Friday, August 9, 2013

ஏ.ஆர்.ரகுமான் பயோகிராபி - ஜெய் ஹோ - விமர்சனம்

ஏ.ஆர் ரகுமான் வாழ்க்கை வரலாறு - ஜெய் ஹோ -என்கிற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

நூல் ஆசிரியர் சொக்கன் அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் மெட்டு போடு, சின்ன சின்ன ஆசை, என ரஹ்மான் பட பாடல்களே தலைப்பாக வைத்துள்ளார் !!

ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய விழாவிலிருந்து புத்தகத்தை ஆரம்பிக்கிறார். அங்கிருந்து தமிழ் சினிமாவின் பிளாஷ் back போல பின்னே செல்கிறார். ரஹ்மான் தந்தை சேகர் பற்றி மட்டுமே ஒன்னரை அத்தியாயம் செல்கிறது ..

ரஹ்மான் தாத்தா ஒரு பாகவதராம் !! தந்தையும் ஒரு (அதிகம் புகழ் பெறா விடினும் கூட) ஒரு இசை அமைப்பாளரே. எனவே ரஹ்மான் இயல்பாக இசை மீது ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

Photo

40 வயதுக்கு முன்பே எப்படிஇரு ஆஸ்கார் வாங்கினார் என ஆச்சரிய படுவோர் கீழே உள்ள சமாசாரத்தை படியுங்கள்:

ரஹ்மான் 4 வயதில் நன்றாக ஹார்மோனியம் வாசிப்பாராம் !!

9 வயதில் சினிமாவில் ஒரு பாட்டுக்கு மெட்டு போட்டிருக்கிறார் !!

11 வயதில் தந்தை இறந்து விட, அந்த வயதில் இருந்தே, வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்து தாய் மற்றும் 3 சகோதரிகளை காப்பாற்றி இருக்கிறார் !!

ரோஜா படத்துக்கு இசை அமைத்த போது அவர் வயது 25 தான் !!

இன்னொரு விதத்தில் பார்த்தால் 9 வயது முதல் தொடர்ந்து இந்த துறையில் இரவு பகலென உழைத்து தான் ரஹ்மான் இந்த நிலைக்கு வந்திருப்பதும் உணர முடிகிறது.

" வாழ் நாள் முழுதும் ஒரு துறையில் உழைத்தால் தான் உன்னத நிலையை அடைய முடியும்; அதற்கு குறைந்த விலையில் அந்தநிலையை அடைய முடியாது!!"

ரஹ்மான் ரோஜாவிற்கு இசை அமைத்த காலத்திற்கு பிறகு சொக்கன் எழுதியுள்ள பல விஷயங்கள் நமக்கு தெரிந்ததாக உள்ளது. குறிப்பாய் அதற்கு பின் அவர் எந்த எந்த படங்கள் இசை அமைத்தார், அதில் எந்த பாடல்கள் ஹிட் ஆகின, எந்த படங்கள் ஓட வில்லை போன்ற தகவல்கள் அனைத்தும் நாம் நன்கு அறிந்தவையே.

ரஹ்மானின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும், ஒரு வெற்றி அடைந்த மனிதர் என்ற முறையில் நாம் அறிய வேண்டிய பாடங்களாகவும் உள்ளவை இது தான்.

ரஹ்மான் பொதுவாக எது செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும், இது வரை யாரும் செய்யாத முறையில் இருக்க வேண்டும் என மிக கவனமாக இருந்திருக்கிறார்.


அடுத்து அவரது குவாலிட்டி கான்சியஸ்நெஸ். கடைசி நிமிடம் வரை பாடலில் சின்ன சின்ன புது இசை சேர்த்து கொண்டே இருப்பதும், தான் திருப்தி அடையும் வரை விடாமல் மெருகேற்றுவதும் இவரது குணமாக இருந்து வருகிறது.

அடுத்து ரஹ்மானின் தொடர்ந்த தேடுதல்.. கீ போர்டு பிளேயர் ஆக இருந்த ரஹ்மானை விளம்பர jingles -க்கும், பின் தமிழ் திரை இசைக்கும், பின் இந்தி திரை உலகத்துக்கும், பின் பாம்பே ட்ரீம்ஸ்  என்ற நாடகத்துக்கும், ஆங்கில படத்துக்கும் என வேறு வேறு பரிமாணங்கள் செல்ல தூண்டி இருக்கிறது.

ரஹ்மானின் பாசிடிவ் பக்கம் மட்டுமல்லாது, ரஹ்மானுக்கு காம்ப்ளெக்ஸ் இருந்த காலங்களையும் லேசாக தொட்டு செல்கிறார். குறிப்பாக இளைய ராஜா போன்றோருக்கு கீ போர்டு வாசிக்கும் காலத்தில், , சினிமாவை நம்ப முடியாது என்றைக்காவது தேவை பட்டால் கார் ஓட்டியாவது பிழைத்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடனே கார் ஓட்ட ரஹ்மான் கற்று கொண்டாராம்.. இதையெல்லாம் படிக்கும் போது தான் பெரிய மனிதர்களும் நம்மை மாதிரி சாதாரண மனிதர்கள் போல் சில பொழுதுகளில் இருந்துள்ளனர் என உணர முடிகிறது.



ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய உடன் சொன்ன வரிகள் நினைவில் கொள்ள தக்கவை. " வாழ்க்கையில் எப்போதும் என் முன் இரு பாதைகள் இருந்தன. ஒரு பாதை அன்பு. அடுத்தது வெறுப்பு. நான் அன்பை தேர்வு செய்தேன். இப்போது உங்கள் முன் நிற்கிறேன்".

ஒரு முறை நான் விமானத்தில் வரும் போது அடுத்த சீட்டில் பயணம் செய்த ஒரு இந்திய முஸ்லிம் வழக்கறிஞர் இந்தியாவில் பல இடங்களில் முஸ்லிம்கள் எப்படி சந்தேகத்துடன் பார்க்க படுகின்றனர் என்பது குறித்து மிக வருந்தி பேசி கொண்டிருந்தார். அவர்கள் துயரின் ஒரு பகுதி அன்றைக்கு நான் அறிய முடிந்தது.

ரஹ்மானின் இந்த வரிகள் பின்னாலும் அந்த வலி இருந்திருக்க வேண்டும். எந்த நிலையிலும் ரஹ்மான் அன்பை தேர்வு செய்தது அற்புதமானது.

ரஹ்மான் செல்ல போகிற தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஜெய் ஹோ இரண்டாம் பாகம் இன்னும் 10 அல்லது 15 வருடம் கழித்து சொக்கன் எழுதலாம்!
*********
இஸ்லாமிய நண்பர்களுக்கு புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

8 comments:

  1. Anonymous1:27:00 PM

    விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. மோகன்குமார்

    உங்களை ஒட்டி, நானும் ஜெய் ஹோ புத்தகம் வாங்கி, உங்களின் விமர்சனத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு, நானும் விமர்சனம் எழுதிவிட்டேன்...

    புத்தகம் அளித்த அவர்களுக்கும், விமர்சனம் எழுத தூண்டிய உங்கள் விமர்சனத்திற்கும் என் நன்றி...

    ReplyDelete
  3. நன்றி திரு சொக்கன் அவர்களே. நூலாசிரியரே தனது நூல் பற்றிய விமர்சனம் பார்த்து விட்டு பதிவும் போடுவது சற்று ஆச்சர்யமாக தான் உள்ளது. இன்டர்நெட் உலகம் என்னென்ன மாறுதல்களை விளைவித்துள்ளது என்பதை நான் இப்போது தான் உணர ஆரம்பிக்கிறேன்

    ReplyDelete
  4. நன்றி கோபி. நானும் தங்கள் பதிவு பார்த்து விட்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
  5. Anonymous6:15:00 AM

    Mohankumar,

    neengal innum neraya pathivugal podalamey?

    nanri,
    Velmurugan

    ReplyDelete
  6. பிடிச்சுயிருக்குங்க Mohan

    ReplyDelete
  7. நானெல்லாம் விளையாடி கொண்டிருந்த வயதில் குடும்ப பாரத்தை சுமக்க தொடங்கினாரா?! ஆச்சர்யம்!!

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...