Monday, August 12, 2013

வானவில்- 1 வருடமாய் தமிழ் மணம் முதலிடம்- ஆண்ட்ரியா - யாத்தே

ஒரு வருடமாய் தமிழ் மணம் முதலிடத்தில் வீடுதிரும்பல் 

தமிழ் மணம் ரேங்கிங் எந்த அளவு நம்பகரமானது என்பது நிச்சயம் கேள்விக்குறி தான். நன்றாய் எழுதும் பதிவர்கள் பலரும் தமிழ் மண ரேங்க்கிங்கில் இல்லை. இன்னும் பலரோ தமிழ் மணத்திலேயே இல்லை.

ஆயினும் எந்த ஒரு ரேன்க்கிங்கும் குறை சொல்ல முடியாத ஒன்றல்ல. அலெக்சா கூட - தனி டொமைன் வைத்திருக்கும் இணைய தளங்களுக்கு தரும் அங்கீகாரத்தை ப்லாக்ஸ்பாட்களுக்கு தருவதில்லை.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12 ஓவர் ஆல் - முதலிடம் வந்த தமிழ் மண ரேங்க்கிங் - தொடர்ந்து ஒரு வருடமாக வீடுதிரும்பலுக்கு நீடிக்கிறது. இது பெரிய விஷயமா இல்லையா என்றெல்லாம் தெரியலை. இதற்கு முன் சிபி ஒரு வருடம் இப்படி முதலிடத்தில் இருந்திருக்க கூடும்.

சென்ற ஆண்டு சரியாக எனது பிறந்த நாள் (ஆகஸ்ட் 12 -) அன்று தமிழ் மணம் முதலிடம் வந்தது - எனவே இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 வரும்போது ஓராண்டு பூர்த்தியாகும் என்பது நினைவில் இருந்தது !

ஒரு தகவலாக இதை இங்கு பதிந்து வைக்கிறேன்... அவ்வளவே !

வேலை பளுவால் தினம் எழுதுவதை குறைத்தால் - வீடுதிரும்பலும் கீழே நிச்சயம் இறங்கி விடும். அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

அழகு கார்னர்

சின்ன தலைவி ஆண்ட்ரியா-வை முகநூலில் தொடர்கிறேன் - அங்கே போனாதான் தெரியுது - இணையத்தில் நமக்கு பரிச்சயமான ப்ளாகர்கள் பலரும் - follower ஆக ஏற்கனவே அங்கு அமர்ந்துள்ளனர் என்று !

அம்மணி தினம் ஒரு சில படங்கள் எடுத்து விடுகிறார். முகநூலில் இருப்பதே ஒரு நாளைக்கு அரை மணி நேரம்  என்றால் - இவர் பக்கத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவே பாதி நேரம் போயிடுது !பார்த்த படம் - பட்டத்து யானை

முதல் பாதியில் அப்பாவியாய் காமெடி செய்தபடி நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ - இடைவேளையில் அவர் பற்றிய ஒரு ட்விஸ்ட் - அதன் பின் ஹீரோ பற்றிய ஒரு பிளாஷ் பேக் - கடைசியில் வில்லனை பழி வாங்குவது என்று இதுவரை பார்க்காத தளத்தில் வந்துள்ள படம் பட்டத்து யானை ! # முடியல !

முதல் முக்கால் மணி நேரம் சந்தானம் வரும் பகுதிகள் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறது. அதிலும் ஹோட்டலில் காசு இல்லாமல் அவர் அமர்ந்து சாப்பிடும் காட்சி கலக்கல் !

எப்ப சந்தானம் காணாமல் போனாரோ அப்பவே படம் வழக்கமான பாணியில் விழுந்து விடுகிறது

ஹீரோயின் - சொல்றதுக்கு ஒண்ணுமில்லை ! அர்ஜூன் பொண்ணாம் !

டிவி யில் போடும்போது பார்க்கலாம் - முதல் முக்கால் மணி நேரம் மட்டும் !

ஒரு வழியாய் பாஸ் ஆன கம்பனி சட்டம் 

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட கம்பனி சட்டம் 8 மாதம் கழித்து இப்போது ராஜ்ய சபாவிலும் அங்கீகரிக்கப்பட்டது. இத்தனைக்கும் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. ஏன் தான் இம்புட்டு நாள் ஆச்சுதோ ! 57 ஆண்டுகள் பழமையான கம்பனி சட்டம் முழுமையாக மாறுகிறது. எனவே என்னை போன்ற கம்பனி செகரட்டரிகளுக்கு ஏராள வேலை இருக்கு ! ஒன்று எங்கள் நிறுவனத்தில் செய்ய வேண்டிய மாறுதல்கள். அடுத்தது - இது பற்றி அடுத்த 6 மாதத்துக்கு நாங்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய மீட்டிங்குகள்.

இன்னும் ஜனாதிபதி ஒப்புதல் மற்றும் கெசட் (Gazette) வெளியீடு ஆகியவை நடக்கணும்; அதன் பின் தான் இது சட்டமாகும். அதற்கும் வேறு அரசியல் நடக்காமல் இருக்கணும் !

கம்பனி சட்டம் பற்றி - அதன் மாறுதல்கள் பற்றி ஓரிரு பதிவுகள் நிச்சயம் எழுதுகிறேன் !

என்னா பாட்டுடே

ஜீவி பிரகாஷ் குமார் சின்ன வயது என்றாலும் திறமையில் சில சமயம் அசத்தி விடுகிறார் அசத்தி.

ஆடுகளத்தில் யாத்தே யாதே ; ஒத்த சொல்லாள; ஐய்யய்யோ நெஞ்சு அலையுதடி என மூன்று பாட்டுமே கேட்கவும் சரி, பார்க்கவும் சரி ரொம்பவும் ரசிக்க வைக்கும்.

யாத்தே யாத்தே - பாடலில் ஒரு தலையாய் பெண்ணின் பின்னே அலையும் இளைஞனை இப்பாடலில் என்னமாய் பிரதிபலிக்கிறார் தனுஷ் !

சைக்கிளில் போகும்போது ஹீரோயினை பார்த்துவிட்டு தரும் உடல் அசைவுகள் .. முதல் முறை பைக் எடுத்து கொண்டு ஹீரோயின் வீட்டு முன் நின்ற படி அவள் பார்க்க மாட்டாளா என ஏங்குவது - நாம் சைட் அடிக்கும் பிகர் நம்மை தாண்டி செல்லும்போது " அப்புறம் என்னடா மாப்ளே " என சத்தமாக பேசுவது ..பஸ்ஸில் நம்ம டாவு பக்கத்தில் நிற்கும்போது காட்டும் குஷியான உணர்வு. ...இப்படி நாம் அடித்த லூட்டிகளில் சிலவற்றை பார்க்கும் உணர்வை தரும் இப்பாடல் ..வழக்குகள் ஸ்டேட்டஸ் இணைய தளத்தில்

நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் - என்றைக்கு நம்ம கேஸ் ஹியரிங்கிற்கு வருகிறது - அல்லது நம் சொத்து குறித்து வேறு வழக்கு உள்ளதா போன்ற விபரங்களை கணினி மூலம் அறிய ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட 10,000 நீதிமன்றங்களின் விபரங்கள் ecourts.Gov.In என்ற இணைய தளத்தில் விரைவில் கிடைக்கும்.

வழக்கறிஞர்களுக்கும் இந்த இணையம் நன்கு பயன்படப்போகிறது. எந்தெந்த கோர்ட்டில் தமக்கு எந்த வழக்கு உள்ளது என்ற காஸ் லிஸ்ட் இந்த இணையம் மூலமே பார்க்க முடியும்.

விரைவில் இந்த இணைய தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவோம் !

படித்ததில் பிடித்தது

பத்மாமகன் என்ற இயக்குனர் - தமிழில் அம்முவாகிய நான் என்கிற படம் இயக்கியவர் இப்போது மீண்டும் ஒரு படம் இயக்கி வருகிறார் இவரின் பேட்டி பத்திரிகை ஒன்றில் வாசித்தேன்

மனிதர் நாள் முழுதும் குடியில் தான் இருப்பாராம் ! காலை 10 மணிக்கு தான் டாஸ்மார்க் திறக்கும் என 9 மணிக்கு எழுந்து பின் நேராக டாஸ்மார்க் செல்வாராம். படம் எடுத்த போதே கூட குடித்து விட்டு தான் ஷூட்டிங் செல்வாராம். அப்படி பட்டவர் ஒரு நாள் தண்ணி அடிப்பதை முழுவதும் நிறுத்தி விட்டார் !

2 வருடம் முன்பு - டிசம்பர் 31 செமையாய் தண்ணியில் இருக்கும் போது நண்பரிடமிருந்து ஒரு SMS வந்துள்ளது. அதில் இருந்த வாசகம் இது தான்:

"வாழ்வில் பிறப்பும், இறப்பும் உங்கள் கையில் இல்லை அதை தவிர மற்ற எது தேவைஎன்றாலும் அதை தேடி நீங்கள் தான் செல்ல வேண்டும் !" என்ற வரிகளை படித்த பின் - நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம் என உறைக்க அடுத்த நாளில் இருந்து தண்ணி அடிப்பதை முழுதும் நிறுத்தி விட்டார். தண்ணி அடிப்பதை நிறுத்தி ஏழெட்டு நாள் பொட்டு தூக்கம் இல்லையாம். இருந்தும் மருத்துவரிடம் செல்லாமல், மறுபடி எப்போதோ ஒரு முறை என்று கூட நுழையாமல் இவர் மீண்டு வந்த கதை நிஜமாவே ரொம்ப அருமையாய் இருந்தது !
****
டிஸ்கி: இன்று எங்கள் கம்பனி வருடாந்திர கூட்டம் மற்றும் போர்ட் மீட்டிங். எனவே மாலை 4 மணி வரை தொலை பேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பேன் நண்பர்களே !

40 comments:

 1. தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளதற்கு வாழ்த்துக்கள்.
  தமிழ் மண தர வரிசை அளவுகோலை தள்ளி வைத்துப் பார்த்தாலும் அதிக பார்வையாளர்கள் வருகை தரும் தளங்களில் உங்களுடையதும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 2. தொடர்ந்து எழுதவும் முதலிடத்தில் இருக்கவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

  முதலிடத்திற்கு பின் நிறைய உழைப்பு இருக்கிறது. பாராட்டுகள். தொடருங்கள்!!

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. //அம்மணி தினம் ஒரு சில படங்கள் எடுத்து விடுகிறார். முகநூலில் இருப்பதே ஒரு நாளைக்கு அரை மணி நேரம் என்றால் - இவர் பக்கத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவே பாதி நேரம் போயிடுது !//

  அனிருத் படம் உண்டா

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் & தொடர்ந்து முதலிடத்தில் இருக்கவும் வாழ்த்துக்கள்

   Delete
 7. ஒரு வருடமாய் தமிழ் மணம் முதலிடத்தில் வீடுதிரும்பல் - பாராட்டுக்கள்..!

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  வானவில் பல தகவல்களுடன் சிறக்கின்றது.

  தமிழ்மண முதலிடத்துக்கு வாழ்த்துகள். தொடருங்கள்

  ReplyDelete
 9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். . , .

  ReplyDelete
 10. தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடம் பெற்றமைக்கும், பெறவும் வாழ்த்துக்கள். . , .

  ReplyDelete
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளும் முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்குப் பாராட்டுகளும்.

  ReplyDelete
 13. பிறந்த நாள் வாழ்த்துக்கள். தகவல்களை சுவாரஸ்யமாக தருகிறீர்கள். முன்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் என்று ஒரு பத்திரிகை வரும் பல சஞ்சிகைகளிலும் வெளிவரும் சுவாரஸ்யமான கட்டுரைகள், நிகழ்வுகள், தகவல்கள் ஆகியவற்றுடன் ரசிக்கத்தக்க ஜோக்குகளையும் இணைத்து தருவார்கள். அதுபோல உங்களுடைய ப்ளாகும் ஒரு டைஜஸ்ட் மாதிரிதான் இருக்கிறது.. இது தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அண்ணே நான் தமிழ்மணதுல்ள ஆரம்பிக்கும் போது 888 ல இருந்து இப்போ 97 ஆயிருக்கு ரேங்கிங் நமக்கு ஒரு உற்சாகம் தான் கொடுக்குது ண்ணே

  ReplyDelete
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!

  ReplyDelete
 16. பிறந்தநாள் வாழ்த்துகள்

  பாஸ் உங்களுக்கு Rank - 1st கு முழுதகுதி இருக்கு பாஸ்.. ஜாலியா ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க..

  ReplyDelete
 17. Happy Birthday Mohan. Where is the party? Can't escape saying this is not the age for partying...I'm asking for RANK 1 for a year.

  ReplyDelete
  Replies
  1. அலோ எனக்கென வயசாகிடுச்சு ?? இப்பதான் 25 முடிஞ்சு 26 ஆரம்பிக்குது ..(மனசில )..

   ட்ரீட் - தானே தந்துடலாம் :)

   Delete
 18. பிறந்த நாளுக்கும், வருடம் பூரா முதல் இடத்தில் நிற்பதற்கும், மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

  நல்லா இருங்க.

  ReplyDelete
 19. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே ...

  ReplyDelete
 20. தொடரட்டும் மகுடம்!
  பிறந்த நாள் வாழ்த்துகள்
  த.ம.7

  ReplyDelete
 21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 22. வாழ்த்துகள் சகோ!!

  ReplyDelete
 23. // நன்றாய் எழுதும் பதிவர்கள் பலரும் தமிழ் மண ரேங்க்கிங்கில் இல்லை //

  நான் பதிவு எழுதிவந்ததை நிறுத்தியமைக்கு, காரணம், இப்பொழுதாவது பலருக்கு புரிந்திருக்கும்..

  ReplyDelete
 24. // தொடர்ந்து ஒரு வருடமாக வீடுதிரும்பலுக்கு நீடிக்கிறது. //

  Have they stopped 'updating' ?

  ReplyDelete
  Replies
  1. இல்லை; அப்டேட் ஆகிறது மாதவா. இதிலேயே சக்கர கட்டி என்ற நண்பர் போட்டுள்ள கமண்ட் பார்க்கவும்.

   மேலும் நானும் முதல் 20 இடங்களில் பலரின் ரேங்கிங் மாறுவதை அவ்வப்போது கவனித்துள்ளேன்

   Delete
 25. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....

  ReplyDelete
 26. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...........

  ReplyDelete
 27. பிறந்தநாள்வாழ்த்துக்கள்நண்பரே

  ReplyDelete
 28. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!!

  ReplyDelete
 29. வாழ்த்து சொன்ன ஒவ்வொரு நண்பருக்கும் நெகிழ்வான நன்றி. இணையம் எத்தனை எத்தனை நண்பர்களை பெற்று தந்துள்ளது ! மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 30. பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 31. எளிமையாக, மிக அழகாக பதிவு செய்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே. தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 33. belated bday wishes Mohan sir.. :)

  ReplyDelete
 34. அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்திற்குள் எப்போதாவது வந்திருக்கிறீர்களா?

  ReplyDelete
 35. தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடம்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ஸ்ரீ....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...