்த் இவரது காம்ப்ளக்ஸ் உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற தூண்டுகிறார். பின் சென்னை மாரத்தானில் கலந்து கொள்கிறார் சிவகார்த்திகேயன். நந்திதா என்கிற டிரைனரிடம் பயில்கிறார். மாரத்தானை ஜெயிப்பாரா என்பது நான் சொன்னால் தான் தெரியுமா என்ன?

************
சிவகார்த்திகேயன்- மெரினாவில் நடிக்கவே தெரியலை என பெயர் வாங்கினார். கேடி பில்லாவில் ஓகே சொல்லும் நிலை தாண்டி இப்படத்தில் எந்த தயக்கமும் இன்றி இயல்பாய் , செமையாய் பொருந்துகிறார்

கும்கிக்கு பிறகு பாட்டுகள் ஆரம்பிக்கும் போதே விசில் சத்தமும் கை தட்டலும் தியேட்டரை கலக்குகிறது. பல பாடல்கள் உறுத்தாமல் படத்துடன் ஒட்டி வருவது பெரிய பிளஸ்.

பூமி என்னை சுத்துதே பாடல் பாண்டிச்சேரி பீச்சை சுற்றி செம அழகாக எடுத்துள்ளனர். பாண்டி மக்களுக்கும், பாண்டியை ரசிப்போருக்கும் இந்த பாட்டின் விஷூவல் மிக பிடிக்கும்.

பாண்டிச்சேரி தெருக்கள் 

மனோ பாலா அஞ்சு நிமிடம் வந்தாலும் தியேட்டர் குலுங்குகிறது

ஹீரோ நண்பனாய் வரும் சதீஷ் - காமேடியனாய் கால் ஊன்றி விடுவார்

வள்ளியின் தந்தையாய் வரும் புதுமுகம் யாருங்க? நல்ல நடிப்பு.. (ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை புதுமுகம் என்பதால் மன்னிக்கலாம்)

நந்திதா - அட்ட கத்தியை விட இயல்பாக நடித்துள்ளார்

முதல் பாதி அளவு செகண்ட் ஹாப் ஜாலியாக இல்லாவிடினும் எடுத்த சப்ஜெக்ட்டுக்கு நியாயம் செய்துள்ளார் இயக்குனர்

கிளை மாக்ஸ் மட்டும் தான் - நாம் எதிர்பார்த்தது போலவே உள்ளது. ஆச்சரியங்கள் ஏதும் இல்லாமல் போகிறது. இன்னும் சற்று மெனகெட்டிருக்கலாம்

குண்டு பையன் வரும் போர்ஷன்கள் முழுதும் சர வெடி. மக்கள் செமை யாய் என்ஜாய் செய்கிரார்கள்

இசையால் இப்படத்துக்கு இன்னொரு ஹீரோவான அனிருத் மற்றும் நல்ல படம் தந்த தனுஷ்க்கு ஸ்பெஷல் பாராட்டுகள்தியேட்டர் நொறுக்ஸ்

க்ரோம்பேட் வெற்றி திரை அரங்கில் பார்த்தோம். படம் ரிலீஸ் ஆகி நான்காம் நாள்- 6.45 காட்சிக்கு,  5 மணிக்கெல்லாம் தியேட்டர் புல். பின் மைக்கில் "எதிர் நீச்சல் டிக்கெட் இல்லை" என தொடர்ந்து அனவுன்ஸ் செய்தபடி இருந்தனர்.

திரைக்கு கீழே சீரியல் லைட் எல்லாம் போட்டு, திரை மேலேறும்போது மக்களின் உற்சாக குரலுடன் துவங்குகிறது படம். இப்படி படம் பார்த்து சவுண்ட் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. சின்ன ஊரில் தான் இவற்றை பார்க்க முடியும்

டிக்கெட் விலை 80 தான் - ஆனால் சவுண்ட் சிஸ்டம் சுமார்

வந்திருந்த சிலர் ரிபீட் ஆடியன்ஸ் என்பது அவர்கள் வசனத்தை முந்திக்கொண்டு ஒப்பிப்பதில் தெரிந்தது

மொத்தத்தில்:

சம்மரில் குடும்பத்தோடு பார்க்கும்படி மிக சரியாக வந்துள்ளது எதிர் நீச்சல் ! இவ்வருடத்தின் இன்னொரு ஹிட் படம்

வாழ்த்துக்கள் செந்தில் குமார்/ தனுஷ்/ சிவகார்த்தி & அனிருத் !

5 comments:

 1. Anonymous11:15:00 AM

  /வந்திருந்த சிலர் ரிபீட் ஆடியன்ஸ் என்பது அவர்கள் வசனத்தை முந்திக்கொண்டு ஒப்பிப்பதில் தெரிந்தது/

  இந்த கோஷ்டிங்களை கண்டாலே பத்திக்கிட்டு வரும்.

  உருப்படியான சப்ஜக்ட். சிவா, நந்திதா குட்டி, ப்ரியா மேடம்...இயல்பான நடிப்பு.

  ReplyDelete
 2. அப்ப பார்க்கலாம் ஓகே பார்த்துடுவோம்

  ReplyDelete
 3. சிவா: உங்கள் விமர்சனமும் படித்தேன். படம் பற்றி ரெண்டு பெரும் பல விஷயங்களில் ஒரே மாதிரி தான் நினைதிருக்கோம்

  நன்றி சக்கர கட்டி; பாருங்கள்

  ReplyDelete
 4. செம படம்ங்க நான் இன்னைக்கு தான் பார்த்தேன் .. ரண்டு மணி நேரம் ஜாலியா சீட்டுல கூலா உட்கார்ந்துகிட்டு படம் பாத்தேன் (கடைசியா இந்த மாதிரி பார்த்தது சூது கவ்வும்) படம் முடிஞ்சதும் ஒரு காமடி வருமே பப்பா முடியல வீட்டுக்கு வந்த பிறகு கூட என்னால சிரிப்ப நிறுத்த முடியல (ஸ்லீவ் லெஸ் பேன்ட் காமடி ) அறுபது ரூபா வீனாவில்ல்லை

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...