கடற்கரை ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவோ மகிழ்வான நினைவுகளை, அனுபவங்களை தருகின்றன.
அதே கடற்கரைக்கு வேறு ஒரு முகமும் உண்டு. அந்த முகத்தை தரிசித்தவர்களால் கடற்கரையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது.
**********
ஏழாண்டுகள் முன் என்னுடன் பணி புரிந்த அலுவலக நண்பரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.
அவர் நிஜ பெயர் வேண்டாம். ரவி என வைத்து கொள்வோம். அப்போது வேலை பார்த்த சாப்ட்வேர் நிறுவனத்தில் டீம் லீடராக இருந்தார். சற்று வயதான பின் தான் திருமணம் ஆனது. பெருங்குடியில் Flat வாங்கிய போது கிரகப்ரவேசதுக்கு அழைத்திருந்தார்.
வீடு வாங்கும் முன் நான் வக்கீல் என்பதால் நிறைய சந்தேகம் கேட்பார். அப்போது வீட்டுக்கு குறிப்பிட்ட வகை இன்சுரன்ஸ் எடுத்திருப்பதாக சொன்னார். அது ஒரு பிளைன் ரிஸ்க் பாலிசி. யார் லோன் வாங்கி உள்ளனரோ, அவருக்கு ஏதேனும் நடந்து விட்டால் மீதம் EMI ஏதும் கட்டவேண்டாம். இன்சூரன்ஸ் நிறுவனம் லோன் பணத்தை வங்கிக்கு தந்து விடும். இறந்தவரின் வாரிசுகளுக்கு மீதம் பணம் தராமலே வீட்டின் உரிமை மற்றும் இதர டாக்குமெண்டுகள் வந்துவிடும்.
அப்போது அது சற்று புதிய கான்செப்ட் ஆக இருந்தது. அவரை பார்த்து விட்டு பின் நானும், எங்கள் ஹவுசிங் லோனுக்கு அதே பாலிசி எடுத்தேன்.
நிற்க. முக்கிய விஷயத்துக்கு வருவோம்
குறிப்பிட்ட நாள் அன்று ரவி அலுவலகம் வந்தார். அன்று அவர் டீமில் பணிபுரியும் நபர்களுக்கு டிரையினிங் ப்ரோகிராம் நடந்தது. அவரும் கலந்து கொண்டுள்ளார். மதியம் 12 மணிக்கு மேல் அவருக்கு ஒரு போன் வருகிறது. " அவசரமாய் கிளம்ப வேண்டும்" என்று கூறி விட்டு லீவ் சொல்லி விட்டு செல்கிறார் .
அடுத்த சில நாட்களுக்கு பின், அவரையும், மனைவி & குழந்தையும் 2 நாளாய் காண வில்லை என்கிற தகவல் கம்பனிக்கு வருகிறது. லீகல் ஹெட் எனும்போது நான் இத்தகைய விஷயங்களையும் ஹாண்டில் செய்யத்தான் வேண்டும்.
விசாரித்த போது தெரிய வந்த தகவல்கள் அதிர்ச்சியை தந்தன.
விடுப்பு கேட்டு சென்ற ரவி நேராக இல்லம் சென்று மனைவி மற்றும் கை குழந்தையுடன் மகாபலிபுரம் சென்றுள்ளார். அங்கு ஒரு ரிசார்ட்டில் அன்று மாலையும், இரவும் தங்கி உள்ளனர். அதன் பின் அவர்கள் யாரையும் காண வில்லை.
சில நாட்களுக்கு பின் ரவி மற்றும் அவர் குழந்தையின் உடல் மட்டும் பீச்சில் இருந்து கிடைத்தது.
அவர் மனைவி உடல் கிடைக்க வில்லை. மனைவி குறித்து எந்த தகவலும் தெரியாதது பல்வேறு ஊகங்களுக்கு இடமளித்தது. மக்கள் பல விதமாய் பேசினர்.
இறந்த ரவி வீட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். ரவி மற்றும் அவர் மனைவியின் உறவினர்கள் அந்த வீட்டை நிறைத்திருந்தனர். ரவி மனைவியின் பெற்றோர் கதறியதை தான் இன்னும் மறக்க முடியாது
" எங்க பொண்ணு செத்திருக்கணும்; செத்திருக்கணும். அவளோட இறந்த உடம்பை நாங்க பாக்கணும் ! அது கிடைச்சா எங்களுக்கு போதும் !" இதையே சொல்லி அரற்றி கொண்டிருந்தனர்.
அந்த பெண்ணின் உடல் கிடைக்கவே இல்லை.
கடற்கரை செல்லும் சில பொழுதுகளில், முன்பொரு சமயம் கடலில் கிடைத்த ரவி உடலும், அவர் கைக்குழந்தை உடலும் அவ்வப்போது நினைவில் வந்து போகும்.
ரவியின் மிக நெருங்கிய நண்பன் ஒருவனை சமீபத்தில் சந்தித்தேன். அந்த பொண்ணு பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சுதா என்றேன். "இல்லை" என்றான்
என்ன தான் ஆனது அந்த பெண்ணுக்கு?
வாழ்க்கை சில புதிர்களை விடுவிப்பதே இல்லை. சில கேள்விகளுக்கு அது பதில் தராமலே இருந்து விடுகிறது !
****
கடற்கரையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவம்:
எங்கள் உறவினர் ஒருவரின் மகன் மிக நன்கு படிப்பான். ஈரோடில் அவன் படித்த பள்ளியில் + 2 வில் முதல் ரேங்க். கிண்டி அண்ணா யூனிவர்சிட்டியில் பீ. ஈ படித்தான். முதல் வருடம் படிக்கும் போதே ஏனோ நிரம்ப வருத்தத்துடன் இருந்தான். இஞ்சிநியரிங்கில் 75 சதவீதம் போல் மார்க் வாங்கினான். அது அவனுக்கு திருப்தி கரமாய் இல்லை. பள்ளியில் முதல் மார்க் வாங்கியவனுக்கு கல்லூரியில் தன்னை விட பலர் அதிக மார்க் வாங்குவதை ஏற்கவே முடிய வில்லை.
ஈரோடுக்கு செல்லும்போதெல்லாம் வீட்டில் புலம்பி கொண்டிருந்திருக்கிறான். இரண்டாம் ஆண்டு செமஸ்டர் பரீட்சை நேரம் மிக மூட் அவுட். ஹாஸ்டலில் தங்கி படிப்பவன் தேர்வு எழுதாமல் எங்கோ என்று விட்டான். அவனது மொபைல் ரூமிலேயே இருந்தது.
ஈரோடில் இருந்து பெற்றோர் வந்து பல நாட்கள் போலிஸ் கம்பிலேயின்ட், பத்திரிக்கையில் விளம்பரம் தந்து தேடிய பின் ..........
அவனது உடல் கடலில் இருந்து ஒதுங்கியது !
நன்கு படிக்க கூடிய பையன். அண்ணா யூனிவர்சிட்டியில் மெரிட்டில் சீட்; கல்லூரியில் 75 சதவீத மார்க், நிச்சயம் கோர்ஸ் முடித்ததும் Campus வேலை ..! இவ்வளவும் இருந்தும் மன சிதைவு (டிப்ரஷன்) அவனை தற்கொலைக்கு தூண்டி விட்டது.
நீச்சல் தெரியாது அவனுக்கு ! கடைசியாக ஈரோடு சென்றபோது " பீச்சில் விழுந்தால் என்ன ஆகும்?" என தன் பாட்டியிடம் கேட்டிருக்கிறான். சொல்லி சொல்லி அழுதார் அவனது பாட்டி
****
அநேகமாய் கடற்கரை செல்லும்போதெல்லாம் இந்த நினைவுகள் வந்து மனதை சற்று அசைத்து பார்க்கிறது
****
துவங்கிய வரிகளில் தான் முடிக்க வேண்டும்.
கடற்கரைக்கு வேறு ஒரு முகமும் உண்டு. அந்த முகத்தை தரிசித்தவர்களால் கடற்கரையை சில நேரங்களில் அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது !

:(
ReplyDeleteஉருக்கமான பதிவு..
ReplyDeleteஅண்ணே நீங்கள் வக்கிலா..
மனசு கனக்கும் பதிவுகள்.
ReplyDeleteஉருக்கமான பதிவு..
ReplyDeleteமிக கொடுமை.அந்த பெண் என்ன ஆனார் என்பது பற்றி இன்னும் தெரியாதது ரொம்ப பாவம்..
ReplyDeleteமனம் வருந்துகிறேன். அந்தப்பொண்ணை யாராவது கடத்திக்கொண்டு போய் வேற ஊரில் கொன்னு போட்டுருப்பாங்களோ?
ReplyDeleteவிடை தெரியாத கேள்விகள் அநேகம் உண்டு:(
இனி அடுத்த முறை சென்னை பீச்சுக்குப்போகும்போது இந்த நினைவு எனக்கும் வரும்:(
Ravi would have gone for sea bath with his family members and got drowned. The body of his wife would have been washed ashore far from the spot, perhaps in some other coast and uncared for many days, then disposed of w/o knowing who.
ReplyDeleteAnna University student case is familiar. College studies are application oriented, and the boys who ranked well in schools cdnt do well here coz school education is book oriented. Unable to cope with the new system and mistakenly believing that both are same - will lead to depression and death.
Both cases are avoidable tragedies if the persons had applied some common sense: Don't go for bath if u don't know swimming. Swimming in placid waters like lake and roaring waters like the sea needs different skills. Did Ravi possesse that?
The boy shd have been rightly told that in TN education system, school education is a complete wreck of personality: it injects illusion in the minds of rankers i.e. they are equal to other intelligence.
In both tragedies, it is not the sea which is responsible. If a couple commit suicide in Kodaikkonal hills, the hill is not responsible.
Your title says the ugly face of the sea. It is wrong in both cases. Sea has only one face, beautiful as we see in your picture here.
Nevertheless, it has an ugly or terrifying face only if it comes in tidal waves and sweep the coast and people; tsunami tragedy. Only here, the sea is, you can say, showing its horrifying face.
2004-ல் நீலாங்கரையை தாண்டி வசித்துவந்த நண்பரின் வீட்டருகில் இதை போல சம்பவம் நடந்தது. பக்கத்து வீட்டு குழந்தை ஷிவானி நண்பரின் வீட்டுக்கு விளையாட வரும். குழந்தையின் பெற்றோர் குழந்தையுடன் மகாபலிபுரம் சுற்றுலா சென்று காணமல் போயினர். ஊரிலிருந்து மனைவி-கணவன் இரு தரப்பு பெற்றோரும் சில மாதம் அவ்வீட்டில் வந்து தங்கி தேடியும் கணவன் குழந்தையின் உடல் மாத்திரமே கிடைத்தது.மனைவியின் உடல் கிடைக்கவே இல்லை. அவர்களுக்கும் இதே கவலை. இளைஞர்கள் போல குழந்தை வைத்திருப்போர் பொதுவாக கடலில் நீந்த செல்ல மாட்டர்கள் என்பதால் பெரும் சந்தேகம் கிளப்பியது. ஆனாலும் சுனாமி வந்து சென்று சில வாரங்கள் கடந்த நிலையில் வானிலை சரியில்லாத நேரத்தில் கடற்கரைக்கு போய் மாட்டிக்கொண்டார்கள் என நினைத்தோம்.வானிலை சரியில்லாத நேரத்தில் ஏன் போனார்கள் என்பதோடு பேச்சு நின்று போனது. ஆனால் நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் மகாபலிபுரம் போவது பெண்களுக்கு மகாஆபத்து போலத்தான் தெரிகிறது.
ReplyDeleteமனம் நெகிழும் பதிவுகள்
ReplyDeleteஅதிக வருத்தமான நினைவுகளை இனி இந்த பதிவு நான் கடலை எங்கு பாத்தாலும் வரும். பொதுவாக விதி முடியும் முன் இறந்தவர்களின் ஆவிகள் உயிர் நீத்த இடத்திலே தான் இருக்குமா . அந்த கணவரும் குழந்தையும் இறந்த இடத்தில் ஒரு மீடியேட்டர் துணையுடன் சென்று அவர்கள் ஆத்மாவுடன் பேசி அந்த பெண்ணை தகவலை பெற்று இருந்துருக்கலாம் .. இது ஒரு நம்பிக்கை தானே தவிர உண்மையாக விபரத்தை பெற முடியாது பெண்ணின் பெற்றோருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் . கிராமங்களில் யாரவது தற்கொலை அல்லது இறந்து விட்டாலோ இப்படிதான் 'கனி' கேட்டு அந்த ஆத்மா இறந்ததற்கு தங்கள் எதிரி மீது பழிய போட்டு பகைய வளர்ப்பார்கள்
ReplyDeleteபின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
ReplyDeleteகுலசேகரன் : உங்கள் பின்னூட்டம் பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது
தங்கள் கருத்தும் அனுபவமும் சொன்னமைக்கு நன்றி துளசி டீச்சர் , கார்த்திகேயன் & நந்தவனத்தான்
இதுவரை இதைப்போன்றொதொரு பதிவை நீங்கள் எழுதி நான் படித்ததில்லை.முதன்முறையாக உங்களின் உள்மனதின் சோக நினைவுகள் கொஞ்சம் அதிகமாகவே எங்களையும் தொட்டிருக்கிறது.
ReplyDeleteகாற்று வாங்கவும் மன அமைதிக்குமே கடற்கரை ஏற்றது என்பது மட்டுமே உண்மை
ReplyDelete