Friday, August 23, 2013

உணவகம் அறிமுகம்: மடிப்பாக்கம் அல் - நூர் பிரியாணி கடை !

டிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பேருந்து நிலையத்துக்கு அருகில் புதிதாய் முளைத்துள்ளது இந்த அல் - நூர் பிரியாணி கடை !

வந்து 2 மாதம் தான் ஆகிறது. கீழே ஹோட்டல் நடத்தும் இளைஞரின் வீடு. மொட்டை மாடியில் கூரை போட்டு, உள்ளே பால்ஸ் சீலிங் செய்து ஹோட்டல் கெட் அப் கொண்டு வந்துள்ளனர்.


2 நண்பர்கள் புதிதாய் சேர்ந்து இந்த பிசினஸ் துவங்கியுள்ளனர். சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் இருந்த சமையல் காரரை அழைத்து வந்துள்ளனர். மனிதர் தந்தூரி ஸ்பெஷலிஸ்ட்-டாம் ! பிரியாணியில் இப்ப தான் பயிற்சி எடுக்கிறார் போலும் !
மட்டன் பிரியாணி - 120
சிக்கன் பிரியாணி - 80
குஸ்கா - 60

மட்டன் பிரியாணி - செம காரம் ! செயற்கையாய் எதோ கலர் வேறு போட்டு தொலைக்கிறார்கள் :(

சிக்கன் மற்றும் குஸ்கா பிரியாணி ஓகே

பிரியாணி சில நேரம் நன்றாகவும் ஒரு சில நேரம் சொதப்பலாகவும் இருக்கிறது !

வெரைட்டி வேண்டுவோர் ஒரு முறை மட்டும் முயற்சிக்கலாம். நிச்சயம் ஓஹோ அல்ல. ஜஸ்ட் அவரேஜ் பிரியாணி இது !

20 comments:

 1. எதோ கலர் வேறு போட்டு தொலைக்கிறார்கள் :(

  /// Intha post thaevaya?

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அருமையான பதிவு... உபயோகமான தகவல்கள் ...நன்றி ஐயா......

  :)

  ReplyDelete
 4. வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி ஒரு பதிவா?! சரி சரி ஒரு பிளேட் மட்டன் பிரியாணியும், ஒரு தந்தூரி சிக்கனும் பார்சல்

  ReplyDelete
 5. அனானி தம்பி.. கமண்ட் போட்டா பத்தாது? போன் பண்ணி வேற பேசுனீங்க ! அதுவும் நீங்கள் யாருன்னு எனக்கு தெரியாதுங்குற மாதிரி மிரட்டலா பேசிக்கிட்டே போனீங்க... உங்கள் பெயரோட ஏற்கனவே நான் ஸ்டோர் பண்ணிருந்தேன் !

  பின்னூட்டம் போட்டுட்டு அதே வார்த்தையை யூஸ் பண்ணி நீங்க போன் பேசியதால் உங்க மண்டையில் உள்ள கொண்டை தெரிஞ்சுடுச்சு

  ஊமை ஊரை கெடுக்கும்னு ஒரு பழமொழி இருக்கு கேள்வி பட்டிருக்கீங்களா "பள்ளி" தம்பி ??மிச்சத்தை வர்ற ஞாயித்து கிழமை நேரில் பேசுவோம் :)

  ReplyDelete
  Replies
  1. பிரியாணி சில நேரம் நன்றாகவும் ஒரு சில நேரம் சொதப்பலாகவும் இருக்கிறது !

   // Mohan ji, this post for not getting into this hotel?

   Delete
 6. /// Intha post thaevaya?//

  சிரிப்பதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்தக் கேள்வியில நியாயம் இருக்கு என்பதை யாராலும் மறுக்க முடியாது. :))

  ReplyDelete
  Replies
  1. Neenga nalla iruppinga !

   Delete
  2. நீ யார்...? எங்கிருந்து comment போடுகிறாய்...? சொல்லவா...? உட்கார்ந்த நிலையில் எந்த இடத்திலும் அடிக்க முடியும் என்று சென்னை ஆலையில் நீருபித்தவன்... மவனே... நேரில் உனக்கு இருக்கு...!@...

   Delete
 7. க்ரேசி பக்கர் : நீங்கள் யார் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி விட்டது. இனியாவது உங்கள் ஆட்டத்தை நிறுத்துங்கள் ; அல்லது உங்கள் வேஷத்தை முழுவதும் அம்பலபடுத்த வேண்டியிருக்கும் ; நீங்கள் மெயிலில் தந்த பதிலில் நான் சமாதானம் ஆகி விட்டதாக நினைத்தால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் என்று தான் அர்த்தம்

  திண்டுக்கல் தனபாலன் என்னுடைய பதிவில் மட்டுமல்ல பலரின் பதிவுகளுக்கும் சென்று தான் கமண்ட் போட்டார்; போடுகிறார் ஆனால் அவர் எப்போதெல்லாம் என் பதிவுக்கு வந்து கமண்ட் போட்டாலும் அவரை மோசமாக தாக்கி கிண்டல் அடித்து வந்தீர்கள் ; பின் அவர் எனது ப்ளாகிற்கு வந்து கமண்ட் போடுவதையே நிறுத்து விட்டார் ; அவர் கமண்ட் போடாதது பிரச்சனை இல்லை. ஆனால் நீங்கள் தொடர்ந்து அவரை காயப்படுத்தியது அவர் மனதை புண்படுத்தி விட்டது . முன்பு அவரை காயப்படுத்திய பழைய பதிவர்களாவது தங்கள் பெயருடன் அதனை செய்தனர்

  ஆனால் நீங்கள் இந்த வருட விழா குழுவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து கொண்டு ஒரு கோழை மாதிரி பொய் பெயரில் பிறரை காயப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்க முடியாதது

  நேற்று பதிவர் மீட்டிங்கில் உங்களை சந்தித்த போதும் என்னை சந்திப்பதை, நேரில் பேசுவதை நீங்கள் முடிந்த வரை தவிர்த்தீர்கள் . நான் சரி இனியாவது மாறுவீர்கள் இதை பற்றி அதிகம் பேச வேண்டாம் என விட்டு விட்டேன் ஆனால் மீண்டும் உங்கள் வழக்கமான புத்தியை காட்டுகிறீர்கள்

  இதற்கு மேலும் க்ரேசி பக்கர் என்ற பெயரில் எனது மகள் தான் கமண்ட் போட்டாள் என்று காதில் பூ சுற்றாதீர்கள் ; அடுத்து ஐ. பி முகவரி வைத்து தான் உங்களை யார் என்று நிரூபிக்க வேண்டும்

  இங்கு விஷயம் நீங்கள் இந்த பதிவிற்கு போட்ட காமன்ட்டே அல்ல; நீங்கள் திண்டுக்கல் தனபாலனை தொடர்ந்து காயபடுதியது மட்டும் தான் ; உங்கள் மேல் எவ்வளவு கோபம் இருந்தால், இதே பதிவில் மேலே உங்களை பற்றி அப்படி ஒரு கமண்ட் போட்டிருப்பார் பாருங்கள்

  தயவு செய்து பிறரை காயப்படுத்தும் உங்கள் வேலைகளை நிறுத்தி கொள்ளுங்கள் அல்லது இந்த பிரச்னையை பதிவர் குழுவுக்கு நாம் எடுத்து செல்வோம். அவர்கள் சொல்வதை நிச்சயம் நான் ஏற்று கொள்கிறேன்

  நீங்கள் அனுப்பிய மெயிலே க்ரேசி பக்கர் என்ற பெயரில் கமண்ட் போட்டது எனது மகள் என்று சொல்கிறது அதனை விட வேறு ப்ரூப் தேவையில்லை உங்களை நிரூபிக்க


  இந்த பிரச்சனை இத்துடன் முடிய வேண்டுமாயின் தங்கள் க்ரேசி பக்கர் அவதாரத்திற்கு ஒரு மூட்டை கட்டுங்கள். அல்லது எந்த காரணத்துக்காக பொய் பெயரில் எழுதினீர்களோ அது காப்பாற்ற முடியாமல் போகும்

  ReplyDelete
 8. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுபவரை, முழு பூசணியை சோற்றில் மறைப்பவரை, பொய் ஐ. டி யில் பிறரை காயப்படுதுபவரை எப்படி தான் பதிவர் குழுவில் முக்கிய அங்கமாக வைத்திருப்பது நிச்சயம் தவறு. உங்கள் நிஜ முகம் தெரியாததால் தான் உங்களை மதித்து கொண்டிருக்கிறார்கள் . இப்படி முதுகில் குத்தும் ஒரு புல்லுருவி உள்ளே இருந்தால் அது என்றைக்கேனும் ஒரு நாள் நிச்சயம் பிரச்சனையாகும் ! இது பதிவர் திருவிழா நடத்தும் அனைத்து நண்பர்கள் கவனத்துக்கு !

  ReplyDelete
 9. யப்பா க்ரேசி பக்கர், யாரப்பா நீ? இங்க எல்லாரும் என்னையே சந்தேகப்படுறாங்களே?

  ReplyDelete
 10. //சிரிப்பதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்தக் கேள்வியில நியாயம் இருக்கு என்பதை யாராலும் மறுக்க முடியாது.//

  //CrazyBugger said:
  Neenga nalla iruppinga !///


  ஐயையோ பிரச்சனை வேற விதமாப் போகுது. இந்த Crazybugger ஐ நான் ஒன்றும் ஆதரிக்கவில்லை. பொதுவாக ஒரு உணவகம் நன்றாக இருந்தால் தான் தனது நண்பர்களையும் உறவினர்களையும் அங்கே போய் உண்ணுமாறு சிபாரிசு செய்வார்கள், ஆனால் இவர் என்னடாவென்றால் அவருக்கே பிடிக்காத உணவகத்தை, “சொதப்பலாகவும், செயற்கையாய் எதோ கலர் வேறு போட்டு தொலைக்கிற” பிரியாணிக்கடைக்கு பதிவு போட்டு சிபாரிசு செய்கிறாரே என்று ஆச்சரியப்பட்டுத் தான் இந்தப் பதிவு தேவையா என்ற கேள்வி நியாயமானது என்றேன். :)))

  ReplyDelete
 11. வியாசன் : நல்ல கடை என்றால் மட்டும் தான் எழுதணுமா? அப்ப நல்ல படம் என்றால் மட்டும் தான் பரிந்துரைக்கணுமா? அப்படியா பதிவுலகில் நடக்கிறது ?

  நமது அனுபவம் எதுவோ அதை நேர்மையாக பகிர்வது தானே சரி? இந்த கடைக்கு செல்லுங்கள் என நானா எங்கும் பரிந்துரைக்க வில்லை

  ReplyDelete
  Replies
  1. வெரைட்டி வேண்டுவோர் ஒரு முறை மட்டும் முயற்சிக்கலாம். நிச்சயம் ஓஹோ அல்ல. ஜஸ்ட் அவரேஜ் பிரியாணி இது !

   Delete
 12. இந்த கிரேசி பக்கர் விஷயத்துக்கு நடந்தது எல்லாம் சொல்லி ஒரு தனி பதிவு போட்டு தான் யார் என நிரூபிக்கணும் போலருக்கு .. பதிவர் சந்திப்பு நடக்கும் சமயத்தில் இப்படி ஒரு controversy வேண்டாமே என பார்க்கிறேன்

  சம்பந்தப்பட்ட நபர் பல்வேறு கதைகள் போனில் சொல்லி அவன் நான் இல்லை என்கிறார் ; ஒன்று கூட நம்புற மாதிரியில்லை ! என்னைக்கு இருட்டில் இருந்து கல் எரியும் இவர்கள் உண்மையை ஒப்பு கொண்டனர்? ஐ. பி முகவரி வைத்து கையும் களவுமாய் பிடித்தால் தான் உண்டு அது மிக எளிதான விஷயம் செய்து விடலாம்

  ReplyDelete
 13. ஒருத்தர் நான் அவனில்லைன்னு நிரூபிக்க ரொம்ப மெனக்கெடுறார் போலிருக்கு. " அந்நியன் கெட் அப்பை கடாசி விட்டு " அம்பியாய் மட்டும் இருப்பதே நலம் - இதை அவர் உணர்ந்தால் நலம் !

  ReplyDelete
 14. எங்கேயும் நிஜ பேரை நான் சொல்லாத நிலையில் - போனில், மெயிலில், பின்னூட்டத்தில் இப்படி பல இடத்திலும் " என்னை ஏன் சந்தேகப்படுகிறீர்கள் ? " என உளறி கொட்டி - இந்த போஸ்ட்டை கடந்த சில நாளாக தினம் பார்த்து - தனபாலன் மற்றும் நான் போடும் ஒவ்வொரு கமண்ட் கண்டும் பயந்து.. இவ்வளவு களேபரம் தேவையா ? இப்படி பயந்து நடுங்குவதும் - தொடர்ந்து " நான் அவனில்லை - எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதுமே கொண்டையை காட்டி விடுகிறது !

  குற்றமுள்ள நெஞ்சு குறு குறுங்கும் ! பதிவர் திருவிழா குழுவில் உள்ள ஆள் என்று தானே சொன்னேன்? யார் என்று சொன்னேனா? பதிவர் திருவிழா குழுவில் இருக்க யாராவது இந்த போஸ்ட் கண்டு பயந்தனரா? ரீ ஆக்ட் செய்தனரா ? தப்பு செய்த ஒரே ஆள் தான் பயந்ததும் ரீ ஆக்ட் செய்ததும் !

  ReplyDelete
 15. I never tried hurting you guys, Sorry.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...