Friday, August 16, 2013

உணவகம் அறிமுகம் - மஸ்த் கலந்தர்

மஸ்த் கலந்தர் சென்னையில் அடையாறு, வேளச்சேரி அசோக் நகர் மற்றும் OMR  ரோடில் கிளைகள் உள்ள ஒரு வட இந்திய உணவகம் 



நண்பர் ரகுவும் நானும் இந்த ஹோட்டலுக்கு கொஞ்ச நாள் முன்பு சென்றோம் 

100 ரூபாய் முதல் 169 ரூபா வரை பல காம்போ பேக் இங்கு கிடைக்கும். இவற்றில் சப்பாத்தி டைப் உணவும் அரிசி வகையும் இருக்கும் 

இது தவிர கபாப்  வகைகளும் பரோட்டா வகைகளும் தனியாகவும் தருகிறார்கள் 

நாங்கள் சாப்பிட்டவை 

சப்பாத்தி (அல்லது புல்கா) உடன் அரிசி ஐட்டம் (புலாவ்) ஸ்வீட் சேர்ந்த எளிய காம்போ பேக் 150 ரூபாய்  

செலிபரேஷன் காம்போ - தான் இங்கு உள்ளத்தில் அதிக விலை - ( 169 ரூபாய்) இதில் 3 பூரி புலாவ், பன்னீர் க்றி மற்றும் குலூப் ஜாமூன் தருகிறார்கள் 

ப்ளஸ் 

ஹோட்டலில் பெரிதும் கவர்வது அதன் ambience தான். கண்ணை கவரும் சிகப்பு கலர் சோபாக்கள் - மிக மிக சுத்தமான ஹோட்டல் - இவை நிச்சயம் மனதுக்கு நெருக்கமாக்கி விடும் 


விலை பொதுவாக சற்று அதிகம் என்றாலும் - காம்போ பேக் 170 ரூபாயை தாண்டாமல் இருப்பது ஆறுதல் 

நாங்கள் சாப்பிட்டதில் ரொம்ப பிடித்தது பூரி மற்றும் குலோப் ஜாமூன் தான்  

அதிக கூட்டமில்லை காத்திருக்காமல் சாப்பிடலாம் 

மைனஸ் 

சப்பாத்திக்கான சைட் டிஷ் மற்றும் புலாவ் வகைகள் பெரிதாய் ஈர்க்காமல் போகின்றன. இது மிக பெரிய ஏமாற்றம் (அவை தானே முக்கியமாய் நன்றாய் இருக்கணும் ?)



மேலும் 150  ரூபாய்க்கு அவர்கள் தருகிற அளவு மிக குறைவு போட்டோவில் காம்போ - 22 ஐட்டம் அது இதென்று பெரிய சைசில் போட்டோ எடுத்து போடுகிறார்கள் ஆனால் தட்டில் அவை மினி சைசுக்கு இருக்கிறது ; ஒரு காம்போ பேக் சாப்பிட்டு விட்டு வயிறு நிரம்பி விட்டது என நமக்கு நாமே சொல்லி கொள்ள வேண்டியது தான் !

மொத்தத்தில்: 

வித்யாசமான கடை என ஒரு முறை செல்லலாம் நிச்சயம் மறுபடி மறுபடி செல்ல தூண்ட வில்லை !

மேலதிக தகவல்கள் 

மஸ்த் கலந்தர் 
அடையாறு,  ( Ph: 45587649)
வேளச்சேரி ( Ph: 43558381)
அசோக் நகர் ( Ph: 64558381) மற்றும் 
OMR  ரோடில் ( Ph: 6454 8381) 
கிளைகள் உண்டு 


4 comments:

  1. அன்பின் மோகன் குமார் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. சரி, நாங்க போகலை.

    ReplyDelete
  3. அடியேனின் கருத்து - சூப்பரும் இல்லை, சுமாரும் இல்லை, somewhat ok

    ReplyDelete
  4. நான் ஒரு முறை சென்றிருக்கிறேன்.உங்கள் விமரிசனம் சரியே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...