Wednesday, August 14, 2013

வேலூர் தங்க கோயில் -வித்யாச பயண அனுபவம்

மீபத்தில் வேலூர் தங்க கோயிலுக்கு சென்றிருந்தோம். இந்தியாவில் முழுவதும் தங்கத்தால் ஆன இரண்டாவது கோயில் என்கிறார்கள். (முதலாவது - அனைவருக்கும் தெரிந்த பஞ்சாப் பொற் கோயில் ).



* ரயிலில் சென்றால் சென்னை - பெங்களுரு மார்க்கத்தில் காட்பாடியில் இறங்க வேண்டும். காட்பாடி வேலூருக்கு மிக அருகில் உள்ள ஊர். வேலூரில் சிறு ரயில் நிலையம் உள்ளது. பக்கத்துக்கு ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் மட்டுமே வந்து செல்கின்றன. சென்னை, பெங்களுரு போன்ற ஊர்களில் இருந்து வந்தால் காட்பாடியில் தான் இறங்க வேண்டும்.

* தங்க கோயில் காட்பாடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆட்டோவில் சென்றால் 200 ருபாய் கேட்கின்றனர். பஸ் என்றால் இரண்டு பஸ் மாறி போக வேண்டும்.

* காட்பாடியில் இருந்து ஆட்டோவில் முப்பது நிமிடத்தில் தங்க கோயில் அடையலாம். இங்கு தங்குவதற்கு 400 அறைகள் உள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து ரூமும் ஹவுஸ் புல் !! நாங்கள் முன்பே நெட்டில் பார்த்து விட்டு புக்  செய்ததால் ரூம் கிடைத்தது.

* ரூம் பெரிதாக, மிக சௌகரியமாக இருந்தது. குடிநீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் - கொசுக்களுக்கு லிக்விட் மேட் என நன்கு யோசித்து வசதி செய்துள்ளனர். ஒரு நாள் வாடகை 300 ரூபாய்தான் !!

* தங்க கோயிலில் உள்ள கடவுள் "நாராயணி அம்மன்". முதலில் இங்கு பழைய கோயில் இருந்திருக்கிறது. பின் பக்கத்தில் இந்த தங்க கோயில் கட்டப்பட்டுள்ளது.


* எங்களை கூட்டி சென்ற ஆட்டோ டிரைவர் சொன்ன தகவல்கள்: தங்க கோயில் கட்டி முடிக்கும் வரை வேலூர் மக்கள் யாருக்குமே இங்கு இப்படி ஒரு கோயில் வருவது தெரியாதாம்!! சுமார் ஆறு ஆண்டுகள் மிக secrete -ஆக கட்டியதாகவும், அதில் பணி புரிந்த தொழிலாளிகள் கூட எப்படி கட்டப்படுகிறது என ரகசியம்  காத்ததாகவும் சொன்னார்.

* கோயிலுக்கு முக்கிய நபர் ( சுவாமிஜி?? ) "நாராயணன்" !  தற்போது பக்தர்கள் இவரை "நாராயணி அம்மா" என அழைக்கின்றனர். அவருக்கு இப்போது வயது கிட்டத்தட்ட 35 என்கின்றனர்.



* இவர் இதற்கு முன்பே பள்ளி, கல்லூரி, மருத்துவமனை வைத்து இருந்ததாகவும், பின் இந்த கோயில் அவர் முயற்சியால் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். கோயில் கட்ட பெரும் பண உதவி செய்தது வெளி நாட்டினர் !! மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை தரப்படுகிறது. மற்றவர்கள் பணம் தந்து பார்க்கின்றனர்.

* கோயில் சுமார் 20 ஏக்கர்  பரப்பில் உள்ளது. தர்ம தரிசனம் தவிர 100 ருபாய் மற்றும் 250 ருபாய் டிக்கட்டுகள் உள்ளன. நாங்கள் வெள்ளி கிழமை மாலை சென்றோம். 100 ருபாய் டிக்கட்டில் தரிசனம் பார்க்கவே 3 மணி நேரம் ஆனது !! நடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். எங்களுடன் வந்த சின்ன பசங்க நடக்க முடியாமல் அழ ஆரம்பித்து விட்டனர் !

* தரிசனம் முடியும் வரை காத்திருக்கும் இடம்   (Closed rooms - long queue) திருப்பதியை நினைவூட்டுகிறது என்றால், அங்கங்கு தெரியும் ""நாராயணி அம்மா" படம் மேல் மருவத்தூரை நினைக்க வைக்கிறது.



* செல்லும் வழி முழுவதும் அற்புதமான lawn மற்றும் செடிகள் மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் "நாராயணி அம்மா"வின் பொன்மொழிகள் வழி முழுவதும் எழுதப்பட்டுள்ளது. நடக்க சிரமம் எனில் பக்கத்துக்கு குட்டி சுவரில் அமர்ந்து விட்டு பின் செல்லலாம்.

* தங்க கோயிலை மாலை ஆறு மணிக்கு மேல் பார்ப்பதே சிறப்பு. விளக்குகள் வெளிச்சத்தில் தங்க கோயிலை தூரத்தில் இருந்தும் அருகில் இருந்தும் பார்ப்பது புது அனுபவமாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் தங்க கோயில் அழகை அதிகம் ரசிப்பர் என நினைக்கிறேன். (For obvious reasons..)

* கோயில் அருகில் சென்றதும் தான் கோயில் சிறிய அளவில் ஆனது.. ஆனால் நடந்து வரும் போது பாதி தூரம் தாண்டிய பிறகு, தூரத்தில் இருந்தே தொடர்ந்து பார்க்கிற மாதிரி கட்டப்பட்டுள்ளது என புரிகிறது.

* கோயிலை சுற்றி நீர் நிரப்ப பட்டுள்ளது. "இதில் காசு போட வேண்டாம் " என ஆங்காங்கே தகவல் பலகை  இருந்தும் பலர் அதில் காசுகளை வீசி வைத்துள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தங்களது விசிட்டிங் கார்ட்  கூட தூக்கி போட்டுள்ளனர்.

* தர்ம தரிசன மக்கள் சாமியை சற்று தூரத்தில் இருந்து தான் பார்க்க முடிகிறது. நூறு ருபாய் டிக்கெட் சற்று பக்கம் வரை செல்ல முடிகிறது. 250 ருபாய் டிக்கெட் பக்கம் சென்று அமர்ந்து பூஜை பார்த்து விட்டு செல்கின்றனர்.

* திருப்பதிக்கு லட்டு போல் இங்கும் ஒரு இலவச  பிரசாதம் தருகின்றனர். சற்று மைசூர் பாகு போல் உள்ளது. எப்போதும் இதே ஸ்வீட் தானா என தெரிய வில்லை.

* நாம் தங்கும் அறையில்  சாப்பிட வசதி இல்லை. கோயில் அருகே  அன்ன பூர்ணா ஹோட்டல் உள்ளது.

* வேலூரில் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள் : வேலூர் கோட்டை; மற்றும் இதன் உள்ளேயே உள்ள ஜலகண்டேஸ்வரர் (சிவன்) கோயில். நாங்கள் இவையும் பார்க்க தவற வில்லை !!

* தமிழகத்தில் உள்ள எவரும் நிச்சயம் ஒருமுறை போய் பார்த்து விட்டு வர வேண்டிய இடம் வேலூர் தங்க கோயில்.

என்ன ஒன்று - இதனை பக்திக்காக பார்ப்பதை விட ஒரு சுற்றுலா தளம் என்கிற அளவில் பார்ப்போர் தான் அதிகம் எங்களையும் சேர்த்து !

*********
டிஸ்கி: பதிவுலகம் வந்த புதிதில் (2009) எழுதியது - மீள்பதிவு !

27 comments:

 1. Anonymous4:01:00 PM

  Sir

  Good one. I went to their couple of times and good one.

  As you said, it is difficult to walk.

  Regards
  Suresh Sakthivel

  ReplyDelete
 2. Anonymous4:02:00 PM

  Very useful information. Thanks for sharing.

  Regards,
  D.Kalyana Sundaram

  ReplyDelete
 3. நடக்க சிரமமாக இருக்கும்னு சொல்றீங்க. என்னவோ தெரியலை, பார்க்கணும்! ஈரோடு நாகராஜின் பதிவில் இருந்து இங்கே வந்தேன். நன்றி தகவல்களுக்கு.

  ReplyDelete
 4. Suresh,

  Thanks; Pl. give your comments directly in the blog also.
  *******
  Kalyanam,

  Thank you. Please keep in touch

  *******
  Geetha Madam,

  Thank you. Walking is slightly difficult for small ones and elderly people. Anyhow it is a place worth seeing.

  Noted that you are also a blogger. Will see and give comments about your blog.

  Pl. visit our blog often.

  Regards,

  A. Mohan Kumar
  ___________________________________

  ReplyDelete
 5. பலருக்கும் உபயோகமான தகவல்கள்

  நான் 2008 பொங்கல் வீடுமுறையில் சென்று வந்தேன். நீண்ட தொலைவு நடக்கவேண்டும் என்பது வயதானவற்களுக்கு சற்று சிரமம் தரும்.

  ReplyDelete
 6. -ஆட்டோவில் சென்றால் 150 ருபாய் கேட்கின்றனர்
  -ஒரு நாள் வாடகை 300 ரூபாய்தான்
  -தர்ம தரிசனம் தவிர 100 ருபாய் மற்றும் 250 ருபாய் டிக்கட்டுகள் உள்ளன

  - I thought of going there. Still thinking, why should I spend this much?

  ReplyDelete
 7. @Kannan.S
  வேண்டியதில்லை திரு கண்ணன், நாங்க எங்க இருப்பிடத்தில் இருந்து சுற்றுலா ஏற்பாடுகள் செய்பவர்களோடு சென்றோம். சென்ற ஞாயிறு தான் 11-10-09 ஞாயிறு தான் சென்றோம். தங்கிப் பார்க்கும் அளவுக்கு எதுவும் அங்கே இல்லை.முக்கியமாய்த் தங்கக் கோயிலில். ஆகவே நீங்கள் வேலூர் சென்றதும், அங்கிருந்து அரை மணி நேரம் பிடிக்கும் இந்த ஸ்ரீபுரத்துக்கு எளிதாகச் செல்லமுடியும்,. அல்லது தமிழ்நாடு டூரிஸம் தினமும் பேருந்து ஏற்பாடு செய்து அனுப்புகிறது. அதில் சென்றாலும் செலவு அதிகம் ஆகாது. Bakthi is not the main criteria there, I assume!

  ReplyDelete
 8. கண்ணன் & கீதா மேடம்.. தங்கள் பின்னோட்டங்களுக்கு மிக்க நன்றி..

  கீதா மேடம் சொன்னதில் ரெண்டு விஷயம் சரி.

  போய் வர அதிக செலவு இல்லை. (தர்ம தரிசனமும் உண்டு. ஆனால் சற்று தூரத்தில் இருந்து பார்க்கணும். சொல்ல போனால், தர்ம தரிசனம் crowd சீகிரமே move ஆகிறது!)

  பக்தி என்பதை விட, தங்க கோயில் பார்க்கும் ஆர்வம் தான் அனைவருக்கும் அதிகம்.

  கண்ணன்.. நாங்கள் தங்கியதன் காரணம் மறு நாள் காலை அருகில் உள்ள ஏலகிரி சென்றதனால் தான். இல்லா விடில் நீங்கள் தங்க தேவை இல்லை. பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து பார்க்கும் ஒரு பெரிய tourist place ஆக இந்த கோயில் மாறி வருகிறது! தமிழகத்தை பொறுத்த வரை பழனிக்கு அடுத்த படி அதிக கூட்டம் வரும் கோயில் ஆக தங்க கோயில் ஆககூடும்!!

  ReplyDelete
 9. வணக்கம் சார்,
  தங்களுடைய பொற்கோவில் பயணக் கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது.

  தங்கள் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்ததுபோல் உணர்ந்தேன். பல செய்திகள் வழியாக என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு விடை தந்துள்ளீர்கள்.
  குறிப்பாக திடிரென்று கோவில் எப்படி வந்தது, யார் பணம் கொடுத்தார்கள்.
  மருவத்தூர், திருப்பதியோடு ஒப்பீட்டு மிக அற்புதம்.
  இன்னும் பல ஊர்களுக்குச் சென்றுவந்து தாங்கள் இது மாதிரி
  சிறப்பான
  பதிவுகளை வழங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்( பர்ஸ் காலியாவதற்கு நான்
  பொறுப்பல்ல)
  நன்றி.

  ReplyDelete
 10. மிக்க நன்றி அமைதி அப்பா. தங்கள் வாழ்த்து நிரம்ப மகிழ்ச்சி தருகிறது. நீங்கள் தந்த யோசனையை நானும் சில நாளாகவே யோசித்து வருகிறேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் இது வரை எழுதிய பதிவுகளில் நிறைய பேர் comments தந்தது, ரசித்தது இந்த பதிவு எனலாம்.

  Travel பொதுவாகவே எனக்கு நிரம்ப பிடிக்கும். குடும்பத்துடன் வருடம் இரு முறையாவது இது வரை போகாத இடங்களுக்கு செல்வேன். நிச்சயம் அந்த இடங்கள் பற்றியும் அவசியம் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 11. எளிய நடையில் தகவல்கள் மிகுந்து நல்ல கட்டுரை.

  போட்டாவும் போட்டுருந்தா சூப்பராயிருக்கும்.


  http://www.trsiyengar.com/id123.shtml

  இந்த சுட்டி காட்டுவது சரிதானா.

  ReplyDelete
 12. நன்றி படுக்காளி .. தங்கள் நல்ல வார்த்தைகளுக்கு..

  நீங்கள் அனுப்பிய சுட்டி பார்த்தேன். அதில் கூற பட்டவை உண்மை தான்.

  இந்த கோயில் பற்றிய சில புதிரான விஷயங்களும் பேச படவே செய்கின்றனர். நான் அவற்றுக்குள் செல்ல வில்லை. எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு?

  ReplyDelete
 13. Anonymous2:47:00 PM

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. அப்படியே ஹரன்பிரசன்னாவின் இந்தப்பதிவையும் படிச்சிருங்க...

  http://nizhalkal.blogspot.com/2008/10/blog-post.html

  ReplyDelete
 15. So many ancient temples are closed for not sufficient fund allotment. Even though Rajaraja Chola the Great never blown his own trumpet. This temple is from OPM [Other People's Money].
  Please warship GOD!
  Not Humans!
  Malmaruvathur is developed by these Yellow Shawl DMK to decrease Sangara madam. but now every one is started their own Brand.
  When will we change?
  Tamilnadu is running behind Free....
  but to see GOD you should have 100/- minimum.
  by that 100/- you can feed 10 people.
  Please Educated Tamila!
  Think!
  Think!!
  Think!!!

  ReplyDelete
 16. கோயிலும் அம்மனும் உண்மையானது.

  ஆனால் அம்மா நாராயணி ஒரு டுபாக்கூர். அடுத்த பிரேமானந்தாவாக சான்ஸ் இருக்கிறது.

  இவரைப் பற்றி ஜூ.வி யில் வந்திருக்கிறது. பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் கிடையாது. விடுதலப்புலிகளின் பினாமி என்று கூட கூறப்பட்டது. பின்னாளில் தமிழகத்தின் ஒரு பிரபல அரசியல்வாதியின் பினாமி என்றார்கள்.

  எங்கெல்லாமே நுழையும் வருமானவரி இலாகா இந்த டுபாக்கூர் சாமியாரை ஏனோ எதுவும் கேட்கவில்லை.

  அரசியல்வாதிகள் பதவியில் இல்லாத காலத்தில் பிழைத்துக் கொள்வதற்க்காக
  காலேஜ் கட்டுவது போல் இதில் தொடர்பு உள்ள அரசியல்வாதி(கள்) தங்களது பிற்காலத்தை எண்ணி இந்த கோயிலைக் கட்டினார்களோ என்னவோ!!

  எது எப்படியோ, இந்தக் கோயிலால், பொருளாதார ரீதியாக சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு நல்லதுதான்.

  ReplyDelete
 17. THANKS FOR THE POSTING....

  ReplyDelete
 18. நான் அநேக கோயிலுக்கு சென்று வந்து இருக்கிறேன். இங்கேயும் சென்று வந்துள்ளேன் இங்கு சென்றால் கோயிலுக்கு சென்ற மாதிரி பிலிங்க் வரவில்லை ஏதோ சுற்றலா தளத்திற்கு சென்று வந்த மாதிரிதான் தோன்றியது

  ReplyDelete
 19. திருப்பதிக்கு லட்டு போல் இங்கும் ஒரு இலவச பிரசாதம் தருகின்றனர். சற்று மைசூர் பாகு போல் உள்ளது. எப்போதும் இதே ஸ்வீட் தானா என தெரிய வில்லை
  >>
  இல்லை, எல்லாமும் தருகிறார்ல்கள். கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், மிளகுசாதம், புளியோதரை, சாம்பார்சாதம்ன்னு தர்றாங்க.

  வயதானவங்களுக்கும், நோயாளிகள் சுற்றி பார்க்க வசதியா வீல்சேர் வசதி இருக்கு. சுத்தி இருக்கும் ஹோட்டல் அவ்வளவு தரமில்லை.

  ReplyDelete
 20. அருமையான பொற்கோவில் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  தங்கள் பார்வைக்கு ...!
  http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_22.html
  மணிராஜ்: ததகதக்கும் தங்கக்கோவில்

  http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_09.html
  ஶ்ரீபுரம் அருள்மிகு லஷ்மி நாராயணி திருக்கோவில் ..

  ReplyDelete

 21. வணக்கம்!

  தங்கத் திருக்கோயில் எங்கள் மனத்துள்ளே
  பொங்கும் இனிமை பொழிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 22. படம் அருமை...

  சிலமுறை திட்டமிட்டு இன்னும் செல்ல இயலவில்லை....

  ReplyDelete
 23. மிகவும் அழகாக இருக்கின்றது. படங்கள் பார்க்க வேண்டும்என்ற ஆவலைதூண்டுகின்றது.

  ReplyDelete
 24. மிகவும் அருமையான பதிவு

  ReplyDelete
 25. மிகவும் அருமையான பதிவு

  ReplyDelete
 26. வெறும் பகட்டு மட்டுமே தெரிகிறது இந்த கோவிலில். எவனோட திருட்டுப்பணமோ இது என்று தோன்றுபவதையும் தடுக்க முடியவில்லை. போயிருந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது பின்னால்!

  ReplyDelete
 27. உங்கள் பயன அனுபவ கருத்து நன்று,
  நாராயணியாள் அருள்பெற வாழ்துகிறேன்,ஶ்ரீபுரத்தில்ஆன்மீக சேவை செய்யும் பக்தன் நான்,ஆரம்ப காலத்தில் அன்னை நாராயணி அம்மா ஸ்ரீசக்தி அம்மாவின் மூலம் வெளிப்பட்டு அருள்வாக்கு வழங்கத் தொடங்கினாள். அங்குள்ள புற்றே அருள்வாக்கு பீடமாக இருந்தது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 11ந் தேதி மாலை 6 மணி அளவில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் முன் அன்னை நாராயணி சுயம்பாக தோன்றினாள். எவ்வித சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் உட்படாமல், யாராலும் ஸ்தாபிக்கப்படாமல், சுயமாக உருவாகும் உருவத்திற்கு பெயர்தான் சுயம்பு.
  வேலூர் ஸ்ரீபுரத்தில் இந்த சுயம்பு திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2000ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியன்று வேலூரில் அவதரித்த மகான் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் திருக்கரங்களினால் சிறப்பாக நடைபெற்றது. உலகத்தில் வேறு எங்கும் காண முடியாத அரிய பல கலை நுட்பங்களுடன் எட்டுபட்டை என்று சொல்லக் கூடிய வடிவில் விமானத்துடன் அன்னை ஸ்ரீ நாராயணி அம்மனுக்கு திருக்கோயில், அர்த்த மண்டபம், மஹா மண¢டபத்துடன் கூடிய 63 அடி உயர கர்ப்பகிரகம் நிர்மாணிக்கப்பட்டு 750 சிவாச்சார்யார்களைக் கொண்டு அன்னையின் மூலமந்திரத்தை ஒரு கோடி முறை பாராயணம் செய்து ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அன்னை நாராயணிக்கு உலகில் முதன்முதலாக தனிக்கோயில் அமைத்து, இத்திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 29.1.2001 அன்று சக்தி அம்மாவின் திருக்கரங்களால் நடைபெற்றது.
  ஸ்ரீநாராயணி ஆலயத்தில் திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்தது. இதை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அன்று 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் தலைமையில் மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ நாராயணி ஆலயத்தில் உள்ள அன்னையை பார்த்தாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும், அன்பும் ஆனந்தமும் பொங்கும். அந்த வகையில் பரிபூரண அருளையும், ஆசியையும் ஸ்ரீபுரம் நாராயணி அம்மா பொழிந்து கொண்டிருக்கிறாள்.
  உலகில் எத்தனையோ ஜீவராசிகள் இருந்தாலும், மனிதனால் மட்டுமே, தானும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷப்படுத்த முடியும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...