Monday, May 13, 2013

தொல்லைகாட்சி - மருத்துவர் ஐயா - ராட்டினம்- சூப்பர் சிங்கர்

டிவியில் பார்த்த படம் : ராட்டினம் 

ராட்டினம்  படம் வந்த போது உண்மை தமிழன் உள்ளிட்ட சில பதிவர் நண்பர்கள் நல்ல விதமாய் எழுதியிருந்தனர்.

இளம் வயது பள்ளி காதல் - அதற்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு என்கிற "காதல்" டைப் கதை. காதல் படம் போலவே முடிவில் உள்ள டுவிஸ்ட்கள் தான் வியக்க வைக்கிறது. இளம் - ஹீரோ ஹீரோயின் இருவர் நடிப்புமே நிறைவு. ஹீரோயின் அழகு ! இருவரையும் அதன் பின் எந்த படத்திலும் காணவில்லை - ஏனென்று தெரியவில்லை !
புதுமுக இயக்குனர் படத்தை ரொம்ப அழகாய் கொண்டு சென்று, மனதில் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் வண்ணம் முடித்திருந்தார். சன் அல்லது கே டிவி யில் நிச்சயம் மறுபடி போடுவார்கள். அவசியம் பாருங்கள் !

சூப்பர் சிங்கர் அப்டேட் 

30 டாப் பாடகர்களை தேர்ந்தெடுக்கிறோம் ; அவர்கள் பிரம்மாண்ட மேடையில் பாடுவார்கள் என மூணு வாரமா பஜனை செய்தனர். கடைசியில் - முதல் 30 பேரை ஒரு வழியா தேர்ந்தெடுத்து முடிக்க, மீதம் 3 பேர் பாவமா நின்றனர். " உடனே நீங்கள் மூவரும் கூட அடுத்த ரவுண்ட் செலக்ட் ஆகுறீங்க" என்றனர் அட பாவிங்களா ! இந்த கருமத்துக்கு தான் 3 வாரம் இதை வச்சு இழு இழுன்னு இழுத்தீங்களா ! நல்லாருங்கடா !

மருத்துவர் ஐயா பேட்டி 

சிறையில் இருந்து வந்த வெளியே வந்த மருத்துவர் ஐயா பேட்டி ஏறக்குறைய முழுவதும் மக்கள் டிவியில் பார்த்து மகிழ்ந்தேன். ஐயா இதில் உதிர்த்த முத்துக்கள் :

* கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் இனி தி. மு. க , அ .தி. மு. க , தேசிய கட்சிகள் ஆகிய எவற்றுடனும் தேர்தல் கூட்டணி கிடையாது ("உங்களுக்கு பழக்கம் இல்லாத ஒன்றை சொல்றீங்களே ஐயா"- என ஏன் எந்த நிருபரும் கேட்கலை ?)

*காடுவெட்டி குருவை போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்கள் தமிழகத்தில் யாருமில்லை

* பா ம. க கட்சியனர் எந்த தவறும் செய்யாத போது (அப்படிங்களா?) தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் பலரையும் சிறையில் அடைத்தது. தாக்கப்பட்டதேன்னவோ நாங்கள் தான்.ஆனால் எங்களையே பிடித்து சிறையில் அடைக்கிறார்கள்

* பாராளுமன்ற தேர்தலில் அ .தி. மு. க விற்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது. நாங்கள் 10 தொகுதி ஜெயிப்போம் ( ஏன் சார் இம்புட்டு கம்மியா சொல்றீங்க? 30, 40 ன்னு அடிச்சு விட வேண்டியது தானே)

நிற்க. கடந்த சில தேர்தல்களில் மருத்துவரை அவரது கட்சியை சார்ந்த மக்களே புறக்கணித்த நிலையில்,  சாதிக்காக ஜெயிலுக்கு போனதாக பிரசாரம் செய்து தங்கள் சாதி ஓட்டையாவது மீண்டும் பெறசெய்கிற முயற்சிதான் இது என்று தோன்றுகிறது !

பிரபல படங்களும் சீரியல்களும்

சிந்து பைரவி, மண் வாசனை, பாமா விஜயம் - இதெல்லாம் என்ன என சொல்லுங்க பார்ப்போம் !

பிரபல சினிமா பட பெயர்கள் என்று தானே சொல்வீர்கள் ! உங்கள் வீட்டு இல்ல தலைவிகளிடம் சொல்லி பாருங்கள் .. இதெல்லாம் இப்போது சக்கை போடு போடும் டிவி சீரியல்கள் ! ராஜ் டிவி யில் மாலை நேரம் அடுத்தடுத்து ஒளி பரப்பாகும் சீரியல்கள் பெயர் தான் அவை ! எல்லாமே ஹிந்தி சீரியல் டப்பிங்.

மாலை 7 முதல் எட்டரை வரை இதனாலேயே ஆபிசில் உட்கார்ந்து விட்டு வருகிறேன். வீட்டிற்கு வந்தால் வந்தால் ஒரே அழுகை சத்தமாய் இருக்கும் ! ஹூம் !

கிரிக்கெட் கார்னர்

கிட்டத்தட்ட 3 அணிகள் (சென்னை, ராஜஸ்தான், மும்பை ) செமி பைனல் செல்வது உறுதியான நிலையில் நான்காவதாக செல்லும் அணி - பெங்களூருவா அல்லது ஹைதராபாத்தா என்பது மட்டுமே முக்கிய கேள்வியாக உள்ளது மேலும் எந்த அணிகள் எந்த ரேங்கில் அணி வகுக்கும் என்பதும் !

கொல்கத்தா அணியிடம் நேற்று தோற்றதால் இனி வரும் 2 மேட்ச்களையும் ஜெயித்தாக வேண்டும் என்ற கடினமான நிலையில் இருக்கிறது பெங்களூரு. ஹைதராபாத்தோ தங்கள் ஊரில் மிக மோசமான ஒரு பிட்சை வைத்து கொண்டே இவ்வளவு தூரம் வந்து விட்டது.

நேற்றைய சென்னை Vs ராஜஸ்தான் மேட்சில் கிடைத்த மரண அடி - சென்னையின் ஆதிக்கத்தை சற்று அசைத்து பார்த்து விட்டது !


பிடித்த டிவி விளம்பரம்

இந்த விளம்பரம் பிடிக்க ஒரே காரணம் தான் - கா - த் -ரி - னா - வாவ் !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக சொல்கிறார்கள். மிக மொக்கை + செம பெயிலியர் ஆன நிகழ்சிகளில் ஒன்றாக ஆகி விட்டது இந்த சீசன் ! இதனாலேயே தொடர்ந்து பிரபலங்களை அழைத்து வந்து பேச வைத்தனர். நடிகை ராதிகா ஓரிரு வாரம் முன்பு வந்து மிக ஜாலியாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி சுவாரஸ்ய எபிசொட்கள் மிக குறைவே !

சில நாட்கள் முன்பு வெளிநாட்டில் வாழும் ஒரு பெண்மணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது " வெளிநாடுகளிலும் கூட திருட்டு என்பது நிறையவே உண்டு. திருட வந்து விட்டு வீட்டில் பணம் நகை எதுவுமே இல்லாவிட்டால், அந்த கடுப்பிலயே கத்தியால் குத்தி விட்டு போவார்கள் வீட்டில் எப்போதும் கொஞ்சமாவது நகை மற்றும் பணம் (Minimum 20,000) வைத்திருக்க வேண்டும் " என்றார்

நாமெல்லாம் வீட்டில் நகை அல்லது பணம் வைக்கவே மாட்டோம் ! ஆனால் அப்படி திருடன் வந்து பார்த்து விட்டு அந்த கடுப்பிலேயே குத்தி விட்டு போவான் என்ற சிந்தனை சற்று வித்யாசமாக இருந்தது !
****
அண்மை  பதிவு: 

நீயா நானா ஜெயித்தொருக்கு நிஜமா பரிசு  தர்றாங்களா? அனுபவம் 

உணவகம் அறிமுகம் - White Pepper  ரெஸ்டாரன்ட் வேளச்சேரி 

11 comments:

 1. வாரா வாரம் தொலைக்காட்சியை பற்றி ஒரு பதிவாவது எழுதும் நீங்கள், ஏன் தலைப்பில் எப்பொழுதும் தொல்லைக்காட்சி என்று எழுதுகிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. சில விஷயங்களை திட்டியபடி கூட தொடர்ந்து செய்வோம்; கிரிக்கெட்டை திட்டியபடி தொடர்ந்து கவனிப்போம் அதுபோல தான் டிவியை கிண்டல் செய்தபடி தொடர்ந்து பார்ப்பதும்

   அப்படி வைத்த பெயர் தான் இது . ஒரு வருடமாய் இதே பெயரில் திங்கள் கிழமை தோறும் எழுதி வருகிறேன் உலக்ஸ்

   Delete
 2. அட ஆமாண்ணே இப்ப இந்த டப்பிங் சிரியல் தொல்லை தாங்க முடியல்லப்பா

  ReplyDelete
 3. In Puthiya thalaimurai, they said a new name for alwa today.
  it is "inkali".

  By the way, for whom are they creating this new names? can you write something about the new tamil words?

  ReplyDelete
 4. அன்பரே, மருத்துவர் பாவம் 1. இந்திய உளவுத்துறை ஈழத்த்ற்கான மக்கள் போராட்டத்தின் விளைவுகளைத் தாங்கமுடியாமல் சாதிப் பிரச்சினையினை கிழப்பிவிட்டு ஈழத்தினை மறக்கடிக்க செய்த முயற்சிக்கு பலியாகிவிட்டார்.
  2. ஈழத்தமிழர்கள் பட்ட இழ்பபின் பாடம் சரியாகப் படிக்காமல் புலம்பெயர் தமிழர் நாட்டுக்கு செய்துவந்த பொருளாதாரக் கசிவுகளை செய்யமுடியாமல் இங்கே தமிழர்,தமிழர் என்று கூச்சல் போடுவோரைப் பார்த்து ,ஏதோ திராவிடம் பேசித்தான் அங்கே கெட்டது போல எண்ணி தலை சொரிய முள்கம்பியால் குத்திக் கொள்வதற்கிணங்க சாதீயத்தலைவர்களை தனித்தமிழர் என்ற தவறான நினைப்பால் நவீன திராவிடர் எதிர்ப்புக் காட்டுவோரிடம் (பழைய எதிர்ப்பாளர் இந்திய மத்திய அரசின் இந்தி நாடு வளுப் பெற காங்கிரசுக்கு உதவியவர்கள்.) பொருள் கசிவு செய்வதை சுவைக்க, வண்முறை என்ற இரண்டுப் பக்கம் கூறுள்ள கத்தியை முரட்டுத்தன்மாகப் பிடித்துவிடார். தமிழகம் இந்திய உளவுத்துறைக்குப் பயன்பட்டுப் போக உதவுகிறார். அவ்வளவுதான்.

  ReplyDelete
 5. தொல்லைக்காட்சி என்று தலைப்பு வைத்துவிட்டு இப்படி டிவி நிகழ்சிகளை ரசித்து பார்த்து அதை பதிவாக எழுதும் போது தலைப்பு ஏற்றதாக இல்லை . நான் ரசித்த தொலைகாட்சி என்பது சரியாக இருக்கும் .

  ReplyDelete
 6. ராட்டினம் படம் கலக்கல் முடிவு யதார்த்தம் ஆனால் ஏற்க முடிய வில்லை

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு! ஞாயிறு இரவு நீயா நானா பார்க்கவில்லையா! இந்த வாரம் கலக்கலாக இருந்ததே!

  ReplyDelete
 8. மிக்சர் அருமை .

  ReplyDelete
 9. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 10. ராட்டினம் படம் பார்கவில்லை பார்கின்றேன். நன்றி.


  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...