Monday, August 19, 2013

தொல்லைகாட்சி -நீயா நானா பார்வை - பிலிம்பேர் விருதுகள்

கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்

தற்போது தொலை காட்சியில் வரும்  பாடல்  நிகழ்ச்சிகளில் பார்க்கும் விதத்தில் உள்ளது இந்த நிகழ்ச்சி. காரணம் ஜூனியர் சூப்பர் சிங்கரில் நன்கு பாடிய பலரும் பாடுவது தான் !

இந்த வாரம் Folk   ரவுண்ட். வழக்கம் போல பெண்கள் அணி தான் தூள் கிளப்பியது.ரெண்டு அணி மார்க்கும் ஏறக்குறைய சமமாய் இருக்கணும் என்பதை மனதில் கொண்டு ஜட்ஜ்கள்  தரும் மார்க் தான் நிகழ்ச்சிக்கு திருஷ்டி பொட்டு. பாடல் வரிகளை மறந்து விட்டு பாடிய கெளதமுக்கு - மிக அழகாய் பாடிய பிரியங்காவை விட அதிகமார்க் தந்தது  ஒரு  உதாரணம்

 குட்டீஸை பொறுத்தவரை பல்வேறு கான்செப்ட் வைத்து அசத்தி விட்டனர். அநேகமாய் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி இது !

நீயா நானா - "பார்வை " குறித்த நிகழ்ச்சி

வார நாட்களின் பகல் பொழுதில் நீயா நானா - "மகளிர் மட்டும்" என்ற  நிகழ்ச்சியை நடத்துகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட கலந்து கொள்கின்றனர். இங்கு பரிசளிப்பு இல்லை. மற்றபடி அதே கான்செப்ட் - சிறப்பு விருந்தினர் , etc. etc

ஆண்கள் கண்ணை பார்த்து தான் பேசணும் என பெண்கள்  தவறு என்றும் அப்படி பார்ப்பதில்  உள்ள கஷ்டங்கள் பற்றியும் விரிவாக பேசினர். " அந்த பக்கத்தில்  யார் அழகு?" , " யார் சிரிப்பு சூப்பர்?" போன்ற அறிவார்ந்த கேள்விகளும் உண்டு

ஜெயா டிவியில்  நலம் தரும் நட்சத்திர கோவில்கள்

ஞாயிறு காலை ஏழரை முதல் எட்டரை மணி வரை ஜெயா டிவி யில் - ஒவ்வொரு நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில்களை பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தினமலர் நாளேடு தனது இணைய தளத்தில் இத்தகைய கோவில் ஒவ்வொன்று பற்றியும் விரிவாக பகிர்ந்துள்ளது. இருப்பினும் அந்த கோவிலை - அதன் அமைப்பை வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் காணலாம்

மேலும் பொதுவான சில ஆன்மீக விஷயங்களும் நிகழ்ச்சியில் பேசுகிறார்கள் நம்பிக்கை + விருப்பம் இருப்போர் காணலாம் !

ஆகஸ்ட் 15 நிகழ்ச்சிகள்

இந்த வருட நிகழ்சிகள் ஓரளவு தான் காண முடிந்தது ஒரு விஷயம் மகிழ்ச்சி தருகிறது. இந்த முறை சினிமா நடிகர்கள் பேட்டிகள்  ஓரளவு குறைந்திருந்தது. ( புது சினிமா குறித்த நிகழ்ச்சிகள் தவிர)

ஜெயா டிவி - நீதானே என் பொன் வசந்தம்- விஜய் - கடல் என்று போட்டாலும் - சன் டிவி போட்ட சுந்தர பாண்டியன் - தான் மிக அதிக மக்களால் காணப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு டிவியில் காந்தி திரைப்படம் ஒளிபரப்புவர். அதை கொஞ்ச நேரமேனும் பார்ப்பது எல்லா வருடமும் தொடர்கிறது !

புதிய தலைமுறையின் புதிய முகம்

புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கும் சத்யப்ரியா செம அழகு.

முகநூலில் இவர் பற்றிய போஸ்டரை பாருங்கள் :
இவர் எந்த நேரத்தில் நியூஸ் வாசிக்கிறார்னு சொன்னா அந்த நேரத்தில் செய்திகள் பார்த்து நாங்க பொது அறிவை வளர்த்துக்குவோம் !அம்மணியின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/newsreadersathyapriya

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

இந்த வாரம் தமிழில் சில நாவல்கள் பற்றி பேச்சாளர்கள் பேசினர். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், பாலகுமாரனின் உடையார், ஜெயகாந்தனின் ரிஷிமூலம், தீபம் பார்த்தசாரதியின் " குறிஞ்சி மலர் " போன்ற நாவல்கள் நிகழ்ச்சியில் அலசப்பட்டன

பெரிய குறை நாவல் பற்றி பேச ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 3 நிமிடங்கள் ! இதற்குள் நாவல் பற்றி என்ன பேசிவிட முடியும்? பேசி முடித்ததும் நடுவர்கள் அது பற்றி 10 நிமிடம் விவாதிக்கின்றனர். அந்த நேரத்தை குறைத்து விட்டு பேசுவோருக்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்கியிருக்கலாம்

நடுவர்கள் இந்த நாவல்கள் ஒவ்வொன்றையும் படித்து விட்டு வந்திருந்தது சிறப்பு.

தமிழில் வரும் நல்ல நிகழ்சிகளில் இதுவும் ஒன்று

பிலிம் பேர் விருதுகள் 

சென்ற வருட பிலிம் பேர் விருதுகள் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. கும்கி, வழக்கு எண் 18/9 ஆகிய இரு படங்களுமே ஏராள விருதுகளை அள்ளியது

வாணி ஜெயராமிற்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது 5 மொழிகளில் சிறு காகிதமும் இன்றி - பாடி அசத்தினார். பேசும்போது கூட அவர் குரல் இன்னமும் மிக இனிமை !

வாணி ஜெயராம் பாடும்போதும் பேசும்போதும் அவருக்கு தந்த விருதை மீண்டும் வாங்கி வைத்து கொண்டு பொறுமையாய் காத்திருந்தார் AR ரகுமான் !

ஹைதராபாத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு தமிழில் பேசும் கோபி மற்றும் DD காம்பியர் ஆக இருந்த மாதிரி ஒட்டு வேலையை பக்காவாக செய்திருந்தது விஜய் டிவி !

வெறுப்பேற்றும் விளம்பரம்

இந்துலேகா என்கிற தலைக்கு தேய்க்கும் எண்ணைக்கு விளம்பரம் வைக்கிறார்கள். ஆறாவது படிக்கிற 2 பசங்க - பேசி கொண்டு செல்ல, அதில் ஒரு பையனின் ஆளு - அவள் அஞ்சாம் வகுப்போ என்னவோ முன்னே கோபமாய் போகிறாள்..

" ஏண்டா மச்சான் கோபமா போறா ? " என ஒருவன் கேட்க

" அனுஷ்கா மாதிரி தலை முடி வேணுமாண்டா மச்சான். அதான் கோபமா போறா " என்கிறான் இன்னொருத்தன்

ஏற்கனவே சினிமா பார்த்து பசங்க கெட்டு போக தயாராய் இருக்க - அஞ்சாம் வகுப்பு ஆறாம் வகுப்பு பசங்க - இப்படி பேசி கொள்வதை காட்டுவது தேவையா?

இதே இந்துலேகாவிற்கு இன்னும் சில விளம்பரங்கள் வருகின்றன. அவை இப்படி மோசமில்லை. இந்த குறிப்பிட்ட விளம்பரம் நிறைய எரிச்சல் படுத்தவே செய்கிறது !

5 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நல்ல பதிவு. நீயா நானா - "மகளிர் மட்டும்" என்பது, ஏற்கெனவே ஒளிபரப்பப்பட்ட நீயா நானா தான். மகளிர் தின சமயத்தில் ஒளிபரப்பப்பட்டது, இன்னும் தொடர்கிறது. ஸ்பான்சர்கள் மாறிவிட்டதால், முன்னே பின்னே சில கட்கள் மட்டுமே. மற்றபடி எல்லாம் அதே பழைய சரக்கு தான்.
  --------
  புதிய தலைமுறை செய்தியாளர்கள் பலரும் அறிவோடு, அழகாகவும் இருக்கிறார்கள்
  -------
  இந்துலேகா விளம்பரத்தில்,

  "எங்க அக்கா மாதிரி தலை முடி வேணுமாண்டா மச்சான். " இல்லை..

  "அனுஷ்கா மாதிரி"!

  ReplyDelete
 3. பசங்களை கெடுத்து குட்டி சுவராக்கிட்டுதான் மறுவேலை செய்வாங்க போல!!

  ReplyDelete
 4. ஞாயிற்றுக்கிழமைகள்ல சன்டிவியில சாயந்தரம் ஆறு மணிக்கி போடற குட்டிச்சுட்டி நிகழ்ச்சிய மட்டும் மறக்க முடியுங்களா? அதுல வாய்விட்டு சிரிக்காம யாராலயும் இருக்க முடியாது. மழலை பேச்சு எந்த கல் மனசையும் கரைய வைத்துவிடும் என்பதை உண்மையாக்குகிறது இந்த நிகழ்ச்சி.

  ReplyDelete
 5. // ஜெயா டிவி - நீதானே என் பொன் வசந்தம்- விஜய் - கடல் என்று போட்டாலும் - சன் டிவி போட்ட சுந்தர பாண்டியன் - தான் மிக அதிக மக்களால் காணப்பட்டது. //

  ஆதாரம் ?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...