Saturday, August 10, 2013

உணவகம் அறிமுகம் - ஹோட்டல் புஹாரி, வேளச்சேரி

ஹோட்டல் புஹாரி - எக்மோர் மற்றும் அண்ணா சாலையில் இருக்கும் இவர்களின் ஹோட்டலின் கிளை இப்போது வேளச்சேரிக்கும் வந்துள்ளது

வந்த ஓரிரு மாதத்திலேயே மிக நன்றாக பிரபலமாகி விட்டது குறிப்பாக வார இறுதிகளில் மிக அதிக கூட்டம். எப்படிங்க ஹோட்டல் ஆரம்பிச்சு இவ்ளோ சீக்கிரம் கூட்டம் வருது என்றால் " புஹாரி என்கிற பேர் அப்படிங்க " என சிரிக்கிறார் மெனு கேட்பவர்.



நாங்கள் ஆர்டர் செய்தது :

ஹைதராபாத் பிரியாணி
கோதுமை பரோட்டா
Fish Curry
சிக்கன் Curry

ஹைதராபாத் பிரியாணி அற்புதமாய் இருந்தது. மிக லேசாக ஹைதராபாத் சென்ற போது சாப்பிட்ட பிரியாணியை நினைவு படுத்தியது இது !

கோதுமை பரோட்டா + சிக்கன் Curry - மிக மிக டேஸ்ட்டியாய் இருந்தது. Fish Curry யில் உள்ள மீன்கள் சிறிய சைஸ் எனினும் ஒரு சின்ன முள் கூட இல்லை; சிக்கன் Curry & Fish Curry இரண்டுமே சற்று இனிப்புடன் இருந்தன !

சுவையில் - எங்கள் மூவரையும் முழுமையாய் திருத்தி படுத்தியது இந்த ஹோட்டல்.

இடியாப்பம், பாயா, மட்டன் சுக்கா, பேப்பர் சிக்கன் பிரை போன்றவையும் மிக நன்றாக இருக்கும் என இன்னொரு முறை சென்ற வந்த அலுவலக நண்பர்கள் கூறினர்

Bad Experience !!

ஒரு முறை இங்கு குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு, இன்னொரு நாள் பார்சல் வாங்கலாம் என வீக் எண்டில் சென்று வெறுத்து போய் விட்டேன். 25 பேருக்கு மேல் காத்திருக்க ஒவ்வொருவருக்கும் டோக்கன் போட்டு தருகிறார்கள். டாக்டர் வீட்டில் காத்திருப்பது போல் ஒரு மணி நேரம் காத்திருக்க நேருகிறது. 5 நிமிஷத்துக்கு தான் ஒவ்வொருவர் டோக்கன் நம்பராக அழைக்கிறார்கள் நம் முறை வர குறைந்தது அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் ஆகிடுது கொடுமை !

ரேட் கார்னர்

Buhari Hotel, T. Nagar Menu

Fish Curry ; Chicken Curry போன்றவை - 150
புபே லஞ்ச் மற்றும் டின்னர் - Rs 450. அன் லிமிட்டட் - இதுவரை முயற்சி செய்ததில்லை.

நான் வெஜ் பிரியர்கள் அவசியம் ஒரு முறை விசிட் அடிக்கலாம்; நிச்சயம் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் !

6 comments:

  1. புகாரி ஹோட்டல் பெயர் போனதாச்சே!

    ReplyDelete
  2. குரோம்பேட்டையில் 6 மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டார்கள்.இங்கு மசாலாக்கள் எல்லாம் செம காரம்.

    ReplyDelete
    Replies
    1. புபே லஞ்ச் குரோம்பேட்டையில் உண்டா ?

      Delete
  3. இருமுறை சென்று இடமில்லாமல் திரும்ப நேர்ந்தது...

    ReplyDelete
  4. சகோதரர் மோகனுக்கு இனிய நாள் வாழ்த்துக்கள் ..12th ஆகஸ்டு



    Angelin

    ReplyDelete
  5. the photo is taken @ Egmore.. velachery Address please.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...