Wednesday, August 7, 2013

வானவில்: அப்பு கமல் ரகசியம்- அழகி சுரபி -ஒரு உதவி

விகடன் வலை பாயுதேவில் ரசித்தது 

"சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமலே நம்மாளுங்க அமைதியா இருக்கும் ஒரே இடம் லிப்ட் # ஏன்னே புரியலே ! - Nvaanathi
*********
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண " இன்னாபா இப்படி பண்ணிப்புட்டியே " என்று கேட்டு விடல் - Pethusamy
*********
உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என தொடங்குபவர்கள் எல்லாம் ஏனோ கெட்டவர்களாகவே தெரிகிறார்கள் -urs_priya
*********
லிப்டில் கதவு மட்டும் இல்லாட்டி, புட் போர்டு அடிப்பாய்ங்க போல ! -mokkaraasu

அழகு கார்னர்

எங்கேயும் எப்போதும் என்ற அற்புதமான படம் இயக்கிய சரவணனின் அடுத்த படைப்பு " இவன் வேற மாதிரி ". கும்கி ஹீரோ விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்குது இந்த புது பொண்ணு - பெயர் சுரபி !

சமையல் -பக்கம் அவசர பூண்டு சட்னி

அவசர பூண்டு சட்னி செய்முறை சமீபத்தில் கற்று கொண்டேன். சமையலே தெரியாத நபர் கூட எளிதில் செய்யலாம். செய்முறை இது தான் :

ஏழெட்டு பூண்டு வில்லைகளை எடுத்து கொள்ளுங்கள். தோல் கூட உரிக்க வேண்டாம். அப்படியே சிறு அம்மி வைத்து நசுக்கவும். அதனை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும். தோசை கல்லில் சிறிதளவு நல்ல எண்ணை ஊற்றி சிறிது நேரம் காய்ச்சவும்

எண்ணை சூடாவதற்குள் - பூண்டின் மேல் - மிளகாய் தூள் மற்றும், பொடி உப்பு சிறிதளவு தூவவும். எண்ணை கொதித்த பின் பூண்டுள்ள பாத்திரத்தில் ஊற்றவும் !

அவ்ளோ தான் ! அவசர பூண்டு சட்னி 3 நிமிடத்தில் தயார் !

பதிவர் பக்கம்

நாமெல்லாம் ஒரு ப்ளாக் வைத்து நடத்தவே விழி பிதுங்குகிறோம். பதிவர் ரஞ்சனி நாராயணன் தனது பெயரிலேயே ஒன்றும் , திருவரங்கத்திலிருந்து, மற்றும் இரண்டாவது எண்ணங்கள், என 3 ப்ளாக் வைத்திருக்கிறார்.

உடல்நலம் சார்ந்த பல்வேறு பதிவுகள் எழுதுவது இவர் ஸ்பெஷாலிட்டி

பாப்கார்ன் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் என்கிற பதிவை வாசித்து பாருங்கள் !

என்னா பாட்டுடே

"என்னா பாட்டுடே "வில் 80, 90 களில் வந்த ராஜா பாடல்களே அதிகம் இடம் பெறுகின்றன; எங்களை மாதிரி யூத்துக்கும் பிடிக்கிற மாதிரி புது பட பாட்டுகள் போட கூடாதா என பெங்களூருவில் இருந்து சுந்தர் கணேஷ் என்ற நண்பர் "வாசகர் கடிதம் " எழுதியிருக்கிறார் அவர் வேண்டுகோளை ஏற்று புது பாடல்களுக்கு குறைந்தது 33 % இட ஒதுக்கீடு தர உத்தேசம் !

நீதானே என் பொன் வசந்தத்தில் பல பாடல்கள் - ஆங்காங்கு பிய்த்து போட்டிருப்பார் இயக்குனர். ஓரளவு முழுதாய் வருவது இந்த பாட்டு தான்.

பாடலின் துவக்கம் (பல்லவி) எதோ ஒரு கிறித்துவ பாடலை நினைவு படுத்துகிறது என துவக்கத்தில் பிடிக்காமல் இருந்தது. போக போக பாடல் (குறிப்பாய் 2 சரணங்களும்) ரொம்ப பிடித்து விட்டன

முழுக்க ஆண் குரலில் பாடும் பாடலில் நாம் அதிகம் ரசிப்பதென்னவோ - சமந்தாவை தான் ! கோபம், வருத்தம், எதிர்பார்ப்பு, நமட்டு சிரிப்பு, பொய் நடிப்பு என எத்தனை உணர்வுகளை இப்பாடலில் சமந்தா அனாயசமாக காட்டுகிறார் பாருங்கள் ! போலவே புடவை, சுடிதார் நைட் ட்ரெஸ், ஜீன்ஸ் என அனைத்து உடையிலும் கியூட் !

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்ன சின்ன தலைக்கனமே

உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே !

அருமைய்யா !தகவல் தந்து உதவுங்கள் !


நண்பர்களே AIMS அமைப்பின் மூலம் தஞ்சை சேவை இல்லம் பள்ளிக்கு உதவியதை நீங்கள் அறிவீர்கள்


பத்திரிக்கையில் வந்த - மேலே உள்ள புகைப்பட செய்தியை வாசித்த AIMS அமைப்பினர் இந்த இரு பள்ளிகளுக்கும் உதவ விரும்புகின்றனர்.
இந்த செய்தியில் வடகுறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை கட்டிடம், "தானே" புயலால் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது

போலவே விருதுநகர் அருகே சின்ன பேராலி ஒன்றைய துவக்க பள்ளியின் கட்டிடம் சேதமடைந்திருப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து வரும் நிலையில் உள்ளதாக தெரிகிறது

உங்களிடம் எதிர்பார்க்கும் உதவி இது தான்: உங்களுக்கு வடகுறும்பூர் அல்லது சின்ன பேராலி பற்றி தெரியும் - என்றால் இந்த இடங்களுக்கு ஒரு முறை விசிட் செய்து இந்த தகவல் உண்மை தானா என்பதையும் பள்ளியின் ஆசிரியர் தொலை பேசி எண்ணை எங்களுக்கு தெரிவியுங்கள். இதன் பின் பள்ளிக்கு தேவையான உதவிகள் பற்றி AIMS அமைப்பினர் முடிவு செய்வார்கள்

தகவலை தெரிவிக்க வேண்டிய மெயில் ஐ டி - snehamohankumar@yahoo.co.in

இத்தகவலை பேஸ் புக் மற்றும் கூகிள் பிளஸ் நண்பர்களிடம் ஷேர் செய்தும் உதவலாம் !

அப்பு கமல் ரகசியம் 

விகடனில் PC ஸ்ரீராம் கேள்வி பதில் மிக ரசிக்க வைக்கிறது. அலட்டல் இல்லாமல்,  இயல்பாய் பேசி செல்கிறார்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் உயரம் குறைவாய் நடித்து பற்றி சுருக்கமாக சொல்லியுள்ளார் ஸ்ரீராம்.

பல நேரங்களில் காலை கட்டி கொண்டும் சில நேரங்கள் காமிரா டிரிக் என்றும்  கூறிய அவரது பதிலை இங்கு வாசிக்கலாம் !

போனஸ் :திருமதி தமிழ் வெற்றி விழா கொண்டாட்டம்

நன்றி :கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்ந்த நாடோடி இலக்கியன் + விகடன் டிவி10 comments:

 1. சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமலே நம்மாளுங்க அமைதியா இருக்கும் ஒரே இடம் லிப்ட் # ஏன்னே புரியலே ! -

  பயம் காரணமாக இருக்குமோ..!!???

  ReplyDelete
 2. சமையல் -பக்கம் அவசர பூண்டு சட்னி
  >>
  இதை அம்மா அவசரத்துக்கு செய்வாங்க. செம டேஸ்டா இருக்கும். இன்னும் ஒரு இட்லி எக்ஸ்ட்ராவா உள்ளே போகும்..

  ReplyDelete
 3. கலர்ஃபுல் வானவில்..

  ReplyDelete
 4. அப்பு தொடர்பான அந்த லிங்கை ஏற்கனவே படித்ததுதான்.. அதை நீங்கள் தெளிவா மொழிபெயர்த்து போடுவீங்கன்னு பார்த்தா இங்கே வாசிக்க்கவும்னு அதே லிங்கை கொடுத்திட்டிங்களே சார் :-))).

  ReplyDelete
 5. வானவில் எப்போதும் போல் அருமை..

  ReplyDelete
 6. //திருமதி தமிழ் வெற்றி விழா கொண்டாட்டம்//

  செம காமெடி

  //தகவல் தந்து உதவுங்கள் !//
  சேவை தொடரட்டும்

  ReplyDelete
 7. I am from Virudhunagar. The information about that School is true.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே மிக நன்றி அந்த பள்ளியின் போன் நம்பர் அல்லது ஆசிரியர்/ தலைமை ஆசிரியர் போன் நம்பர் கிடைத்தால் உதவ முடியும் தயவு செய்து பெற்று தர முயலவும் !

   தங்களின் உதவியால் பள்ளிக்கு மிக பெரிய உதவி கிடைக்க வாய்ப்புள்ளது ; போன் நம்பர் கேட்டு பெற்று தர முயலவும்

   Delete
 8. கதம்பத்தகவல்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அன்புள்ள மோகன்,
  என்னுடைய தளத்தைப் பலரும் அறியச் செய்ததற்கு மனமார்ந்த நன்றி!
  ஊரில் இல்லாததால் இன்று தான் பார்த்தேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
  அன்புடன்,
  ரஞ்சனி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...