Wednesday, June 12, 2013

வானவில் - நேரம் -மீரா ஜாஸ்மின் -ஷீகர் தவன்

பார்த்த படம் - நேரம்

இளைஞர்கள் கைவண்ணத்தில் இன்னொரு வித்யாச படம்; ஒரே நாளில் நடக்கும் கதை - தொய்வின்றி விறுவிறுப்பாய் நகர்கிறது. ஹீரோ - புதுமுகம் எனினும் இயல்பான நடிப்பு. நஸ்ரியா - நஸ்ரியா என நமது மக்கள் ஜொள்ளு விட்டனர் . ஆனால் ஹீரோயினுக்கு ரொம்ப சின்ன ரோல் தான். கெட்ட நேரம் என ஒன்றிருந்தால் - அடுத்து நல்ல நேரமும் வந்தே தீரும் என்று சொல்லி ஜாலியாய் படத்தை முடிக்கின்றனர்.

ஒரு முறை பார்க்க தக்க படம் !

தியேட்டரில் குற்றவாளியை தேடும் சென்னை போலிஸ்

அண்மையில் தியேட்டரில் படம் பார்க்க சென்ற போது காட்டிய ஒரு விளம்பர ஸ்லைடு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாய் கடைகளுக்கு தான் விளம்பர ஸ்லைடு போடுவார்கள். அல்லது எச்சில் துப்பாதீர் என தியேட்டர் காரர்களே ஸ்லைடு போடுவர்.

ஆனால் " சதீஷ் குமார்" என்கிற குற்றவாளியை காணவில்லை; கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் தரப்படும் என்று சென்னை போலிஸ் விளம்பரம் செய்துள்ளது ! எத்தனை பேர் இதனை கவனிப்பார்கள் என்று தெரியலை. மேலும் அவர்கள் ஒரு ஸ்லைடுக்குள் ஏராள விஷயங்கள் போட்டிருப்பதால் அதை முழுமையாய் படிக்க முடியாமல் போகிறது. "தேடப்படும் குற்றவாளி; கண்டுபிடித்தால் சன்மானம் " என்ற வரிகளோடு முடிக்காமல், ரெண்டு பக்க கட்டுரை அளவில் செய்தி போட்டால் சில நொடிகளில் எப்படி படிக்க முடியும்?

அழகு கார்னர்            

   

இந்த வார ரிலீஸ்கள் - தில்லு முல்லு & தீயா வேலை செய்யணும் குமாரு

வரும் வெள்ளியன்று இவ்விரு காமெடி படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஒரு வார இடைவெளியில் வெளிவராமல் - ஏன் ஒன்றாக ரிலீஸ் செய்யணுமோ தெரியவில்லை

ஒரிஜினல் தில்லு முல்லு - ஒரு கிளாசிக் படம். அது தந்த திருப்தியை / சந்தோஷத்தை புது படம் தருமா என்பது சந்தேகமே.

தீயா வேலை செய்யணும் - சந்தானம் இருந்தும் கூட அவர்கள் ஒளிபரப்பும் எந்த காட்சியும் ஈர்க்கவில்லை

எனக்கென்னவோ ரெண்டு படமும் ஊத்திக்கும் என தோன்றுகிறது. ஊகம் தவறினால் மகிழ்ச்சியே !

கிரிக்கெட் கார்னர்

மினி உலக கோப்பையில் இந்திய அணி அதிசயமாக நன்கு ஆடி வருகிறது அதிசயமாக என குறிப்பிட காரணம்- வழக்கமாய் ஐ பி எல் லுக்கு அடுத்து - உடனே வரும் டோர்ணமேன்ட்டுகளில் சற்று சொதப்புவது இந்தியாவின் வழக்கம்.

ஷீகர் தவன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் தூள் கிளப்புறார் (இவரை பற்றி ஒரு தகவல் தெரியுமா ? ஏற்கனவே திருமணமாகி - விவாகரத்தான ஒரு பெண்ணை இவர் மணந்துள்ளார். முதல் திருமணம் மூலம் அப்பெண்ணுக்கு இரு குழந்தைகளும் உண்டு; அந்த இரு பெண் குழந்தைகளும் இப்போது எனக்கு தோழிகள் என்று கூறியுள்ளார் ஷீகர் தவன் )

இன்னொரு பக்கம் ஜடேஜாவும் அசத்தி வருகிறார். இளைஞர்கள் அதிகம் இருப்பதால் பீல்டிங் அட்டகாசமாய் இருக்கு ! பவுலிங் தான் சற்று வீக்

இந்தியாவின் எழுச்சி - தற்காலிகமாக இல்லாமல் செமி பைனலிலும் பைனலிலும் இதே போல ஆடினால் நன்றாயிருக்கும் !

என்னா பாட்டுடே

என்னை முதன் முதலாக கவர்ந்த பாடல் என்றால் - அது இளைய நிலா தான் !

பள்ளியில் படித்த காலம் அது -

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால். அழுதிடுமோ அது மழையோ ?

என்ற வரிகள் ரொம்பவே பிடித்து  விட்டது. என்னமா யோசிச்சிருக்காரு பாட்டு எழுதியவர் என நினைத்து நினைத்து வியந்தேன்.

எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் பார்த்தபோது - படமும் கூட ரொம்பவே ஈர்த்தது. பயணங்கள் முடிவதில்லையில் அத்தனை பாடல்களும் அட்டகாசம் எனினும், இன்றும் - எனது விருப்ப பாடலாக இருக்கும் இளைய நிலா இதோ உங்களுக்கு



ஜூனில் ஒரு மழை காலம்

அண்மையில் மிக மகிழ வைத்த விஷயம் ஜூனில் நான்கைந்து நாள் சென்னையில் மழை பெய்தது தான் ! சென்ற வருடம் முழுதும் மழை குறைவு என்பதால் - எங்கள் ஏரியா உட்பட பல இடங்களில் போர்வெல் வற்றி விட்டது. பஞ்சாயத்து விடும் தண்ணீரும் குறைந்து விட்டது. பலரும் உபயோகதிற்கே தண்ணீர் வாங்கும் நிலை. ஒவ்வொரு முறையும் தண்ணீர் லாரி வாடகை வேறு ஏற்றி கொண்டே போயினர். ஜூனில் பெய்த இம்மழை - போர்வெல்களுக்கு மீண்டும் உயிர் தந்துள்ளது- பஞ்சாயத்து தண்ணீரும் வர துவங்கியுள்ளது

சென்னையில் பீச் இருப்பதாலோ என்னவோ - அடிக்கடி டிப்ரஷன் உருவாகி ஓரளவு மழை பெய்து காப்பாற்றி விடுகிறது !

13 comments:

  1. ரசிக்கவைத்த வண்ணமிகு வானவில்

    ReplyDelete
  2. Anonymous9:45:00 AM

    தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு பார்க்கும் ஆர்வம் தற்போதைக்கு இல்லை. ஏதாவது ஒன்று ஹிட் அடித்தால் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று தள்ளிவைத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அதே அதே சபாபதே :-)

      Delete
  3. இளைய நிலா பாடலை என் அப்பா ரசித்து.., நான் கேட்டு.., என் மகளின் ஃபேவரிட் ஆனதே அதன் வெற்றி

    ReplyDelete
  4. தில்லுமுல்லு அருமையான நகைச்சுவைப் படம். ரீமேக் எப்படி இருக்குமோ?

    ReplyDelete
  5. இளையநிலா இன்றும் ரசிக்கும் ஒரு இனிய இசைக்கீதம்!

    ReplyDelete
  6. தில்லு முள்ளு ரஜினியை புதிய பரிமாணத்தில் காட்டிய படம்

    இவர்கள் ரீமேக் என நல்ல படத்தை நாசம் செய்வார்கள்

    பாப்போம் இதாவது தப்புமா? என்று

    எனது முதல் சாய்ஸ் தில்லு முள்ளு தான்

    ReplyDelete
  7. ஷிகார் தவான் குறித்த தகவல் புதிது! இளையநிலா பாடல் என்னையும் கவர்ந்த ஒரு பாடல்! எனக்கும் கூட ரீமேக் தில்லு முள்ளு ஊத்திக்குமோன்னு தோணுது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. "நேரம் "அறிமுகத்துக்கு நன்றி.

    மழை கிடைக்கட்டும் தண்ணீர் பற்றாக்குறை நீங்கட்டும். இங்கு தற்போது தினம்தோறும் மழை.

    ReplyDelete
  9. இளைய நிலா இன்றும் என்றும் இள்மையாய் தாலாட்டுகிறது.

    ReplyDelete
  10. Anonymous1:37:00 AM

    தகவல்களும், பகிர்வுகளும், பாடலும் மிக அருமை. மினி மீல் சாப்பிட்ட திருப்தி போல ..

    ReplyDelete
  11. ரஜினியின் தில்லுமுல்லு படம் அளவுக்கு இருக்குமென எதிர்பார்க்க முடியாது.....

    ரஜினியின் படமே ஹிந்தியில் [கோல்மால்] அமோல் பலேக்கர் நடித்துப் பார்த்திருக்கிறேன். அது இன்னும் நன்றாக இருக்கும்.....

    ReplyDelete
  12. நண்பர்களே : தங்களின் கருத்துக்கு அன்பான நன்றிகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...