Monday, May 20, 2013

தொல்லை காட்சி - நீயா நானா 80-கள் காலம் - சிவகார்த்தி -AV ரமணன்

நீயா நானா - எண்பதுகளின் காலம்

எண்பதுகளின் காலம் சிறப்பான ஒன்றா, மோசமான ஒன்றா என்ற நீயா நானா விவாதம் மிக சுவாரஸ்யம். பொதுவாய் " அந்த காலத்திலே" என ஆரம்பித்து அப்போது தான் வாழ்க்கை மிக அற்புதமாய் இருந்ததை சொல்வது தான் வழக்கம். ஆனால் அந்த காலம் எத்தனை மோசமானது என்று பேசியோர் சொன்ன பல விஷயங்கள் செம !

 இணையத்தில் பிரபலமான அபிலாஷ் சந்திரன் மற்றும் மகுடேஸ்வரன் விருந்தினராய் வந்திருந்தனர்.

வழக்கம் போல் இரண்டு அணிகளையும் அவரவர் குறைகளை சொல்லி முடித்தார் கோபி.

கோபியை விடவும் சிறப்பு விருந்தினர்களை விடவும் கலந்து கொண்ட சாதாரண மனிதர்கள் நன்கு பேசிய நிகழ்ச்சி இது !

இதில் ஒரு சில பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:


Neeya Naana Part 1 by tammy27


Neeya Naana Part 2 by gurueaswar


Neeya Naana Part 3 by gurueaswar


நல்ல நிகழ்ச்சி - சித்திர கதைகள்

சுட்டி டிவியில் தினம் காலை 9.30 க்கு ஒளிபரப்பாகிறது - சித்திர கதைகள். தமிழக/ இந்திய புராணங்களை கார்ட்டூன் வடிவில் மிக சுவாரஸ்யமாக காண்பிக்கிறார்கள். விடுமுறையில் எங்கள் பெண் தொடர்ந்து பார்க்கிறாள். முருகன் - பிள்ளையார் - ஞானப்பழம் கதை தொடங்கி , கிருஷ்ணரின் பல குறும்புகள் என - அனைத்தும் புராண கதைகளே. சின்ன பசங்களுக்கு பிடிக்கும் விதத்தில் பழங்கதை அறிய வைப்பது நல்ல முயற்சி !

சினிமா இண்டஸ்டிரி இன்றைய நிலை நிலை குறித்த விவாதம்

தமிழ் திரை உலகின் இன்றைய நிலை குறித்து சன் செய்திகளில் ஒரு விவாதம் நடந்தது தயாரிப்பாளர்கள் கேயார், பிரமிட் நடராஜன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சில கருத்துக்கள் :

* சென்சார் போர்டில் இருப்பதெல்லாம் 40, 50 வயதுக்கு மேற்பட்டவர்களே. அதில் இளைஞர்கள் சிலரையாவது நியமிக்க வேண்டும்

* படத்தின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்படவேண்டும். பல வெளிநாடுகளிலும், இங்கேயே இசை நிகழ்சிகளுக்கும் அவர்களே விலை நிர்ணயம் செய்யும்போது எங்கள் படங்களுக்கு நாங்கள் ஏன் டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய கூடாது ?

* இப்போது பல படங்கள் 10 நாளுக்கு மேல் ஓடுவதில்லை. முதல் வாரம் ரிலீஸ் ஆகும் சனி, ஞாயிறு கூட்டம் ஓரளவு நன்றாக இருந்தால் அடுத்த சனி, ஞாயிறு கூட்டம் அவ்வளவு தான் !இதனால் டிவிகளில் விளம்பரம் நிறைய செய்ய வேண்டியுள்ளது சிறு படங்களை 2- 3 கோடி செலவில் எடுத்து விட்டு அதே போல் இன்னும் 2-3 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்ய முடிவதில்லை

* தயாரிப்பாளர்களில் 97 % புது ஆட்கள் தான். இவர்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் தகுதிக்கு மீறிய சம்பளம் தந்து பட்ஜெட்டை ஏற்றி விடுகிறார்கள். மேலும் எங்கு சிக்கனம் செய்வது, டைரக்டரிடம் என்ன கேள்வி கேட்பது என்றும் அவர்களுக்கு தெரிவதில்லை. இயக்குனர் ஆகும் முன் பயிற்சி தேவை என்பது போல, தயாரிப்பாளர் ஆகும் முன்பும் யாரிடமாவது பணி புரிந்து விட்டு வரவேண்டும் என்று கொண்டு வரவேண்டும். அப்படி பணி புரிந்தால் சினிமா எடுக்கும் ஆசை அவர்களை விட்டு ஓடி விடும் !

பிளாஷ் பேக் - சப்தஸ்வரங்கள்

இன்றைய சூப்பர் சிங்கர் ஜூனியரின் முன்னோடி - சன் டிவியில் ஏ வி ரமணன் நடத்திய சப்தஸ்வரங்கள். பெரும்பாலும் கர்னாட சங்கீத பாடல்களை தான் பாடுவர் என்று ஞாபகம். இறுதியில் ஒரு பாட்டு பாட சொல்லி அதன் மெட்டு, பீட்டு இரண்டையும் தலை கீழாய் மாற்றி அடிக்க அதற்கு தகுந்த படி பாடவேண்டும். பாடுவோருக்கு ரொம்ப சாலன்ஜிங் ஆன, பார்க்கும் நமக்கு சுவாரஸ்யமான ரவுண்ட் இது
                   

நிகழ்ச்சி நடத்திய ஏ வி ரமணன் பாடுவோரை நன்கு என்கரேஜ் செய்து அருமையாய் நடத்துவார். ரஜினி கமல், சூர்யா என அனைவருக்கும் பின்னணி பாடும் இன்றைய பிரபல பாடகரான கார்த்தி அறிமுகமானது சப்தஸ்வரங்களில் தான் !

சிவகார்த்திகேயன் In - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒளி வடிவம் இது; டிவி யில் பார்க்க முடியாமல் யூ டியூபில் தான் பார்த்து மகிழ்ந்தேன்

வழக்கம் போல் சிவா-வின் ஹியூமர் சென்ஸ்க்காக பார்க்கலாம்.. விளம்பரம் இன்றி இந்த ஒரு மணி நேரம் செல்லும் இந்த நிகழ்ச்சியை.

5 comments:

 1. சித்திரக் கதைகள் ‘அமர்சித்ர கதா’ நிறுவனத்தால் அவர்கள் புத்தகங்களில் படக்கதையாக வெளிவந்த வற்றைக் கொண்டு தற்போது (குழந்தைகள் புத்தகம் படிப்பதில் காட்டும் சுணக்கத்தைக் கருத்தில் கொண்டு காலத்திற்கேற்ப )அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி.

  கார்டூன் நெட்வொர்கில் இதன் ஆங்கில-இந்தி வடிவங்கள் வந்து கொண்டிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்; அநேகமாய் மாற்று மொழி இறக்குமதி என்று தான் நினைத்தேன் நீங்கள் சொன்னதும் ஊர்ஜிதம் ஆனது

   Delete
 2. Anonymous7:19:00 PM

  டிக்கெட் விலையை இன்னும் ஏற்றினால் எவனும் தியேட்டர் பக்கம் போகமாட்டான்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலியபெருமாள் நன்றி

   Delete
 3. சப்தஸ்வரங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது.

  சித்திரக்கதைகள் எங்கள் வீட்டுக்கு வரும் குழந்தைகள் காட்டுன் சனலில் பார்ப்பார்கள். நானும் சில தடவை பார்த்திருக்கின்றேன். நன்றாகத்தான் இருந்தது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...