Monday, August 26, 2013

போட்டது ஒரு பதிவு ! கிடைத்தது ஒரு லட்சம் உதவி !

நீண்ட நாளைக்கு பின் மீண்டும் வீடுதிரும்பலுக்காக ஒரு பதிவு எழுதியிருக்கிறார் நண்பர் ஆதிமனிதன். பரபரப்பான தலைப்பு ஆதி மனிதன் ஸ்டைல்.. !
**********
ரே பதிவு - அது வெளியாகி ஓரிரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் பெற்று தந்தது எனில் உண்மையிலே அது சாதனை தான். ஆம். வீடுதிரும்பலில் வெளியான சேவை இல்ல பதிவுக்கு கிடைத்த உதவி தொகை தான்  தான் அது !

எங்கள் அம்மா ஆசிரியராகவும், பின் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய தஞ்சை அரசு சேவை இல்லம் பற்றி ஆதி மனிதனில் வெளியான பதிவை தொடர்ந்து நண்பர் மோகன் குமார் அப்பள்ளி பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களை நாட, அதற்கான ஏற்பாடுகளை அம்மா செய்து கொடுத்தார். பின் வீடு திரும்பலில் வெளியான சேவை இல்லம் பற்றிய பதிவை பார்த்து, பதிவு வெளியான ஓரிரு மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் இருந்து தமிழர்களால் நடத்தப்படும் AIMS India என்ற தொண்டு நிறுவனத்திடமிருந்து தொலை பேசி அழைப்பு ! பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அவர்கள் கூறியது போலவே நாங்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் ஓரிரு வாரங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான உதவி தொகை வந்து சேர்ந்தது. அதன் மூலம் பள்ளிக்கு நான்கைந்து வகுப்புகளுக்கு தேவையான 10 க்கும் மேற்பட்ட இரும்பினால் ஆன டேபிள் மற்றும் பெஞ்ச்சுகள் TANSI யில் ஆர்டர் கொடுத்து நல்ல தரத்துடனும், உட்கார, எழுத வசதியுடனும் அழகாக வண்ணம் பூசி ஓரிரு மாதங்களில் வந்து சேர்ந்தது.

AIMS India தொடர்பு கிடைத்ததிலிருந்து பள்ளிக்கு உதவிகளை ஒப்படைக்கும் வரை AIMS India வின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பாலகுமார், AIMS India வின் தமிழக தொடர்பு NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவா , சேவை இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு), அலுவலர் திரு. அசோகன், நண்பர் மோகன் குமார் மற்றும் எனது அம்மா ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், உதவிக்கும் இதன் மூலம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவர் திருவிழா நடைபெறும் இந்த தருணத்தில், பதிவர் ஒருவர் எழுதியதன் மூலம் கிடைத்த இந்த பெரியதொரு உதவி தொகை - பதிவர்களுக்கு கிடைத்த மரியாதையாகவே கருதுகிறேன்.

கடந்த அகஸ்ட்-15 ஆம் தேதி இரு பெரும் விழாவாக சுதந்திர தினம் மற்றும் உதவி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பள்ளி பொறுப்பாளர்கள் அழைத்ததின் பேரில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தார்கள். அது தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் காணொளி கீழே.
***************

சேவை இல்லம் சார்பாக உற்சாக வரவேற்பு:


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (அம்மாவுக்கு)...


தமிழ்த்தாய் வாழ்த்து...


கண்காணிப்பாளர் திருமதி. என் . ராஜம் வரவேற்புரை....


அம்மாவுக்கு மரியாதை...


NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவாவுக்கு மரியாதை... வீடு திரும்பல் திரு. மோகன் குமாருக்கு மரியாதை...


விழாவில் பேசியோர்கள்...

மோகனுக்காக ஒரு ஸ்பெஷல் க்ளோஸ்-அப் ஷாட்...


நன்றியுரை சேவை இல்ல திரு. அசோகன் அவர்கள்...


மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்...டேபிள் பெஞ்ச் சாம்பிள்....மாணவிகளின் கலை நிகழ்சிகள்...


மதிய உணவுக்கு முன் சாமி கும்பிடும் மாணவிகள்...


மதிய உணவு கூடம். இதற்கும் யாராவது புண்ணியவான் மேஜை நாற்காலிகள் செய்து கொடுத்தால் கோடி கும்பிடலாம்.


தஞ்சை சேவை இல்லத்தில் சேர தகுதி மற்றும் அதன் சேவைகள் குறித்து பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இத்தகவலை அளித்து உதவலாம்.

17 comments:

 1. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 2. அன்றைய தினம் மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தது ஆதிமனிதன் குடும்பத்தினர் தான். அவர்களுக்கு நன்றிகள்; அதை பற்றி ஆதி மனிதன் ஏனோ மூச்சு விடலை :)

  ReplyDelete
 3. இது பதிவர்கள் தங்களுடைய எழுத்தால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது. இதை ஒரு மனமகிழ் மன்றம் என்று கருதாமல் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நல்ல விஷயம் அண்ணே ... பள்ளிக்கு உதவி செய்தவர்களுக்கும், உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்

  ReplyDelete
 5. நல்ல காரியம் செய்கிறீர்கள். நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்! வாழ்க!

  ReplyDelete
 6. சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 7. அங்கு சொன்னதையே இங்கும் சொல்கிறேன்.வலைப்பதிவின் ரீச் நிரூபண்மாகி விட்டது/வாழ்த்துகள் மோகன்குமார்.நற்பணி தொடரட்டும்!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் மோகன்குமார் & AIMS India. தங்களின் இது போன்ற சமூக பணிகள் தொடர வேண்டும். பதிவின் பவர்‌ஃபுல் இது.

  ReplyDelete
 9. படித்து மகிழ்ந்தோம்! உங்கள் தொண்டு உள்ளத்துக்கு வணக்கம்!

  ReplyDelete
 10. உதவும் உள்ளங்கள் இறையருளின் ஆட்சி பெற்றது .

  ReplyDelete
 11. நற்சேவை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் சேவைகள் தொடரட்டும்..

  ReplyDelete
 13. "மதிய உணவு கூடம். இதற்கும் யாராவது புண்ணியவான் மேஜை நாற்காலிகள் செய்து கொடுத்தால் கோடி கும்பிடலாம்."

  அது தேவைப்படாது என்றே கருதுகிறேன். உணவு அருந்தும்போது "பத்மாசனம்" செய்யும் முறையை நம் முன்னோர்கள் வகுத்தது செரிமான வேலையை எளிமையாக்கவே! எனவே உதவி என்கிற பெயரில் அந்த உயர்ந்த பழக்கத்தை மாற்ற வேண்டாம்...புரிந்துகொன்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 14. மகிழ்ச்சி. நற்பணிகள் தொடரட்டும்.

  ReplyDelete
 15. நற்சேவை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகள்.நற்பணிகள் தொடரட்டும்.

  ReplyDelete
 16. அன்பின் மோகன் குமார் - நற்செயல் புரியும் நல்ல நண்பர்களுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...