Wednesday, May 22, 2013

வானவில்- நஸ்ரியா- கண்கள் இரண்டால்- இலவச மிக்சியின் தரம்??

தமிழக அரசு தரும் இலவச பேன், மிக்சி எப்புடி?

எங்கள் தெருவை சேர்ந்த ஒருவர் பகிர்ந்த செய்தி இது:

தமிழக அரசு தரும் இலவச பேன், மிக்சி சமீபத்தில் வாங்கி வந்துள்ளார். அவரது மிக்சியில் திருகும் பட்டனே இல்லை! வேறு தாருங்கள் என்று கேட்டால் " கம்பனியே அப்படி தர்றாங்க. நாங்க என்ன செய்வது? " என மாற்றி தரலியாம். " எனக்காவது பரவாயில்லை; ஒருத்தர் Fan- ல் - ரெக்கைகளே இல்லை ! இதுக்கென்ன சொல்றீங்க " என்று சிரித்தார் அவர்.

இலவசம் என்கிற பேரில் சிலருக்கு மட்டுமே வழங்கி அதிலும் தரமில்லாத பொருட்களை தந்து மக்களிடம் திருப்தியின்மையை தான் அரசியல் கட்சிகள் சம்பாதிக்கின்றன !

அழகு கார்னர்

ஊரே 5 நாளாய் இவரை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறது நேரம் பட ஹீரோயின் - நஸ்ரியா. (கூகிள் பிளஸ்சில் இப்படம் பகிர்ந்த உண்மை தமிழன் அண்ணனுக்கு நன்றி)
போஸ்டர் கார்னர்

என்னென்ன டிராபிக் மீறல்களுக்கு எவ்வளவு பைன் என்று சொல்கிற போஸ்டர் ! நன்கு படிக்க போஸ்டர் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படியுங்கள்என்னா பாட்டுடே !

பொதுவாய் இன்றைய பாடல்கள் குறித்து இருக்கும் குற்றசாட்டு - அவை பழைய கால பாடல்கள் போல காலத்தை தாண்டி நிற்பதில்லை என்பது. ஆனால் ஜேம்ஸ் வசந்தன், இசை அமைத்த முதல் படத்திலேயே நீண்ட காலம் வாழும் இந்த பாட்டை நமக்கு அறிமுகப்படுத்தியது ஆச்சரியமான விஷயம் தான்.

கண்கள் இரண்டால் என்கிற இந்த பாடல் - அந்த வருடத்தில் எனது வெவ்வேறு வித நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிடித்த பாடலாய் இருந்ததை காண முடிந்தது. பொதுவாய் ரசனையில் வேறுபட்ட அவர்கள் அனைவரையும் எப்படி இந்த ஒரு பாடல் ஈர்த்தது? இத்தனைக்கும் பாடிய இருவரும் இப்பாடலில் தான் அறிமுகம்.

எல்லா பாடல்களையும் போல மெட்டு தான் இந்த பாடலையும் நம் மனதுக்குள் வந்து அமர வைக்கிறது. பாடலை படமெடுத்த விதமும் அழகுஐ.பி.எல் .....

ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் கைது ஒரு புறம் - அதற்கு BCCI -யின் வழ வழா கொழ கொழா நடவடிக்கை -இவை மனதை பாதிக்கவே செய்கிறது. இருப்பினும் - எத்தனையோ மன அழுத்தங்களுக்கு கிரிகெட் என்கிற இந்த என்ட்டர்டெயின்மென்ட் உதவுவதால் - பார்க்கவே செய்கிறோம்

சென்னை 5 வது முறையாக பைனல் உள்ளே நுழைவது மிக மகிழ்ச்சி. ஐ.பி.எல் .லில் Most Consistent அணி என்றால் அது சென்னை அணி தான் என்பதை யாருமே மறுக்க முடியாது

பைனலில் மீண்டும் சென்னை- மும்பை மோதும் என்று எதிர்பார்க்கிறேன் பார்க்கலாம் !

அய்யாசாமி கார்னர்

ஒரு நாள் Mrs . அய்யாசாமி சீக்கிரமாய் அலுவலகம் கிளம்பிவிட, அய்யாசாமி கணினியில் அமர்ந்து சற்று ஜனநாயக கடமை ஆற்றி விட்டு, ஆபிஸ் கிளம்பினார். சாப்பாட்டு பை, ஹெல்மெட் எல்லாம் எடுத்துகிட்டோம் தானே என நன்றாக செக் செய்து கொண்டு வண்டியை எடுத்து கொண்டு சற்று தூரம் சென்றவர், எதேச்சையாக திரும்பி பார்க்க வீட்டை பூட்டாமல் முழுவதும் திறந்து போட்டு விட்டு கிளம்பியது தெரிந்தது. அன்று எதேச்சையாய் திரும்பா விடில், மாலை வரை வீடு திறந்தே கிடந்திருக்கும் !

ஆபிஸ் போனதும் Mrs . அய்யாசாமிக்கு இதை போனில் சொல்லி, போதுமான திட்டு வாங்கியதும் தான் மெயில் பாக்ஸையே ஓபன் செய்தார் நம்ம ஆளு !

பாலாஜி காமெடி

சென்னை சூப்பர் கிங்க்ஸ் டிரைனரை போனில் கூப்பிட்டு அவரை இஷ்டத்துக்கு களாய்க்கும் பாலாஜி காமெடி கேட்டு சிரியுங்கள் !

7 comments:

 1. ஆபிஸ் போனதும் Mrs . அய்யாசாமிக்கு இதை போனில் சொல்லி, போதுமான திட்டு வாங்கியதும் தான் மெயில் பாக்ஸையே ஓபன் செய்தார் நம்ம ஆளு !

  கடமை தவறாத காவலர் ..!

  ReplyDelete
 2. அழகு கார்னரில் தொடர்ந்து நஸ்ரியா படம் போட்டால் நாங்களும் தொடர்ந்து வருவோம்

  நஸ்ரியா தற்காப்புப் படை :-)

  ReplyDelete
 3. அய்யாசாமிகார்னர்... தப்பித்தீர்கள்.

  அழகுகார்னர்... அழகு.

  ReplyDelete
 4. //ஆபிஸ் போனதும் Mrs . அய்யாசாமிக்கு இதை போனில் சொல்லி, போதுமான திட்டு வாங்கியதும் தான் மெயில் பாக்ஸையே ஓபன் செய்தார் நம்ம ஆளு !//

  திட்டு வாங்காம உங்களால் இருக்கவே முடியாதா :)

  ReplyDelete
 5. https://www.youtube.com/watch?v=xyyXcdTW1RQ

  Chinna Kannan Azhaikkiran- Rethi gowlai yennra ragathil amaintha padal ithuvum.

  ReplyDelete
 6. பைனுக்கு ரசீது தருவார்களா

  ReplyDelete
 7. Anonymous9:07:00 AM

  நஸ்ரியா ஒரு சாயலில் நம்ம நயன்தாரா மாதிரியே இருக்கிறார்.நயனை விட அழகாகவே இருக்கிறார்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...