Monday, May 6, 2013

தொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா? அனுபவம்

ஐ. பி. எல் கார்னர்

நேற்றைக்கு மும்பையுடன் தோற்றாலும் கூட சென்னை மற்ற அணிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு ஜம்மென்று முதல் இடத்தில் அமர்ந்துள்ளது. நிச்சயம் முதல் 2 இடத்திற்குள் சென்னை வந்து விடும்.

ரைனா நல்ல பார்முக்கு வந்தது சென்னைக்கு பெரிய பலம். இப்போது ஹஸ்சி, ரைனா, தோனி என மூவரும் நன்கு ஆடுகின்றனர். ஜடேஜா, சாகா போன்றோர் அவ்வப்போது சப்போர்ட் செய்ய, அணி டாப் கியரில் செல்கிறது.
வழக்கமாய் செமி பைனல் செல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை என்பது இறுதி வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கும். இம்முறை சென்னை மற்றும் பெங்களூரு செல்வது உறுதி. மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய மூன்றில் - 2 அணிகள் செமி பைனல் வரும் என அதிக பரபரப்பின்றி இருக்கிறது. மற்ற அணிகளுக்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவற்றில் ஒன்றேனும் உள்ளே வருவது ஏதேனும் மிராக்கிள் நடந்தால் தான் உண்டு !

விஜய்  டிவிக்கு வந்த சோதனை

விஜய் டிவிக்கு என்ன பிரச்சனையோ தெரியலை. கும்கி உள்ளிட்ட படம், மற்றும் சிறப்பு நிகழ்சிகள் வெளியிட்ட போது வழக்கத்தை விட மிக குறைந்த விளம்பரங்கள் ! கூடவே.. கீழே சில வரிகள் ஓடிகொண்டே இருந்தது.. எங்கள் விளம்பர தாரர்கள் ஒத்துழைப்பின்மையால் நாங்கள் விளம்பரங்கள் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது".

அவர்கள் என்னவோ இதனை ரொம்ப வருத்தமா " தடங்கலுக்கு வருந்துகிறேன் " ரீதியில் சொன்னாலும், அதிக விளம்பரம் வரா விடில் பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி தானே ?

உழைப்பால் உயர்ந்த ஒரு தமிழர்

ஜெயா டிவியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புட் கிங் நிறுவன அதிபர் சரத் பாபு- அவர்களை பேட்டி கண்டனர்.

சரத்பாபு பேசிய சில விஷயங்கள்:

பள்ளியில் படிக்கும்போது மாதாந்திர பீஸ் கட்ட முடியாமல் ஒவ்வொரு மாதமும் வகுப்பிற்கு வெளியில் நின்றது, அப்போதெல்லாம் பணம் என்கிற ஒன்று தானே நாம் இத்தனை கஷ்டப்பட காரணம் என்று மனம் வெதும்பியது



மின்சாரம் இல்லாத தங்கள் குடிசையில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படிக்கும்போது - " நமக்கு வேறு டைவர்ஷன் இல்லை - சிம்னி வெளிச்சத்தில் புத்தகம் மட்டுமே பார்க்க முடியும்" என்று மனதை தேற்றியபடி படித்த நினைவுகள்

IIM -ல் MBA படித்தாலும் சுய தொழில் செய்யணும் என்கிற உந்துதலில் அம்மா செய்த தொழில் என கேட்டரிங் துவங்கி படிப்படியாய் முன்னேறிய கதை -

என அவர் பேசியது very inspirational !

வாங்கியாச்சு நீயா நானா டிவி

நீயா நானாவில் கார்பரேட் கல்ச்சர் குறித்து சென்ற டிசம்பர் மாதம் பேசினேன். எங்கள் அணியில் சிறப்பாய் பேசியதாய் " கலர் டிவி பரிசு " என்று அறிவித்தனர். ஆனால் நண்பர்கள் சொன்ன தகவல்கள் அவ்வளவு ஊக்கமாய் இல்லை. அறிவித்தபடி பலருக்கும் டிவி வந்ததே இல்லை என்றனர் பதிவர் நண்பர்கள். பதிவர் ஓசை செல்லாவும் இதே போல் பாதிக்கப்பட்ட இன்னொருவர்.

சமீபத்தில் ஓசை செல்லாவுக்கு கலர் டிவி வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று தொலை பேசி வாயிலாக தகவல் சொன்னார்கள் என முக நூலில் ஒரு செய்தி பகிர்ந்தார். அதனை பார்த்து விட்டு நான் நீயா நானா குழுவிற்கு போன் செய்ய, " ஆமா சார். இப்ப தான் டிவி வந்திருக்கு; நேரில் வந்தா எடுத்திட்டு போகலாம் " என்றனர்.

சென்று, இயக்குனர் ஆண்டனியுடன் சற்று அளவளாவி விட்டு டிவி வாங்கி கொண்டு வந்தாயிற்று !

பரிசு கிடைக்குமா இல்லையா என்ற சஸ்பென்சை 6 மாதத்துக்கும் மேல் வைத்ததும், இப்போதும் கூட அவர்கள் கூப்பிடாமல், நானாக தகவல் தெரிந்து கேட்ட பின் தான் வர சொன்னதும் சற்று உறுத்தவே செய்கிறது.

சீரியல் பக்கம்: ஆபிஸ் 

ஆபிஸ் சீரியலில் ஒரு காட்சி - ஹீரோயின் மற்றும் செகண்ட் ஹீரோயின் இருவரும் முறையே - ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோவை காதலிக்கிறார்கள். இரண்டு காதல் ஜோடிக்கும் சண்டை. பேச்சு வார்த்தை இல்லை. 
                       

" உன் ஆளு தாண்டி நல்லவன் " என்று இவளும், அதே மாதிரி அவளும், பல காரணங்களுடன் பேசி கொண்டே போகிறார்கள். எதற்கும் கம்பேர் செய்யும் சில பெண்கள் மனதை மறைமுகமா குத்தி காட்டிய மாதிரி இருந்தது.

டிஸ்கஷன் முடிவில் இருவரும் பேசி கொண்டது தான் ஹை லைட்: " பேசாம நாம ரெண்டு பெரும் லவ்வர்ஸ்சை swap பண்ணிக்குவோமா?" !!!!?????

லிங்குசாமி பேட்டி 

உழைப்பாளர் தினத்தை ஒட்டி கலைஞர் டிவி யில் லிங்குசாமி பேட்டி வெளியானது. தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் லிங்குசாமி.

ஆனந்தம், ரன் ஆகிய 2 படங்கள் ஓஹோ என ஓடியதும் சற்று கெத்தாக இருந்ததும், மூன்றாவதாக அஜீத் நடிப்பில் ஜி வெளியாகி மரண அடி + வலியை, அவமானத்தை நேர்மையாக சொன்னார். அதிலிருந்து மீண்டு தன்னை நிரூபிக்கும் வெறியுடன் எடுத்து அதே ஆண்டு வெளியான சண்டைகோழி தான் அவரது படங்களில் அதிக நாள் ஓடிய படமாம் !

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எழுத்து துவங்கி பல நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் ("எல்லாரும் தீபாவளிக்கு வெடி வெடிடிச்சிகிட்டு இருக்கும்போது லொகேஷன் பார்க்க போனார் பாலாஜி சக்திவேல்; அப்படி பட்ட உழைப்பாளிங்க எப்படி தோற்பாங்க ?) ரொம்ப அருமையாய் இருந்தது.

ரசித்த விளம்பரம்

டிவி யில் ரசித்த சில விளம்பரங்கள் அவ்வப்போது பகிர எண்ணம்.

ப்ளூ ஸ்டார் ஏ சி-க்கான இந்த விளம்பரம் ஐ. பி. எல் பார்க்கும் போது தொடர்ந்து வருகிறது. செம கிரியேட்டிவ் ! பாருங்கள் !

15 comments:

  1. //உழைப்பால் உயர்ந்த ஒரு தமிழர் // முன்பு விகடனில் ஒரு பேட்டியில் இவர் பற்றி படித்துள்ளேன்.. மனம் கவர்ந்தவர்

    //நீயா நானா ஜெயிதோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா? நேரடி அனுபவம்/

    அடங்கொக்க மக்கா :-)

    உங்கள் அருகில் நிற்பவர் இயக்குனர் ஆண்டனியா.. அந்த டிவி படத்தை ஏன் போடவில்லை மிகப் பெரிய டவுட்டு :-)


    ReplyDelete
  2. சீனு: அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா !

    ஆமா; அவர் தான் ஆண்டனி - நீயா நானா ஆண்டனி !

    டிவியை போயி என்னத்துக்கு போட்டோ புடிசுன்னு தான் போடலை பொட்டியோடு இன்னும் அப்படியே இருக்கு எடுத்து போடலாம் :)

    ReplyDelete
  3. இருந்தாலும் சீனு சாருக்கு இப்படி சந்தேகம் வரக்கூடாது ...அடுத்து டிவி யில் படம் தெரியுதான்னு கேட்பார் போலிருக்கே !

    ReplyDelete
  4. அண்ணே லிங்குசாமி பேட்டி சூப்பர் நானும் பார்த்தேன்

    ReplyDelete
  5. உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை இருப்பினும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    ReplyDelete
  6. உழைப்பால் உயர்ந்த ஒருவரை பற்றி பகிர்ந்தது அருமை! அந்த ஏசி விளம்பரம் நானும் ரசித்தேன்! அருமை! நன்றி!

    ReplyDelete
  7. டிவி கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
    சரத்பாபு ,நம்ம மடிப்பாக்கம்காரர்தான். தேர்தல்ல கூட நின்னு இருக்கார்.

    ReplyDelete
  8. புது டி.வி கிடைத்துவிட்டது வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. Anonymous8:49:00 PM

    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா இப்படி ஆயிடுச்சா விஜய் டிவி

    ReplyDelete
  10. bluestar விளம்பரம் சமீப இந்தியப் பயணத்தில் நானும் பார்த்து ரசித்தேன். விளம்பரதாரர்களோடு தொல்லை என்பது நல்ல செய்தியல்ல - வருவாய் குறைகிறது என்றும் கொள்ளலாம்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. பகவான் ஜி: நன்றி :))

    அப்படியா சக்கர கட்டி மகிழ்ச்சி

    நன்றி பாலசுப்ரமணியம் ; நண்பர்களிடம் பகிர்கிறேன்

    வாங்க சுரேஷ் நன்றி

    முரளி சார்: ஆம் முடிந்தால் அவரை நேரில் சந்தித்து ஒரு பேட்டி எடுக்கணும் என ஆசை :)

    நன்றி மாதேவி

    வாங்க கலியபெருமாள் நன்றி

    அப்பா சார்: நலமா? நன்றி

    ReplyDelete
  13. அவர்கள் உங்களை போன் செய்து அழைத்திருக்க வேண்டும். விஜய் டிவி நிர்வாகமே கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...