Saturday, June 22, 2013

உணவகம் அறிமுகம் - திண்டுக்கல் வேலு பிரியாணி

வேளச்சேரியில் ஷாப்பிங் முடித்து இரவு பத்து மணியளவில் டின்னர் சாப்பிட கடை தேடினோம். ஒரு வழியாக திண்டுக்கல் வேலு பிரியாணி கடைக்கு வந்து சேர்ந்தோம்.

                                    

வேளச்சேரி ரயில் நிலையம் மிக அருகே உள்ளது திண்டுக்கல் வேலு பிரியாணி கடை. மேம்பாலத்திலிருந்து பார்த்தாலே கடையின் போர்டு பெரிதாக தெரியும்.

டேஸ்டுக்காக ஒரு பிரியாணியும், பெண் சாப்பிடும் விதம் வேறு சில உணவுகளும் ஆர்டர் செய்தோம்

வேலு பிரியாணி என்று பெயர் உள்ளதே தவிர மற்ற வகை உணவுகள் தான் நிறையவே உள்ளது.

நாங்கள் சாப்பிட்டவை

சிக்கன் பிரியாணி -1
எக் பிரைட் ரைஸ்
சிக்கன் கொத்து பரோட்டா
எக் நூடுல்ஸ்

பரோட்டா, சப்பாத்தி போன்ற எதற்கும் குருமா தர மாட்டார்களாம் ! சைட் டிஷ் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றனர். சைட் டிஷ் ஒவ்வொன்றும் 150 முதல் 200 வரை விலை !

சீக்கிரமே உணவுகளை தந்து விட்டனர்

பிரியாணி ரொம்ப சுமார் தான். எக் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து பரோட்டா தான் நன்றாக இருந்தது. நூடுல்ஸ் ஜஸ்ட் ஓகே

ஒவ்வொரு ஐட்டமும் 120 முதல் 150 ரூபாய் ரேஞ்சில் இருக்கிறது (நான், ரொட்டி தவிர்த்து ). விலை சற்று அதிகம் தான். விலைக்கேற்ற தரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது

ஹோட்டல் தூரத்தில் இருந்து பார்க்கும்போது மெயின் இடத்தில் இருக்கிற மாதிரி தெரிந்தாலும், அருகில் போனால் சூழல் சற்று சரியில்லை. அருகிலேயே கால்வாய் ஓடுகிறது. (மினி கூவம் !! )

ஒரு இடத்தின் சுத்தத்தை அறிய அங்கு டாய்லெட் எப்படி வைத்துள்ளனர் என்பதை வைத்து அறியலாம் ! ஹோட்டலில் சாப்பிடும் அரை நீட்டாக இருந்தாலும், டாய்லெட் மோசமாக வைத்துள்ளனர். மாடியில் ஹோட்டல்- டாய்லெட் கீழே தரை தளத்தில் மட்டுமே; அதுவும் மோசமான நிலையில் :(

வேலு பிரியாணி - Value for money அல்ல !

2 comments:

  1. நல்லாவே இருக்காது இந்த கடையில்.சில்லி சிக்கனை ரொம்ப புளிப்பா சாப்பிட்டேன்.வேணு பேமஸ் ஆனதுனால வேலு ன்னு பேரு வச்ச டூப்ளிகேட் கடை

    ReplyDelete
  2. ம் ம் ம் அந்த ராத்திரி நேரத்துல பிரியாணி நல்லா இருக்காது சகோ!மதியம் செஞ்சதை சூடு பண்ணித்தான் தருவாங்க. அதனால உண்மை டேஸ்ட் தெரியாது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...