Wednesday, May 15, 2013

வானவில்: 3 பேர் 3 காதல்- இளம் குற்றவாளிகள் -தங்க மீன்கள்

பார்த்த படம் 3 பேர் 3 காதல்

நண்பன் சங்கர நாராயணன் படித்து படித்து படம் பற்றி இங்கு சொன்னபின்னும் தெரிந்தே ரிஸ்க் எடுத்தேன்படத்தில் ஒரு சில நொடிகள் கூட யாரும் மௌனமாய் இல்லை பேச்சு பேச்சு.. பேச்சு. நமக்கே அலுப்பாகிடுது. விமல் மற்றும் அர்ஜூன் காதல் போர்ஷன்கள் மிக செயற்கை. மூன்று கதைக்குள்ளும் சரியான லிங்க் இல்லாதது கொடுமை.

படத்தின் உருப்படியான விஷயம் சேரன் மற்றும் பானு சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் தான். இந்த பார்ட் முழுதுமே கதை- நடிப்பு - 2 பாட்டுகள் என அருமையாய் இருந்தது

விகடனில் படத்துக்கு 37 மார்க் தான் தந்திருந்தனர் ! நம்மை இப்படி சோதிப்பதை விட வசந்த் ரிட்டயர் ஆகி விடுதல் நலம் !

திருச்சி விசிட்

ரொம்ப காலம் கழித்து நண்பர் தேவாவுடன் திருச்சி சென்றேன். டோல் பிளாசாக்களில் மட்டுமே சற்று தாமதமாகிறது. மற்றபடி நிதானமாக சென்றாலே 6 மணி நேரத்தில் சென்று விட முடிகிறது

நாங்கள் படித்த சட்ட கல்லூரி - அப்போது " பாப்பம்மாள் அன்ன சத்திரம் " என்ற இடத்தில் இயங்கி வந்தது. காவிரி ஆற்று பாலம் அருகிலேயே இருந்த அந்த கட்டிடம் இடிந்து கிடந்ததை காண மனது என்னவோ போல் ஆனது. அடுத்து மெயின் கார்ட் கேட் பேருந்து நிலையம் - 5 ஆண்டுகள் தினம் நாங்கள் பஸ் ஏறிய இந்த இடத்தை இன்று கண்டபோது தலை சுற்றி விட்டது. எங்கு நிற்கிறோம் - எந்த ஊருக்கு செல்லும் பஸ் எங்கு நிற்கிறது என எதுவும் புரியாமல் குழம்பி போனேன்.

கல்லூரி காலத்தில் சுற்றிய இடங்களை இன்று காணும் போது மனதில் எவ்வளவோ நினைவுகள் ! உடன் கல்லூரி கால நண்பர் யாரேனும் இருந்திருந்தால் இன்னும் அதிகம் கொசுவர்த்தி சுற்றியிருக்கலாம் ஹூம்

போஸ்டர் கார்னர்
எதிர்பார்க்கும் - தங்க மீன்கள்

அடுத்து வர உள்ள தமிழ் படங்களில் மிக எதிர்பார்க்கும் படம் " தங்க மீன்கள்" ; இதன் டிரைலரை காணும்போதே இது குழந்தைகளுக்கான படம் என்பது தெரிகிறது. ஆனந்த யாழை மீட்டுகிறாய் மற்றும் நதி வெள்ளம் மேலே - ஆகிய இரு பாடல்களும் சமீபத்தில் நான் மிக விரும்பி கேட்கும் பாடல்கள்......

இந்த டீசரில் படம் குறித்து இயக்குனர் ராம் பாலு மகேந்திரா மற்றும் கெளதம் மேனன் பேசுகிறார்கள். அந்த குழந்தையின் " அப்பா..ஆ .ஆ .ஆ .ஆ " என்னும் அலறல் மனதை என்னவோ செய்கிறது...சட்ட பக்கம் - இளம் குற்றவாளி வயதை குறைக்க சட்டம்


குற்றம் புரியும் நபர் தற்போதைய சட்டப்படி - 18 வயது முடியும் வரை இளம் குற்றவாளி என்று கருதப்பட்டு- பல குற்றங்களுக்கு முழு தண்டனை கிடைப்பதில்லை. டில்லி பேருந்தில் தாக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணை தாக்கியது ஒரு இளம் குற்றவாளி தான். இத்தகைய வழக்குகளில் அவர் மேஜர் ஆகும் வரை "சீர் திருத்த பள்ளியில் வைத்து விட்டு அதன் பின் வெளியே விட்டு விடுவார்கள்

இதனை மாற்ற - இளம் குற்றவாளிகளுக்கான வயதை 16 ஆக குறைக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழு செய்துள்ளது. இதற்கு முன் இளம் குற்றவாளிக்கான வயது 16 என்று தான் இருந்ததாகவும், சில வருடங்களுக்கு முன் 18 - என மாற்றிய பின், கடந்த சில வருடங்களில் - 16 வயது முதல் 18 வயதிற்குள் குற்றம் இழைக்கும் இளைஞர்கள் - வருடத்துக்கு 20,000 க்கும் மேல் இருப்பதாக சொல்கிறது இந்த அறிக்கை.


RJ பாலாஜி காமெடி
பாலாஜியின் சரவெடி காமெடியில் இந்த முகமூடி விமர்சனமும் ஒன்று. இதனை கேட்டு நீங்கள் சிரிக்காமல் இருக்க முடியாது ! தயவு செய்து அலுவலகத்தில் இதனை கேட்காதீர்கள் !அய்யாசாமி கார்னர்

சந்திரபாபுவின் பழைய பாடல் ஒன்றில் " மாமியார் வீடு சொர்கத்தை போலே " என்ற வரி வரும் கேட்டுள்ளீர்களா? அது சத்தியமான உண்மை என்பது அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் !

அய்யாசாமி தனது வீட்டில் இருந்தால் வேலை பெண்டு நிமிர்ந்திடும். ஆனால் ஓரிரு மாசத்துக்கு ஒரு முறை மாமனார் வீட்டுக்கு சென்றால் அய்யாவுக்கு ராஜ உபசாரம் தான் ! சாப்பிடுவது, தூங்குவது, புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது என மனுஷன் வாழ்க்கையை நல்லா என்ஜாய் செய்வார்.

அவர் மாமியார் வேறு அநியாயத்துக்கு நல்லா சமைப்பாரகளா? மனுஷன் புகுந்து விளையாடிடுவார். சமீபத்தில் சென்றபோது கறி, மீன், ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டுட்டு பின் தங்கள் வீட்டுக்கு வந்தா- வீட்டின் உள்ளே போகும் முன்பே - பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு

மனுஷனுக்கு வாயிலயும் , வயித்திலேயும் பிச்சிக்கிட்டு ! இரவு நேரம் வேறு .. டாக்டரிடம் செல்ல முடியலை.. மனுஷனுக்கு உடம்புக்கு முடியாட்டி ரொம்ப படம் காட்டுவார். " எமன் வர்றான். கண்ணுலே தெரியுது " என்றெல்லாம் வீட்டில் உள்ளவர்களை தூங்க விடாமல் படுத்திட்டார்.
அடுத்த 2 நாளில் போர்ட் மீட்டிங் வேறு. ஒரு வழியாய் காலையே டாக்டரை பார்த்து ஊசி, மருந்து என சரியாகி ஆபிஸ் போனார்

அவருக்கு இப்படி ஆனதுக்கு காரணம் சொல்றார் பாருங்க " ஊரிலிருந்து ஒரு ஆள் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தானே.. அவன் பார்வையே சரியில்ல; நான் சாப்புடுறத பார்த்து கண்ணு வச்சிட்டான். இனிமே அந்த ஆளு இருந்தா கம்மியா சாப்பிடனும் "

6 comments:

 1. Replies
  1. நன்றி வரதராஜலு சார்

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன்....

  ReplyDelete
 3. பாலாஜி கலக்குறாருங்க...

  ஒரு படத்தை இவ்வளவு கலாய்ச்சி விமர்சனம் பண்ணமுடியுமா....

  பாவங்க முகமூடி டீம்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் சவுந்தர் நன்றி

   Delete
 4. படம் சொதப்பிடுச்சா ஹா...ஹா.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...