Thursday, August 8, 2013

என்ன நடக்குது ? தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

மிழகத்தின் ஒரு பழமையான நிறுவனம்  தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம்  துவங்கி 92 ஆண்டுகள் ஆகிறது . 1921-ல் துவங்கிய போது இதன் பெயர் " நாடார் வங்கி " !

பொதுவாக நாடார் சமூகத்தினரின் வங்கி என கருதப்பட்டாலும் - இப்போது பெரும்பான்மை அளவு பங்குகள் ( Share ) வைத்திருப்பதும் அதனால் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதும் சில தனியார் நிறுவனங்களே !

எஸ்ஸார் க்ரூப் சிவசங்கரன், மெக்கென்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரஜத் குப்தா மற்றும் நாடார் இன மக்கள் என பலரும் இந்நிறுவனத்தை தங்கள் வசம் எடுக்க பல்வேறு காலங்களில் முன் வந்துள்ளனர்

சில ஆண்டுகளுக்கு முன் வெளி நாட்டு நிறுவனம் ஒன்று இந்த வங்கியில் பணம் முதலீடு செய்தது. ரமேஷ் வங்கால் ( 3.64 %), ரஜட் குப்தா ( 4.95 %) , ரவி த்ரேஹன் உள்ளிட்ட இன்னும் சிலர் தான் இங்கு முதலீடு செய்தனர் அதன் பின் இயக்குனர் பதவிகளில் பெரும்பான்மை இடங்களுக்கு வெளிநாட்டினர் வந்தனர். இதனை எதிர்த்து மதுரை உயர் நீதி மன்றத்தில் வங்கியின் ஷேர் ஹோல்டர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர் இதன் தீர்ப்பு சமீபத்தில் வந்தது. இதில் குறிப்பிட்ட வெளிநாட்டு இயக்குனர்கள் நிறுவனம் எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

முதலில் பணம் முதலீடு செய்ய மட்டும் வந்து விட்டு, பின் பெரும்பான்மை இயக்குனர் பதவிகளை அவர்களே எடுத்து கொண்டார்கள் என்பது பங்கு தாரர்களின் தரப்பு வாதம்
***********
ங்கியின் ஒரு பெரிய குறை - பல்வேறு காரணங்களால் அது தமிழகத்தை தாண்டி விரிவடைய வில்லை குறிப்பாக சென்னை தவிர பிற மெட்ரோக்களில் அதற்கு அலுவலகம் துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி தரவில்லை. சேமிப்பு கணக்கு மற்றும் வியாபாரிகள் துவங்கும் கரண்ட் அக்கவுண்ட் இரண்டுமே மெட்ரோ சிட்டிகளில் தான் அதிகம் துவங்கப்படும் என்றாலும் வங்கியால் பிற மெட்ரோக்களுக்கு விரிவடைய முடிய வில்லை

ஆனால் இதற்காக வருந்தாது மெட்ரோ தவிர்த்து பிற இடங்களில் வளர வங்கி முயன்று வருகிறது மெட்ரோக்களில் தான் பிற வங்கிகள் போட்டி போடுகின்றனவே - இன்டீரியர் இடங்களில் நாம் சுலபமாக முன்னேறுவோம் என்பது இவர்கள் எண்ணமாக இருக்கிறது

தற்போது இந்த வங்கிக்கு 320க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன

TMB Porkuvial Fixed Deposit

மக்கள் போடும் டெப்பாசிட்களுக்கு இவர்கள் தரும் வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும்


வங்கியின் இணைய தள முகவரி இது : http://www.tmb.in/

10 வருடங்களுக்கு முன் மார்கெட் லீடராக இருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை இப்போது கரூர் வைஸ்யா வங்கி போன்றவை பின்னுக்கு தள்ளி விட்டன

துவங்கிய முதல் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை நல்ல லாபம் ஈட்டும் வங்கியாக TMB இருந்து வருகிறது (சென்ற ஆண்டின் லாபம் 400 கோடிக்கும் மேல்) இத்தனைக்கும் வங்கியின் ஷேர் காபிடல் வெறும் 26 லட்சம் மட்டும் தான் !

ஒவ்வொரு நிறுவனமும் 30 % 50 % என டிவிடண்ட் தருகிற இந்த காலத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 2000 %, 3000, % 6000 % என ஒவ்வொரு வருடமும் டிவிடண்ட் அறிவிக்கிறது ஆயினும் கடந்த 4 வருடங்களில் அறிவித்த டிவிடண்ட் எதுவும் ஷேர் ஹோல்டர்களுக்கு சென்று சேர வில்லை. காரணம் 4 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளால் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் ( Annual General Meeting ) நடக்கவே இல்லை ! வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே நிறுவனம் டிவிடண்ட் தர முடியும்


இன்றைய தேதியில் வங்கியின் ஒரு ஷேர் விலை தனியார் மார்கெட்டில் 63,000 ரூபாய் வரை போகும் என்று சொல்கிறார்கள் !

பொது மக்களுக்கு ஷேர் வழங்கும் "IPO " வை துவக்க வங்கி திட்டமிட்டு வருகிறது. அதற்கு முன் வங்கியை சுற்றி உள்ள பவேறு வழக்குகள் முடிவுக்கு வரவேண்டும் பின் தற்போதைய பங்கு தாரகளுக்கு போனஸ் ஷேர் தந்து, அதன்பின் ஷேர்களை ஸ்ப்ளிட் செய்து,  பங்கின் விலை சற்று குறைவாக்கி  "IPO " வர திட்டமிடுகிறார்கள் . வழக்குகள் அவ்வளவு சீக்கிரம் முடியுமா என்பது பெரிய கேள்வி குறி தான் !

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே "இதோ வர்றோம் ; வந்துட்டோம்; " என சொல்லி கொண்டேயிருக்கும் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி எப்போது ஷேர் வெளியிட்டாலும் அதன் விலையை பொறுத்து நிச்சயம் வாங்கலாம் !

பப்ளிக் இஸ்யூ வராமல் பொதுமக்கள் அதிக அளவு முதலீடு செய்யாமல் (Not a listed Company)- இந்த வங்கி அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது !
*********
இயலும்போது தமிழகத்தின் சில முக்கிய நிறுவனங்களை குறித்து இங்கு எழுத எண்ணம்.. பார்க்கலாம்..!

16 comments:

  1. "ஒரு ஷேர் விலை தனியார் மார்கெட்டில் 63,000 ரூபாய் வரை போகும் என்று சொல்கிறார்கள் !"

    - impossible. Shares are released in IPO market with Max.Rs.10 face value(with premium of amount restricted by sebi)which won't go more than Rs.1000.
    In other words, No of shares should be arrived in such a way that it should be tradable in market.

    ReplyDelete
    Replies
    1. Siva , I have seen share of companies at 30,000 rs

      Regards,
      Santhana krishnan

      Delete
  2. சிவகுமார்: இன்றைய தேதிக்கு இந்நிறுவன ஷேர் விலை - 63,000 முதல் 64,000 ரூபாய் தான் ; ஆனால் பப்ளிக் இஸ்யூ வரும் முன் போனஸ் இஸ்யூ மற்றும் ஸ்ப்ளிட் செய்து ஷேர் விலையை நிச்சயம் குறித்து விடுவார்கள். எந்த சந்தேகமும் இல்லை

    இங்கு வாசியுங்கள் :

    http://www.tmb.in/about_shareholders/know_about_the_basic_guidelines_about_tmb_share_transfers.html

    ReplyDelete
  3. அறியாத அறியவேண்டிய தகவல்
    இதைத் தொடர்வது அனைவருக்கும்
    பயனுள்ளதாக இருக்கும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //இயலும்போது தமிழகத்தின் சில முக்கிய நிறுவனங்களை குறித்து இங்கு எழுத எண்ணம்.. பார்க்கலாம்..!//

    2 வாரத்திற்கு ஒரு முறையாவது எழுதுங்கள்

    ReplyDelete
  5. இதுவரை அறிந்திடாத தகவல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  8. நல்ல தகவல் பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  10. //இயலும்போது தமிழகத்தின் சில முக்கிய நிறுவனங்களை குறித்து இங்கு எழுத எண்ணம்//

    எதிர்ப்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Waiting for IPO of this. Thanks for info.

    Regards,
    SAnthana krishnan

    ReplyDelete
  12. இம்மாதிரியான கட்டுரைகளை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  13. நானும் வங்கித்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்கிற முறையில் சொல்கிறேன். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பப்ளிக் இஷ்யூவுக்கு போனால் அதன் செயல்பாடுகளில் பல விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பது நிச்சயம். அங்கு வங்கி வர்த்தகத்தில் கடைபிடிக்க வேண்டிய பல நியதிகள் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை. வர்த்தகம் செய்து லாபம் ஈட்டினால் போதும் என்கிற ஒரு பலசரக்கு கடைகளில் வணிகம் செய்வதுபோன்றுதான் பல கிளை மேலாளர்களும் செயல்படுவார்கள். வங்கி ஊழியர்கள் பலரும் அடிப்படை கல்வித் தகுதி மட்டுமே உள்ளவர்கள் என்பதும் ஒரு குறைபாடு. ஆனால் அவர்களுடைய அயரா உழைப்பால்தான் வங்கியின் முதலீடு (Paid up share capital) மிகக் குறைவாக இருந்தும் வருடா வருடம் ஈட்டும் லாபத்தில் பெரும்பகுதி reserveஆக வைக்கப்படுவதால் அதன் ஒட்டுமொத்த networth paid capitalலை விட அது பல மடங்கு ஆகியுள்ளது என்பதும் உண்மை.வங்கியின் வளர்ச்சி விகிதம் மற்றெந்த வங்கிகளையும் விட மிக அதிகமானதுதான் ஆனால் வங்கி வழங்கியுள்ள கடன்களின் தரம் எத்தகையதானவை என்று ஆய்வு செய்தால்தான் வங்கியின் உண்மையான நிலவரம் தெரியவரும். மேலும் அதன் share holderகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகவேதான் அவர்களால் இத்தனை மடங்கு டிவிடன்ட் வழங்க முடிகிறது. வங்கி பப்ளிக் இஷ்யூவுக்கு போனால் அது தொடர வாய்ப்பே இல்லை. ஆகவே நீங்கள் குறிப்பிட்ட விலைக்கெல்லாம் பங்கு விற்பனையாக வாய்ப்பில்லை.

    ReplyDelete
  14. பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ; உங்கள் ஊக்கம் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுத தூண்டும் நிச்சயம் எழுதுகிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...