Friday, May 24, 2013

மீடியாவின் டார்லிங் - பிரபலத்தின் அறியாத பக்கங்கள்

மீபத்தில் வழக்கறிஞர் நண்பர் ஒருவருடன் பேசியபோது மீடியாவின் டார்லிங் ஆன ஒரு பிரபலம் பற்றி விளாவாரியாய் பகிர்ந்தார். அவர் பகிர்ந்தது அப்படியே உங்களுக்கு ...

" நம்ம பிரபலம் Basically ஒரு சுய விளம்பர பிரியர். தன்னை பற்றி தினம் செய்தி வர வேண்டுமென குறியாக இருப்பார்.

பிரபலத்திடம் நிறையவே நல்ல குணங்களும் உண்டு வக்கீலாக இருந்தபோது பல வழக்குகளில் அவர் இலவசமாக வாதிட்டது உண்டு. பின் அவர் நீதிபதி ஆனார்

" லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. எனது காலத்தில் ஒரு லட்சம் வழக்குகளை முடிப்பேன்"என்று சூளுரைத்தார்

வழக்குகள் தேங்குவது தவறு தான். ஆனால் அதை தீர்க்க இவர் எடுத்த வழிகள் நிச்சயம் சரி கிடையாது. புதிதாக வரும் வழக்குகளை " அட்மிஷன் வழக்குகள்" என்பார்கள். அப்படி புதிதாய் வரும் எந்த வழக்கையும் இவர் உடனடியாக டிஸ்மிஸ் செய்து விடுவார். மேலும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தோண்டி தோண்டி எடுத்து அவற்றையும் மானா வாரியாக டிஸ்மிஸ் செய்தார்.

இவர் ரிட்டயர் ஆக சில மாதங்கள் முன்பு ஒரு சட்ட பத்திரிக்கையில் இவர் ஏராள வழக்குகளை பைசல் செய்தது பற்றி விரிவாய் ஆய்வு செய்து - இவர் நீதிபதியாக இருந்த நாட்கள் எத்தனை - மொத்தம் எவ்வளவு மணி நேரம் இருந்துள்ளார்- எத்தனை வழக்குகள் தீர்ப்பளித்தார்  என்ற கணக்கை போட்டு - இவர் சராசரியாக ஒரு வழக்கிற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவாக தான் நேரம் எடுத்து கொண்டார் என்பதை எழுதினர் இது அனைத்து வட்டத்திலும் சற்று அதிர்வை ஏற்படுத்தியது

நினைத்து பாருங்கள்: ஒருவர் நீதிமன்றம் வருகிறார் என்றாலே அவருக்கு பல மாதங்கள் அல்லது வருடங்களாக மனதில் தீராத வலி இருக்கும். ஒரு வழக்கை தயார் செய்ய ஒரு வக்கீல் ஆபிசில் பல மணி நேரம் எடுத்து கொள்கிறார்கள் ஆனால் இப்படி மனிதர்களின் வலி, உழைப்பு இவை எதையும் மதிக்காத இந்த பிரபலம் ஒரு நிமிடம் கூட விசாரிக்காமல் வழக்குகளை டிஸ்மிஸ் செய்து தள்ளுகிறார்.

இவர் இப்படி டிஸ்மிஸ் செய்யும் வழக்குகள் பெரும்பாலும் அப்பீலுக்கு செல்லும்போது பிரபலம் தந்த தீர்ப்பை தவறு என்று சொல்லி மாற்றான தீர்ப்பு தரப்பட்டது. அப்பீல் யாரிடம் சென்றாலும் இவர் தீர்ப்பு திருத்தப்பட்டது உறுதி ! "Application of mind " இன்றி அவசர கோலத்தில் அள்ளி தெளித்த படி இவர் தீர்ப்புகள் தந்ததே இதற்கு காரணம்

பிரபலம் சாதகமான தீர்ப்பு வழங்கிய நபர்களும் உண்டு. மறுமலர்ச்சி தலைவரும் , "அறிவாளி" எழுத்தாளரும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள்;  மேலும் வழக்கறிஞராக இருந்த போது, அவரது கிளையன்ட் ஆக இருந்தவர்கள். இவர்கள் தொடுக்கும் வழக்குகளில் டிஸ்மிஸ் செய்யாமல் எப்போதும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவார் பிரபலம் !

வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் வட்டத்தில் இவரை ஒருவர் கூட மதிக்க வில்லை என்பதே உண்மை. வழக்கு பதிவு செய்து அவஸ்தை பட்டவர்களுக்கும் இவரை பற்றி நன்கு அறிவர்.

ஆனால் இவர் எப்பவும் மீடியாவின் டார்லிங் ஆக இருந்தார்.அதற்கு காரணம் - இவர் தினமும் நிருபர்களை சந்தித்து நிறைய செய்திகள் தந்த வண்ணம் இருப்பார். மேலும் " குறிப்பிட்ட செய்தியை எந்த கோணத்தில் எழுத வேண்டும் " என்றும் டிரைனிங் தர இவர் தவறுவதில்லை. இவரால் மீடியாவிற்கு நிறைய செய்திகள் கிடைத்ததால் இவரை பற்றி நல்ல விதமாகவே எழுதி வந்தனர். மீடியாவை பொறுத்த வரை எந்த ஒரு நீதிபதியும் இவ்வளவு நெருக்கமாக அவர்களுடன் இருந்ததில்லை ! அதுவே அவர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

நம்ம பிரபலத்துக்கு வழக்கின் தீவிரம், வாதியின் பக்க நியாயம் எது பற்றியும் கவலை இல்லை. வழக்கு சீக்கிரம் முடியனும் அது மட்டுமே அவர் எண்ணம். பாவம் புண்ணியம் என்றெல்லாம் இருந்தால் இவர் பல்லாயிரகணக்கான மக்களின் பாவத்தை சேர்த்து கொண்டார் என்று தான் சொல்லணும்

இவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருந்தார். அப்போது அவர் வக்கீலாக இருந்த போது உடன் பணியாற்றிய சிலர் அவரை நேரில் சந்தித்து பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க அவரோ " வர வேண்டாம்" என்று சொல்லி அனுப்பி விட்டார். மருத்துவமனையில் இருந்து வந்த பின் பிரபலம் சொன்னது " நான் மருத்துவ மனையில் இருக்கும் போது யாருமே வந்து என்னை பார்க்க வில்லை பார்த்தீர்களா ? இதிலேயே தெரிய வில்லையா ? நான் நேர்மையானவன் - அதான் யாரும் வரவில்லை என ? "

" நாங்க வர்றோம் என சொல்லிய போது வர வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்போது - நாங்களாகவே வராத மாதிரி பேசுகிறாரே என்று வருந்தினர் வக்கீல்கள்.

நம்ம பிரபலம் ரிட்டையர் ஆன அன்று ஒரு ஸ்டன்ட் அடித்தார் பாருங்கள். ரிட்டயர் ஆனதும் நேராக கிளம்பி நீதிமன்றம் அருகில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார். அவருடன் 50 பேர்.. அவர்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்கள் தான் ! காபி குடிக்கும் போது எதிரில் போவோர் வருவோரை எல்லாம் தானாகவே கூப்பிட்டு கை கொடுத்து பேசினார். பின் ரயில்வே நிலையம் சென்று ரயிலில் பயணித்தார். ரிட்டயர் ஆனதால் ரயில்வே பாஸ் எடுத்து விட்டதாகவும் இனி ரயிலில் தான் பயணிப்பேன் என்றார்.

இதை கேட்ட வழக்கறிஞர்கள் உருண்டு புரண்டு சிரித்தனர். "இவர் வீடு இருக்கும் பக்கம் ரயில் நிலையமே கிடையாது. அப்புறம் எதற்கு சீசன் டிக்கெட் எடுக்கணும்? இவர் வக்கீலாக பணியாற்றிய போதே சொந்த கார் வைத்திருந்தார். இப்போது கார் வைத்து கொள்ள மாட்டேன் என்று சீன் காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

மீடியா நினைத்தால் - யாரை வேண்டுமானால் ஹீரோ ஆக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணம் நம்ம பிரபலம் !

உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு தமிழக வழக்கறிஞரிடமும் பேசி பாருங்கள்... இந்த பதிவில் உள்ளது அனைத்தும் உண்மை என்பதோடு இன்னும் நிறைய நிறைய சம்பவங்கள் பகிர்வார்கள் !

இவை எதுவும் பொதுமக்களுக்கு தெரியா வண்ணம் பிரபலத்தை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட் அப் செய்து வைத்திருக்கிறது நம்ம மீடியா !

வாழ்க ஜனநாயகம் !

22 comments:

 1. நீதிபதி சந்துரு

  ReplyDelete
 2. மீடியாக்கள் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  ReplyDelete
 3. Anonymous9:20:00 AM

  நல்லா இருந்துட்டுப் போகட்டும் விடுங்க..

  ReplyDelete
 4. விகடன் தாத்தாவுக்கு இந்தக் கட்டுரை பார்சல் !!!!!

  ReplyDelete
 5. kalakkurada "CHANDRU" vera enna solla. tharma thevan parthupan nichayama..

  ReplyDelete
 6. த்லையில காரக்கொழம்பை ஊத்தி வச்சிருபாரே...அவர்தானே !
  நெனைச்சேன்.
  பார்ட்டி ரொம்ப பேசுதேன்னு !

  ReplyDelete
 7. இப்படியும் சிலர்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. ஆஹா........ விகடனாருக்கே சமர்ப்பணம்.

  ReplyDelete
 9. அருமை மோகன். மீடியா எப்போதும் செய்தி தரும் நபர்களை அவர்களது வாடிக்கையாளர்கள் போல பாவிக்கும். வேலை எளிது. அதனால்தான் இவர்களை ஊக்குவிக்கிறது. பேசுறதுக்கு ஆள் பிடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு

  ReplyDelete
 10. Do you have the statistics ? How many of his judgements has been revised by higher courts ? There are lot of judges who sideline with govt to get govt posts during their retirement and hes nt like that.

  ReplyDelete
  Replies
  1. //There are lot of judges who sideline with govt to get govt posts //

   Do you have Statistics for this Kailash :))

   As mentioned in the post, the contents in this article was shared by a lawyer; then I showed it to 3 lawyers in Chennai and they also confirmed the statements and have posted after that .

   Delete
  2. Out of the 21 SC Judges who retired after 2008 18 got jobs in different commissions and tribunals . Sometimes even before their retirement they got posts . To name some

   1. Markendaya katju heads press council of india from oct 2011 , he retired in sep 2011

   2. Justice Ashok Bhan, (retired in oct 2008) was appointed chairperson of the National Consumer Disputes Redressal Commission for a five-year term

   3. Justice V S Sirpurkar, (retired aug 2011) is now chairman of the Competition Appellate Tribunal of India

   Source : Indian Express , July 2012

   Delete
  3. கைலாஷ்: ஹை கோர்ட் நீதிபதி பற்றி பேசும்போது - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பற்றி தகவல் + கணக்கு தர்றீங்க ??

   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து. பணத்துக்காக, பதவிக்காக மயங்கும் நீதிபதிகள் இடையே இவர் வித்தியாசமானவர் தான் ஆனால் இவருக்கு புகழின் மீது பித்து.

   1 லட்சம் வழக்கிற்கு மிக அருகே வந்தவர் - ஒரு லட்சம் நிமிடம் கூட நீதிபதியாய் இருக்க வில்லை. இப்படி ஒவ்வொரு வழக்கையும் ஒரு நிமிடத்திற்கும் குறைவாய் எப்படி முழுதும் புரிந்து கொண்டு சரியான தீர்ப்பு தர முடியும் ? அவரின் இந்த செயல் சரியா? இந்த கட்டுரையின் அடி நாதமே அந்த ஒரு விஷயம் தான் !

   வழக்கறிஞர் நண்பர் சொன்ன இன்னொரு தகவல்: இவர் அநேகமாய் அரசுக்கு எதிரே பெரிதாக தீர்ர்ப்பு தந்ததில்லை ( ஓரிரண்டு தவிர ) இவர் தனது டிஸ்மிஸ் தீர்ப்பின் மூலம் அடித்ததெல்லாம் சாதாரண மக்களை தான் !
   Delete
 11. பொதுமக்களாகிய நாம் அரசையும் நீதித்துறையையும் மீடியாவின் கண்களைக்கொண்டு தான் பார்க்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

  ReplyDelete
 12. எல்லாம் விநோதமாத்தான் இருக்கு எதையும் நம்ப முடியல. இத்தனை நாள் அவரை பற்றி உண்மை எழுத ஒரு பத்திரிக்கை கூட வா முன்வரல?
  பாதகமான தீர்ப்பு வரும்போது ஒரு முணுமுணுப்பு கூட எழாமல் இருந்தது ஆச்சர்யம்தான்.

  ReplyDelete
 13. சவுக்கு போனவாரக் கட்டுரையில் கூட அவரை நல்ல நீதியரசர் என எழுதினார். ஆகவே அவரை நல்லவருன்னு நம்பியிருந்தோம். ஆனால் நீங்கள் சொல்லுவது வேறு விதமாக உள்ளது.

  ReplyDelete
 14. I had a same feeling when I read about his retirement.

  ReplyDelete
 15. இன்று எனது தளத்தில்

  http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_25.html

  ReplyDelete
 16. பின்னூட்டம் மூலம் தங்கள் கருத்துகளை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

  ReplyDelete
 17. ”அந்த” பேட்டியைப் படிக்கும்போதே ஏதோ நெருடலாத்தேன் இருந்துது. விசியம் இதானா!!

  //மீடியா நினைத்தால் - யாரை வேண்டுமானால் ஹீரோ ஆக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணம் //

  மீடியாவின் தாக்கத்தை இன்னும் நாம் உணர மறுப்பதுதான் வேதனை!! மீடியா சொல்கிறது என்பதற்காகவே ஒருவரை நல்லவர் என்றோ, தீவிரவாதி என்றோ நம்புமுன் யோசிக்க வேண்டும்.

  இதத்தான் அன்னிக்கே சொன்னாங்க:

  கண்ணால் காண்பதும் பொய்
  காதால் கேட்பதும் பொய்
  தீர விசாரிப்பதே மெய்!! :-)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...