Thursday, May 2, 2013

3 பேர் 3 காதல் : சினிமா விமர்சனம்

ங்கர நாராயணன் - பள்ளியில் என்னுடன் படித்த நண்பன். பதிவர் பெசொவி, சங்கர நாராயணன் மற்றும் நான் - 9th & 10th ஒன்றாய் படித்தோம்.

வீடுதிரும்பலுக்காக 3 பேர் 3 காதல் பற்றி அவன் எழுதிய விமர்சனம் இதோ:

3 பேர் 3 காதல்

அபாய எச்சரிக்கை !

இந்த படம் ஓடும் தியேட்டருக்குள்ளோ, ஏன் இந்த விமர்சனத்தின் உள்ளே கூட செல்லாதீர்கள் ! வேண்டாம் ப்ளீஸ்....

கதை

இவ்ளோ சொல்லியும் உள்ளே வந்துட்டீங்களா? விதி வலியது !

மருதம், நெய்தல், பாலை-  இப்படி 3 வெவ்வேறு இடங்களில் (மலை, கடல், நிலம்) நடக்கும் மூணு காதல்கள் தான் படத்தின் பின்புலம்.

கதை ஒன்று- ஊட்டியில் சார்ட்டட் அகவுண்டன்ட் ஆக இருக்கிறார் விமல் - அவருக்கு ஒரு காதல்- ஆனால் அந்த பெண்ணோ, " எனக்கு வேறு ஒருத்தருடன் நிச்சயம் ஆகிடுச்சு. .. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் சண்டை " என்று சொல்ல, விமல் " இப்ப உங்க ரெண்டு பேருக்கும் சண்டை தானே? அப்ப என்னை கன்சிடர் செய்யேன் " என்கிறார்

அந்த பெண் ஒரு முடிவெடுக்கும் முன் விமலுக்கு ஞானம் வந்துடுது - " நாம நல்லவனா - இருந்தா அவளை - அந்த ஆளோட சேர்த்து வைக்கணும் ; நமக்கே வேணும்னு நினைக்க கூடாது "

கதை ரெண்டு - சேரன் -   ஊரிலே, ஏன் இந்த உலகத்திலேயே அநியாயத்துக்கு நல்லவர். ஜெயிலில் இருந்து வருவோருக்கு பல விதத்தில் நம்பிக்கை தந்து உதவுகிறார். இதற்காக புன்னகை என்ற நிறுவனம் வைத்து நடத்துகிறார். அவருக்கு ஒரு பிசியோதெரபிஸ்ட் காதலி.

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் கைதியான ஆடுகளம் நரேனை அவரது மகள் ஏற்க மறுக்க, அப்பா - மகளை சேர்த்து வைக்க போராடுகிறார் சேரன். அவரால் முடியாத அந்த காரியத்தை அவரது காதலி எளிதில் செய்து முடிக்க தனது "புன்னகை" நிறுவனத்தை அவர் வசம் ஒப்படைத்து விட்டு யூனெஸ்கொவில் பணியாற்ற பிரான்ஸ் பயணமாகிறார் சேரன் (சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இப்படி ஜெயில் கைதிகளுக்கு நிஜத்தில் உதவுவதை கடைசியில் காட்டுகிறார்கள்)
கதை மூன்று : அர்ஜூன் ஒரு ஸ்விம்மிங் கோச். தான் நீச்சல் கற்று தரும் பெண்ணை - காதலிப்பதோடு- அவளை நீச்சலில் பெரிய ஆளாக்கணும் என்ற லட்சியத்துடன் வாழ்கிறார்.

அர்ஜூனுக்கு ஒரு பெரிய விபத்து நடந்து,  முகம் தவிர மற்ற இடங்கள் செயலிழக்க.............

அந்த பெண் நீச்சலை தொடர்ந்தாரா- வென்றாரா , அர்ஜூன் என்ன ஆனார் என்பதை மூன்றாவது கதையில் சொல்லி நம்மை பாதி உயிருடன் வெளியே அனுப்புகிறார்கள்.
****
முழுக்க கதையை படிச்சிருந்தா.. கை குடுங்க பாஸ்... நீங்க செம பொறுமைசாலி !
****
கோடை விடுமுறையில் போர் அடிச்சிட்டு இருந்தான் எட்டாவது படிக்கும் என் பையன். "வெளியிலே கூட்டி போங்க" என்ற தொடர் வேண்டுகோளுக்காக காசி தியேட்டரில் அவனுடன் படம் பார்த்தேன். பாவம் பையன்.. வீட்டில் கம்பியூட்டர் கேம்ஸ் ஆவது ஆடிட்டு ஹாப்பியா இருந்திருப்பான் !

கேளடி கண்மணி, ஆசை, ரிதம் எடுத்த வசந்தா இது ! இன்னிக்கு சினிமா எவ்வளவோ மாறி போச்சு ! விஷவல் மீடியான்னு புரிஞ்சிக்காம படம் முழுக்க பாலசந்தர், விசு சினிமா மாதிரி எல்லாரும் பேசிகிட்டே இருக்கிறது கொடுமை ! டிராமாவா சினிமாவான்னு சந்தேகம் வந்துடுது !

ஸ்கூல் பசங்க ரேஞ்சுக்கு கடி ஜோக்ஸ் அடிக்கிறதும், விமலை சார்டட் அகவுண்டன்ட்ன்னு சொல்லிட்டு ஜோக்கர் செய்கிற வேலைகளை செய்ய வைத்திருப்பதும்.. முடியல !

3 கதைகளுக்கும் ஒண்ணோடு ஒண்ணு தொடர்பு இல்லை. கடைசியில் தொடர்புக்கு அவங்க சொல்ற சின்ன "கதை" நற நற ......

பாட்டுகள் கேட்க தான் நல்லாருக்கு. அதுவும் அர்ஜூன் பகுதியில்  வர்ற 2 பாட்டும்  பார்க்க சகிக்கல !

படத்தில் 3 ஜோடியில் - ஒண்ணு கூட ஒன்று சேரலை ! ஏன்னா " காதல்னா கொடுக்குறது " ன்னு மெசேஜ் சொல்றார் வசந்த். அட போங்க சார். இது எங்களுக்கே தெரியாதா?

முதல் நாள் என்பதால் காசி தியேட்டர் முக்கால் வாசி நிரம்பிடுச்சு. காலேஜ் பசங்க பலர் வந்து நொந்து போயி சவுண்ட் விட்டுகிட்டு இருந்தாங்க. 1 வாரம் கூட தாங்காது !

3 பேர் 3 காதல் = ஜவ்வு மிட்டாய்

(ஜவ்வு மிட்டாய் மன்னிக்க !)

****
அண்மை பதிவு:

சூது கவ்வும்- நிச்சயம் வெல்லும் - விமர்சனம்

6 comments:

 1. Anonymous7:20:00 PM

  அது வரைக்கும் நீங்க எப்படியோ தப்பிச்சிட்டீங்க படம் பாக்காம..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பொறுமையாக எழுதியதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. ///(ஜவ்வு மிட்டாய் மன்னிக்க !) //
  highlight of this

  ReplyDelete
 4. அண்ணே செம் ப்ளட்

  http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_2.html

  ReplyDelete
 5. //மருதம், நெய்தல், பாலை- இப்படி 3 வெவ்வேறு இடங்களில் (மலை, கடல், நிலம்)// மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும்.. மலை பிரதேசங்களை குறிஞ்சி என்று தான் சொல்லுவோம்..

  ReplyDelete
 6. Blogger Ad Revenue Sharing Site
  அன்பார்ந்த வலைப்பதிவர்களே வணக்கம். உங்கள் வலைப்பக்கங்களின் மீது கூகிள் விளம்பரங்களை சேர்த்து அதன்மூலமாக மாதம் ஒரு தொகையை (மாதம் குறைந்தது 1000 முதல் 20000 வரை) எளிமையாக பெறலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுதான். பின் உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும் விளம்பர கோடிங்கை உங்கள் வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும். உங்கள் வலைப்பதிவை காணவருவோர் அவர்களைக் கவரும் விளம்பரத்தை சொடுக்குவார்கள். அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உங்களுக்கு பாதி தரப்படும்.

  அதாவது ஆட்சென்ஸ் ரெவின்யு சேரிங் என்பார்கள். இந்த பணமானது 50 சதவீதம் ரூ.500 கிடைக்கும் பட்சத்தில் அந்தப்பணம உடனுக்குடன் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பணம் அனுப்பப்டும். நீங்கள் கண்டிப்பாக உங்கள் விளம்பரங்களை நீங்களாகவோ அல்லது நண்பர்களிடம் கிளிக் செய்யச் சொல்லவோ கூடாது. வேறு நுணுக்கங்களையும் கையாண்டு விளம்பரங்களை கிளிக் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் கணக்கை துண்டிக்க ஏதுவாக அமையும். கவனமாக கூகிள் நிபந்தனைகளை (AdSense Terms and Conditions) படியுங்கள். பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். வேறு சந்தேகங்களுக்கு எங்களை தொலைபேசி மூலமாகவும் கூகிள் டாக் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

  http://www.bloggeradrevenue.org/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...